jaga flash news

Sunday, 17 March 2013

செவ்வாழையின் உன்னதமான பலன்கள்..!


இதுவரை தெரிந்திராத செவ்வாழையின் உன்னதமான பலன்கள்..!



எளிமையும், எண்ணற்ற சத்துக்களும் கொண்டது வாழைப் பழம். வாழைப்பழத்தில் பல வகை உண்டு. சிலவற்றில் உயிர்ச்சத்தும், சிலவற்றில் சுண்ணாம்புச்சத்தும், இரும்புச் சத்தும் காணப்படுகின்றன. பலரும் அரிய அளவிலேயே உட்கொள்ளும் செவ்வாழைப் பழம் பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது.
செவ்வாழையின் தாயகம் அமெரிக்க நாடுகளான கோஸ்டரீகா, மற்றும் கியூபா எனக் கூறப்படுகிறது. இதில் உள்ள பீட்டா கரோட்டீன் கண்நோய்களை குணமாக்கும். செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம், உள்ளது. இது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது. இதில் வைட்டமின் ‘சி’ அதிகம் உள்ளது. செவ்வாழையில் ஆண்டி ஆக்ஸிடென்ட் காணப்படுகிறது. இதில் 50 சதவிகிதம் நார்ச்சத்து காணப்படுகிறது.
மாலைக்கண்நோய். . .
கண்பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு செவ்வாழை சிறந்த மருந்தாகும். கண்பார்வை குறைய ஆரம்பித்த உடன் தினசரி செவ்வாழை பழத்தை சாப்பிட பார்வை தெளிவடையும்.
மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இரவு ஆகாரத்திற்குப் பின்னர் தொடர்ந்து 40 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டு வர மாலைக்கண்நோய் குணமாகும்.
பல்வலி குணமடையும். . .
பல்வலி, பல்லசைவு, போன்ற பலவகையான பல்வியாதிகளையும் செவ்வாழைப்பழம் குணமாக்கும். பல் தொடர்புடைய நோய்கள் ஏற்பட்டால் தொடர்ந்து 21 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட்டு வர ஆடிய பல் கூட கெட்டிப்படும்.
சொரி சிறங்கு நீங்கும். . .
சொரி, சிரங்கு, தோலில் வெடிப்பு போன்ற சரும வியாதிகளுக்கு செவ்வாழை சிறந்த நிவாரணம் தரும். சிரங்குக்கு மருந்து போடாவிட்டாலும், செவ்வாழைப்பழத்தை தொடர்ந்து ஏழுநாட்களுக்கு சாப்பிட்டு வர சருமநோய் குணமடையும்.
நரம்பு தளர்ச்சி குணமடையும். . .
நரம்பு தளர்ச்சி ஏற்பட்டால் உடலில் பலம் குறையும். ஆண்மை குறைபாடு ஏற்படும். எனவே நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் தினசரி இரவு ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டுவரவேண்டும். தொடர்ந்து 48 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட நரம்புகள் பலம் பெறும். ஆண் தன்மை சீரடையும்.
குழந்தை பேறு தரும்
திருமணமான தம்பதியர் குழந்தை பேறுக்காக மருத்துவரையோ, ஜோசியரையோ நாடுவர். அவர்களுக்கு செவ்வாழை அருமருந்தாகும். குழந்தை இல்லாத தம்பதிகள், தினசரி ஆளுக்கு ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு அரைஸ்பூன் தேன் அருந்த வேண்டும். தொடர்ந்து 40 நாட்களுக்கு சாப்பிட்டு வர நிச்சயமாக கருத்தரிக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.
தொற்றுநோய் தடுக்கப்படும். . .
தொற்று நோய் கிருமிகளைக் கொல்லும் அறிய சக்தி செவ்வாழைப்பழத்தில் உள்ளது. வாரம் ஒருமுறை செவ்வாழை சாப்பிட்டு வர உடலில் தொற்றுநோய் பாதிப்பு கட்டுப்படும்.

முகத்திற்கு ஆவி புடிச்சா, முகம் பளிச்சுன்னு இருக்குமாம்!


முகத்திற்கு ஆவி புடிச்சா, முகம் பளிச்சுன்னு இருக்குமாம்!


