jaga flash news

Saturday, 11 May 2024

இந்தியாவில் எத்தனை சென்டிமீட்டர் உயரம் இருந்தால் அது நார்மல் தெரியுமா?

உடல்நலம் இந்தியாவில் எத்தனை சென்டிமீட்டர் உயரம் இருந்தால் அது நார்மல் தெரியுமா? நீங்க எத்தனை சென்டிமீட்டர் இருக்கீங்க? 
உயரமான நபர்களை பொதுவாக அனைவரும் விரும்புவார்கள். ஆனால் மக்களின் சராசரி உயரம் எவ்வளவு என்பதைப் பற்றி எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? சராசரி உயரத்தை அறிந்துகொள்வது, உங்கள் உயரத்தைப் பொருட்படுத்தாமல், உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் நீங்கள் எந்த அளவீடுகளின் கீழ் வருகிறீர்கள் என்பதைப் புரிந்துகொள்ள உதவும். சராசரி உயரத்தின் உலகளாவிய மாறுபாடுகள் மற்றும் சராசரி உயரம் என்ன என்பதைப் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். சராசரி உயரமாக கருதப்படுவது என்ன? வயது வந்தவரின் சராசரி உயரம் பாலினம், மரபியல், ஊட்டச்சத்து மற்றும் புவியியல் இருப்பிடம் போன்ற காரணிகளைப் பொறுத்து மாறுபடும். அழுவது உடல் நலத்திற்கு நல்லது.. ஏனென்று தெரியுமா? சமீபத்திய ஆய்வின்படி, 2019 ஆம் ஆண்டில் உலகளவில் வயது வந்த ஆண்கள் மற்றும் பெண்களின் சராசரி உயரம் முறையே 171 சென்டிமீட்டர் (5 அடி 7 அங்குலம்) மற்றும் 159 சென்டிமீட்டர் (5 அடி 3 அங்குலம்) ஆகும்.  உலகளாவிய சராசரி என்ன? உலகளாவிய சூழலில், சராசரி உயரம் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு கணிசமாக மாறுபடும். உதாரணமாக, தென்கிழக்கு ஆசியாவில் உள்ளவர்களுடன் ஒப்பிடும்போது வடக்கு ஐரோப்பாவில் வசிப்பவர்களின் சராசரி உயரம் பொதுவாக உயரமாக உள்ளது. நெதர்லாந்து, ஆண்களிடையே சராசரியாக 183 சென்டிமீட்டர் (6 அடி) மற்றும் பெண்களிடையே 170 சென்டிமீட்டர் (5 அடி 7 அங்குலம்) உயரம் கொண்ட உயரமான தேசத்திற்கான பட்டத்தை பெற்றுள்ளது. மறுபுறம், குறைவான சராசரி உயரம் கொண்ட மக்களைக் கொண்ட நாடாக இந்தோனேசியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது, இங்கு ஆண்களின் சராசரி உயரம் 158 சென்டிமீட்டர் (5 அடி 2 அங்குலம்) மற்றும் பெண்களின் சராசரி உயரம் 147 சென்டிமீட்டர் (4 அடி 10 அங்குலம்) உயரமும் உள்ளது. ஆண்களே! 30 வயசாகிருச்சா? உடலில் இந்த மாற்றங்கள் இருந்தா நீங்க ஆபத்தில் இருக்கீங்கனு அர்த்தமாம். ஜாக்கிரதை. இந்தியர்களின் சராசரி உயரம் என்ன? இந்தியாவில், மக்களின் சராசரி உயரம் உலக சராசரியிலிருந்து சற்றே வேறுபடுகிறது. இந்தியர்களிடையே சமீபத்தில் செய்யப்பட்ட ஆய்வின்படி, ஒரு இந்திய ஆணின் சராசரி உயரம் தோராயமாக 164.94 சென்டிமீட்டர் (5 அடி 4.9 அங்குலம்), ஒரு இந்தியப் பெண்ணின் சராசரி உயரம் சுமார் 152.58 சென்டிமீட்டர் (5 அடி 0.05 அங்குலம்) ) இருப்பினும், மரபியல், உணவுமுறை மற்றும் சமூகப் பொருளாதார நிலை போன்ற காரணங்களால் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உயரத்தில் குறிப்பிடத்தக்க மாறுபாடுகள் இருக்கலாம் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். உயரத்தை பாதிக்கும் காரணிகள் மரபியல், ஊட்டச்சத்து, சுற்றுச்சூழல் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியம் உள்ளிட்ட பல காரணிகள் ஒருவரின் உயரத்தை பாதிக்கின்றன. ஒரு தனிநபரின் உயரத்தை தீர்மானிப்பதில் மரபியல் காரணிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன, குழந்தைகள் பொதுவாக பெற்றோரிடமிருந்து அவர்களின் உயரத்தை பெறுகிறார்கள். போதுமான ஊட்டச்சத்து, குறிப்பாக குழந்தை பருவம் மற்றும் இளமை பருவத்தில் பெறுவது, ஒருவரின் முழு உயரத்தை அடைவதற்கு முக்கியமானது. சுகாதாரம் மற்றும் சமூக பொருளாதார நிலை போன்ற சமூக காரணிகளும் உயரத்தை பாதிக்கலாம். புவியியல் வேறுபாடுகள் கூட ஒரு நபரின் உயரத்தை ஓரளவு பாதிக்கும் என்று ஆய்வுகள் கூறுகிறது. 

No comments:

Post a Comment