jaga flash news

Monday, 13 May 2024

ஊளி மீன்...


ஊளி மீன்களை உதாசீனப்படுத்தாதீங்க.. ரத்த கட்டி, பக்கவாதம் டேஞ்சரை தடுக்கும் ஊளி மீன்.. வியப்பூட்டுதே
இதய நண்பன் என்று ஊளி மீன்களை ஏன் சொல்கிறார்கள் தெரியுமா? அப்படி என்னதான் இந்த மீனில் உள்ளது?

மீன்களை பொறுத்தவரை, அனைத்து வகையான மீன்களுமே உடலுக்கு நன்மை தரக்கூடியதுதான்.. ஆனால், ஒருசில மீன்களே, நீரிழிவு நோயாளிகள் முதல் இதய நோயாளிகள் வரை பாதுகாப்பை அள்ளி தருகிறது..


மீன்தான் ஊளி.. ஒமேகா 3 அதிகமுள்ள மீன்களில் இதுவும் ஒன்று.. ஷீலா மீன் என்பார்கள்.. சிலர் இதனை மாவுலா மீன் என்றும் சொல்வார்கள்.. உடலில் உள்ள புண்களை ஆற்றக்கூடிய தன்மை இந்த மீனுக்கு உண்டு.


Praveen Gandhi Controversy | கைல நரம்பு ஓட விடுறதுல என்ன சமூக பொறுப்பு இருக்கு? | Pavel Navageethan
உடலில் கெட்ட கொழுப்புகளை குறைத்து, நல்ல கொழுப்பை அதிகரிக்கும் திறன் ஊளிக்கு இருப்பதால்தான், பலராலும் ஷீலா விரும்பப்படுகிறது.. மூளை சிறப்பாக செயல்பட உதவுகிறது இந்த ஊளி மீன்கள்.. இந்த மீனில் கொழுப்பு குறைவாக உள்ளதாலேயே, இதயத்துக்கு கவசமாக உள்ளது.. இருதய ஆரோக்கியத்தையும் பெருக்குகிறது. குறைவான கலோரிகளும், நிறைய புரோட்டீனும் கொண்டவை ஊளி மீன்கள்.

உடல் வீக்கம்: உடல் வீக்கத்தை குறைப்பதற்கு, ஊளி மீன்களை தாராளமாக பயன்படுத்தலாம்.. அத்துடன் ரத்தக்கட்டிகளை உருவாக்குவதையும் ஆரம்பத்திலேயே தடுத்துவிடுகின்றன இந்த ஊளி மீன்கள்..

மண்ணீரல் வீக்கம்.. இந்த அறிகுறி இருந்தால் கவனமாக இருக்கணும்.. தக்காளியை தொடாதீங்க, ஆப்பிளை விடாதீங்கமண்ணீரல் வீக்கம்.. இந்த அறிகுறி இருந்தால் கவனமாக இருக்கணும்.. தக்காளியை தொடாதீங்க, ஆப்பிளை விடாதீங்க
ஹை புரோட்டீன் உள்ள மீன் இந்த என்பதால், அதாவது, 3-அவுன்ஸ் சுமார் 22 கிராம் புரோட்டீனை கொண்டிருக்கிறதாம். இதயத்துக்கு வலு சேர்க்கக்கூடிய, இதயத்தை பாதுகாக்கக்கூடிய ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களின் சிறந்த உணவுதான் இந்த மீன்... எனவே, பக்கவாதம், மாரடைப்பு ஆபத்தும் இதனால் குறைக்கப்படுகின்றன.. பாக்டீரியா, வைரஸ் போன்ற உணவுகளினால் அலர்ஜி, தோல் அழற்சி நோய் போன்றவற்றுக்கும் ஊளி மீன்கள் மிகச்சிறந்த நன்மையை தருகிறதாம்.


சுறுசுறுப்பு: சர்க்கரை நோயாளிகள் தைரியமாக சாப்பிடக்கூடியது இந்த ஊளி மீனிகள்.. சர்க்கரையை தடுக்க உதவுவதுடன், உடல் களைப்பையும் நீக்கி சுறுசுறுப்பை தருகிறது.. ரத்த அழுத்தத்தை குறைக்கவும், ரத்தக் கட்டிகள் உருவாவதை தடுக்கவும் இந்த மீன்கள் உதவுகின்றன.. அத்துடன், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற அபாயத்தையும் தடுத்து நிறுத்துகிறது.

நுரையீரல் தொந்தரவை ஊளிகள் தீர்க்கின்றன.. அவ்வளவு ஏன்? ஆஸ்துமாவையும் சரிசெய்கிறது. ஆண்களின் உயிரணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் ஊளி மீன்களுக்கு பெரும்பங்கு உண்டு என்பதையும் குறிப்பிட வேண்டியிருக்கிறது. உடல் எடையை குறைப்பதில் ஊளிக்கு பெரும்பங்கு உண்டு..

கண்ணை மூடிட்டு வெந்தயக்கீரை வாங்கிடுங்க.. சர்க்கரை நோயாளியின் பெஸ்ட் கீரை.. அத்தனையும் ஆச்சரிய நன்மைகண்ணை மூடிட்டு வெந்தயக்கீரை வாங்கிடுங்க.. சர்க்கரை நோயாளியின் பெஸ்ட் கீரை.. அத்தனையும் ஆச்சரிய நன்மை
பதட்டம்: அதேபோல, ஊளியிலுள்ள கால்சியம் சத்துக்கள், நம்முடைய எலும்புகளுக்கும், பற்களுக்கும் உறுதியை தருகின்றன.. ஊளியை சாப்பிட்டு வருபவர்களுக்கு மனச்சோர்வு, பதட்டம் நெருங்குவதில்லை.. பிற மனநல கோளாறுகளின் அபாயத்தையும் இந்த மீன் குறைப்பாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சருமத்துக்கும், தலைமுடி வளர்ச்சிக்கும் ஊளி மீன்கள் நன்மை தருகின்றன.. காரணம், இதிலிருக்கும் வைட்டமின் B 12- நரம்பு செயல்பாட்டை ஊக்குவிக்கிறது..


கண்களை நோய் பாதிப்பில் இருந்து பாதுகாக்கிறது. மீன் வகைகளிலே இந்த மீனில்தான் கொழுப்பு சத்து குறைவாக இருக்கிறது.. குடல் புண்கள் சரிசெய்யக்கூடியது.. பெண்கள் மாதவிடாய் காலத்தில் ஊளி மீன்களை சாப்பிடுவது மிகவும் நன்மை தரக்கூடியது.. அதுமட்டுமல்ல, கண்களில் எந்த பிரச்சனையாக இருந்தாலும், இந்த ஊளியை சாப்பிட்டுவந்தால், அதுவும் சீராகும். அதனால்தான், குழந்தைகளுக்கு இந்த மீனை அடிக்கடி செய்துதர சொல்வார்கள்.

உடல் எடை: உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள், இந்த மீனில் நிறைய மசாலாவை சேர்க்காமல், வெறும் உப்பு, மிளகு, ஆலிவ் எண்ணெயுடன் சேர்த்து வேகவைத்து சாப்பிட்டாலே பெரும்பலன் கிடைக்கும். குறைவான மசாலா பொருட்களை மேரனேட் செய்து, கிரில் செய்து சாப்பிடும்போது, எடை குறைப்பில் பலனை தருகிறது.. அல்லது இந்த ஊளி மீன்களை நெருப்பில் சுட்டும் சாப்பிடலாம்.. அல்லது சாலட் செய்தும் சாப்பிடலாம்.

No comments:

Post a Comment