முகத்தை அழகாக்க எத்தனை அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்தினாலும், ஆவி பிடிப்பது போல் இருக்காது. ஏனெனில் அழகு சாதனப் பொருட்களில் கெமிக்கல்கள் கலந்திருக்கும். மேலும் சருமத்திற்கு ஏற்ப ஒவ்வொரு அழகுப் பொருட்களும் வேறுபடும். ஒரு வேளை மாற்றி பயன்படுத்திவிட்டால், அதனால் தேவையில்லாத பக்கவிளைவுகள் ஏற்படும். ஆகவே எந்த ஒரு பக்கவிளைவும் ஏற்படுத்தாமல், சருமத்தை அழகாக்கவும், உடலை ஆரோக்கியமாக்கவும் வைக்க சூடான நீரை வைத்து ஆவி பிடிப்பது மிகவும் சிறந்தது.
ஏனெனில் இதனால் சருமத்தில் உள்ள சரும துளைகள் விரிவடைந்து, அதில் உள்ள அழுக்குகள், கிருமிகள் விரைவில் வெளியேறிவிடும். மேலும் இதற்கு எந்த ஒரு செலவும் ஆகாது. இதனை எந்த நேரத்திலும், வீட்டில் சூடான நீரை வைத்து செய்யலாம்.
வீட்டில் முகத்திற்கு எவ்வாறு ஆவி பிடிக்கலாம்?
சூடான நீரை வைத்து, ஒரு போர்வைக்குள் நீங்கள் உட்கார்ந்து, அந்த நீரின் முன் முகத்தை வைத்து, அதிலிருந்து வரும் ஆவி முகத்தில் படும்படி, ஒரு 30 நிமிடம் உட்கார வேண்டும்.

ஆவி பிடிப்பதால் என்ன நன்மை?
* முகத்தில் உள்ள அழுக்குகள் விரைவில் எளிதாக செல்வதற்கு, இந்த முறை மிகவும் சிறந்தது. இதனால் எப்போது ஆவி பிடிக்கின்றோமோ, அப்போது ஆவி பிடித்து முடித்ததும், முகத்தை சுத்தமான துணியால் துடைக்கும் போது, முகத்தில் உள்ள இறந்த செல்கள் எளிதில் வந்துவிடும்.
* கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளை புள்ளிகளும் விரைவில் நீங்கிவிடும். அதற்கு 5 முதல் 10 நிமிடம் ஆவி பிடித்து, பின் தேய்த்தால், மூக்கில் காணப்படும் வெள்ளையானவை சீக்கிரம் வந்துவிடும். மேலும் அவை எளிதில் வருவதோடு, கரும்புள்ளிகள் வேரோடு வந்துவிடும். பின்னர் அவை வராது போய்விடும்.
* ஆவி பிடிப்பதால், முகப்பருக்கள் குறையும். எப்படியெனில் ஆவி பிடிக்கும் போது முகத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகளில் இருந்து சுரக்கும் சருமத்திற்கு ஏற்ற இயற்கை எண்ணெயால், சருமம் எண்ணெய் பசையோடு இருப்பதால், துளைகளில் சேரும் அழுக்குகள் அல்லது டாக்ஸின்களால் ஏற்படும் பருக்கள், துணியால் துடைக்கும் போது போய்விடும்.
* மற்றொரு நன்மைகள் என்னவென்றால், முதுமை தோற்றதை தடுக்கும். எவ்வாறென்றால், சருமத்தில் அழுக்குகள் நீங்காமல் தங்கிவிடுவதால் தான், முகம் மிகவும் பளிச்சென்று இல்லாமல் முதுமை தோற்றத்தோடு காணப்படுகிறது. அப்போது ஆவி பிடித்தால், அவை அந்த அழுக்குகளை நீக்கி, பளிச்சென்று, இளமைத் தோற்றதை தரும்.
* பிம்பிள் இருக்கும் போது முகத்திற்கு 4-5 நிமிடம் ஆவி பிடிக்க வேண்டும். பின் 30 நிமிடம் ரிலாக்ஸ் ஆக இருந்து, பின்னர் ஐஸ் கட்டிகளால், முகத்தை தேய்த்தால், பிம்பிள் உடைந்துவிடும். இதனால் ஒரே நாளில் பிம்பிளை சூப்பராக குறைத்துவிடலாம்.
* ஆவி பிடிக்கும் போது முகத்திற்கு சரியாக இரத்த ஓட்டம் இருக்கும். மேலும் துளைகள் நன்கு எந்த ஒரு தொந்தரவும் இல்லாமல் சுவாசிக்கும். அதனால் சருமம் நன்கு அழகாக, பொலிவோடு இருக்கும்.
ஆகவே நேரம் இருக்கும் போது முகத்திற்கு ஆவி பிடித்து, சோர்ந்து போன சருமத்தை புத்துணர்ச்சியுடன், அழகாக மாற்றுங்கள். மேலும் ஆவி பிடிப்பதை முகத்திற்கு மட்டுமல்லாமல, கூந்தலுக்கு செய்யலாம். அதாவது வெதுவெதுப்பான நீரால் கூந்தலை அலசுவது தான். அதுமட்டு

