jaga flash news

Saturday, 10 December 2016

தமிழரின் கட்டிடகலையை வாழ்த்துவோம். தமிழர் பண்பாட்டை போற்றி பாதுகாப்போம்.

தாஜ் மஹால் மட்டும் தான் உலகில் அழகான கட்டிடமா. அதை விட அழகான ஒரு கட்டிடம் உலகில் வேறு எதுவும் இல்லையா. நிறையவே இருக்கிறது. சரி உலக அதிசயம் என்றால் என்ன?
ஒன்று உருவான பின். அதே போல் ஒன்றை உருவாக்க முடியாது என்பது தான் உலக அதிசயம்.
நெல்லையப்பர் கோவிலில் கல் தூனை
தட்டினால் ச, ரி, க, ம, ப, த, நி என்கிற ஏழு. இசை ஸ்வரங்கள் ஒலிக்கும். கல்லுக்குள் 7 ஸ்வரங்களை வைத்தார்களே. அது உலக அதிசயம்.
திருப்பூரில் உள்ள குண்டடம் வடுக நாத
பைரவர் கோவிலில். குழந்தை தாயின்
வயிற்றில் இருக்கும் பொழுது. குழந்தை இந்த, இந்த மாதத்தில் இந்த, இந்த வடிவத்தில். இவ்ளவு விதமான Positions ல இருக்கும் என்பதை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே
கல்லில் சிற்ப்பங்களாக வடித்து
வைத்துள்ளார்கள் என் முன்னோர்கள். அது உலக அதிசயம்.
அன்னியர் படை எடுப்பின் பொழுது கூட. இந்த அதிசய சிற்ப்பங்களை அவர்களால் சிதைக்க முடியவில்லை.
இன்றும் நிறைய கோவில்களில்
சூரிய ஒளி குறிப்பிட்ட ஒரு தேதி, நேரத்தில் மாலை போல் வந்து சிவலிங்கத்தின் மீது விழும். அப்ப
எவ்ளவு துல்லியமாக Measure செய்து
ஆலயங்களை கட்டி இருப்பார்கள் என்று பாருங்கள். சில கோவில்களில் தினமுமே சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது மாலை போல் வந்து விழும்.
வட சென்னையில் உள்ள
வியாசர் பாடி ரவீஸ்வரர் சிவன் கோவிலில் 3 வேளையும் சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது மாலை போல் வந்து விழும். இந்த கோவிலில்
உள்ள சிவலிங்கம் எவ்ளவு ஆண்டுகள்
பழமையான லிங்கம் தெரியுமா?
ஐயாயிரம் ஆண்டுகள். இது உலக அதிசயம்.
மதுரை மீனாக்ஷி அம்மன் கோவில், தஞ்சை பெரிய. கோவில் சிற்ப்ப, கட்டிட வேலைபாடுகளில் உள்ள அதிசயங்களைபற்றி சொல்வதென்றால். அதற்கு எனக்கு இந்த ஒரு பிறவி பத்தாது.
ஓசோன் 20 ம் நூற்றாண்டில் கண்டு
பிடிக்கப்பட்ட படலம். 700 ஆண்டுகளுக்கு
முன்பே மதுரை மீனாக்ஷி அம்மன் கோவிலில்
ஓசோன் படலத்தின் படம், அதன் முக்கியத்துவம்,
அதை நாம் எவ்வாறு பாதுக்காக்க வேண்டும்
அனைத்தும் அங்கே வைக்கப்பட்டு உள்ளது. அது உலக அதிசயம்.
பழம்கால கோவில்களில் உள்ள யாழி
சிலையின் வாயில் ஒரு உருண்டை
இருக்கும். அந்த உருண்டையை நாம்
உருட்டலாம். ஆனால் ஆயிரம் குங்பூ வீரர்கள் ஒன்று சேர்ந்து முயற்சித்தாலும். யாழி வாயில் உள்ள உருண்டையை வெளியே உருவ
முடியாது. அது உலக அதிசயம்
கல்லுக்குள் 7 ஸ்வரங்களை வைக்கும் அந்த வித்தையை. எந்த வல்லரசாலும் செய்ய முடியாது. வாயில் உள்ள உருண்டையை உருட்டலாம். ஆனால்
உருவ முடியாது. இந்த வித்தையை இன்று
எந்த வல்லரசாலும் செய்ய முடியாது.
மிகப்பெரிய பிரும்மாண்ட கற் கோவில்களை.
அழகிய கலை வேலைபாடுகளோடு
உருவாக்குவது. இதை எந்த உலக
வல்லரசாலும் செய்ய முடியாதது.
அது போல் ஜெயங்கொண்டத்தில் உள்ள கங்கை கொண்ட சோழபுரம் கோவில் ஒரு வரலாற்று சிறப்பு மிக்கது. அக்கோவிலில் உள்ள
கிணற்றிற்கு அருகில் ஒரு சிங்கத்தின் சிற்பம் இருக்கும்.
சிங்கத்தின் வாயில் ஒரு கதவு
தென்படும். அதன் மூலம் கீழே இறங்கினால் கிணற்றில் குளிக்கலாம். ஆனால் மேலேயிருந்து பார்த்தால் நாம் குளிப்பது தெரியாது.அன்றைய ராணிகளுக்காகவே கட்டப்பட்ட கிணறு அது.அக்கோவிலில்உள்ள கருவறையில் சுவர்களில் மரகதகற்கள் பதித்துள்ளனர். அதனால்
வெளியே வெயில் அடித்தால் உள்ளே
குளிரும். வெளியே மழை பெய்தால் உள்ளே. கதகதப்பாக இருக்கும்.
அது போல் கோவில் மேற்கூரையில் ஒரு ஆள். பதுங்கும் உயரத்தில் பாதுகாப்பு பெட்டகம் உள்ளது. போர் காலத்தில் ஆயுதங்களும்
படைவீரர்களும் பதுங்கும் வகையில்
கட்டியுள்ளார் நமது ராஜேந்திர சோழர்.
தமிழரின் கட்டிடகலையை வாழ்த்துவோம். தமிழர் பண்பாட்டை போற்றி பாதுகாப்போம்.

