இறந்தவர்கள் நகைகள்
இறந்தவரின் நகைகளை அணிந்தால், எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் என்பார்கள்.. உடல்நிலை, தொழிலிலும் பலவீனம் ஏற்படலாம். அதிலும், ஜாதகத்தில் சூரியனின் நிலை பலவீனமாக இருந்தால், இறந்தவர்களின் நகைகளை பயன்படுத்த கூடாது என்பார்கள்.
கூடுமானவரை இறந்தவர்கள் பயன்படுத்திய தங்கம், மற்றும் வெள்ளி நகைகளை நினைவுப்பொருளாக பத்திரப்படுத்தி வைக்கலாம்.. அல்லது அந்த நகையை விற்று, குலதெய்வம் கோயிலுக்கு உபயம் தரலாம்.. அன்னதானமும் செய்யலாம்..
ஒருவேளை இறந்தவர்களின் பயன்படுத்த வேண்டுமானால், அவைகளை சுத்தம்செய்துவிட்டு பயன்படுத்த வேண்டும். இதற்கு கங்கை நீரில் ஒரு நாள் முழுவதும் ஊறவைத்து எடுத்து, மஞ்சள் நூலால் கட்டி 21 நாள்கள் அப்படியே வைத்து வைத்து விடவேண்டும். பிறகுதான் தங்கத்தை உபயோகிக்க முடியும்.. அல்லது அந்த நகையை உருக்கி வேறு வடிவமாக செய்து பயன்படுத்தலாம்..
You May Also Like
புதுமணத் தம்பதிகளுக்கு பிடிக்காத ஆடி மாசம்! கணவன்- மனைவியை பிரித்து வைப்பது ஏன்?
"புதுமணத் தம்பதிகளுக்கு பிடிக்காத ஆடி மாசம்! கணவன்- மனைவியை பிரித்து வைப்பது ஏன்?"
எனினும், ஒருவர் இறந்தால், உடனே அந்த நகையை பயன்படுத்தவும் முடியாது, விற்கவும் கூடாது என்பார்கள்.. எனவே, அந்த நகையை சுத்தமான மஞ்சள் நீரில் கழுவி விட்டு எடுத்து துடைத்து, ஒரு பர்ஸில் போட்டு, அதற்குள் ஒரு துளசியையும் போட்டு பத்திரப்படுத்தி கொள்ள வேண்டும். இறந்த வீட்டில் தீட்டுக்கழியும் வரை காத்திருக்க வேண்டும்.. அதற்கு பிறகே இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும்
No comments:
Post a Comment