சரும பராமரிப்பில் செய்யக்கூடாதவை!


சரும பராமரிப்பில் செய்யக்கூடாதவை!


• தினமும் தலைக்கு ஷாம்பூ போட்டுக் குளிக்காதீர்கள். தலையின் இயற்கையான எண்ணெய் பசையை போக்கி விடும். வேலை காரணமாக தினமும் தலைக்குக் குளிக்க நேர்ந்தால், குழந்தைகளுக்கான ஷாம்பூ அல்லது மிதமான ஷாம்பூ பயன்படுத்தவும்.
• எலுமிச்சம் பழத்தோல் அல்லது ஜூசை முகத்தில் அப்படியே தடவக் கூடாது; தோல் அலர்ஜியாகி விடும். பால் அல்லது பேஸ் பேக்குடன் கலந்து தான் உபயோகிக்க வேண்டும்.
• பரு இருப்பவர்கள் முகத்தை மசாஜ் செய்யக் கூடாது; பரு காய்ந்து விட்டதா என்று கிள்ளிப் பார்க்கவும் கூடாது. எண்ணெய் பசை தோலுள்ளவர்கள், முகத்தை சுத்தப்படுத்த சோப்புக்கு பதில் தயிர் உபயோகிக்க கூடாது. மோர் அல்லது பால், எலுமிச்சை சாறு அல்லது பேஸ் வாஷ் கொண்டே முகத்தை சுத்தப்படுத்த வேண்டும்.
• முகத்தின் மீது நேரடியாக ஐஸ் கட்டி வைக்கவே கூடாது. அப்படி செய்தால், மிக மெல்லிய மேல்புறம் பாதிக்கப்படும். ஐஸ் கட்டியை பஞ்சு அல்லது துணிக்குள் வைத்து, முகத்தில் ஒற்றி எடுக்கலாம். அதேபோல், அதிக சூடான வெந்நீரிலும் முகம் கழுவக் கூடாது.
• புருவத்துக்கு மையிடும் ஐ-புரோ பென்சிலை வைத்து கண்ணுக்குள் மையிடக் கூடாது.
• வறண்ட தோல் கொண்டவர்கள், வெள்ளரி துருவல் அல்லது ஜூசை அப்படியே முகத்தில் பூசக் கூடாது; பேஸ் பேக் எதனுடனாவது கலந்துதான் பூச வேண்டும். இவர்கள், அப்படியே உபயோகிக்காமல் புதினா விழுது, முல்தானி மட்டியுடன் கலந்து உபயோகிக்கலாம்.
• டூவீலரில் செல்லும் போது முடியை அப்படியே பறக்க விடக் கூடாது. அழுக்கு சேர்ந்து முடி கொட்ட ஆரம்பித்து விடும். காட்டன் துணியால் தலையை சுற்றி கட்டிக் கொள்ளலாம்.
• முகம் கழுவியபின், டவலால் முகத்தை இழுத்துத் துடைக்காதீர்கள்; ஒற்றி எடுப்பதே உத்தமம்.
• இரவில் உபயோகிக்கும் நைட் கிரீமும், மாய்ச்சுரைசரும் கூட கண்ணைச் சுற்றி பூசக் கூடாது. இந்தப் பகுதியில் எண்ணெய் சுரப்பிகளுக்கான துளைகள் கிடையாது. அதனால், கண்ணைச் சுற்றிலும் உப்பிப் போகும் வாய்ப்பு இருக்கிறது.
• கொதிக்க, கொதிக்க வெந்நீரில் குளிக்கக் கூடாது. உடலில் அத்தனை வியர்வை துளைகளும் திறந்து கொண்டு விடும். நாள் முழுக்க வியர்வை கொட்டும் அழுக்குகள் சுலபமாக அந்த துவாரங்களில் தங்கி அடைத்துக் கொண்டு விடும். முகத்தில் கரும்புள்ளிகளும் வரும், வெந்நீரில் குளித்தால், கடைசியாக உடல் முழுக்க படும்படி இரண்டு குவளை பச்சைத் தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.
• அக்குளில் பவுடர் போடக் கூடாது. முக்கியமான வியர்வை சுரப்பிகள் அங்கே இருக்கின்றன. பவுடர் இந்த வியர்வைத் துளைகளை மூடி விடுவதால், வியர்வை வெளிவர முடியாமல், துர்நாற்றம் வீசும்.

