முடக்கு ராசி என்பது சூரியன் இருக்கும் ராசியில் இருந்து தனுசு வரை எண்ணி பிறகு தனுசுவில் இருந்து அதே எண்ணிக்கையை எண்ணிவரும் ராசியாகும்.
இங்கு ஒரு கேள்வி எழுகிறது என்னவென்றால் ஏன் தனுசு வரை சூரியன் இருக்கும் ராசியில் இருந்து என்ன வேண்டும் என்பதே கேள்வியாகும்.
இதற்கு நாம் விடை காணும் முன்பு இந்தப் பிரபஞ்சத்தின் உச்சி மற்றும் அடியினை சற்று சிந்திக்க வேண்டும். இந்தப் பிரபஞ்சத்தின் தொடக்கமாக ஸ்பைகா என்று கூறக்கூடிய கன்னி ராசியில் உள்ள நட்சத்திரத்தினை கூறுகின்றனர் எனவே தனுசு ராசி என்பது பிரபஞ்சத்தின் மத்தியபாகமாய் அமைகிறது. ஆகவேதான் தனுசு ராசி வரை சூரியன் இருக்கும் ராசியில் இருந்து எண்ணி முடக்கு ராசி பலன் பார்க்கப்படுகிறது
ராசி மண்டலத்தை பிரபஞ்சமாக உருவகப் படுத்திக் கொண்டால் மிதுனம் மற்றும் தனுசு ராசிகள் பிரபஞ்சத்தின் மத்திய பாகம் ஆக அமைகிறது மேலும் விருச்சிகமும் மகரமும் ஒன்றுக்கொன்று நேராகவும் துலாமும் கும்பமும் ஒன்றுக்கொன்று நேராகவும் கண்ணியும் மீனமும் ஒன்றுக்கொன்று நேராகவும் சிம்மமும் நேசமும் ஒன்றுக்கொன்று நேராகவும் கடகமும் ரிஷபமும் ஒன்றுக்கொன்று நேராகவும் அமைகிறது. (படம் பார்க்க)
முடக்கு ராசிக்கும் பாதகாதிபதி ராசிக்கும் நெருங்கிய தொடர்புஉள்ளது மேலும் முடக்கு ராசிக்கும் ஏகார்களத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.
சரி அடுத்து தனுசு ராசியில் இருக்கும் மூலம் நட்சத்திரம் வரை ஏன் என்ன வேண்டும் என்பது இங்கு ஒரு கேள்வியாக வருகிறது இதற்கு நாம் விடை காண்பதற்கு முன் ஸ்பைகா என்று கூறக்கூடிய சித்திரை நட்சத்திரத்தின் தொடர்பினை அறிந்து கொள்ள வேண்டும். சித்திரை நட்சத்திரம் என்பது ஆரம்பமாக கருதினால் மூல நட்சத்திரம் பாதாளம் ஆகவும் ரேவதி நட்சத்திரம் அந்தி ஆகவும் புனர்பூசம் உச்சியாகும் உள்ளது.
சூரியனே அனைத்து உயிர்களுக்கும் ஆதாரமாய் அமைகிறது சூரியனில்இருந்து வரும் ஒளி வெப்பம் சீதோஷ்ண நிலையை தீர்மானித்து உயிர்களுக்கு ஜீவன் மற்றும் ஆற்றலை தருகிறது. தாவரம் விலங்கு மற்றும் மனிதர்களுக்கு சூரிய ஒளியே இன்றியமையாததாகிறது.
ஒருவர் ஜாதகத்தில் சூரியன் இருக்கும் நிலையைப் பொறுத்தே அவருடைய சுயமரியாதை நிர்ணயம் ஆகிறது.
