jaga flash news

Saturday, 10 December 2016

உலகிலேயே முதலில் தோன்றிய கோவில் எது தெரியுமா..?

உலகிலேயே முதலில் தோன்றிய கோவில் எது தெரியுமா..?
இராமநாதபுரத்தில்
சிவபெருமான் வீற்றிருக்கும் புனித தலங்களில் ஒன்று தான் உத்திரகோசமங்கை.
இதுவே உலகிலேயே முதன் முதலில் தோன்றிய சிவன் கோவில் என நம்பப்படுகிறது.
ஆதி காலத்தில் அதுவும் நவக்கிரகங்கள் அறியப்படாத காலத்தில் இருந்த சூரியன், சந்திரன், செவ்வாய் மட்டுமே இங்கு கிரகங்களாக உள்ளது, இதிலிருந்தே இந்த ஆலயம் மிக மிகப் பழமையானது என்பதை அறியலாம்.
சிவபெருமான் பார்வதிதேவிக்கு வேதாகமங்களின் ரகசியங்களை உபதேசம் செய்த இடம் இதுவாகும்.
உத்திரன் (ருத்திரன்) + கோசம் + மங்கை.
மங்கைக்கு உத்திரன் உபதேசம் செய்த இடம், ஆதலால் உத்திரகோசமங்கை என்றானது.
இத்தல மூலவர் ‘மங்களநாதர்’ சுயம்புவாக, இலந்தை மரத்தடியில் தோன்றியவர்.
உலகிலேயே மிகச்சிறந்த சிவ பக்தனைத்தான் திருமணம் முடிப்பேன் என்று காத்திருந்தாள் மண்டோதரி.
இதனால் அவளுக்கு நீண்ட நாட்களாக திருமணம் ஆகாமல் இருந்தது.
பின்பு இத்தல ஈசனையும், அம்பாளையும் மண்டோதரி வழிபட்டாள்.
அதன்பிறகே ராவணனை கரம் பிடித்தாள்.
மேலும் ராவணன்– மண்டோதரி திருமணம் இத்தலத்திலேயே நடைபெற்றது என்று கூறப்படுகிறது.
கோவில் அமைப்பு
முதல் பிரகாரத்தின் வாயு மூலையில் தனது தேவியருடன் முருகப்பெருமான் நின்ற கோலத்திலும், இரண்டாம் பிரகாரத்தின் வாயு மூலையில் ஆறு திருமுகம், பன்னிரு கைகளுடன் இரு தேவியர் சூழ, மயில் மீது அமர்ந்த கோலத்திலும் காட்சி தருகிறார்.
ஆலயத்தின் முகப்பில் இரு கோபுரங்கள் உள்ளன.
வலதுபுறம் உள்ள கோபுரம் ஏழு நிலைகளுடன் எழிலாக தோற்றம் கொண்டுள்ளது.
இடதுபுறம் உள்ள கோபுரம் மொட்டையாக காணப்படுகிறது.
பொதுவாக ஆலயங்களுக்குச் சென்றால் ஒரு நாள் ஒருமுறை சென்று வணங்கிவிட்டு வந்து விடுவோம்.
ஆனால் ஒரே நாளில் மூன்று வேளையும் சென்று தரிசித்து பலனை அடையும் கோவிலாக உத்திரகோசமங்கை திருத்தலம் உள்ளது சிறப்பம்சமாகும்.

