விசேஷ தினங்களில் வீடுகளில் மாவிலைத் தோரணம் கட்டப்படுவதன் ரகசியம்!
The secret of constructing the Mavilai Thorana
Mavilai Thoranam
வீட்டின் நுழைவு வாயிலில் மாவிலைகளால் தோரணம் கட்டுவது மரியாதைக்குரிய கலாசார பண்பாடாகக் கருதப்படுகிறது. இது தொன்றுதொட்டு பின்பற்றப்பட்டு வரும் ஒரு பாரம்பரிய வழக்கமாகும். பசுமையான மாமரத்து இலைகள் வீட்டில் உள்ள எதிர்மறை சக்திகளை உள்வாங்கிக்கொண்டு, சுற்றுப்புறங்களில் உள்ள காற்றை தூய்மைப்படுத்தவும், வீட்டிற்குள் செழிப்பையும் நேர்மறை அதிர்வுகளையும் கொண்டு வர உதவுவதாக நம்பப்படுகிறது.
மாவிலையின் முக்கியத்துவத்தையும் சிறப்பையும், பகவத் கீதை மற்றும் வேறு பல புராண இலக்கியங்களிலும் கூறப்பட்டுள்ளது. ‘ஒவ்வொரு வீட்டின் வாயிலிலும் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. பெரிய தண்ணீர்ப் பானைகள், வண்ண வண்ணத் துணிகள், முத்துச் சரங்கள், பூ மாலைகள் மற்றும் மாவிலைத் தோரணங்கள் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தன.
The secret of constructing the Mavilai Thorana
வீட்டிற்குள் நேர்மறை அதிர்வுகளையும், கடவுளின் ஆசிகளையும், செழிப்பையும் வரவேற்க நுழைவு வாயிலில் மாவிலைத் தோரணம் கட்டப்பட்டு வந்தது. வீட்டிற்குள் வரும் செல்வத்திற்கு அதிபதியான மஹாலக்ஷ்மியையும் மற்ற விருந்தினர்களையும் தூய மனதுடன், மரியாதை கொடுத்து வரவேற்பதை சுட்டிக்காட்டும் அடையாளமாகவும் மாவிலைத் தோரணம் கருதப்படுகிறது. 'நுழைவு வாயிலை பூக்களாலும் இலைகளாலும் அலங்கரித்து வைப்பது, மங்கலகரமான ஆன்மிக உணர்வைக் காட்டுகிறது. வீட்டில் உள்ளவர்கள், அவர்களுக்கு கடவுளால் வாரி வழங்கப்பட்ட மன அமைதியையும் வளங்களையும் அனுபவிக்க தயாராகி விட்டனர் என்று அந்த அலங்காரம் கூறுவது போலவும் உள்ளது' என புராண இலக்கியம் கூறுகிறது.
மாவிலைகள் பல கடவுள்கள் மற்றும் பெண் தெய்வங்களுடன் தொடர்பு கொண்டுள்ளன என இந்து புராணத்தில் கூறப்படுகிறது. வாழ்வில் வளம் பெருக உதவும் பெண் தெய்வமான மஹாலக்ஷ்மிக்கும் மற்றும் போர் புரியவும், வாழ்வை செழிப்புறச் செய்யவும் உதவும் கடவுளான முருகனுக்கும் மாவிலைகளுடனான தொடர்பு குறிப்பிடத்தக்கது. வீட்டில் மாவிலைத் தோரணம் தொங்குவது, அந்த வீட்டிலுள்ள நபர்களுக்கு அதிர்ஷ்டம், வாழ்வில் முன்னேற்றம் மற்றும் வளங்களை கொண்டுவரும். சிறப்பான அறுவடை மற்றும் வளமான வாழ்விற்கான அடையாளமாக மாவிலை விளங்குவதால், பச்சை நிற, மா இலைகளை வீட்டில் தோரணமாகக் கட்டித் தொங்க விடுங்கள் என முருகக் கடவுள் மக்களிடம் கூறியதாக நம்பப்படுகிறது. அப்போதிருந்து, மாவிலை மிக மங்கலகரமானதாக கருதப்பட்டு போற்றப்பட்டு வருகிறது.
