jaga flash news

Sunday, 8 May 2016

கடன் தொல்லை

கடன் தொல்லை, தீராத பிரச்சனைகளை தீர்க்கும் லட்சுமி நரசிம்மர்
கடன்பட்டார் நெஞ்சத்தை உவமையாக கம்பர் ராமாயணத்தில் சொல்லியிருக்கிறார்.
கடன்பட்டார் நெஞ்சத்தை உவமையாக கம்பர் ராமாயணத்தில் சொல்லியிருக்கிறார். கடன் தொல்லையை காலைச் சுற்றிய பாம்பு என்பர். கடன்தொல்லையில் இருந்து மீள ருணவிமோசன லட்சுமி நரசிம்மர் ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்வது நல்லது. இந்த துதி சமஸ்கிருதத்தில் இருப்பதால், படிக்க இயலாதவர்களுக்கு எளிமையான பரிகாரம் இருக்கிறது.
“லட்சுமி நரசிம்மம் சரணம் பிரபத்யே “என்ற மந்திரத்தை மாலை நேரத்தில் 108 முறை பாராயணம் செய்யவேண்டும். அப்போது லட்சுமி நரசிம்மருக்கு காய்ச்சிய பசும்பால் அல்லது பானகம் (எலுமிச்சை சாறு, தண்ணீர், வெல்லம் சேர்ந்த கலவை) பிரசாதமாக வைக்கவேண்டும். 48 நாட்கள் இந்த பூஜையைச் செய்தால் கடன் தொல்லையில் இருந்து விடுபட வழி உண்டாகும்.
தீராத பிரச்சனைகள், செவ்வாய் தோஷத்தால் திருமணத்தடை ஏற்படுதல் நீங்கவும் இது.

1 comment:

  1. *கடன்பட்டார் நெஞ்சம்போல*

    துன்பத்திற்கெல்லாம் பெருந்துன்பம் கடன்பட்டவனுடைய துன்பமே. அதனாலன்றோ *கடன்பட்டார் நெஞ்சம்போலக் கலங்கினான் இலங்கைவேந்தன்* என்றார் கம்பர்.

    நமக்கு அருமையான உடல், நல்ல மனம், புத்தி முதலியவை நன்கு இருப்பதற்கும், உலவுவதற்கும் இந்த உலகத்தையும் இதன் பொருட்டு வாழ்ந்து அனுபவிப்பதற்குப் போகத்தையும் ஆண்டவன் கொடுத்திருக்கிறார். அவரிடத்தில் *நாம் கடன்பட்டவர்களே!*

    மனம், மொழி, மெய்களால் அந்த ஆண்டவனை வழிபடுவது தான் நம் கடனைத் தீர்க்கும் வழியாகும்.

    அந்த தனிப்பெருந் தலைவனை வாயார வாழ்த்தி வணங்க வேண்டும்.
    நெஞ்சார நினைக்க வேண்டும்.
    தலையாரக் கும்பிட வேண்டும் என்பதே.

    ReplyDelete