மெய்ஞானத்தில் மூலாதாரத்திலிருந்து சகஸ்ராரம் வரை உயிர் பிரயாணம் செய்வதை யோகம் என்று அழைக்கின்றனர். தனுசு ராசியில் இருக்கும் மூலம் நட்சத்திரம் ஆனதே மூலாதாரமாகவும் மிதுன ராசியில் இருக்கும் திருவாதிரை நட்சத்திரம் ஆனது சகஸ்ராரம் ஆகவும் அமைகிறது. திருவாதிரை நட்சத்திரத்தில் தான் சகஸ்ராரம் நாதனாகிய ருத்ரன் அமைவது குறிப்பிடத்தக்கது. மூலம் நட்சத்திரத்தின் சக்தியானது கீழ்நோக்கியும் திருவாதிரை நட்சத்திரத்தின் சக்தியானது மேல்நோக்கியும் இருக்கிறது. ஆயிரம் இதழ் கொண்ட தாமரையாக திருவாதிரை நட்சத்திரத்தின் ருத்ரனின் தலை உருவகப்படுத்தப்படுகிறது. இதிலிருந்து மூலம் நட்சத்திரம் என்பது ஒரு மனிதனின் அஸ்திவாரமாய் அமைவது புரிந்துகொள்ள முடிகிறது. எனவே கீழ்நோக்கி இயங்கக்கூடிய மூல நட்சத்திரம் வரை சூரியன் இருக்கும் இடத்திலிருந்து எண்ணி காண்பது முடக்கு ராசியாக அமைகிறது
எண்ணி பிறகு பூராடத்திலிருந்து அதே எண்ணிக்கையை எண்ணி காண்பதே முடக்கு ராசி ஆகும்.
ஒருவரின் தனித்துவம், நம்பிக்கை, சுயமரியாதை, சுய உணர்வு, கண்ணியம் வாழ்வின் நோக்கம் போன்ற அடிப்படை குணங்களை சூரியன் இருக்கும் நிலையைக் கொண்டே அறிய வேண்டும்.
அடிப்படை குணத்தினை தீர்மானிக்கும் மூலாதாரமானது மூல நட்சத்திரத்திதுடன் நெருங்கிய தொடர்புடையது.
இப்பிரபஞ்சத்தின் புருஷனாகிய கால புருஷனுக்கு மூல நட்சத்திரத்தில் மூலம் அடிப்படை குணங்கள் தீர்மானிக்கப்படுகிறது. எனவே இதனை மரியாதை ஸ்தானம் என்று அழைக்கலாம். ஒருவர் பிறந்த ஜாதகத்தில் சூரியன் (சுய மரியாதை) இருக்கும் நிலையானது கால புருஷனின் அடிப்படை ஸ்தானமான மூலம் நட்சத்திரத்திற்கு அதாவது மரியாதை ஸ்தானத்திற்கு எவ்வளவு தூரத்தில் இருக்கிறதோ அதே அளவு தூரத்தை பூராடம் நட்சத்திரத்தில் இருந்து எண்ணி வந்து காணும் நட்சத்திரம் ஆனது ஒருவரது மகா மரியாதை ஸ்தானமாகும்
மெய்ஞானத்தில் மூலாதாரத்திலிருந்து சகஸ்ராரம் வரை உயிர் பிரயாணம் செய்வதை யோகம் என்று அழைக்கின்றனர். தனுசு ராசியில் இருக்கும் மூலம் நட்சத்திரம் ஆனதே மூலாதாரமாகவும் மிதுன ராசியில் இருக்கும் திருவாதிரை நட்சத்திரம் ஆனது சகஸ்ராரம் ஆகவும் அமைகிறது. திருவாதிரை நட்சத்திரத்தில் தான் சகஸ்ராரம் நாதனாகிய ருத்ரன் அமைவது குறிப்பிடத்தக்கது. மூலம் நட்சத்திரத்தின் சக்தியானது கீழ்நோக்கியும் திருவாதிரை நட்சத்திரத்தின் சக்தியானது மேல்நோக்கியும் இருக்கிறது. ஆயிரம் இதழ் கொண்ட தாமரையாக திருவாதிரை நட்சத்திரத்தின் ருத்ரனின் தலை உருவகப்படுத்தப்படுகிறது. இதிலிருந்து மூலம் நட்சத்திரம் என்பது ஒரு மனிதனின் அஸ்திவாரமாய் அமைவது புரிந்துகொள்ள முடிகிறது. எனவே கீழ்நோக்கி இயங்கக்கூடிய மூல நட்சத்திரம் வரை சூரியன் இருக்கும் இடத்திலிருந்து எண்ணி காண்பது முடக்கு ராசியாக அமைகிறது.