*சிவன் சொத்து குல நாசம் – இதன் உண்மையான அர்த்தம் என்ன?*

*சிவன் சொத்து குல நாசம் – இதன் உண்மையான அர்த்தம் என்ன?*
சிவனின் சொத்தாக, அவர் அருளிய மூல வித்தாக கருதப் படுவது சித்த மார்க்கம். அத்தகைய மார்க்கத்தைப் பின் பற்றியவர்கள் சித்தர்கள்.
ஒருவர் சித்தராக வேண்டும் என்றால் அதற்கென்று சில விதிமுறைகள் இருக்கிறது.
நினைப்பவர் எல்லாம் சித்தர் ஆகி விட முடியாது.
நரை, திரை, முப்பு என்று நம்மிடம் கேட்டுக்கொண்டிருக்காமல் பால்ய, இளமை, முதுமை என மரணத்தை நோக்கி தானாக நகர்ந்து கொண்டிருக்கும் காயத்தை (உடலை) தன்வயப்படுத்தி நிறுத்த வேண்டும். சதா காலமும் சுக்கிலத்தை, அதாவது நாத விந்தை கட்ட வேண்டும்.
ஆணவம், கன்மம், மாயை என்கிற மும்மலத்தை அறுக்க வேண்டும். அனைத்து பந்தங்கள் மீதும் பாசம் வைத்திருக்கும் தன்மையை நீக்க வேண்டும். அத்தகையவனே சித்தி அடைந்தவன்.
இதில் மிகவும் முக்கியமானது, யோக பயிற்சியின் முலம் குண்டலினியை எழச் செய்வதாகும். அதாவது, ஆண் ஆனவன், தனது விந்தை பூமியை நோக்கி விழச் செய்யாமல், அதை பிரம்மச்சரியத்தால் கட்டி, உச்சந்தலையை நோக்கி உயர்த்தி, உள் நாக்கில் அமிர்தத் துளிகளாய் விழ வைக்க வேண்டும்.
அதன் பின்னரே அவனுக்கு அஷ்டமா சித்திகள் கிடைக்கும்.
இவ்வாறு விந்துவை ஒருவன் மேல் நோக்கி எழுப்பினால் அவனால் இல்லறத்தில் ஈடுபட்டு குழந்தை பாக்கியம் பெற முடியாது. அவனது வம்சம் அவனுடனேயே அழிந்து விடும்.
இதனால்தான் சிவன் சொத்து குல நாசம் என்று சொன்னார்கள்.
நம்மில் பலருக்கு நமது தினசரி வாழ்வில் பின்பற்ற வேண்டிய இந்து சமயம் சார்ந்த நடைமுறைகள் தெரியவில்லை; எதற்கெடுத்தாலும் இதைச் செய்யக்கூடாது; அதைச் செய்யக்கூடாது என்று சொல்ல மட்டுமே தெரிந்திருக்கிறது.
உதாரணமாக, சிவன் சொத்து குல நாசம் என்பது பழமொழி மட்டுமல்ல; அனுபவ மொழியும் கூட! இதை இந்த வேகமான கம்யூட்டர் யுகத்தில் எப்படி அர்த்தப்படுத்திக் கொள்கிறார்கள் தெரியுமா? சிவாலயத்துக்கு செல்கிறோம்; சிவனை வழிபடுகிறோம்; பூசாரி விபூதி கொடுக்கிறார். அதை வீட்டுக்குக் கொண்டு வராமல் அங்கேயே போட்டுவிட்டு வந்துவிடுகிறோம்; ஏன் என்று கேட்டால், *சிவன் சொத்து குல நாசம்;* சிவனின் அம்சமான விபூதியை வீட்டுக்குக் கொண்டுவந்தால், நமது குலத்தை நாசமாக்கிவிடுமாம்; எப்படி அர்த்தப்படுத்திக் கொள்கிறோம்.
நிஜத்தில் சிவாலயத்தில் தரப்படும் விபூதி, குங்குமத்தை ஒவ்வொரு நாளும் நமது வீட்டுக்குக் கொண்டு வந்து பூஜையறையில் வைக்க வேண்டும்; இப்படி சேமித்து வைத்துக்கொண்டே இருந்தால், சிவனது அருட்பாதுகாப்பு நமக்கும், நமது குடும்பத்தாருக்கும் கிடைக்கும்.
இன்னும் சிலர் குதர்க்கமாகக் கேட்கிறார்கள்: சிவன் சொத்துதானே குல நாசம்! பெருமாள் சொத்து? என்று! சிவன் சொத்து மட்டுமல்ல; பெருமாள், விநாயகர், முருகர், காளி, அங்காள பரமேஸ்வரி என எந்த இந்துக்கடவுளின் சொத்தையும் திருடினால் திருடியவனின் குலமே சர்வ நாசமாகி விடும் என்பது உண்மை.

குதிரைக்காரன் கேட்ட நான்கு கேள்விகள்!