லிப்ஸ்டிக் போடும் பெண்ணா நீங்கள்?


லிப்ஸ்டிக் போடும் பெண்ணா நீங்கள்? இதைப்படிங்க!


வேலைக்கு செல்பவர்களோ, இல்லத்தரசிகளோ திருமணம் மற்றும் விழாக்களுக்கு செல்லும் போது லிப்ஸ்டிக் இன்றி வெளியே கிளம்புவதில்லை. அவர்களுக்கு எச்சரிக்கை ஏற்படுத்தும் வகையில் புதிதாக ஆய்வு முடிவு ஒன்று வெளியாகியுள்ளது. லிப்ஸ்டிக்கில் உள்ள ரசாயனத்தினால் இருதயநோய் ஏற்படும் அபாயம் உள்ளது என்று ஆய்வாளர்கள் அபாய மணியை ஒலிக்க விட்டிருக்கின்றனர்.
இது தொடர்பாக கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். லிப்ஸ்டிக்கில் உள்ள டிரைக்ளோசன் (triclosan) என்ற ரசாயனம் வீட்டு உபயோக சுத்தம் செய்யும் பொருட்களில் அனைத்திலும் உள்ளது. இந்த ரசாயனம் இருதயம் உட்பட மூளையிலிருந்து செய்திகளை வாங்கும் தசைகளின் செயல்பாடுகளை முடக்குவதாக இந்த விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
எலிகளை வைத்து இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. எலிகளுக்கு டிரைக்ளோசன் கொடுக்கப்பட்ட 20 நிமிடத்திலேயே அவைகளின் இருதயச் செயல்பாடுகள் படிபடிப்படியாக குறைந்தது. இதுவே மனித உடல்களிலும் நடக்கலாம் என்று இவர்கள் எச்சரித்துள்ளனர். டிரைக்ளோசன் அனைத்திலும் உள்ளது, சுற்றுப்புறச் சூழலில் உள்ளது. இது மனித உடலுக்கு மட்டுமல்லாது, சுற்றுச்சூழலுக்கே கேடு விளைவிக்கக் கூடியது என்று கூறுகின்றனர்.
ஆனாலும் எலிகளில் பரிசோதனைக்காக ஏற்றப்பட்ட டிரைக்ளோசன் அளவுகள் அதிகம், ஆனால் லிப்ஸ்டிக் உள்ளிட்ட பொருட்களில் உள்ள இந்த ரசாயனத்தின் அளவு மிகக்குறைவே என்று இந்தப் பொருட்களின் தயாரிப்பாளர்கள் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பை ஏற்க மறுத்துவருகின்றனர். மருத்துவ மனைகளில் இந்த ரசாயனம் பயன்படுத்தப்படுகிறது. அதாவது பாக்டீரியா நுண்ணுயிரித் தாக்கத்தை இது தடுப்பதாகவே டாக்டர்கள் கருதுகின்றனர்.
ஆனால் கலிபோர்னியா விஞ்ஞானிகளோ இந்த ரசாயனத்தின் தாக்கம் உடல் உறுப்புகளிலும் விளைவை ஏற்படுத்தும் என்று உறுதியாக கூறுகின்றனர். டிரைக்ளோசன் பற்றி ஏதோ இப்போது புதிதாக கண்டுபிடிக்கப்படவில்லை. முன்னதாக இந்த ரசாயனத்திற்கும் தைராய்டு பிரச்சனை மற்றும் மலட்டுத் தன்மை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கும் தொடர்பு இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டது. தசைகளில் இதன் தாக்கம் பற்றி இப்போதுதான் ஆராய்ப்படுகிறது.
நல்ல இருதய ஆரோக்கியம் உள்ளவர்களுக்கு இந்த ரசாயனத்தினால் 10% இருதயச் செயல்பாடு குறைந்தால் தெரியாது. ஆனால் இருதயப்பிரச்சனைகள் ஏற்கனவே உள்ளவர்களுக்கு 10% செயல்பாட்டுக் குறைவு என்பது ஆபத்துதான் என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
எனவே லிப்ஸ்டிக் போடும் பெண்களே லிப்ஸ்டிக் போட்டால்தான் அழகு கூடுகிறது என்பதை விட்டு ஒழியுங்கள் இயற்கையே அழகுதான் என்பதை புரிந்து கொள்கின்றனர் என்கின்றனர் நிபுணர்கள்.

