jaga flash news

Friday, 24 October 2025

விளையாட்டு துறையில் பிரகாசிக்கக்கூடிய கிரகநிலைகள் ?

விளையாட்டு துறையில் பிரகாசிக்கக்கூடிய கிரகநிலைகள் ?


ஜாதகத்தில் லக்னத்துக்கு 6 பாவம் விளையாட்டு துறையையும் மிதுன ராசி விளையாட்டை குறிக்கும் ராசியாகும் . 

ஒரு சிறந்த விளையாட்டு வீரருக்கு சக்தி செயலாற்றும் திறன் உடனுக்குடன் முடிவெடுக்கும் தன்மை உடல் உறுதி மனபலம் தைரியம் விடாமுயற்சி தோல்விகளை கண்டு துவளாத மனப்பாங்கு இவை அனைத்தும் தேவையே . 
புதன் கிரகம் உடனுக்குடன் முடிவெடுக்கும் திறமையை தருபவர் அதனால் அவரின் துணை அவசியம் தேவை . 

போட்டியில் வெற்றி பெறுவதே விளையாட்டு துறைக்கு ஏற்ற சிறப்பாகும் . அதனால் லக்கினத்திற்கு 6 ம் பாவகம் , 6 ம் இடத்துக்கு அதிபதியான கிரகம் 6 ல் உள்ள கிரகம் பலம் பெரும் அமைப்பு விளையாட்டு துறையில் சாதனை பெறுவதற்கான கிரக அமைப்பாகும் .
 யோகம் :

சுப கிரகங்கள் லக்னத்திற்கு 3 - 6 - 11 ல் இருப்பது . மேலும் இது சந்திரனுக்கு 3 - 6 - 11 ல் அமைவது ஒரு படி மேலான சிறப்பான கிரக அமைப்பாகும் . 
                

                                                       

                                                   அமலா யோகம் :

லக்கினம் அல்லது சந்திரனுக்கு 10 ம் இடத்தில சுப கிரகங்கள் இருப்பது விளையாட்டு துறையில் ராஜயோகத்திற்க்கான கிரக அமைப்பாகும் . 

                                           

                                              

                                              பாரிஜாத யோகம் : 

லக்கினாதிபதி இருக்கும் ராசிக்கு அதிபதி ஆட்சி உச்சம் பெரும் அமைப்பு விளையாட்டு துறையில் பிரகாசிப்பதற்கு மற்றும் ஓர் கிரக அமைப்பாகும் . இந்த பாரிஜாத யோகம் ஒரு புகழ் பெரும் அமைப்பாகும் . அரசாங்கத்தால் பாராட்டை பெரும் ஒரு அமைப்பாகும் . 

உதாரணமாக மீன லக்னம் . இதன் லக்கினாதிபதி குரு கன்னி ராசியில் இருக்கிறார் . கன்னி ராசிக்கு அதிபதி புதன் பலம் பெற்று மிதுனத்தில் ஆட்சி பெற்று லக்கினத்திற்கு கேந்திர அமைப்பை பெறுவது பாரிஜாத யோகம் பெரும் அமைப்பாகும்
செவ்வாய் பகவான் பலம் பெற்று உபஜெய ஸ்தானமான 3 - 6 - 10 - 11 போன்ற இடங்களில் அமைவது சிறப்பாகும் . ராகு பலமுடன் 3 - 6 - 10 - 11 ல் இருப்பது உடல் வலிமையை தரும் . மேலும் செவ்வாய் , புதன் கிரகங்கள் ஆட்சி உச்சம் பெறுவது விளையாட்டு துறையில் பிரகாசிப்பதற்கு ஒரு சிறப்பு அம்சமாகும் . 


மற்றும் ஓர் கிரக அமைப்பாகும் . இந்த பாரிஜாத யோகம் ஒரு புகழ் பெரும் அமைப்பாகும் . அரசாங்கத்தால் பாராட்டை பெரும் ஒரு அமைப்பாகும் . 

உதாரணமாக மீன லக்னம் . இதன் லக்கினாதிபதி குரு கன்னி ராசியில் இருக்கிறார் . கன்னி ராசிக்கு அதிபதி புதன் பலம் பெற்று மிதுனத்தில் ஆட்சி பெற்று லக்கினத்திற்கு கேந்திர அமைப்பை பெறுவது பாரிஜாத  யோகம் பெரும் அமைப்பாகும் .  


No comments:

Post a Comment