குதிரைக்காரன் கேட்ட நான்கு கேள்விகள்!
************************
துவாபர யுகம் முடிவடையும் காலம்! அரண்மனை வாயிலை நோக்கி ஓட்டமும் நடையுமாக விரைந்தார் தருமர். அவர் முகத்தில் பதற்றம்! என்ன காரணம்?
எவனோ குதிரைக்காரனாம்! அவனிடம் இருந்த குதிரைகளை விலை பேசினார்களாம் இவரின் சகோதரர்கள். ஆனால் அவனோ ‘குதிரைகளுக்கு விலையாகப் பொன்-பொருள் எதுவும் வேண்டாம். எனது கேள்விகளுக்கு பதில் அளித்தால் போதும். அதே நேரம்… சரியான பதிலைச் சொல்லாவிட்டால், நான் போடும் வட்டங்களுக்குள் நீங்கள் அடைபட வேண்டும்’ என்று நிபந்தனை விதித்தானாம்! இதற்கு ஒப்புக் கொண்ட தருமரின் சகோதரர்கள் நால்வரும் சரியான பதில் சொல்லத் தெரியாமல், அவனிடம் சிக்கிக் கொண்டனராம்!
_ சேவகன் ஒருவன் மூலம் தகவல் அறிந்த தருமர் பதைபதைத்துப் போனார்; சகோதரர்களை மீட்பதற்கு விரைந்தார்!
அரண்மனை வாயிலில், நிபந்தனை வட்டங்களுக்குள் பரிதாபமாக நிற்கும் சகோதரர்களைக் கண்டு மனம் கலங்கினார் தருமர். தன் சகோதரர்களை விடுவிக்குமாறு குதிரைக்காரனிடம் வேண்டினார்.
அவனோ, ”எனது நான்கு கேள்விகளுக்கு பதில் கூறினால், தங்களது சகோதரர்களை விடுவிக்கிறேன்!” என்றான். தருமரும் ஒப்புக் கொண்டார்.
குதிரைக்காரன் முதல் கேள்வியைக் கேட்டான்: ”இந்தக் குதிரையை ஓட்டி வரும் வழியில், பெரிய கிணறு ஒன்றைக் கண்டேன். அதன் விளிம்பில் காசு ஒன்று தொங்கியது. அந்தக் காசைப் பற்றியபடி மிகப் பெரிய குன்று (மலை) ஒன்று தொங்கியது. என்ன அதிசயம்… இத்தனை பளுவிலும் காசு கிணற்றுக்குள் விழவில்லை. எப்படி?”
உடனே தருமர், ”கலிகாலம் வந்து விட்டதன் அடையாளம் இது. மக்கள் அறநெறிகளில் இருந்து விலகுவார்கள். சிறிய காசு அளவுக்கே தர்மம் செய்வர். பெரிய மலையளவு பாவச் செயல்கள் புரிவர். காலப்போக்கில் அவர்கள் சிறிதளவே செய்த தர்மத்தின் பலனும் நசிந்து போகும். அப்போது, மலையளவு பாவச் சுமையை சுமந்தபடி நரகில் விழுந்து உழல்வர்!” என்றார்.
”மிகச் சரியான பதில்!” என்ற குதிரைக்காரனின் முகத்தில் பிரகாசம். பீமனை விடுவித்தவன், 2-வது கேள்வியைக் கேட்டான்: ”வழியில் ஐந்து கிணறுகளைப் பார்த்தேன். நடுவில் ஒன்றும் அதைச் சுற்றி நான்குமாக அமைந்திருந்த அந்தக் கிணறுகளில் நீர் பொங்கி வழிந்தது. மற்ற நான்கு கிணறுகளில் நீர் குறைந்தால், நடுவில் இருக்கும் கிணறு தன்னிடம் உள்ள நீரால் அந்தக் கிணறுகளை நிரப்பும். ஆனால் நடுவில் இருக்கும் கிணற்றில் நீர் குறைந்தால், மற்றக் கிணறுகள் நீர் கொடுக்காது. இதன் பொருள் என்ன?”