Saturday, 16 March 2013

இளமை தோற்றம் தரும் எளிய பொருட்கள்!


FILE
இளமை காலங்களில் சருமம் மற்றும் முக அழகை பாதுகாப்பதில் அதிக கவனம் செலுத்தும் பெண்கள், அதை திருமணம் முடிந்த பிறகு மறந்தே விடுகிறார்கள்.

ஆண்களின் சருமத்தை விட பெண்களின் சருமம் மிகவும் மிருதுவானது, அதனால்தான் வயது அதிகரிக்கும்போது பெண்களின் முகம் சீக்கிரமாக முதிர்ச்சி அடைந்தது போல் தோன்றும். பெண்கள் 40 வயதை அடைந்தால் போதும், முகத்தில் சுருக்கங்கள் ஆங்காங்கு தோன்ற ஆரம்பிக்கும்.

இவை அனைத்திற்கும் காரணம் பெண்கள் இளமையாக இருக்கும் போது, நன்கு ஆரோக்கியமான உணவுகளை உண்டு, சருமத்தை பராமரித்து வருவர். ஆனால் திருமணமாகிவிட்டால், சிறிது நாட்கள் அந்த பராமரிப்பு குறைந்துவிடுவதால், முகத்தில் உள்ள பொலிவானது நீங்கி, முதுமையான தோற்றத்தை அளிக்கும்.

இவ்வாறு, காலம் கடந்தபின் வருத்தபடாமல் நமது வீட்டிலிருக்கும் சில எளிய பொருட்களை வைத்தே உங்களின் இளமை தோற்றத்தை திரும்ப பெற இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் குறிப்புகளை பின்பற்றி பயன் பெறுங்கள்.

விளக்கெண்ணெய் - விளக்கெண்ணெய்யை முகத்தில் தடவி தினமும் மசாஜ் செய்து வந்தால், முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் நீங்கி, சருமம் நன்கு மென்மையாக இருக்கும்.

உருளைக்கிழங்கு - உருளைக்கிழங்கு ஒரு நேச்சுரல் ப்ளீச். வயதான தோற்றம் வந்தால், சருமத்தில் ஆங்காங்கு பழுப்பு நிறம் காணப்படும். ஆகவே உருளைக்கிழங்கை வைத்து, முகத்தில் சிறிது நேரம் தேய்த்து வந்தால், அதனைப் போக்கலாம்.

கரும்பு சாறு - கரும்பு சாறு சருமத்திற்கு மிகவும் சிறந்தது. மஞ்சள் தூளை கரும்பு சாறு ஊற்றி பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி வர, முதுமைத் தோற்றத்தை தடுக்கலாம்.

தேன் - தேனை தினமும் முகத்தில் தடவி, ஊற வைத்து, கழுவி வந்தால், முதுமைத் தோற்றத்தை தடுக்கலாம். அதிலும் இதனை மறக்காமல், கண்களைச் சுற்றி தடவ வேண்டும். இதனால் கருவளையம் நீங்கிவிடும்.

