jaga flash news

Sunday, 15 May 2016

சாளக்கிராமங்கள்!!!


சாளக்கிராமங்கள்!!!
சாளக்கிராமங்கள் விஸ்ணுவின் சுயம்பு இலிங்கங்களாகும்.
சாளக்கிராமங்கள் விஸ்ணு சுயம்பு வடிவங்களே இதை வழிபட்டால் சகல தேவதைகளையும் வழிபட்டபலன் உண்டாகும்.
திருமால் உறையும் திருச்சின்னம்
அற்புதமான மஹா விஷ்ணு சாளக்கிராமம்:
சாளக்கிராமம் என்பது கண்ணனின் நிறம் கொண்ட கல் ஆகும். இது இந்துக்களால் திருமாலின் அருவத் தோற்றமாகக் கண்ணனை வழிபடப்படும் சிறப்புக் கல் இதுவாகும். இந்து சமயம் பெரும்பாலும் உருவ வழிபாட்டைக் கொண்டிருந்தாலும் சிவனை சைவர்கள் லிங்க வடிவில் வழிபடுவது போல வைணவர்கள் திருமாலை சாளக்கிராமக் கற்களில் வழிபடுகின்றனர். இந்தப் புனிதக் கற்கள் நேபாளத்தின் முக்திநாத் பகுதியில் கண்டகி ஆற்றங் கரைகளில் காணப்படுகின்றன.
இக்கற்களில் இயற்கையாகவே திருமாலின் சங்கு, சக்கரம், கதை, தாமரை போன்ற உருவங்கள் காணப்படுகின்றன. இவை நெடுங்காலமாக கோவில்கள், மடங்கள், வீடுகளில் வைக்கப்பட்டு வழிபடப்படுகிறது.
பலவித வடிவங்களில் உள்ள சாளக்கிராமங்கள் அவற்றில் பதிந்துள்ள உருவம், அமைப்பு இவற்றிற்கேற்ப திருமாலின் பல அவதாரங்களாக பெயரிடப்படுகின்றன. எடுத்துக்காட்டாக சங்கு, சக்கரம், கதை, தாமரை ஆகியவை ஓர் குறிப்பிட்ட அமைப்பில் உள்ள கற்கள் கேசவம் என அழைக்கப்படுகின்றன.
இவ்வாறாக கேசவம், மாதவம், நாராயணம், கோவிந்தம், விஷ்ணு, மதுசூதனம், திரிவிக்கிரமம், வாமனம், சிறீதரம், இரிசிகேசம், பத்மநாபம், தமோதரம், சங்கர்சனம், பிரத்யும்னம், நரசிம்மம், சனார்த்தனம், அரி, கிருஷ்ணம், சந்தான கோபாலன், லட்சுமி நாராயணன், வராகமூர்த்தி, மத்ஸ்யமூர்த்தி, கூர்மம், சுதர்சனம், ஹிரண்ய கர்ப்பம் என்று 68 வகை சாளக்கிராமங்கள் உள்ளதாக பண்டைய நூல்கள் தெரிவிக்கின்றன.
புராணங்களில்...
கருட புராணம்:
மரண காலத்தில் சுயநினைவுடன் சாளக்கிராமத்தை மனதால் வணங்குபவன் பாவங்களில் இருந்து விடுபடுகிறான் என்றும், இறக்கும் போது சாளக்கிராம தீர்த்தத்தின் ஒரு துளி தீர்த்தத்தை அருந்தி உடலை விடுவோர் வைவஸ்வதம் என்ற தர்மராஜரின் நகரில் யமதர்மராஜனால் மரியாதை செய்யப்பட்டு புண்ணிய உலகிற்கு அனுப்பி வைக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.]
விஷ்ணு புராணம்:
கண்டகி என்னும் புண்ணிய ஆற்றில் நீராடி முக்தி நாதனை பக்தியுடன் வழிபடுபவன், பூவுலகில் சுகமாக வாழ்ந்து பின்னர் வைகுண்டத்தில் தன்னுடன் இருப்பதாக விஷ்ணு கூறுவதாகக் கூறப்பட்டுள்ளது.