சற்று யோசித்த தருமர், ”இதுவும் கலியின் கோலமே! நடுவில் உள்ள கிணறு தந்தை. சுற்றி இருக்கும் கிணறுகள் மகன்களைக் குறிக்கும். மகன்களைப் பாடுபட்டுக் காப்பாற்றுவார் தந்தை. ஆனால், தந்தை தளர்வுற்ற பிறகு, மகன்கள் அவரை புறக்கணிப்பர். இதையே, அந்த ஐந்து கிணறுகளும் உணர்த்துகின்றன!” என்றார்.
இந்த பதிலும் குதிரைக்காரனுக்குத் திருப்தியளித்தது. எனவே, இப்போது அர்ஜுனனை விடுவித்தான்.
அடுத்து 3-வது கேள்வியைக் கேட்டான். ”ஓரிடத்தில் குதிரையை அவிழ்த்து வைத்து விட்டு இளைப்பாறி னேன். அப்போது… பசுமாடு, கன்றிடம் பால் குடிக்கும் அதிசயத்தைக் கண்டேன். இதன் கருத்து?”
இதைக் கேட்டதும் தருமரின் கண்களில் நீர் வழிந்தது. வருத்தத்துடன் அவர் கூறினார்: ”கலி யுகத்தில் பெற்றோர் செய் யும் இழிச் செயல் இது! ஒரு குழந்தை பிறந்தால்… அதைக் காரணம் கூறி, உற்றார்- உறவினர்களிடம் பணம் பறிப்பர். இன்னும் சிலர், காசுக்காக குழந்தையைத் தகாதவர்களிடம் விற்பார்கள். நீ கண்ட காட்சி, இந்த அவலத்தையே உணர்த்துகிறது!”
”அருமையான விளக்கம்!” என்றபடி நகுலனை விடுவித்த குதிரைக்காரன், ”வழியில் மற்றோர் இடத்தில் சற்று கண்ணயர்ந்தேன். திடீரென ஏதோ சத்தம். விழித்துப் பார்த்தால், எதிரே விசித்திர
மான ஒரு மிருகம்! கேட்க சகிக்காத இழிச் சொற் களைக் கூறிக் கொண்டிருந்த அந்த மிருகம், மலத் துவாரம் வழியே உணவு உட்கொண்டது! இந்த விபரீதம் உணர்த்துவது என்ன?” என்று தனது கடைசிக் கேள்வியையும் கேட்டான்.
இதைக் கேட்டதும் குதிரைக்காரனாக வந்திருப் பது கலி புருஷனே என்பதை உணர்ந்து கொண் டார் தருமர்.
”குதிரைக்காரனாக வந்திருக்கும் கலிபுருஷனே! மகா பாவியான உன் கண்ணில் இதுபோன்ற விபரீத காட்சிகள் தென்பட்டதில் வியப்பு இல்லை. இனி இந்த உலகில் உனது ஆட்சிதான்! தர்மத்தின் வேர் அறுபடும். இலக்கியவாதிகள் அறநெறியைப் புறக்கணிப்பர்; புரட்சி, முற்போக்குச் சிந்தனை என்று பேசி மக்களது நல்வாழ்வை நாசமாக்குவர். பொய், களவு, வஞ்ச கம், கொலை… என்று பாதகங்கள் பெருகும்.
பேராசையும், பொறாமையும், போர் வெறியும் தலை விரித்தாடும்! வேதியர்களும் ஒழுக்க நெறி யில் இருந்து விலகி நிற்பர். ஆசிரம தர்மங்கள் சீர் குலையும். மழை பொய்க்கும். பஞ்சமும் வறுமையும் பெருகும். கொடிய நோய்கள் பரவும். அரசர்கள், வேத வல்லுநர்களை இகழ்ந்து பேசுவர்” என்று வேதனையுடன் தழுதழுத்த தருமர், ”ஐயோ போதும் இந்த வாழ்க்கை” என்று கண்ணீர் விட்டார்.
அவரை வணங்கிய கலிபுருஷன், ”தர்மாத்மாவே! உங்கள் ஆட்சி நடைபெறும் வரை நான் இங்கு வர மாட்டேன். ஆனால், தங்களது ஆட்சி முடிவுற்றதும் நான் வந்தே தீர
வேண்டும். வேறு வழியில்லை” என்றவன் சகாதேவனையும் விடுவித்தான். பிறகு, மீண்டும் தருமரை வணங்கி விட்டு, அங்கிருந்து மறைந்தான்!

