jaga flash news

Sunday, 12 October 2025

மருந்து அட்டை ரகசியம்


உடல்நலக்குறைவு ஏற்பட்டு நாம் மருந்துகளை எடுக்கும்போது சில நேரம் மருத்துவச் சீட்டு மற்றும் மருந்து அட்டைகளில் இருக்கும் சில விஷயங்கள் நமக்குக் குழப்பத்தை ஏற்படுத்தலாம். எனவே, அந்தக் குறியீடுகள் எதைக் குறிக்கின்றன என்பதைப் புரிந்துகொள்வது அவசியம். அப்போது தான் தவறான மருந்துகளை நாம் எடுத்துக் கொள்ள மாட்டோம். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.


நம்மில் பெரும்பாலும் உடம்பு சரியில்லை என்றால் நேரடியாக அருகே உள்ள மருந்துக் கடைக்குச் சென்று, மருந்துகளை வாங்கி சாப்பிடுவோம். ஆனால், எப்போதும் மருத்துவர் ஆலோசனை இல்லாமல் மருந்துகளை எடுத்துக் கொள்ளக்கூடாது என்றே வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள். மருத்துவர்கள் உடலை முழுமையாகப் பரிசோதனை செய்து அதற்கேற்ப மருந்துகளைக் கொடுப்பார்கள்.


What is Red Line on Medicines means Prescription-Only Drugs to Curb Misuse Know about key details
கவனிக்க வேண்டியவை
மருத்துவர்கள் கொடுக்கும் மருந்தை மட்டுமே நாம் சாப்பிட வேண்டும். அப்படி மருத்துவர்கள் எழுதிக் கொடுக்கும் மருந்துச் சீட்டிலும், கடைகளில் நாம் வாங்கும் மருந்துகளிலும் சில விஷயங்களை நாம் கவனிக்க வேண்டும். அது குறித்துத் தெரிந்து வைத்திருக்கவும் வேண்டும்.. இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்.
சிவப்பு கோடு
சில மருந்து அட்டைகளில் பின்புறம் சிவப்பு நிறக் கோடுகளை நீங்கள் கவனித்திருக்கலாம். இருப்பினும், இந்தக் கோடு மருந்து எதற்காக என்பது பலருக்கும் புரியாது. எனவே, இதன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்வது மிகவும் அவசியம். இது வெறுமன டிசைனுக்காக இருக்கும் கோடு இல்லை. அவை ஆன்டிபயாட்டிக் மருந்துகளைக் குறிக்கும் வகையிலேயே அந்தச் சிவப்புக் கோடு இருக்கும். மருத்துவச் சீட்டு இல்லாமல் அந்த ஆன்டிபயாட்டிக் மருந்துகளை வாங்க முடியாது என்பதையே இது காட்டுகிறது.

அதாவது மருத்துவரின் பரிந்துரையின்றி இந்த மருந்துகளை நிச்சயம் சாப்பிடக்கூடாது என்பதையே இது காட்டுகிறது. அதேபோல், மருந்துகள் மீது அச்சிடப்பட்டிருக்கும் 'Rx' குறியீடும் இதே தான் குறிக்கிறது. மிகவும் தீவிரமான மருந்துகளை எடுத்துக் கொள்ளும் முன்பு மருத்துவரின் ஆலோசனையைப் பெற வேண்டும் என்பதை இவை வலியுறுத்துகின்றன.

ரொம்ப முக்கியம்
"Schedule H" எனக் குறிப்பிட்டிருந்தால், அது மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் பயன்படுத்தக்கூடாத மருந்துகள் என்பதைக் குறிக்கிறது. அதேபோல், "Schedule X" என்று இருந்தால் இன்னுமே கடுமையாகக் கட்டுப்படுத்தப்படும் மருந்துகளாகும். பொதுவாக இவை மனநலச் சிகிச்சைக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் மருந்துகளை என்பதைக் குறிக்க இந்தக் குறியீடு பயன்படுத்தப்படும்.


அதேபோல "1-0-1" என்று குறிப்பிட்டிருந்தால், காலை மற்றும் இரவில் மட்டும் மாத்திரை சாப்பிட வேண்டும். மதியம் எடுத்துக் கொள்ளக்கூடாது என அர்த்தம். எப்போது மாத்திரை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதைப் பொறுத்து இது மாறும். அடுத்து மருந்துச் சீட்டில் "SOS" என்று மருத்துவர் குறிப்பிட்டால் தேவைப்படும்போது மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும் என அர்த்தம். உதாரணமாக வலி அல்லது அசிடிட்டி ஏற்பட்டால் இருந்த மருந்துகளைச் சாப்பிட வேண்டும் எனப் பொருள்.இந்த மருந்துகளை நோய் எதிர்ப்புச் சக்திக்கு பயன்படுத்த முடியாது.

இதேபோல், "OD" என்று இருந்தால், ஒரு நாளைக்கு ஒரு முறை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும், "BD" என்று இருந்தால், ஒரு நாளைக்கு இருமுறை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் அர்த்தம். மேலும், "TDS" என்பது ஒரு நாளைக்கு மூன்று முறை மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதைக் குறிக்கிறது.



No comments:

Post a Comment