The secret of constructing the Mavilai Thorana
பச்சை மா இலைகள் மரத்திலிருத்து தண்டுடன் வெட்டப்பட்ட பிறகும், தொடர்ந்து சிறிது நேரத்திற்கு ஸ்டார்ச் தயாரிக்கும் (Photosynthesis) செயலை செய்து கொண்டிருக்கும். அதாவது, கார்பன்டை ஆக்ஸைடை உள்ளிளுத்து ஆக்ஸிஜனை வெளியேற்றிக் கொண்டிருக்கும். இதனால் சுற்றுப்புறத்தில் உள்ள காற்று சுத்தமடைந்து சுவாசிக்கத் தகுந்ததாக மாறுகிறது.
மா இலை ஆன்டி பாக்டீரியல், ஆன்டி மைக்ரோபியல் மற்றும் பூச்சிகளை விரட்டும் குணங்கள் உடையது. மாவிலைத் தோரணம் ஈ, கொசு போன்ற பூச்சிகள் வீட்டிற்குள் நுழையாமல் தடுக்க உதவும். இந்த இலைகளில் உள்ள ஆல்கலாய்ட், சப்போனின்,
ஃபிளவனாய்ட் போன்ற கூட்டுப் பொருட்கள் தீங்கு தரும் பல வகையான பாக்டீரியாக்களின் வளர்ச்சியை தடுத்து நிறுத்த உதவி புரிகின்றன. மா இலைகளின் பச்சை நிறம் மனதுக்கு அமைதி தரும். மா இலைகளாலான தோரணத்தை வாசலில் தொங்க விட்டால் டென்ஷன் குறையும். மனம் புனிதத் தன்மை பெறும். பாரம்பரியம் திரும்பும். வீட்டின் மதிப்பு உயரவும், ஆன்மிக விழிப்புணர்வடையவும் வழி கிடைக்கும்.
இந்த பாரம்பரியம் மிக்க பழங்கால வழக்கத்தை நாம் அனைவரும் பின்பற்றி ஆரோக்கியம், நல்லிணக்கம் மற்றும் புனிதம் பெறுவோம்.
#Quintype
Tue. 16, Sep. 2025 at 6.41 pm.
ReplyDelete*கொடிக்கவி :*
*14−சாத்திரங்களில் சித்தாந்த அட்டகத்தில் மிகச் சிறிய நூல் − கொடிக்கவி.
*ஆசிரியர் − உமாபதிசிவம்.
*தலைமை அந்தணராகிய உமாபதியார் தில்லையில் பல்லக்கில் செல்ல, மறைஞானசம்பந்தர் "பட்டக்கட்டையில் போகுது பார் பகற்குருடு" என்று கூற உண்மை ஞானம் பெற்றவராய் உமாபதியார் அவர் பின் சென்றார்.
*தறி நெய்வோர் செய்த உப்பில்லா கஞ்சியை உண்ட மறைஞானசம்பந்தரின் கையில் ஒழுகிய எஞ்சியதை உண்டார்.
*எனவே, உமாபதியாரை , தில்லைவாழ் அந்தனர் புறம் தள்ளினர்.
ஆகவே, *கொற்றவன் குடியில்* தங்கினார்.
*தில்லை திருவிழாவின்போது அந்தணர் கொடி ஏற்றியும் கொடி ஏறவில்லை.
*உமாபதி வந்தால் கொடி ஏறும் என ஒரு அசரீரி.
*உடனே, அந்தணர் மன்னிப்பு கோரி "உமாபதி சிவத்தை" அழைத்து வந்தனர்.