பத்ம புராணம்:
சாளக்கிராமம் உள்ள வீடு வைகுண்டத்திற்கு சமம் என்று பத்மபுராணம் கூறுகிறது
சாளக்கிராம வரவாறு:
சாளக்கிராமங்கள் பொதுவாக வட இந்தியாவின் “முத்திநாத்” அல்லது “சாளகிராமம்”; என்னும் சேஷ்த்திரதிலுள்ள “கண்டகி” நதியில் பெறப்படுகின்றது. ஒரு முறை கண்டகி நதியில் துளசியின் சாபத்தால் மலையுருக் கொண்ட விஷ்ணுவாகிய கற்களைக் கொரப்பற்களுள்ள கீடங்கள் தொளைப்பதாலுண்டாம் விஷ்ணுவின் உருவங்கள் இவை குக்குண்டரம் போல் அமைந்திருக்கும்.
சாளக்கிரமம் சம்பந்தமாக பல்வேறு கதைகள் உண்டு.
கந்தப்புராணத்தில் பால்கடலை கடைய தேவர்களும் அசுரர்களும் மந்தாரமலையை மத்ததாகவும் வாசுகிப் பாம்பை நாணாகவும் கொண்டு அமுதம் கடைகையில் அமுதம் அசுரர்களை அடைந்தால் உலகம் அழிந்து விடும் என எண்ணி விஷ்ணுவை வேண்ட விஷ்ணு மோகினி வடிவங்கொள்ள அசுரர்கள் மயங்க இதைக்கான ஆசை உற்று சிவபெருமான் அங்கு சென்ற போது மோகினியை கண்டு மயங்கிய சிவபெருமானின்; கை மோகினி மீதுபட நாணமுற்ற மோகினி கண்டகி நதியாக மாறியது. அன் நதியில் வஐ;ரதந்தம் என்னும் புழு உண்டானது. இப் புழுக்கள் களிமண்ணினால் கூடுகட்டி கூட்டிளுள் வாழ்கின்றன. இக் கூடுகள் கண்டகி நதியில் கலக்கும் போது புழுக்கள் இறந்து போகின்றன. அவற்றின் கூடுகளே சாரக்கிராமங்கள் ஆகின்றன. என்றும், சாளக்கிராமம் என்பது சாளரம் என்னும் ஒரு வகை மரங்கள் நிறைந்த கிராமம் காலப்போக்கில் சளாக்கிராமமாயிற்று என்றும்.
சாளக்கிராமத்தின் அமைவிடம்:
கண்டகாவதி என்ற “கண்டக்” என்ற நேர்பாள செல்லிலிருந்து வந்தது. “ஹரண்ணியவதி” என்னுமொரு பெயரும் உண்டு.
இதனை “ஸ்வர்ணமயம்” என்பர். கண்டாக் நதியில் ஸ்வர்ண ரேகைகள் உள்ள சாளக்கிராமம் கிடைக்கின்றன இது விஷெசமானது. நேர்பாளத்தில் “மாஸ்டாங்” என்னும் மாவட்டத்தில் ஐயாயிரம் (5000 அடி) அடி உயரத்துக்கு மேல் உள்ளது “தாமோதர பீடம்” இவை தாட்சாயினியின் கன்னத்துண்டுகளி லிருந்து இது தோன்றிய பள்ளங்களால் உண்டான சிகரங்களாகும். இவ்வகையான பனிச்சிகரங்கள் புவியில் அறுபதுக்கு (60) மேற்பட்டவை உண்டு.
சிகரத்திலுள்ள பனி உருகி ஏரியாகமாறி புவியையடைகின்றன. இதில் ஒன்று “தாமேதர குண்டம்” இது திபேத்தின் எல்வையில் இருக்கின்றது. இக் குண்டத்திலிருந்து வரும் நதியே “கண்டகி நதி” ஆகும். நேர்பாளத்திலிருந்து கட்மாண்டு என்ற நகரத்துக்கு வடமேற்குத்திசையில் இருநூற்ஐம்பது கிலோமீற்றர் (250); தொலைவில் உள்ளது கண்டகிநதி.