மூலம் என்பது முடிவாக கொண்டோமானால் பூராடம் என்பது தொடக்கமாக அமைகிறது சூரியன் இருக்கும் இடத்திலிருந்து மூலம் வரை எண்ணி பிறகு பூராடத்திலிருந்து அதே எண்ணிக்கையை எண்ணி காண்பதே முடக்கு ராசி ஆகும்.
ஒருவரின் தனித்துவம், நம்பிக்கை, சுயமரியாதை, சுய உணர்வு, கண்ணியம் வாழ்வின் நோக்கம் போன்ற அடிப்படை குணங்களை சூரியன் இருக்கும் நிலையைக் கொண்டே அறிய வேண்டும்.அடிப்படை குணத்தினை தீர்மானிக்கும் மூலாதாரமானது மூல நட்சத்திரத்திதுடன் நெருங்கிய தொடர்புடையது.
இப்பிரபஞ்சத்தின் புருஷனாகிய கால புருஷனுக்கு மூல நட்சத்திரத்தில் மூலம் அடிப்படை குணங்கள் தீர்மானிக்கப்படுகிறது. எனவே இதனை மரியாதை ஸ்தானம் என்று அழைக்கலாம். ஒருவர் பிறந்த ஜாதகத்தில் சூரியன் (சுய மரியாதை) இருக்கும் நிலையானது கால புருஷனின் அடிப்படை ஸ்தானமான மூலம் நட்சத்திரத்திற்கு அதாவது மரியாதை ஸ்தானத்திற்கு எவ்வளவு தூரத்தில் இருக்கிறதோ அதே அளவு தூரத்தை பூராடம் நட்சத்திரத்தில் இருந்து எண்ணி வந்து காணும் நட்சத்திரம் ஆனது ஒருவரது மகா மரியாதை ஸ்தானமாகும்.
Sat. 19, July, 2025 at 4.51 pm.
ReplyDelete*அறிந்து கொள்வோமா !*
*புள்ளியியல் சாஸ்திரம் :*
*புள்ளியல் சாஸ்திரம் என்பது "பஞ்ச பட்சி" சாஸ்திரம்.
அனைவருக்கும் எளிதில் புரியும் வகையில் இச் சாஸ்திரத்தை இங்கு அளிக்கிறேன்..
*பஞ்ச பட்சி சாஸ்திரம் பார்ப்பதின் பயன் யாதெனில்... நல்ல காரியங்கள் ஆரம்பிப்பதற்கும், வீடு கட்டுவதற்கும், கிரக பிரவேசத்திற்கு நல்ல நாள் குறிக்கவும், பேருதவியாக இருக்கின்றன..
*பஞ்ச பட்சி என்பது வல்லூறு, ஆந்தை, காகம், கோழி, மயில் இவைகளே பஞ்ச பட்சிகள்.
*1. வல்லூறு − திருமால் வாகனம். *வல்லூறு−வின் எழுத்து − அ*
தொழில் − ஊண்
*2. ஆந்தை − வட நாட்டில் திருமகள் இருப்பிடமாக மதித்துப் போற்றுகின்றனர்.*
*ஆந்தை −யின் எழுத்து − இ*
தொழில் − நடை
*3. காகம் − சனீஸ்வரனின் வாகனம் என இந்துக்கள் போற்றி வணங்குகின்றனர்.*
*காகம்− இவற்றின் எழுத்து − உ*
தொழில் − அரசு
*4. கோழி − முருக பெருமானின் கொடியில் உள்ளதாகும். "சேவற் கொடியோன்" எனத் தமிழ் மக்கள் முருகப் பெருமானைப் போற்றி வணங்குகின்றனர்.
