jaga flash news

Saturday, 10 December 2016

*காயத்ரி மந்திரம்*

*காயத்ரி மந்திரம்*
*ஆக.19 காயத்ரி ஜபம்: காயத்ரி மந்திரம் பற்றி மகான்கள் கருத்து!*
ஆவணி அவிட்டத்திற்கு மறுநாள் காயத்ரி ஜபம் செய்யப்படும்.
கிருஷ்ணர் கீதையில் நதிகளில் நான் கங்கையாகவும், மலைகளில் விந்தியமாகவும், மந்திரங்களில் காயத்ரியாகவும் இருக்கிறேன் என்கிறார்.
காயத்ரி மந்திரத்தை, மந்திரங்களின் கிரீடம் என்கிறார் சுவாமி விவேகானந்தர்.
ஜே.பி,எஸ். ஹால்டேன் என்ற விஞ்ஞானி, “இந்த மந்திரம் ஒவ்வொரு ரசாயன கூடங்களின் வாயில் கதவிலும் பொறிக்கப்பட வேண்டும்,” என்கிறார்.
ராமகிருஷ்ணர் கூறுகையில் பெரிய பெரிய கடுந்தவ முயற்சிகளில் மனிதர்கள் ஈடுபடுவதைக் காட்டிலும், காயத்ரி மந்திரத்தை ஜபிப்பது மிகப்பெரிய சாதனையாகும். இது மிக சிறிய மந்திரம் தான். ஆனால் மிக மிக சக்தி வாய்ந்தது என்கிறார்.
ஞானி ஆர்தர் கொயெஸ்ட்லர், “காயத்ரி மந்திரம் 1000 அணுகுண்டுகள் வெடித்தால் வெளிப்படும் சக்திக்கு சமமானது,” என்கிறார்.
காந்திஜி, “யார் ஒருவர் காயத்ரி மந்திரத்தை ஜபிக்கிறாரோ அவர் நோய்க்கு ஆளாக மாட்டார்,” என்கிறார்.
*காயத்ரி மந்திர பொருள்!*
வேதத்திலிருந்து வந்த அனைவருக்கும் பொதுவான மந்திரம் தான் காயத்ரி மந்திரம்.
*ஓம் பூர் : புவ : ஸ்வ :*
*தத் ஸவிதுர் வரேண்யம்*
*பர்கோ தேவஸ்ய தீமஹி*
*தியோ யோந: ப்ரசோதயாத்*
என்ற இந்த மந்திரத்திற்கு, *“நம் புத்தியை இயங்கச் செய்யும் பரமாத்மாவை நாம் வணங்குவோம்”* என்பது சுருக்கமான பொருள்.
இந்த மந்திரம் விஸ்வாமித்திரரால் கண்டுபிடிக்கப்பட்டது. சூரிய பகவானை நோக்கி வழிபடுவதாக இம் மந்திரம் அமைந்துள்ளது. மிக அதிக சக்தி கொண்டது.
அதிர்வுகள் மூலம் ஆக்கப்பூர்வ சக்தியினை ஏற்படுத்தக் கூடியது.
*காயத்ரி மந்திர மண்டபம்!*
காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவில் முதல் பிரகாரத்தில் காயத்ரி மண்டபம் உள்ளது.
காயத்ரி மந்திரத்தில் 24 அட்சரங்கள் (எழுத்துக்கள்) இருப்பது போல, இந்த மண்டபத்தில் 24 தூண்கள் உள்ளன. இந்த மண்டபத்தின் நடுவில் தான், காமாட்சியம்மன் வீற்றிருக்கிறாள்.
*வேதங்களின் தாய்!*
வேதங்களின் தாயே காயத்ரி தேவி. காயத்ரி மந்திரம் சொல்லப்படும் இடங்களில் இந்த தேவி இருப்பாள்.
இவளுக்கு சாவித்திரி, சரஸ்வதி என்ற பெயர்களும் உண்டு. இவள் ஐம்புலன்களின் அதிபதி. சாவித்திரி என்பது உண்மையைக் குறிக்கின்றது. சரஸ்வதி வாக்கின் அதிபதி. ஆக உண்மையான சிந்தனை, சொல், செயல் இவற்றினை குறிப்பதாக அமைகிறது காயத்ரி மந்திரம். இது வேதத்தின் சாரம்.
இதனை முழு கவனத்தோடு காலை, மாலை இருவேளையும் சொல்லலாம். இதைச் சொல்வதால் மனம் சுத்தமாகும். தீய எண்ணங்கள், கவலைகள் நீங்கும். மாணவர்கள் சிறப்பாகப் படிப்பார்கள்.
*எத்தனை தடவை ஜபிப்பது?*
காயத்ரி மந்திரத்தை காலை 4.30 மணி முதல் சொல்ல துவங்க வேண்டும். 108 முறை ஜபிப்பது மரபு. மாலையில் விளக்கேற்றியதும் இதே போல ஜபிக்கலாம்.
*காயத்ரி மந்திரத்தை ஜபிப்பதன் பலன்!*
காயத்ரி மந்திரத்தை ஜபிப்பதால், கம்பீரத் தோற்றம், தரமான பேச்சு, வறுமை, குறை நீங்குதல், பாதுகாப்பு, கண்ணில் அறிவொளி வீசுதல், அபாயம், தேவையற்ற சூழ்நிலைகள் நீங்குதல், நரம்புகளும், சுரப்பிகளும் ஊக்குவிக்கப்படுதல், எந்தச் சூழலிலும் அமைதியாக இருத்தல், நற்செயல்களில் ஈடுபடுதல் ஆகிய பலன்கள் உண்டாகும்.
மேலும், இது வாழ்க்கையில் குறுக்கிடும் தடைகளை நீக்கும். மூளையை பிரகாசிக்கச் செய்யும். உள்ளுணர்வினை தெளிவாக்கும். நம்மைப் பற்றிய உயர் உண்மைகள் தெரிய வரும்.

No comments:

Post a Comment