*உமாபதி சிவம், தில்லையில் கொடிமரம் முன்பு, கட்டளைக் கலித்துறையில் ஒரு பாடலும், மூன்று வெண்பாவும் பாட கொடி ஏறியது.
*இந்த நான்கு பாடல்களும் கொடிக்கவி எனப் போற்றப்பட்டது.
*இப்போதும் சிவன் கோயில்களில் "ரிஷபக் கொடியேற்றத்தின்" போது இவை பாடப் பெறுகின்றது.
*பாடல் − 1*
*உயிரின் நோக்கம் − திருவருள் சார்ந்திருப்பது.*
கொடி ஏற்றுதல் என்பது ஒரு முறை.
ஆணவத்துக்கும், ஞானத்துக்கும் இடமாக இருக்கிற ஆன்மா, மலத்துக்குள் ஆட்பட்டுக் கிடக்கிறது.
*மலத்தைப் போக்க, முறைப்படி கொடியேற்றிப் பயிற்சி செய்வோம் என்பதாம்.
*பாடலைக் கவனியுங்கள் :*
ஒளிக்கும் இருளுக்கும் ஒன்றே
இடம் ஒன்று மேலிடில் ஒன்று
ஒளிக்கும் எனினும் இருள் அடராது
உள் உயிருக்கு உயிராய்த்
தெளிக்கும் அறிவு திகழ்ந்து
உளதேனும் திரிமலத்தே
குளிக்கும் உயிர் அருள் கூடும்படி
கொடி கட்டினனே.
*விளக்கம் :*
*ஒளிக்கும் இருளுக்கும் ஒன்றே இடம் என்பது... திருவருளுக்கும், ஆணவத்திற்கும் இடம் கொடுத்து நிற்பது உயிர் ஒன்றே.
ஆக.. *உயிரில் இருபொருள் உள்ளது* என்பதாம்.
*இருபொருள் என்பது − *அருளாற்றல், மறைப்பாற்றல்* ஆகும்.
*ஒன்று மேலிடில் ஒன்று ஒளிக்கும் என்பது "அருளாற்றல்."
உயிரில் திருவருள் என்பது (பதி ஞானம்) மேலிட்டு நின்றால் இருளாகிய ஆணவம் ஒடுங்கி நிற்கும்.
*மறைப்பாற்றல் :*
ஆணவம் மேலிட்டு நின்றால் திருவருள் ஒளிந்து (மறைந்து) நிற்கும்.
*எனினும் இருள் அடராது என்பது... ஒரு பொருள் வெற்றி பெறும் போது, மற்றொரு பொருள் அடங்க வேண்டும் என்பது நியதி.
ஆனால், இங்கு ஆணவம் மேலிடும் போது திருவருள் வெளிப்படாது ஒளிந்து (மறைந்து) நிற்கும்.
*ஆக, ஆணவம் திருவருளை வென்று அடக்க முடியாது என்பதாம். திருவருள் மேலிடும் போது, ஆணவத்தை அடக்கி வென்று, உயிரை ஆட்கொள்வதாகும் என்பதாம்.
*உள் உயிருக்கு உயிராய் என்பது − திருவருள் எல்லா உயிருக்கும் உயிராய் நின்று...
*தெளிக்கும் அறிவு திகழ்ந்து என்பது − உயிரின் அறிவு இச்சை செயலை விளங்கச் செய்கிறது.
*உளதேனும் திரிமலத்தே என்பது − இருப்பினும், உயிர் முன் செய்த இருவினைப் பயனாக மும்மலத்தில் மூழ்கி பந்தப் பட்டுதான் இருக்கும்.
*குளிக்கும் உயிர் என்பது − அந்நிலையில் திருவருள், மேலும் அறிவூ விளங்கச் செய்யும் பொருட்டும்
*குருநாதராக வெளிப்பட்டு, தீட்கையால் (தீட்௯ஷை) மலம் நீக்கம் பெற்று உய்யும் பொருட்டும்...
