jaga flash news

Saturday, 10 December 2016

புண்ணியத்தின் பலன்

புண்ணியத்தின் பலன்
====================
விஸ்வாமித்திரரின் ஆஸ்ரமத்திற்கு வசிஷ்டர் வந்திருந்தார். இருவரும் பல விஷயங்களைப் பேசினர். வசிஷ்டர் விடை பெறும் போது விஸ்வாமித்திரர் அவருக்கு மறக்க முடியாத அன்பளிப்பு ஒன்றை வழங்க விரும்பி ஆயிரம் ஆண்டு தவத்தால் தனக்குக் கிடைத்த சக்தியை கொடுத்தார். மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்ட வசிஷ்டரும் நன்றி சொல்லி புறப்பட்டார்.
இன்னொரு சமயத்தில் வசிஷ்டரின் ஆஸ்ரமத்திற்கு விஸ்வாமித்திரர் வர நேர்ந்தது. வசிஷ்டரும் அவரை அன்புடன் உபசரித்தார். புண்ணியம் தரும் ஆன்மிக விஷயங்களை மட்டுமே பேசினார். விடை பெறும் நேரத்தில் வசிஷ்டரும் விஸ்வாமித்திரருக்கு அன்பளிப்பு வழங்க விரும்பினார்.
இவ்வளவு நேரம் நல்ல விஷயங்களை பேசியதற்கு கிடைத்த புண்ணிய பலனை உமக்கு அளிக்கிறேன் என்றார். இதைக் கேட்ட விஸ்வாமித்திரரின் முகம் சுருங்கியது. “ நீங்கள் எனக்கு அளித்த ஆயிரம் ஆண்டு தவப்பயனுக்கு இந்த அரை நாள் நல்ல விஷயங்கள் பற்றி பேசிய புண்ணியமும் எப்படி சமமாகும் என்று தானே யோசிக்கிறீர்கள்? என்று கேட்டார். விஸ்வாமித்திரரும் தலையாட்டினார்.
எது உயர்ந்தது என்பதை நாம் பிரம்மாவிடமே கேட்டு தெரிந்து கொள்வோம் என்று முடிவு செய்து பிரம்மலோகம் சென்றனர். பிரம்மாவிடம் நடந்ததை விளக்கினர். இது விஷயத்தில் தீர்ப்பு சொல்ல என்னால் முடியவில்லை. விஷ்ணுவிடம் முறையிடுங்கள் என்றார் பிரம்மா.
அவர்களும் விஷ்ணுவிடம் சென்று கேட்டனர். தவ வாழ்வில் என்னை விட சிவனுக்குத் தான் நிறைய அனுபவம் உண்டு. அவரிடம் விசாரித்தால் உண்மை விளங்கும் என்றார் விஷ்ணு. கைலாயம் சென்று சிவனிடம் விளக்கம் தர வேண்டினர். சிவனும் உங்களுக்கு தெளிவு வேண்டுமானால் பாதாள லோகத்திலுள்ள ஆதிசேஷனின் உதவியை நாடுங்கள் என்றார். விஸ்வாமித்திரரும் வசிஷ்டரும் பாதாளலோகம் வந்தனர். தங்கள் சந்தேகத்தை எடுத்துக்கூறினர்.
இதற்கு யோசித்தே பதில் சொல்ல வேண்டும் அதுவரை இந்த பூலோகத்தை தாங்கும் பணியை நீங்கள் செய்யுங்கள் தலையில் சுமக்க கடினமாக இருக்கும் எனவே இதை ஆகாயத்தில் நிலை நிறுத்தி வையுங்கள் என்றார். உடனே விஸ்வாமித்திரர் நான் இப்போதே ஆயிரம் ஆண்டுகள் செய்த தவத்தின் சக்தியை கொடுக்கிறேன் அதன் பயனாக பூமி ஆகாயத்தில் நிலைபெற்று நிற்கட்டும் என்றார். ஆனால் பூமியில் எந்த மாற்றமும் உண்டாகவில்லை. அது ஆதிசேஷனின் தலையிலேயே நின்றுகொண்டிருந்தது.
வசிஷ்டர் தன் பங்குக்கு அரைமணி நேரம் நல்ல விஷயங்களை பேசியதால் உண்டாகும் புண்ணியத்தை கொடுக்கிறேன் இந்த பூமி அந்தரத்தில் நிற்கட்டும் என்றார் இதைச் சொன்னதும் ஆதிசேஷனின் தலையில் இருந்த பூமி கிளம்பி அந்தரத்தில் நின்றது. ஆதிசேஷன் பூமியை எடுத்து மீண்டும் வைத்துக்கொண்டு நல்லது நீங்கள் இருவரும் வந்த வேலை முடிந்துவிட்டது போய் வரலாம் என்றார். கேட்ட விஷயத்திற்கு தீர்ப்பு சொல்லாமல் வழியனுப்பினால் எப்படி என்றனர் ரிஷிகள் இருவரும் ஒருமித்த குரலில்.
உண்மையை நேரில் பார்த்த பிறகு தீர்ப்பு சொல்வதற்கு ஒன்றுமில்லை ஆயிரம் ஆண்டு தவசக்தியால் அசையாத பூமி அரைமணி நேர நல்ல விஷயங்கள் பேசிய பலனுக்கு அசைந்து விட்டது பார்த்தீர்களா? நல்லவர் உறவால் கிடைக்கும் புண்ணியமே தவத்தால் கிடைக்கும் புண்ணியத்தை விட சிறந்தது என்றார் ஆதிசேஷன்.