எலுமிச்சை - எலுமிச்சை அனைத்து சருமத்தினருக்கும் மிகவும் சிறந்த ஒரு அழகுப் பொருள். எலுமிச்சை சாற்றினை முகத்தில் தடவி மசாஜ் செய்து வந்தால், முதுமைத் தோற்றம் நீங்குவதோடூ, ஆங்காங்கு காணப்படும் புள்ளிகளும் நீங்கும்.

Sunday, 10 March 2013

திருமண வாழ்க்கைபொறுப்பு

திருமண வாழ்க்கையில் அதிக பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டியவர்கள் ஆண்களே , காரணம் பெண்ணுக்கு இழைக்கும் கொடுமைக்கு தலை முறை தலை முறையாக பாதிக்கிறது என்பதே உண்மை , முன்னேற்றம் பெறாத ஜாதக அமைப்பில் எல்லாம் பெண்ணுக்கு செய்த கொடுமையின் காரணமாக , சுய ஜாதகத்தில் இருக்கும் ராஜ யோகங்கள் கூட யோகபங்க நிலைக்கு ஆளாகி , விருத்தியை தாராமல் இருப்பதை அனுபவத்தில் காண்கிறோம் , மேலும் ஒரு ஜாதகனுக்கு பொருத்தம் இல்லாத வாழ்க்கை துணை அமைந்தாலும் அதை மனம் உவந்து ஏற்றுக்கொண்டு , அவர்களால் வரும் இன்னல்களை ஏற்றுக்கொண்டு , வாழ்க்கை துணைக்கு கண்ணை மூடிக்கொண்டு நன்மையே செய்யுங்கள் , சிறிது காலம் வரை சிரமத்தை தரும், ஆனால் சில கலாங்களுக்கு பிறகு இனிமையான இல்லற வாழ்க்கையாக மாறிவிடும் , இது அனுபவத்தில் பலருக்கு அறிவுறுத்தி நன்மை பெறுவதை கண்ணால் கண்டவன் என்ற முறையில் சொல்கிறோம் , வாழ்க்கை துணையின் இன்னல்களை ஒரு ஜாதகர் ஏற்றுகொள்ளும் பொழுது ஜாதகன் செய்த முன்ஜென்ம கர்ம வினை பதிவு கழிந்து , மண வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்குகிறது என்பது முற்றிலும் உண்மை .

Thursday, 7 March 2013

கண்புரை நோய் சிகிச்சையில் புதிய திருப்பம்!


FILE
கண்புரை நோய் என்பது 40 வயதுக்கு மேல் தவிர்க்க முடியாத ஒரு நோயாக இருந்து வருகிறது. இதற்கு அறுவை சிகிச்சை செய்து செயற்கை லென்சை வைத்து குணப்படுத்துகின்றனர். ஆன்னால் இந்த நடைமுறையே தேவையில்லாத ஒரு புதிய முறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

காடராக்ட் ஆபரேஷனில் பயன்படுத்தப்படும் செயற்கை லென்ஸ்களின் செயல்பாட்டுத் திறனை அதிகரிக்கும் கண் வடிவம் சம்பந்தப்பட்ட புதிஅ புதிய கண்டுபிடிப்பை திருப்பு முனை கண்டுபிடிப்பு என்று லண்டன் கிங்ஸ்டன் பல்கலை மருத்துவ ஆராய்ச்சிக் குழு கோருகிறது.

கண்ணில் உள்ள லென்சில் புரோட்டீன்கள் எவ்வாறு வினியோகிக்கப்பட்டுள்ளது என்பதைக் கொண்டு கண்புரை நோய்க்கு சிறந்த சிகிச்சை அளிக்க முடியும் என்று இவர்கள் கருதுகின்றனர்.

கண்களில் இயற்கையாக உள்ள லென்சை ஒரு போதும் செயற்கை லென்ஸ்கள் மாற்றீடு செய்ய முடியாஅது. தற்போது இந்த ஆராய்ச்சியின் பயனால் மனிதனால் தயாரிக்கப்படும் லென்ஸ்களின் தரத்தை நன்றாக உயர்த்த முடியும் என்று இந்த ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

கண்புரை நோய் எந்த வயதிலும் ஏற்படலாம் என்றாலும், சர்க்கரை நோய் உள்ளவர்கள் மற்றும் 40 வயதுக்கு மேற்பட்டோருக்கு அதிகம் இந்த பாதிப்பு ஏற்படுகிறது. புகைப்பிடித்தல் மற்றும் புற ஊதாக்கதிர் வீச்சின் தாக்கமே கண்புரை ஏற்படுவதற்குக் காரணம்.