*கோழி−யின் எழுத்து − எ*
தொழில் − தூக்கம்
*5. மயில் − முருகப் பெருமானின் வாகனம் .*
*மயில் − இவற்றின் எழுத்து − ஒ*
தொழில் − சாவு.
*மேற்கண்ட... பட்சி, பட்சிக்கான எழுத்து, பட்சிக்கான தொழில், பட்சிக்கான தெய்வம் இவைகளை ஞாபகத்தில் வையுங்கள்.*
ஆமாங்க.. இந்த ஐந்து பட்சிகளைக் கொண்டு தான் நம் முன்னோர்கள் இந்த புள்ளியியல் சாஸ்திரமான பஞ்ச பட்சி சாஸ்திரத்தை உருவாக்கினர்.
*ஒரு மனிதனின் பிறந்த நட்சத்திரத்தை வைத்து, "அவனுடைய பட்சி" என்ன என்றும் தீர்மானிக்கலாம்.*
*இந்த பஞ்ச பட்சிகள் தங்களது தொழிலை ஒரு கிரமப்படி செய்து வருகின்றன.
இவைகள் எவ்வாறு தொழில் புரிகின்றனவென்றால்....
*சூரிய உதயத்திலிருந்து மறுநாள் சூரிய உதயம் வரை 24−மணி நேரம் அல்லவா.. அதாவது பகல் 12-மணி நேரம்; இரவு 12-மணி நேரம்.
*இதை நாழிகை கணக்கில் கூறினால்.. பகல் − 30-நாழிகை; இரவு 30-நாழிகை. ஆக மொத்தம் 60- நாழிகை காலத்திலும் பஞ்சபட்சிகள் தங்கள் தொழிலை கிரமப்படி செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
*இந்த பகல் -30 நாழிகையை 5−பாகமாகவும்; இரவு 30−நாழிகையை 5−பாகமாகவும் பிரித்து நமது முன்னோர்கள் அதை சாமமாக்கி காட்டியுள்ளனர். பகலுக்கு 5−சாமம், இரவுக்கு 5−சாமம் எனப் பகுத்துள்ளனர்.
*ஃ = ஒரு சாமத்தின் காலம் 30 % 5 = 6 நாழிகை. அல்லது 2-மணி 24-நிமிடம்
என தெளிவாக அறிந்து கொள்ளுங்கள்.*
அவ்வாறெனில், சூரிய உதயத்திலிருந்து முதல் 6−நாழிகை 1−ஆம் சாமம் என்றும்;
2−வது 6−நாழிகை 2−ஆம் சாமம் என்றும்; 3−வது 6−நாழிகை 3−ஆம் சாமம் என்றும்; 4−வது 6−நாழிகை 4−ஆம் சாமம் என்றும், 5−வது 6−நாழிகை 5−ஆம் சாமம் என்றும் நமது முன்னோர்கள் பகுத்துள்ளனர்.
இவைபோன்று சூரியன் மறைவுக்குப் பின்வரும் 30− நாழிகைகளையும் மேற்கூறியவாறு 5−சமமாகப் பிரித்துள்ளனர்.
*பாருங்க... ஒவ்வொரு சாமத்திலும் இந்த 5−பட்சிகளும் ஒரே தொழிலைச் செய்வதில்லை. இவை ஐந்தும் ஒவ்வொரு சாமத்திலும் மாறி மாறி செய்து வருகிறது.*
எவ்வாறு செய்து வருகிறது என அடுத்த பதிவில் பார்க்கலாம்...!
மீண்டும் சந்திக்கலாம்..!
Jansikannan438@gmail.com.