12 பாவகங்களின் அஷ்டவர்க்க பரல்களின் பலன்கள்....
லக்ன பாவகத்தில் பரல்கள் 1,5,9 க்கு இணையாக இருக்க வேண்டும்.6,8,12 க்கு குறையக்கூடாது.மேற்படி இருந்தால்தான் லக்னம் பலம் பெற்றுள்ளதாக அர்த்தம்
2 ல் பரல் குறைந்தால் தனவிருத்தி இல்லை.குடும்ப நிர்வாகம் சுமூகமாக இருக்காது.2 ம் பாவக காரகத்தை ஜாதகர் தடையின்றி அனுபவிக்க இயலாது.4,7 பாவகத்துக்கு இணையாக இருக்க வேண்டும்.20க்கு குறைந்தால் குடும்பம் அமைய தடை ஏற்படும்.20 முதல் 25க்குள் இருந்தால் தாமதமாகி குடும்பம் அமையும். அதிலும் பிரச்சனைகளை கொடுக்கும்.25க்கு மேல் இருப்பது சிறப்பு .
3 ல் பரல் அதிகமானால் இளைய சகோதர ஆதரவு இருக்கும்.விடாமுயற்சி இருக்கும்.எந்தச் செயலையும் வீரியத்துடன் செய்வார். அவ்வப்போது மூர்க்கத்தனமான எண்ணங்களையும் கொடுக்கும்.பரல் 20 க்கும் குறைந்தால் சோம்பேறித்தனத்தை உண்டாக்கும். தைரியம் குறையும்.எதையும் முடிவெடுக்கும் ஆற்றல் குறையும்.எந்த ஊரு காரியத்தையும் முழுமையாக செய்து முடிக்க சிரமப்படுவார்
4 ல் பரல் லக்கினத்திற்கு இணையாக இருக்க வேண்டும்.2,7 பாவகத்திற்க்கு குறையக்கூடாது.20 க்கும் குறைந்தால் வீடு மனை அமைய தடையை ஏற்படுத்தும். உயர் கல்வியில் தடையை ஏற்படுத்தும்.தாய் வழி ஆதாயம் அனுபவிப்பதில் தடையை ஏற்படுத்தும். மனதில் தேவையற்ற பயம் கவலைகள் இருந்து கொண்டே இருக்கும். மேன்மையான வாழ்க்கை வாழ முடியாது
5 ல் பரல்கள் 20 க்கும் குறைந்தால் புத்திர மேன்மையை குறைக்கும்.6 ம் பாவகத்தை விட குறைந்தால் கடன் நோய் போன்ற துன்பங்களை கொடுக்கும்.6 க்கு இணையாகவும் இருக்கக் கூடாது.5 ல் பரல்கள் குறைந்தால் போராட்டமான வாழ்க்கையை கொடுக்கும். எதையும் எதிர்கொள்ளும் தைரியத்தை குறைக்கும். குலதெய்வ அனுக்கிரகத்தை குறைக்கும். லக்னத்திற்கு இணையாக இருப்பது நல்லது
6 ல் பரல்கள் லக்னத்திற்கு அதிகமானால் கடன் நோய் பிரச்சனைகளை கொடுக்கும். 4க்கு அதிகமானால் உடல் ஆரோக்கியத்தில் சுகமின்மையை கொடுக்கும்.20 க்கும் குறைந்தால் பிறவியிலேயே ஏதோ ஒரு நோய் இருக்கும்.20 முதல் 25 க்குள் இருப்பதுதான் நன்ற 40 க்கும் மேல் பரல்கள் இருந்தால் கடன் நோய் வழக்குகள் ஏதேனும் ஒன்று இறுதி வரை கூடவே இருக்கும்
7 ல் பரல்கள் 2,4 க்கு இணையாக இருக்க வேண்டும்.7 ஐ விட 8 ல் பரல்கள் அதிகமானால் மணவாழ்க்கையில் பிரச்சனைகளைக் கொடுக்கும்.7 ல் பரல்கள் லக்னத்திற்கு இணையாகவோ அதிகமாகவோ இருந்தால் மனைவி வழி ஆதாயம் உண்டு.திருமணத்திற்கு பின் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.7 ல் பரல்கள் அதிகமாகும் போது காம வேட்கையை கொடுக்கும்.மனைவியின் ஜாதகத்தில் இணையாக இருந்தால் சமன்படும்.20 க்கு குறைந்தால் திருமணம் அமைய தடையை ஏற்படுத்தும்.20க்கு குறையாமல் 30 க்கு அதிகமாகாமல் இருப்பது நல்லது. கணவனின் பரலை விட மனைவியின் பரல் அதிகமானால் மனைவிக்கு அடங்கிப் போக நேரிடும்