அன்நதியின் கரையில் அமைந்துள்ளது சாளக்கிராமம்; என்னும் இடம். இங்குதான் சாளக்கிராமங்கள் பெறப்படுகின்றது.
சாளக்கிராமத்தின் வகைகள்:
இதன் அமைப்பைப் பொறுத்து லஷ்மி நாராயணம், ரகுநாதம், ஸ்ரீதரம், தாமோதரம், ராஜராஜேஸ்வரம், ரணராகம், ஆதிசேஷ்ன்;, ரகுநாதன், ததிவாமனம், அனந்தம், மதுசூதன், சுதர்சனம், கதாதரம், ஹயக்ரீவம், நரஸிம்மம், இலசஷ்மிநரஸிம்மம்,வாசுதேவம், பிரத்யும்நம், சங்கர்ஷணம், அநிருத்தம், என பல வகையுண்டு. ஒரு துவாரத்தில் நான்கு சக்கரமும் வனமாலையும் ரதாகரமும் நீர் கொண்ட மேகநிறமாக உள்ளது லஷ்மி நாராயணம், வனமாலை இன்றி மற்றவற்றைப் பெற்றது லஷ்மிஜநார்தனம் இரண்டு துவாரங்களுள் நான்கு சக்கரங்களும் ராதாகiமாகவும் உள்ளது ரகுநாதம் இரண்டு சக்கரமுள்ளது வாமனம் வநமாலையுடன் இரண்டு சக்கரமுள்ளது ஸ்ரீதரம் விருத்தாகாரமாகவும் இரண்டு சக்கரமுள்ளது தாமேதரம் மிகப்பெரியதும் மிகச்சிறியதுமாகாமல் ஏழுசக்கரமும் சரத்பூசணத்துடன் கூடியது ராஜராஜேஸ்வரம்; விருத்தாகாரமாய் இரண்டு சக்கரத்தோடும் அம்பறாத்தூணியும் பாணஅடியுமுள்ளது ரணராகம் பதின்நான்கு சக்கரங்களுடன் கூடியது ஆதிசேஷ்ன் சக்ராகாரமாய் இரண்டு சக்கரங்களுடன் கூடியது மதுசூதனம் ஒருசக்கரமுள்ளது சுதர்சனம் மறைக்கப்பட்ட சக்கரமாய்த் தோன்றுவது கதாதரம் இரண்டு சக்கரத்துடன் ஹயக்ரீவவுருவாயக் காணப்படுவது ஹயக்ரீவம் இரண்டு சக்கரத்துடன் திறந்தவாயும் பயங்கரவுருவும் கொண்டது நரசிங்கம் இரண்டு சக்கரத்துடன் பெரியவாயும் வனமாலையுமுள்ளது லசஷ்ம் நரசிங்கம் இரண்டு சக்கரமும் சமாகாரமாயுள்ளது வாசுதேவம் சூசஷ்மமான சக்கரமும் ஒரு ரந்திரத்துள் பல ரந்திரங்களுள்ளது பிரத்யும்னம் துவாரமத்தியில் இரண்டு சக்கரங்களும் புருஷடபாகம் பருத்துமுள்ளது சங்கர்ஷணம் விருத்தாகரமாயும் செம்பட்டு நிறமுள்ளது அநிருத்தம் என்பனவாகும்.
எவ்விடத்தில் சாளக்கிராம் சிலையிருக்குமோ அங்கு ஹரிசாநிந்த்யமாய் வசிப்பார். அவ்விடத்தில் சகல தேவதைகளும் வசிப்பர்;. எல்லாச் சம்பத்துக்களும் உண்டாகும்.
இவைகளில் குற்றங்கள்ளுள்வற்றை நீக்கி குணமுள்ளவற்றை வழிபடுதல் வேண்டும். குற்றமுள்ளவை தீமையை ஏற்படுத்தும்.
இது போன்று சிவலிங்க வடிவங்களும் அங்கு கிடைக்கின்றது. சாளக்கிராம வழிபாடு விஸ்ணு வழிபாட்டில் உண்ணதமானது.
சாளக்கிராமங்கள் விஸ்ணுவின் சுயம்பு இலிங்கங்களாகும். இவை ஒருகாலத்தில் மன்னர்களிடமே பெறக்கூடியதாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இவை இப்போதும் பக்குவம் உள்ளவர்களுக்கே 