இராமர் பாலம் உண்மைதானா..?


இராமர் பாலம் உண்மைதானா..?
நம்மைப்பெருமை கொள்ள வைக்கும் நாசாவின் ஆய்வறிக்கை…
இராமயணத்தில் இராம சேது என குறிப்பிடப்பட்டுள்ள வரலாற்று பொக்கிஷம்.
இதை இன்னும் பலர் உண்மையா, பொய்யா என விவாதித்துக் கொண்டிருக்கையில், ஆம்!
இராம சேது உண்மை தான், இது ஒரு வியக்கத்தக்க கட்டுமானம் என புகழாரம் சூட்டியிருக்கிறார்கள் நாசாவின் விஞ்ஞானிகள்.
இன்றைய உயர் தரமான தொழில்நுட்பங்களை வைத்து கூட இப்படி ஒரு கட்டுமானத்தை வெறும் ஐந்து நாட்களில் கட்டிமுடிக்க முடியாது.
இராமாயணம் அறிந்திருப்போம், இராம புராணம் மற்றும் இராம சேது எப்படி கட்டப்பட்டது என பல விடயங்களை அறிந்து வைத்திருப்போம்.
ஆனால், அந்த கட்டுமானத்தின் பின் உள்ள பல வியக்கத்தக்க விஷயங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?
எண்ணற்ற அதிசயங்களை தன்னுள் அடக்கி வைத்திருக்கிறது இராம சேது.
அதைப் பற்றி தெரிந்துக் கொள்ள தான் இந்த கட்டுரை, தொடர்ந்து படியுங்கள்.
நாசா கூறும் விளக்கம் நாசா விண்வெளி மூலம் தனது செயற்கைக் கோளை பயன்படுத்தி எடுத்த புகைப்படத்தைக் கொண்டு செய்த ஆராய்ச்சியின் மூலமாக கூறுவது, இராம பாலம் வெறும் மணல் திட்டுகள் அல்ல.
மற்றும் இது வெறுமனே கற்களை தூக்கி வீசி கட்டியவாறு இல்லை.
மிக சரியாக திட்டமிட்டு கட்டிமுடிக்கப்பட்ட கட்டுமானம் தான் இராம சேது.
என கூறியிருக்கிறார்கள் இராமாயணத்தில் சொல்லப்பட்டுள்ளதை போலவே மிக சரியான இடத்தில் இராமர் பாலம் இடம் பெற்றுள்ளது.
அதனால் இராமாயணம் சொல்வது உண்மை இராம சேது கட்டமைக்கப்பட்டு ஏறத்தாழ 17 லட்சம் ஆண்டுகள் ஆகின்றன என கூறப்படுகிறது.
கடந்த 1480 கி.மு.வில் கடலில் ஏற்பட்ட ஒரு சூறாவளியினால் இராம சேது பாலம் அழிந்துவிட்டதாக அறிவியல் கூற்றுகள் கூறுகின்றன.
எனவே, 1480 கி.மு.விற்கு முன்பு வரை இராம சேது பயன்பாட்டில் தான் இருந்திருகிறது.
அதை மக்கள் நடப்பதற்கு உபயோகப் படுத்தியுள்ளனர்.
இராம சேதுவில் ஆராய்ச்சி மேற்கொண்ட பல புவியியலாளர்கள், இராம சேது இயற்கையாக உருவானதல்ல இது மனிதர்களால் கட்டமைக்கப்பட்டது தான் என கூறுகின்றனர்.
இராமாயணம் மட்டுமல்லாமல் மற்றும் பல கூற்றுகள் இதை உண்மை என தான் சொல்கிறது.
மிதக்கும் கற்கள் பற்றிய கூற்றுகள் இன்னும் மர்மமாக தான் இருக்கிறது.
இது நலா மற்றும் நீலின் கைகரியத்தால் தான் கற்கள் மிதக்கின்றன என சிலர் புராணங்களில் கூறியுள்ளனர்.
ஆனால், கடந்த முறை சுனாமியின் சீற்றத்தின் போது கடலில் சிலர் அந்த மிதக்கும் கற்களை கண்டதாகவும்.
அவை இன்னும் கூட இருப்பதாகவும் கூறுகின்றனர்.
தொடக்கமும், முடிவும் இராம சேது பாலம் தனுஷ்கோடியின் பாம்பன் தீவில் தொடங்கி இங்கையின் மன்னார் தீவு வரை நீள்கிறது.
இந்த பகுத்தியில் கடல் மிவும் ஆழமற்று காணப்டுகிறது .
கிட்டதட்ட 1௦ மீட்டர் இங்கு கடலின் ஆழம் உள்ளதாய் கூறுகின்றனர்.
இராம சேது பாலத்தினை வடிவமைக்க மிதக்கும் கற்களை பயன்படுத்தியுள்ளனர். கிட்டத்தட்ட 30 கி.மீ நீளமும், 3 கி.மீ அகலமும் கொண்டது இராம சேது பாலம் என கூறப்படுகிறது.
இதை வெறும் ஐந்து நாட்களில் கட்டிமுடித்துள்ளனர் என்பது ஆச்சரியமான விஷயம் தான் இராம சேது பாலத்தின் வயது அகழ் வாராய்ச்சியாளர்களின் கூற்றின் படி, இராம சேது பாலம் கட்டிமுடிக்கப்பட்டு ஏறத்தாழ 17 லட்சம் ஆண்டுகளுக்கு மேல் இருக்கலாம் என கூறப்படுகிறது.
இதை வைத்து பார்க்கும் போது இராம சேதுவின் வயது 17 லட்சம் ஆண்டுகள்!!!
வெறும் ஐந்தே நாட்களில் ஒரு கோடி வானரங்களின் உதவியோடு, நலா என்ற தலைமை வானரத்தின் கட்டுமான திட்டத்தின் படி கட்டிமுடிக்கப்பட்டது இராம சேது பாலம்.
இராம சேது பாலத்தை ஆதாம் பாலம் எனவும் குறிப்பிடுகின்றனர்.
இது இராவணனிடம் இருந்து சீதையை மீட்க இராமர் செல்லும் போது அவர் கடல் கடந்து செல்ல வானரங்களின் உதவியோடு கட்டப்பட்ட பாலம் ஆகும்.