8 ல் பரல்கள் 20 முதல் 25 க்குள் இருப்பதுதான் சிறப்பு.லக்ன பரலை விட அதிகமாக கூடாது. 25 க்கும் அதிகமானால் ஆயுள் தீர்க்கம்.ஆனால் பிரச்சனைகள் மிகுதியாக இருக்கும்.30 க்கும் மேல் பரல்கள் இருந்தால் கடும் விபத்துக்கள் தற்கொலை எண்ணத்தை கொடுக்கும்.20 க்கும் குறைந்தால் அற்ப ஆயுளை கொடுக்கும்
9 ல் பரல்கள் 5 க்கு இணையாக இருக்க வேண்டும். 9 ல் பரல்கள் கூடினால் ஆன்மீக ஈடுபாடு மகான்களின் தரிசனம் வெளிநாடு செல்லும் யோகம் பிறரால் மதிக்கப்படும் நிலை மற்றும் நிலையான புகழை கொடுக்கும்.35 க்கு மேல் இருப்பது நல்லது.குருவின் தனி பரலில் 5,9 ல் 5 க்கும் மேற்பட்ட பரல்கள் இருந்தால் ஆன்மீக வழியில் உயர்வை கொடுக்கும். 12 பாவகங்களில் 1,9 பாவகங்களில் பரல்கள் அதிகம் இருந்தால் அல்லது இணையாக இருந்தால் சிறப்பு .
10 ல் 25 முதல் 30 க்குள் இருந்தால் தொழில் நல்ல நிலையில் இருக்கும். லக்ன பரலுக்கு இணையாக இருக்க வேண்டும்.2,11 க்கு இணையாக இருந்தால் தொழிலில் நல்ல பொருளாதாரத்தை கொடுக்கும்.10 ஐ விட 6 ல் பரல்கள் அதிகமாகவோ இணையாகவோ இருந்தால் தொழிலில் கடனை ஏற்படுத்தும்.அடிமைத் தொழிலை செய்ய வைக்கும். 7 ம் பாவக பரலுக்கு இணையாக இருந்தால் கூட்டுத்தொழில் சிறப்பு.20 க்கும் குறைந்தால் சொந்தத்தொழில் சிறப்பாக இருக்காது.
11 ல் பரல்கள் 25 முதல் 30 க்குள் இருக்க வேண்டும்.2,10 க்கு இணையாக இருக்க வேண்டும்.7 ஐ விட 11 ல் பரல்கள் கூடினால் இருதார தோஷத்தை
கொடுக்கும். 6,8,12 க்கு இணையாக இருந்தால் நீடித்த பொருளாதாரத்தை கொடுக்காது.4 க்கு இணையாக இருந்தால் வீடு வண்டி வாகன யோகம் அமையும்.7 க்கு இணையாக இருந்தால் மனைவி வழி ஆதாயத்தை கொடுக்கும். 10 க்கு இணையாக இருந்தால் தொழில் வழி ஆதாயத்தை கொடுக்கும்.5 க்கு இணையாக இருந்தால் புத்தர்கள் வழி மேன்மையை கொடுக்கும். 4 க்கு இணையாக இருந்தால் தாய் வழி ஆதாயமும், 9 க்கு இணையாக இருந்தால் தந்தை வழி பூர்வீக ஆதாயத்தையும் கொடுக்கும்.11 ஐ விட 12 ல் பரல்கள் கூடினால் வரவுக்கு ஏற்ப செலவை கொடுக்கும் .
12 ல் பரல்கள் 6,8 க்கு இணையாக இருக்கலாம்.20 க்கும் குறைந்தால் இறுதிக்காலத்தில் தனிமைப்படுத்தப்பட்ட வாழ்க்கையை கொடுக்கும்.பிறரைச் சார்ந்து வாழக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்தும்.தான் சம்பாதித்த செல்வங்களை இறுதிக்காலத்தில் ஏதேனும் ஒரு வகையில் இழக்க நேரிடும்
12 பாவகங்களிலும் பரல்கள் சராசரியாக 25 முதல் 30 க்குள் இருப்பது சிறப்பான அமைப்பு.
No comments:
Post a Comment