*அருள் கூடும்படி கொடி கட்டினனே என்பது − உயிருக்கு மேலும் திருவருள் கூடி , ஆணவத்தை அடக்கீ வெல்லும் பொருட்டு, இந்த வெற்றிக் கொடியாம் நந்திக் கொடியை கட்டினேன் (உயர்த்தினேன்) .
*அதாவது, கொடி மரத்தில் கொடி ஏற்றப்படுகிறது* என்பதாம்.
*பாடல் − 2* அடுத்த பதிவில்.
மீண்டும் சந்திக்கலாம் !
Jansikannan60@gmail.com.
Wed. 17, Sep. 2025 at 7.49 am.
ReplyDelete*உபாயநிட்டை வெண்பா − தியாகராசர் கல்லூரி சிறப்பு பயிற்சிக்கான நூல்.*
*உபாய நிட்டை வெண்பா :*
*வெண்பா − 2*
*அங்கத்தை நோக்கி − எனத் தொடங்கும் வெண்பா.
இவ்வெண்பா − *அரன் தன்னாலே தன்னையும் கண்டு தமைக் காணலுற்றார் எய்தும் பயன்* என உணர்த்துகிறது.
அதாவது, எடுத்த இவ்வுடம்பை ஆய்ந்து , இவ்வுடம்பை யடுத்துள்ள தசை, தோல், எலும்பு முதலான இழிந்தவற்றை தீதென்று அறிவாராயின் அவர்கள் சந்தேகமற்றவர் ஆவர்.
*அவர்களே எங்கும் நிறைந்த பரிபூரணத்துவமான சிவனருளை அறிந்து அனுபவிக்கும் இயல்பினர்.
*அவர்களுக்குப் பிறப்பில்லை* என்பதாம்.
*இவ்வெண்பாவின் கருத்து :*
*உடம்பை ஆராய்ந்து , இவ்வுடம்பு சப்த தாதுக்களால் ஆனது* என்று உணர்ந்தவர்களே *சங்கமற்றவர்கள்.*
*அவர்களே சிவனருளைப் பெற்றவர்கள். அவர்களுக்குத் தான் வினைவயத்தால் வரும் பிறவி இல்லை என்பதே இதன் கருத்து.*
சங்கம், சந்தேகம், சங்கை என்பன − இயங்கு திணைப் பொருள்.
*மீண்டும் சந்திக்கலாம் !
Jansikannan60@gmail.com.
Tue. 16, Sep. 2025 at 8.28 am.
ReplyDelete*உபாய நிட்டை வெண்பா :*
*உபாய நிட்டை வெண்பா − பண்டார சாத்திரங்கள் 14−ல் 7−வதாக அமைந்துள்ளது. (பக் : 296 காண்க).
*ஆசிரியர் − ஶ்ரீ அம்பலவாண தேசிகர்.
*மொத்தம் − 46−வெண்பாக்களும், பாயிரம் ஒன்றுமாக அமைந்துள்ளன.
*பாயிரம் :*
கற்றுடலற் றே உயிரைக் கண்டருள் − எனத் தொடங்கும்.. வெண்பா.
*சுருக்கமாக பார்க்கலாம் :*
இப்பாயிரம் உணர்த்துவது − இந் நூலைக் கற்றதன் பயன் இதுவென்பதை உணர்த்து கிறது.
*அதாவது, உபாயநிட்டை வெண்பாவை விரும்பிப் படித்து, *மாயா காரியமான புறப்பற்று நீங்கி சிவனருளால் சிவனைப் பெற்றேம் என்பதே இவ் வெண்பாவின் கருத்து.*
*வெண்பா : 1*
தொந்தித்த காயந் தொலைவதற்கு − எனத் தொடங்கும் வெண்பா....
இவ் வெண்பா − *சாதனம் (கருவி) உள்ள போதே சாத்தியத்தை (சாதித்தல்) எய்துக* என்கிறது.