சூலாயுதங்களில் எலுமிச்சை ஏன் குத்தப்படுகிறது?

சூலாயுதங்களில் எலுமிச்சை ஏன் குத்தப்படுகிறது?
சூலாயுதங்களில் எலுமிச்சை குத்தப்படுவதற்கு காரணம் எலுமிச்சை தேவ கனி என்பதால் ஆகும்.
முக்கனிகளான மாம்பழத்தில் வண்டு குற்றம் உண்டு. பலாவில் வியர்வை குற்றம் உண்டு. வாழையில் புள்ளி குற்றம் உண்டு.
ஆனால் எலுமிச்சையில் மட்டும் இவ்வித குற்றங்கள் இல்லை.
மனிதனுடைய எண்ணங்களை ஈர்க்கும் சக்தி மற்ற கனிகளைக் காட்டிலும் எலுமிச்சைக்கு அதிகம் உண்டு.அதனால்தான் சூலாயுதத்தில் எலுமிச்சை குத்தப்படுகிறது.

*சுவாமிக்கு நேர் எதிரே நின்று வணங்குதல் தவறு*

*சுவாமிக்கு நேர் எதிரே நின்று வணங்குதல் தவறு*
கோயிலில் மூலவருக்கு நேர் எதிராக நின்று சிலர் வழிபடுவதுண்டு. சுவாமிக்கு எதிரே நிற்பவர் எதிரி என்கிறார் காஞ்சிப்பெரியவர். கருவறையில் சுவாமியின் இருபுறமும் நின்று தான் வணங்கவேண்டும் என்கிறது சாஸ்திரம். அப்போது தான் கடவுளின் கடைக்கண் படும். கடைக்கண்பார்வைக்கு தான் குளிர்ச்சியும், கருணையும் உண்டு. அபிராமியன்னையின் கடைக்கண்பார்வை நம் மீது பட்டால் கல்வி, செல்வவளம், ஒருநாளும் தளராத மனம், தெய்வீக வடிவம், வஞ்சமில்லாத நண்பர்கள் ஆகிய எல்லா நன்மைகளும் உண்டாகும் என அபிராமி பட்டர் குறிப்பிடுகிறார்.

“செல்வசெழிப்புடன் என்றும் இருக்க ரகசியங்கள்”

“செல்வசெழிப்புடன் என்றும் இருக்க ரகசியங்கள்”
வெறும் தரையில் அமர்ந்து சாப்பிடக்கூடாது.
வடக்கு பார்த்து சாப்பிடக்கூடாது.
மாலை ஐந்து மணிக்கு மேல் தயிர் சாப்பிடக்கூடாது.
நெல்லிக்காய் ,அகத்திக்கீரை மாலை ஐந்து மணிக்கு மேல் சாப்பிடக்கூடாது.
நகம் ,முடி வியாழன், வெள்ளி, சனி, முடி வெட்டுதல் நகம் வெட்டுதல் கூடாது.
திங்கள் கிழமை காலை ஆறு மணியிலிருந்து ஏழு மணிவரை தண்ணீர் முதல் கொண்டு ஏதும் சாப்பிடக்கூடாது.
சனிக்கிழமை காலை ஆறுமணி முதல் ஏழு மணிக்குள் சுத்தமான நல்லெண்ணெய்யை ஆண்கள் இடது காலிலும் பெண்கள் வலது காலிலும் தடவினால் பணம் வந்துகொண்டே இருக்கும்.
வியாபாரம் தொழில் செய்யும் இடத்தில் ஐந்து முக ருத்ராட்சம் வைத்து பூஜித்தால் வியாபாரம் தொழில் அமோகமாக நடக்கும்.
வீட்டில் மல்லிகை செடி வில்வம் துளசி வளர்க்க பெரும் செல்வம் ஏற்படும்.
தினமும் மல்லிகை பூவை பணம் வைக்கும் இடத்தில் வைத்தால் பணம் சேரும்.
வீட்டின் வாசற்படியில் நற்பவி என்று எழுதிவைத்தால் நன்மைகள் வந்து சேரும்.
மயில் தோகையை வீட்டில் வைக்க பற்பல நன்மைகள் உண்டாகும்.
வீட்டில் பப்பாளி மரம் கறிவேப்பிலை மரம் வளர்க்க கூடாது ,பப்பாளி மரம் பெண்களையும், கறிவேப்பிலை ஆண்களையும் பாதிப்படைய செய்யும்.
முட்கள் உள்ள செடியை வீட்டில் வளர்த்தால் பணம் தங்காது.
ஏகாதசி நாள் அன்று விரதம் இருந்தால் செல்வம் பெருகும்.
படித்ததில் பிடித்தது.
வாழ்க வளமுடன்.

