டீ-யில் ஒரு போதும் ஏலக்காய் சேர்த்து குடிக்காதீங்க.. அதில் எவ்வளவு பிரச்சனை இருக்கு தெரியுமா..?
ஏலக்காய் டீ நல்ல சுவையை மட்டுமல்ல, நல்ல வாசனையையும் கொண்டுள்ளது. இது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்று கருதப்படுகிறது. ஆனால் ஏலக்காய் நல்லது என்றாலும், சில நேரங்களில் அது சிலருக்கு ஆபத்தானதாக இருக்கலாம். சில உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்கள் ஏலக்காய் டீ குடித்தால் அதிக பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
நம் நாட்டில் பலர் காலையில் எழுந்தவுடன் தேநீர் அருந்தும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர். அந்தவகையில் ஒவ்வொருவரும் டீ -யை அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப தயார் செய்து குடிக்கின்றனர். அப்படி சிலர் ஸ்ராங்கான டீ-யை விரும்புகிறார்கள், மற்றவர்கள் மசாலா டீ, இஞ்சி டீ மற்றும் ஏலக்காய் டீ ஆகியவற்றை விரும்பிக் குடிப்பார்கள். ஏலக்காய் டீ நல்ல சுவையை மட்டுமல்ல, நல்ல வாசனையையும் கொண்டுள்ளது. இது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்று கருதப்படுகிறது. ஆனால் ஏலக்காய் நல்லது என்றாலும், சில நேரங்களில் அது சிலருக்கு ஆபத்தானதாக இருக்கலாம். சில உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்கள் ஏலக்காய் டீ குடித்தால் அதிக பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்
பித்தப்பைக் கற்கள் உள்ளவர்கள்: பித்தப்பைக் கற்கள் உள்ளவர்கள் ஏலக்காய் டீ குடிப்பது நல்லதல்ல. ஏலக்காய் பித்தப்பையில் உள்ள கற்களை மேலும் எரிச்சலடையச் செய்யும். இது பித்தப்பையில் பிடிப்புகளை ஏற்படுத்தி வலியை அதிகரிக்கும். அதற்கு பதிலாக சாதாரண டீ அல்லது மூலிகை டீ குடிப்பது நல்லது. உங்களுக்கு பித்தப்பைக் கற்கள் இருந்து ஏலக்காய் டீ குடிக்க விரும்பினால், மருத்துவரை அணுகுவது நல்லது.
கர்ப்பிணிப் பெண்கள் : பொதுவாக கர்ப்பிணிகள் ஏலக்காயை அதிகமாக உட்கொள்ளக்கூடாது. எனவே டீயில் அதிகமாக ஏலக்காய் போட்டுக் குடிப்பது மிகவும் ஆபத்தானது. இது கருச்சிதைவு அபாயத்தை அதிகரிக்கும். உணவில் அதன் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவது நல்லது. அதேபோல், பாலூட்டும் தாய்மார்கள் ஏலக்காயை அதிகமாக உட்கொள்ளக்கூடாது
ஒவ்வாமை உள்ளவர்கள் : சிலர் ஏலக்காயை சகித்துக்கொள்வதில்லை, இது ஒவ்வாமையை ஏற்படுத்தும். அத்தகையவர்கள் அதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். நீங்கள் ஏலக்காய் டீ குடித்தால், தோல் வெடிப்பு, அரிப்பு அல்லது சுவாசப் பிரச்சினைகள் ஏற்படலாம். ஏலக்காய் சாப்பிட்ட பிறகு அல்லது டீ குடித்த பிறகு உங்கள் உடலில் ஏதேனும் அசாதாரண மாற்றங்கள் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.
நீரிழிவு பிரச்சினைகள் : ஆராய்ச்சியின் படி, ஏலக்காய் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும். இது நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது. இருப்பினும், நீங்கள் உங்கள் இரத்த சர்க்கரையை குறைக்க மருந்துகளை எடுத்துக்கொண்டால், அதிகமாக ஏலக்காய் டீகுடிப்பது உங்கள் இரத்த சர்க்கரை அளவைக் குறைத்து லோ சுகர் ஆக்கும். இது மிகவும் ஆபத்தானது. அதனால்தான் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துபவர்கள் ஏலக்காய் டீ குறித்து கவனமாக இருக்க வேண்டும்
இரத்த மெலிவு மருந்துகள் : ஏலக்காய் இயற்கையான இரத்த மெலிவு பண்புகளைக் கொண்டுள்ளது. அதாவது இது இரத்தத்தை மெலிவுபடுத்துகிறது. நீங்கள் ஏற்கனவே இரத்த மெலிவு மருந்துகளை எடுத்துக்கொண்டால், ஏலக்காய் டீ குடிப்பது உங்கள் ஆபத்தை அதிகரிக்கும். இரத்தப்போக்கு ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கும். அத்தகைய மருந்துகளை உட்கொள்பவர்கள் எந்த மசாலாப் பொருட்களையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு மருத்துவரை அணுக வேண்டும்.
No comments:
Post a Comment