jaga flash news

Wednesday, 8 May 2024

ஓமம் விதைகள்...


இடுப்பு எடை.. கைப்பிடி ஓமம் இருக்கா? சைனஸ் முதல் தலைவலி வரை தீரும்! ஓமத்தில் ஒளிந்திருக்கும் விசேஷம்
ஓமம் விதைகள் கையில் இருந்தாலே, ஆரோக்கியம் நிச்சயம் என்பார்கள்.. வெறும் வயிற்றில் காலையில் இந்த ஓமத்தை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்னென் தெரியுமா?


ஓம விதைகளை பச்சையாகவோ, தண்ணீரில் கொதிக்க வைத்தோ சாப்பிடலாம். இந்த ஓமம் பெண்களுக்கான மருந்து என்றே சொல்லலாம்.. அந்த அளவுக்கு ஏகப்பட்ட சத்துக்கள் இந்த ஓமத்தில் உள்ளன.. கார்போஹைட்ரேட், கொழுப்புகள், சோடியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.. அதேபோல, குறிப்பாக, நார்ச்சத்தும், புரதச்சத்தும் உள்ளன.


Excellent Health Uses of Ajwain Seeds and Do you know Ajwain Water is the Super Medicine for Stomach pain Belly Fat
அஜீரணம்: அஜீரணம், செரிமானம் போன்றவற்றுக்கு மட்டுமே பிரதானமாக பயன்படுத்தப்படும், இந்த ஓமத்தில், பல்வேறு ஆச்சரிய நன்மைகள் ஒளிந்திருக்கின்றன.. வயிற்று பகுதியை, ஓம விதைகள் பராமரிக்க செய்கின்றன..

குறிப்பாக, வயிறு உப்புசம், வாயு உள்ளிட்ட நச்சுக்களையும், கழிவுகளையும் நீக்குவதுடன், குடல் பாதுகாப்பை தக்க வைக்கிறது இந்த ஓமம். மலச்சிக்கல் இருப்பவர்கள், காலையில் வெறும் வயிற்றில், ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் ஓமத்தை கலந்து குடிக்கலாம்.. இதனால், பசியும் நன்றாக எடுக்கும்..

வயிறு பொருமல்: அதேபோல, வயிற்று பொருமல், அஜீரண கோளாறு இருந்தால், 100 கிராம் ஓமத்தை 1 லிட்டர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து அது பாதியாக சுண்டியதும், வடிகட்டி குடித்தால், வயிறு சம்பந்தமான கோளாறுகள் நீங்கும். குடல் புண் மற்றும் வயிற்றுப்புண் தொடர்பான பிரச்சினைகளுக்கும் ஓமம் விதைகள் தீர்வு தருவதாக, சமீபத்தில் வெளியான ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.


நுரையீரலுக்கு கவசம் போல இந்த ஓமம் பாதுகாக்கிறது.. அதனால், சளி, காய்ச்சல் இருந்தாலும், இந்த விதையை சாப்பிட்டால் தீர்வு கிடைக்கும்.. அதுமட்டுமல்ல, நுரையீரலிலுள்ள சளியை அகற்றி வெளியே தள்ளிவிடும் தன்மை, இந்த ஓம விதைகளுக்கு உள்ளது.. அதேபோல, ஓமத்தை ஒரு துணியில் கட்டி மூக்கினால் நுகர்ந்து வந்தால், மூக்கடைப்பு விலகும்.

தலைவலி: ஒற்றைத் தலைவலியால் அவதிப்படுபவர்கள், ஓமத்தை தூள் செய்து, தேய்த்தால் வலி விலகும்.. மூட்டு வலிகளுக்கு ஓமம் விதைகள் உதவுகின்றன.. ஓமம் விதைகளை, விழுதுபோல அரைத்து, மூட்டுகளில் தடவினால், நிவாரணம் கிடைக்கும்.

ஓமத்திலிருந்து தயாரிக்கப்படும் ஓம வாட்டர், உடல் எடையை குறைக்க உதவுகிறது. நார்ச்சத்து அதிகம் உள்ளதால், உடலிருக்கும் கெட்ட கொழுப்பின் அளவை குறைத்து, நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்க செய்கிறது ஓமம்.


மாதவிலக்கு: பெண்களுக்கு மாதவிலக்கு நேரங்களில் வலி அதிகமாக இருந்தால், ஓம வாட்டரை குடிக்கலாம்.. இதனால், வயிற்றில் புண் இருந்தாலும் ஆறிவிடும்.,. இடுப்பு வலி இருந்தால், சிறிது தண்ணீரில் ஒரு ஸ்பூன் ஓமம் சேர்த்து கொதிக்க வைத்து, அதில் 100 மில்லி தேங்காய் எண்ணெயை விட்டு மறுபடியும் கொதிக்க விட்டு வடிகட்ட வேண்டும். பிறகு இதில், கற்பூர பொடியைக் கலந்து இளஞ்சூட்டுடன் இடுப்பில் தேய்த்ல், இடுப்பு வலி உடனே நீங்கும்.


No comments:

Post a Comment