மாவிலை தோரணம் கட்டுவது ஏன் ?

மாவிலை தோரணம் கட்டுவது ஏன் ?
🌿 கோயில்களில் திருவிழா நடைபெறும் காலங்களில் அதிகளவில் மக்கள் ஒன்று கூடுவர். அவர்கள் வெளியிடும் கரியமில வாயுவை தன்னுள் இழுத்து வைத்துக்கொள்ளும் சக்தி மாவிலைக்கு உண்டு. காய்ந்து உலர்ந்து விட்ட மாவிலைகளிலும் அதன் சக்தி குறையாது. எனவேதான் விழா காலங்களில் மாவிலை தோரணம் கட்டுகிறார்கள்.
🌿 விழாக்கள் நடைபெறும்போது இல்லங்களிலும் பொதுவிடங்களிலும் தோரண வாயில் அமைக்கின்றனர். பந்தலிடுவது, கோலமிடுவது, தோரணவாயில் அமைப்பது எல்லாம் விழாவுக்கே உரிய செயல்களாகக் கருதப்படுகிறது. இது பன்னெடுங்காலமாக உள்ள பழக்கம்.
🌿 விழாக்களின் போதும் சுபநிகழ்ச்சிகளின் போதும் மக்கள் அதிகம் கூடுவர். அவ்வாறு ஒன்று கூடுவதனால் காற்று மாசடைகிறது. தூய்மை கெடுகிறது. சுற்றுப்புறச்சு+ழல் பாதிப்படைகிறது.
🌿 காற்றின் மூலம் தொற்று நோய்களைத் தருகின்ற கிருமிகளும் பாக்டீரியாக்களும், மக்களைத் தாக்குகின்றன. உடல் நலத்தைக் கெடுக்கின்றன. நோய்க்கிருமிகளிலிருந்தும் பாக்டீரியாக்களிலிருந்தும் மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவே மாவிலைத் தோரணங்கள் கட்டப்படுகின்றன.
🌿 மாவிலைகள் புரோஹிஸ்பிடின் என்னும் வாயுவைக் காற்றில் பரவவிடுகின்றன. காற்றில் கலந்துள்ள நோய்க் கிருமிகளையும் பாக்டீரியாக்களையும் புரோஹிஸ்பிடின் வாயு அழிக்கிறது. மாவிலைத் தோரணம் சுற்றுச்சு+ழலைத் தூய்மையாக்கும் கிருமி நாசினி என்று அறிந்திருந்தனர், நம் முன்னோர்கள்.
🌿 மாவிலைத் தோரணம் லட்சுமி கடாட்சத்தையும், மங்களத்தையும் குறிப்பதாகும். கோயில்கள் மற்றும் வீடுகளின் நிலைக்கதவில் கஜலட்சுமியை சிற்பமாக வடித்து வைத்திருப்பர். சுபவிஷயம் வீட்டில் நடக்கும் போது நிலைக்கதவில் இருக்கும் திருமகளைப் போற்றும் விதத்தில் மாவிலைத் தோரணம் கட்டுகிறோம்.
🌿 மாவிலை ஒரு கிருமிநாசினி. இதற்கு துர்தேவதைகளை வீட்டிற்குள் நுழைய விடாமல் தடுக்கும் சக்தியும் உண்டு. மேலும் மாவிலை அழுகுவது கிடையாது. முறையாக காய்ந்து உலரும். இதுபோல், வாழ்க்கையும் கெட்டுப்போகாமல் நீண்டகாலம் நடைபெற்று முற்றுபெற வேண்டும் என்ற நம்பிக்கையுடன், மங்களம் பெருக மாவிலைத் தோரணம் கட்டுகிறோம். வீட்டிலுள்ள நுழைவு வாயிலும் மங்களகரமாகத் தோன்றும். அலங்காரத்துக்கு மட்டுமல்ல ஆரோக்கியத்துக்கும் உதவுகிறது மாவிலை.....!