இதற்கு பொதுவாக பாதிக்கப்பட்ட இயற்கையான கண் லென்ஸிற்குப் பதிலாக செயற்கை லென்சை பொருத்துவதாகவே இருந்து வருகிறது.

கண்ணில் இயற்கையாக உள்ள லென்சில் புரோட்டீன்கள் வினியோகிக்கப்பட்டுள்ள விதம் கண்பார்வை ஏற்ற இறக்க வாட்டத்தினை முன்னைவிட இப்போது மிகவும் ஸ்மூத்தாக மேம்பாடு அடையச் செய்ய முடியும் என்று ஆராய்ச்சியின் தலைவர் பேராசிரியர் பாராபாரா பெர்சியோனெக் கூறுகிறார்.

ஒளியின் வேகத்திற்கு சற்று நெருக்கமாக எலெக்ட்ரான்களை விசைப்படுத்தி க்ஷ்-ரே கதிர்களை உருவாகும் மூன்றாம் தலைமுறை சின்க்ரோடான் துறையில் வல்லுனரான இவர் இந்த க்ஷ்-ரேக்கள் உடலின் உட்பகுதிகளையும், மென் திசுக்களையும் மற்ற கதிர்வீச்சு முறையைவிட மிகவும் சிறப்பாக ஊடுருவும் தன்மை கொண்டது என்கிறார்.

இதனால் உலோகம் முதல் பாக்டீரியா வரை எதையும் ஆழமாக உற்றுநோக்க முடியும் என்கிறார் இவர்.

இந்த முறை இன்னும் ஆரம்ப கட்டத்தில்தான் உள்ளது இது முழுப்பயனுக்கு வர எத்தனை ஆண்டுகள் பிடிக்கும் என்பது தெரியவில்லை.

C.F.L .பல்புகள் உடைந்தால்…!


C.F.L .பல்புகள் உடைந்தால்…!


 
சி. எஃப். எல். பல்புகள் கைத்தவறி விழுந்து உடைந்துவிட்டால் , உடனே அந்த இடத்தை விட்டு வெளியேறிவிட வேண்டும் என்று பிரிட்டிஷ் சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது . ஏனென்றால் இந்த பல்புகளுக்குள் உள்ள மெர்க்குரி திரவம் , ஆர்சனிக் , துத்தநாகத்தைவிட அதிக விஷத்தன்மையுள்ளது . இந்த விஷத்தை நுகர்ந்தாலோ அல்லது சருமத்தில் பட்டாலோ , மைக்ரேன் தலைவலி , மூளை பாதிப்பு , உடல் அசைவுகள் , பாதிக்கப்பட்டு நிலை தடுமாறுதல் போன்றவை ஏற்படுமாம் . அலர்ஜி பிரச்னை உள்ளவர்களுக்கு சரும பாதிப்புகளும் ஏற்படுமாம் .
சி. எஃப். எல் .பல்புகள் உடைந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் ?
* உடனே அந்த அறையிலிருந்து வெளியேறி விட வேண்டும் . அந்த நெடி மூக்கில் ஏறக்கூடாது . பதினைந்து நிமிடங்கள் ஆனபின் அப்புறப்படுத்தலாம் . நொருங்கிக் கிடக்கும் கண்ணாடித் துகள்கள் காலில் படாமல் பார்த்துக் கொள்ளவும் .
* வேக்வம் க்ளீனரால் சுத்தப்படுத்தக் கூடாது . வேக்வம் உறிஞ்சப்பட்டால் , அது உள்ளே ஒட்டிக்கொள்ளும் . அதைத் திரும்ப உபயோகிக்கும் போது மெர்க்குரித் துகள்கள் மற்ற அறைகளுக்கும் பரவி , மிக மோசமான உடல் உபாதைகளை ஏற்படுத்தும் .
* கைகளில் ரப்பர் கிளவுஸ் போட்டுக்கொண்டு சாதாரண துடைப்பத்தால் சுத்தப்படுத்தலாம் .
* உடைந்தத் துகள்கள் மற்றும் திரவத்தை ஒரு பிளாஸ்டி பையில் சேகரித்து , ‘ சீல் ‘ செய்யவும் . சாதாரண குப்பைத் தொட்டியில் போடாமல் , கார்ப்பரேஷன் ‘ ரீசைக்ளீங் பின்’ னில் கொண்டு சேர்த்தால் , அவர்கள் பாதுகாப்பாக அப்புறப்படுத்தி விடுவார்கள் .