அதாவது, எடுத்த இவ்வுடல் அழிவதற்கு முன் இவ்வுடலை இடமாகக் கொண்டு உறைந்து, வினைப்போகங்களைத் துய்க்கும் உயிரைப் பற்றிச் சிந்திக்கவே "உண்மை ஞானம்" உண்டாம்.
*அவ்வாறின்றி, நாடியோ என்போ நரம்பு சீக்கோழையோ என்று ஆராய்வோர்க்கு அறிவு உண்டாகாது* என்பது கருத்து.
*இவ் வெண்பா திருவாசகத்தில் − 10. திருக்கோத்தும்பி − பாடல் − 216-ல்*
*நானார் ? என் உள்ளமார்? ஞானங்கள் ஆர் ? என்னை யாரறிவார் ?* என்று ஊயிரைப் பற்றி சிந்திக்க வேண்டியிருக்க, அவற்றை விட்டு நரம்போ ? தோலோ ? என்று ஆராய்தல் பயனற்ற செய்கை என இவ்வெண்பா உணர்த்துகிறது.
*மீண்டும் அடுத்த பதிவில்..!
Jansikannan60@gmail.com.
Wed. 17, Sep. 2025, at 8 36 am.
ReplyDelete*தியாகராசர் கல்லூரி சிறப்பு பயிற்சி பாட நூல்.*
*உண்மைநெறி விளக்கம் :*
*உண்மைநெறி விளக்கம் ஒரு அறிமுகம் :*
இந்நூல் *தசகாரியங்களை விளக்குகிறது.*
முதலில் இதை எழுதியவர் *உமாபதி சிவம்* எனக் கூறப்பட்டது. *ஆராய்ச்சியின் முடிவில் இதை எழுதியவர் −சீர்காழிதத்துவநாதர்* என்று அறியப்பட்டது.
*6−பாடல்களைக் கொண்ட இந்நூலின் கண், உயிர் படிப்படியாக வளர்ச்சி பெறக் கூடிய 10−நிலைகள் கூறப்படுகின்றன. *இவையே தசகாரியங்கள்.* (பாயிரப் பாடலைச் சேர்த்தால் மொத்தம் 7− பாடல்கள்).
*முதல் மூன்று நிலைகள் − தத்துவ ரூபம், தத்துவக் காட்சி, தத்துவ சுத்தி ஆகியவை − *முதல் பாடலிலும்....*
*இரண்டாவது மூன்று நிலைகளான − ஆன்ம ரூபம், ஆன்மக் காட்சி, ஆன்ம சுத்தி ஆகியன − *இரண்டாவது பாடலிலும்...*
*சிவரூபம், சிவ தரிசனம், சிவ யோகம், சிவ போகம் ஆகியன − 4−தனித்தனி பாடல்களிலும் வைத்துக் கூறப்பட்டுள்ளன.
*இதனுடைய மூலநூல் − துகளறுபோதம்.
*துகளறுபோதத்தை இயற்றியவர் − சீர்காழிச் சிற்றம்பலநாடிகள்.*
*துகளறுபோதமானது − பரமுத்தி நிலையை எய்தும் நிலைகளை *பூதப்பழிப்பு* முதலாக *பரமானந்த அவசம்* வரை *30−அவதாரம்* எனக் கூறுவது துகளறுபோதம்.
*இதில் முதல் 7− பாச அவதாரம்.
*பின் 15−பசு அவதாரம்.
*இறுதி 8−பதி அவதாரம் ஊன்று வகை செய்யப்பட்டு உள்ளது.
*துகளறு போதம் − மெய்கண்ட நூல்களுடன் சேர்த்து அச்சிட்டு வங்கும் நூல் ஆகும்.
உண்மை நெறி, உண்மை நெறி விளக்கம் என இருவிதமாகவும் வழங்கப்படுகிறது. (பாயிரப்பாடல் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ளது.)
*மீண்டும் சந்திக்கலாம் !*
Jansikannan60@gmail.com