இட்லி

சென்னையில் ஒரு உணவு விடுதி ஒன்றில் இட்லி சாப்பிடச் சென்றேன். சமையல் அறையில் இட்லி வேகவைப்பதை தற்செயலாக பார்க்க நேர்ந்தது.இட்லி வேகவைக்கும்தட்டில் பாலிதீன் பேப்பரை விரித்து அதன்மேல் இட்லிமாவைஇட்டு வேகவைக்கும்காட்சியைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். அந்த இட்லிகளை உணவுப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார் ! நண்பர் ஒருவர். புற்றுநோயைஉருவாக்கக் கூடியபாலித்தீன் துகள்கள் அந்த இட்லிகள் முழுவதும் பரவி இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டது. கடைக்காரரிடம் இதைச்சொல்லி தயவுசெய்து துணியைவிரித்து அதன்மேல் இட்லி வேகவைப்பதை செய்யுங்கள் என்று சொன்னோம்அதற்கு அவர் பதில்கூறினார்.தமிழ்நாடு முழுவதும் உள்ளபெரும்பாலான ஹோட்டல்களில்பாலித்தீன்பேப்பர்களின் மீதுதான் இட்லிகள்வேகவைக்கப்படுகின்றன. இதுதான் எளிதாகவும் சவுகரியமாகவும் உள்ளது. துணிகளைப்பயன்படுத்தினால் இட்லிகளைப்பிரிப்பது சிரமமாக உள்ளது. வேளைப்பளுவும் கூடுகிறது.கேன்சர்இட்லிகள் விற்பனையை எப்படித்தடுப்பது. மக்கள்நலன்கருதி இதைஷேர்செய்யவும்.

கிரக கோளாறுகள் நீங்க குளியல் பரிகாரம்

கிரக கோளாறுகள் நீங்க குளியல் பரிகாரம்
நடக்கும் திசை அறிந்து அதற்கேற்ப அந்த கிரகங்களுக்குரிய பொருட்களால் குளித்து வர, அந்த கிரகங்களால் உண்டாகும் கெடு பலன்களை குறைத்தும், நற் பலன்கள் பெற்றும் வாழலாம்.
மேலும்,ஜாதகத்தில் தற்சமயம் நமக்கு பாதகம் செய்யும் கிரகங்கள் எது என அறிந்து அதற்கேற்பவும் தினசரி குளியல் முறை செய்து வர நிச்சயம் நற் பலன்கள் பெற்று வாழலாம்.
சூரியதிசை: கச கசாவை பொடி செய்து நீரில் கலந்தும் அல்லது, குங்குமப்பூ அல்லது ஏதேனும் சிகப்பு மலர்கள் நீரில் போட்டு குளித்து வரலாம். சிறிதளவு போதும். இவற்றை போட்டு நான்கைந்து குவளைகள் நீரில் குளித்து விட்டு, பின்பு வழக்கம் போல் குளித்து வரலாம்.
சந்திர திசை : தயிரை முதலில் உடல் முழுதும் தேய்து விட்டு சிறிது ஊறி பின்பு குளிக்கவும்.
செவ்வாய திசை் : வில்வ கொட்டை பொடியை சிறிதளவு நீரில் சேர்த்து குளித்து வரலாம். செவ்வாய் தோஷத்தால் திருமண வாழ்வில் பிரச்சனைகளை சந்திப்பவர்கள், மற்றும் திருமண தடை போன்றவற்றிற்கு இது சிறந்த பரிகாரம்.
புதன் திசை: மஞ்சள், கடுகுடன் சிறிது தேன் கலந்து, கங்கை நீர் அல்லது கடல் நீர் சிறிது சேர்க்கப்பட்ட நீரில் குளித்து வரலாம்.
வியாழ திசை: கருப்பு ஏலக்காய் போட்டு கொதிக்க வைத்த நீரை சிறிதளவு குளிக்கும் நீரில் ஊற்றி குளித்து வரவும்.
சுக்கிர திசை : பச்சை ஏலக்காய் போட்டு கொதிக்க வைத்த நீரை சிறிதளவு குளிக்கும் நீரில் ஊற்றி குளித்து வரவும்.
சனி திசை: கருப்பு எள் சிறிதளவு போட்டு கொதிக்க வைத்த நீரை சிறிதளவு குளிக்கும் நீரில் ஊற்றி குளித்து வரவும்.
ராகு திசை : மகிஷாக்ஷி (நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் ) சிறிதளவு போட்டு கொதிக்க வைத்த நீரை சிறிதளவு குளிக்கும் நீரில் ஊற்றி குளித்து வரவும்.
கேது திசை: அருகம்புல் சிறிதளவு போட்டு கொதிக்க வைத்த நீரை சிறிதளவு குளிக்கும் நீரில் ஊற்றி குளித்து வரவும்.