2 comments:

  1. புண்ணியத்தின் பலன் விளக்கம் அருமை.

    எது உயர்ந்தது என்ற வரிக்கு, நான் ஒரு கதை சொல்கிறேன்.

    புகழ்பெற்ற உணவகம் ஒன்று இருந்தது. *அது தோசைக்கு புகழ் பெற்றது.* அங்கே கிடைக்கும், தோசையையும், சாம்பாரையும், ஒருமுறை ருசித்தவர்கள், மீண்டும், மீண்டும் வந்து விடுவார்கள். அதனால்
    எப்போதும் அங்கே நல்ல கூட்டம் இருக்கும்.

    அந்த உணவகத்தில் அதிகமாய் பயன்படுத்தப்படும், இரண்டு *உபகரணங்கள்* இருந்தன. ஒன்று
    *தோசைக்கரண்டி, இன்னொன்று சாம்பார்க் கரண்டி.

    இரண்டுக்குமே எப்போதுமே ஆகாது. ஒன்றின்மேல் ஒன்று எப்போதும் பொறாமைப்படும். பார்க்கும்போதெல்
    லாம் வாக்குவாதம் செய்து கொள்ளும்.

    நோசைக்கரண்டியோட ஆதங்கம், தான்மட்டும் இருக்கிற இடத்திலேயே கிடப்பதும், சாம்பார்க் கரண்டி மட்டும்
    சந்தோஷமாய் வெளியில் சுற்றி வருவதும்தான்.

    சாம்பார்க் கரண்டிக்கோ, தோசைக்
    கரண்டி சும்மா இரண்டு திருப்பு திருப்பி விட்டு, ஹாயாக ஓய்வெடுத்துக் கொள்ளும்போது, தான் மட்டும் வெயளியே சென்று, ஓவ்வொரு தடவையும் வாளிக்குள் முங்கி, முங்கி உழைக்க வேண்டியிருக்கிறதே என்ற ஆதங்கம்.

    தோசைக்கரண்டி நினைத்தது, இத்தனை உறுதியாக வடிவமை்க்கப்பட்ட என்னால், அந்த சாம்பார்க் கரண்டி போல வேலை செய்ய முடியாதா என்ன?

    சாம்பார்க்கரண்டியோ இவ்வளவு வாகான கைப்பியுடன், உருவாக்கப்பட்ட என்னால், அந்த ஒல்லிக் கைப்பிடிக்காரன் மாதிரி செயல்பட முடியாதா ? என்று நினைத்தது.