3 comments:

  1. S. Correct. ஏழு சப்த ஸ்வரங்கள். நெல்லையப்பர் கற்றூணில் உள்ளன.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. சிதம்பர ரகசியம் என்பது எது?

    நான் சொல்லும் கூற்று சரியாக இருக்குமா?

    ஆடல் கடவுள் என்பவர் தான், சிதம்பரம் தில்லை நடராஜர் கோவில். ஒரே இடத்தில் நிற்காமல் ஆடிக்கொண்டே இருப்பார்.

    வலதுபுற மேல் கையில் உடுக்கை(இந்த உலகம், ஒலியின் மூலம் துவங்கியது என்பதை உணர்த்துகிறது.

    இடதுபுற மேல் கையில் உள்ள நெருப்பு(எந்நேரமும் அழித்துவிடுவேன் என்ற எச்சரிக்கையை கொடுக்கின்றது.

    வலதுபுற கீழ் கையில் காப்பாற்றுவதை குறிப்பதை போன்று, பயப்படாதே நான் இருக்கிறேன் என்று கூறுகின்றது.

    இடதுபுற கீழ் கையால் உயர்த்தி இருக்கும்
    காலைக்காட்டி, தன்னிடம் அடைக்கலம் புகுவோருக்கும், தன்னை வணங்கும் பகதர்களுக்கான இடம் என்பதை உணர்த்துகின்றது. அதாவது,
    ஆக்கல்,அழித்தல்,காத்தல் என்பதை நமக்கு தெரியப்படுத்துகிறது.

    *இதன் ரகசியம்,"இங்கு இறைவன் ஆகாய உருவில் இருக்கின்றார்* என்பது தான். I mean ஆகாயத்துக்கு ஆரம்பமும், முடிவும் கிடையாது, அதை உணரத்தான் முடியும் என்பதை உணர்த்துவதே!

    அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாச
    கர் ஆகிய சமயக்குறவர் நால்வராலும், தேவார பாடல் பெற்ற ஸ்தலம்.

    இங்கு ஆறுகால பூஜை நடைபெறும்.

    ReplyDelete