6 comments:

  1. How to worship (perform pooja) salagram
    rajagopalan.venkitadri0@gmail.com

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. சாளக்கிராமம் பற்றி ஒரு கதை சொல்கிறேன்.

    கந்தபுராணத்தில் சாளக்கிராமத்தின் மகிமை மாக அழகாக கூறப்பட்டிருக்கிறது.

    மேலும், *ஆந்தர் மைல்ஸ்* என்பவர் வெளியி்ட்டுள்ள புத்தகத்தில், சாளக்கிராமக் கல் இல்லாத வீடு சுடுகாட்டுக்குச் சமம் என்று அதர்வணவேதம் கூறுவதாக எழுதுகிறார்.

    ஏனென்றால், சாளக்கிராமக் கல்லின் அபிஷேக நீர் மகிழ்ச்சியை அளிக்கும் என்றும் அதை, அபிஷேகம் செய்து ஆராதிப்போர் வீட்டில் லட்சுமி நிரந்தரமாகக் குடியிருப்பதால் செல்வம் தழைக்கும், என்பதால் அவ்வாறு எழுதினார்.

    நம் இந்துக்கள் எதையுமே நேரடியாகச் சொல்லாமல் அடையாயக் குறியீட்டுகளால் காட்டுவர். அப்படிப்பட்டதற்கான ஒரு கதை
    உண்டு.

    ஒரு நாட்டியம் ஆடும் பெண்மணி *பேரழகி*. அவளுக்கு ஈடு இணையான அழகுள்ள ஒரு ஆண்மகனும் கிடைக்கவில்லை ஆகையால் இமையமலைக்குப் போய் தவம் செய்வோம் என்று புறப்பட்டாள். அங்கு விஷ்ணு வந்தார்.

    அவருடைய பேரழகைக் கண்டவுடன் இந்தப் பெண் தவத்தை எல்லாம் விட்டுவிட்டு, அவரிடம் சென்று, என்னைத் திருமணம் செய்துகொள்ளுங்கள் என்றாள்.

    அவரோ, மானுடனாகப் பிறந்த நடன மாதுவைக் கைப்பிடிக்க விரும்பவில்லை.
    இருந்தபோதிலும், இப்படிப்பட்ட பேரழகியை விடக்கூடாதென்று, *பெண்ணே நீ கண்டகி நதியாகப் பிறந்து வா..நான் அங்கே கிடக்கும் சாளக்கிராமமாக அவதரிக்கிறேன்..நீ என்னை எப்போதும் தழுவிச் செல்லலாம் என்றார். இவ்வாறே *சாளக்கிராமம்* தோன்றியதாம்.

    நேபாள நாட்டைச் சேர்ந்த ஒரு ௪ஷத்திரியன் (வீரன்) எதேச்சையாக ஒரு சாளக்கிராமம் (சாளக்கிராமம் என்பது ஒரு ஊர்) கல்லை வாயில் வைத்துக்கொண்டு,
    அங்குள்ள ஆற்றில் நீந்தி வந்தார். அவருக்கு அதிர்ஷ்டத்துக்கு மேல் அதிர்ஷ்டம் அடித்தது. அரச பதவியும் கிடைத்தது. அதற்குப் பின் தான் சாளக்கிராமக் கல்லின் மகிமை உலகிற்கு தெரிந்தது என்று கந்தபுராணத்தில், அவருடைய மகிமை கூறப்பட்டிருக்கிறது.

    ReplyDelete
  4. சாளக்கிராமம்: இமையமலையில் உள்ள ஆற்றங்கரையில் காணப்படும், பூஜைக்குரிய பொருளாகப் போற்றிப் பயன் படுத்தப்படும் *தொன்மையான கல்*.

    Explanation : A fossil stone found in the Himalayan Rivers & used for Worship.

    ReplyDelete
  5. மிக (மாக அல்ல) அழகாக கூறப்பட்டிருக்கிறது என வாசியுங்கள்.

    ReplyDelete