    ஒருநாள் இந்தப் பஞ்சாயத்தை சமையல்
    காரரிடமே கொட்டித் தீர்த்து விட்டன. அவருக்கு சிரிப்பு வந்துவிட்டது. அவர் சொன்னார், சரி நீங்கள் செய்யும் வேலையை ஒரு பதினைந்து நிமிடம் மட்டும் மாற்றிக் கொள்ளுங்கள். பிறகு நீங்களே முடிவெடுத்துக் கொள்ளலாம் என்றார். இரண்டுக்குமே அவர் சொன்னது சரியென்று பட்டு, ஒப்புக் கொண்டது.

    தோசைக்கல்லின் மேல் ஓய்வெடுப்பது,
    சாம்பார்க்கரண்டிக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.

    தோசைக்கரண்டிக்கும், சாம்பார் வாளிக்குள் இருந்தபடி வெளியில் வந்து
    வாடிக்கையாளர்களைப் பார்ப்பது ஆனந்
    தமாக இருந்தது. நெடுநாள் கனவு நிறைவேறுவதில், இரண்டுமே சந்தோஷப்பட்டன.

    சமையற்காரர் ஒரு தோசையை ஊற்றிவிட்டு, சாம்பார்கரண்டியிடம் சொன்னார், இதை அப்படியே திருப்பிப்
    போடு, அதற்காகவே காத்திருந்த சாம்பார்க்கரண்டி, இதோ செய்கிறேன் என்று செயலில் இறங்கியது. அது எவ்
    வளவோ முயற்சி செய்தும் முடிய
    வில்லை. கல்லில் இருந்த தோசை துண்டு துண்டானது தான் மிச்சம்.
    இப்போது தோசை கருகவும் ஆரம்பித்து
    விட்டது.சமையற்காரர் கேட்டார் ! என்ன
    முடிஞ்சுதா ? சாம்பார்க்கரண்டிக்கு அழுகை அழுகையாக வந்தது. இதுவரை, அவர் சொன்ன அடுத்த நொடியிலேயே, எத்தனை பேருக்கு சாம்பார் ஊற்றியிருக்கும்? இப்போது ஒரு தோசையைக் கூட திருப்பிப் போட முடியவில்லையே என்று அவமானத்தில் குறுகிப்போனது.

    ஆர்வமாய் வெளியே சென்ற தோசைக்
    கரண்டியிடம், பரிமாறுபவர் சொன்னார்
    கொஞ்சம் சாம்பார் அள்ளி ஊற்று என்றார். கொஞ்சம் என்ன, நிறையவே ஊத்திட்டாப்போச்சு என்று சொல்லியபடியே, அள்ளி அள்ளிப் பார்த்தது. அதன் தட்டையான முன்புற
    அமைப்பால் கொஞ்சம்கூட அள்ள முடிய
    வில்லை. வெறும் கரண்டியாகத் தான் வெளியி்ல் வந்தது. பரிமாறுபவரை நிமிர்ந்து பார்க்கும் தைரியம் அதற்கில்லை. வாளிக்குள் முகம் புதைத்
    துக் கொண்டது.

    சமையற்காரர் சொன்னார், கரண்டிகளே! நீங்கள் ஒவ்வொருவரும்
    ஒவ்வொரு வேலையைச் செய்யும்படிதான் வடிவமைக்கப்பட்டிருக்
    கிறீர்கள். *இதில் எதுவும் தாழ்ந்த வேலையல்ல.
    சாம்பார்க்கரண்டி வேலை செய்ய
    வில்லையென்றால், தோசைக்கரண்டி
    யின் படைப்புக்கு மதிப்பில்லை.

    தோசைக்கரண்டி வேலை செய்ய
    வில்லையென்றால், சாம்பார்க்கரண்
    டிக்கு வேலையே இல்லை.

    நாம் நம்மை மற்றவரோடு ஒப்பிட்
    டுக் கொண்டிருக்கும் வரை, ஈசன், நமக்குக் கொடுத்திருக்கிற ஆசீர்வாதங்கள், கண்ணில் படவே செய்யாது அல்லவா.?

    இனியாவது, மற்றவரோடு, ஒப்பிட்டு
    *உங்கள் மதிப்பைக் குறைத்துக் கொள்ளாதிருங்கள்.*
    வாழ்க வளமுடன்...

    ReplyDelete
  2. இரண்டு பிழைகள் உள்ளன. திருத்தி வாசியுங்கள்.

    ReplyDelete