Friday, 1 March 2013

முடி வளர சித்த மருத்துவம்


FILE
வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேக வைத்த நீரைக் கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்.

கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும்.

வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.

வழுக்கையில் முடி வளர கீழாநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும்.

இளநரை கருப்பாக நெல்லிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இளநரை கருமை நிறத்திற்கு மாறும்.

முடி கருப்பாக ஆலமரத்தின் இளம்பிஞ்சு வேர், செம்பருத்தி பூ இடித்து தூள் செய்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி ஊறவைத்து தலைக்கு தேய்த்து வர முடி கருப்பாகும்.

காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்துவர முடி கருமையாகும்.

தலை முடி கருமை மினுமினுப்பு பெற அதிமதுரம் 20 கிராம், 5 மில்லி தண்ணீரில் காய்ச்சி ஆறிய பின் பாலில் ஊறவத்து 15 நிமிடம் கழித்து கூந்தலில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்து குளிக்க வேண்டும்.

செம்பட்டை முடி நிறம் மாற மரிக்கொழுந்து இலையையும் நிலாவரை இலையையும் சம அளவு எடுத்து அரைத்து தலைக்கு தடவினால் செம்பட்டை முடி நிறம் மாறும்.

நரை போக்க தாமரை பூ கஷாயம் வைத்து காலை, மாலை தொடர்ந்து குடித்து வந்தால்நரை மாறிவிடும்.

முளைக்கீரை வாரம் ஒருநாள் தொடர்ந்து சாப்பிடவும்.

முடி வளர்வதற்கு கறிவேப்பிலை அரைத்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.

காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.

சொட்டையான இடத்தில் முடி வளர நேர்வாளங்கொட்டையை உடைத்து பருப்பை எடுத்து நீர் விட்டு மைய அரைத்து சொட்டை உள்ள இடத்தில் தடவிவர முடிவளரும்.

புழுவெட்டு மறைய நவச்சாரத்தை தேனில் கலந்து தடவினால் திட்டாக முடிகொட்டுதலும் புழுவெட்டும் மறையும்.

Word Document-ல் சிறப்பு அடையாங்களை பெறுவதற்கு

Word Document-ல் சிறப்பு அடையாங்களை பெறுவதற்கு
[ திங்கட்கிழமை, 01 ஒக்ரோபர் 2012, 02:57.23 மு.ப GMT ]
Word Document தயார் செய்கையில் பல சிறப்பு குறியீடுகளை அமைக்க வேண்டியுள்ளது.
இதற்கு நாம் அதற்கான சிறப்பு எண்களை Alt Key அழுத்தியவாறே தந்தால், அவை உருவாக்கப்பட்டு Textடுடன் அமைக்கப்பட்டு விடும்.
† கத்தி போன்ற இந்த அடையாளம் பெற Alt + 0134.
‡ இதனையே இரட்டையாகப் பெற Alt + 0135.
™ Trade Markஅடையாளம் ஏற்படுத்த Alt +0153.
£ Pounds அடையாளம் பெற Alt + 0163.
¥ Japan Currency Yen அடையாளம் பெற Alt +0165.
© Cpoyright அடையாளம் கிடைக்க Alt + 0169.
® Register Trade Mark அடையாளம் உண்டாக்க Alt +0174.
° Degree என்பதனைத் தெரிவிக்கும் அடையாளம் பெற Alt +0176.
± Plus or Minus என்பதனைக் காட்ட Alt +0177.
· நட்ட நடுவில் புள்ளி அடையாளம் ஏற்படுத்த Alt+0183.
¼ கால் என்பதைக் குறிக்க Alt + 0188.
½ அரை என்பதைக் குறிக்க Alt + 0189.
¾ முக்கால் என்பதனைக் குறிக்க Alt + 0190.