jaga flash news

Monday, 4 February 2019

வெவ்வேறு ராசிகளில் சனீஷ்வரன் இருப்பதால் உண்டாகக்கூடிய பொதுப்பலன்கள்



சனி
சனி:
வெவ்வேறு ராசிகளில் சனீஷ்வரன் இருப்பதால் உண்டாகக்கூடிய பொதுப்பலன்கள்
மேஷத்தில் சனி:
இங்கே சனி நீசம். ஆசாமி முட்டாள்தனமானவன். பேச்சும் அப்படித்தான் இருக்கும். ஊர்சுற்றி வாய்ப்புக் கிடைத்தால் நடத்தை தவறுபவன். நேர்மையற்றவன். புரிந்துகொள்ள முடியாதவன். சிலர் கொடூரமானவர்களாக இருப்பார்கள். சிலர் சட்டத்திற்கும் இயற்கைக்கும் எதிரான வேலைகளைச் செய்யக்கூடியவர்கள்.
ரிஷபத்தில் சனி
இது சுக்கிரனின் வீடு. இங்கே சனி இருந்தால் உணர்வுகளையும் எண்ணங்களையும் கட்டுப்படுத்திக்கொள்ளக் கூடியவர். கறுப்பான தோற்றத்தை உடையவர். சூதுவாது நிறைந்தவர். சம்பிரதாயங்களுக்கு எதிரானவர்.
எடுத்த காரியத்தை நிறைவேற்றக்கூடியவர்கள். அதிகாரம் மிக்கவர்கள் தந்திரமிக்கவர்கள்
சிலருக்கு இரு மனைவிகள் அமையும். சிலர் எப்போதும் கவலையோடு இருப்பார்கள்
மிதுனத்தில் சனி
இது புதனின் வீடு. இங்கே சனியிருந்தால் ஜாதகன் ஒரு இடத்தில் இருக்க மாட்டான். Restlessஆக இருப்பான். ஒழுங்கில்லாதவன். துன்பங்கள் சூழ்ந்தவன்.ஒல்லியான தேகமுடையவன். யாராலும் புரிந்துகொள்ள முடியாதவன் அல்லது முடியாதவள்.
சிலர் திட்டமிட்டு செயலாற்றுபவர்கள். குறுகியமனப்பான்மை மிக்கவர்கள் இரசாயனம், இயந்திரங்கள் சம்பந்தட்ட துறையில் சிலர் ஆர்வம் கொண்டிருப்பார்கள். சூதாட்டங்களில் விருப்பமுள்ளவர்கள்
கடகத்தில் சனி
இது சந்திரனின் வீடு சிலரை ஏழ்மை வாட்டும். மன சந்தோஷத்திற்காக அலைபவர்கள். மெதுவாகச் செயல்படுபவர்கள். டல்லாக இருப்பார்கள். சிலர் சூதுவாது நிறைந்தவர்கள். சுயநலமிக்கவர்கள். பிடிவாதமுடையவர்கள். சந்திரன் அன்னைக்கு உரிய கிரகம். அந்த வீட்டில் சனியின் அமர்வு சிலருக்கு அனனையின் அரவனைப்பு கிடைக்காமல் போய்விடும் வாழ்க்கை ஏமாற்றங்கள் நிறைந்ததாக இருக்கும்.
சிம்மத்தில் சனி
பிடிவாதமுடையவர்கள். எதற்கும் வளைந்து போகாதவர்கள் அதிர்ஷ்டமில்லாதவர்கள். முரண்பாடுகள் மிக்கவர்கள். மாறுபட்ட ஒவ்வாத சிந்தனையுடையவர்கள்
சிலர் கடின உழைப்பாளிகள். சிலர் எழுத்தில் பரிணமளிப்பார்கள், அதாவது எழுத்தாளர்களாக இருந்து சிறப்படைவார்கள்
கன்னியில் சனி
கறுப்பான தோற்றமுடையவர்கள். வாக்குவாதங்கள் செய்பவர்கள். மாறுபட்ட சிந்தனை உடையவர்கள். நிலைப்பாடுகள் இல்லாதவர்கள். குறுகிய மனப்பான்மை மிக்கவர்கள். அதிரடியானவர்கள். பழமைவாதிகள். உடல் நலக் குறைபாடுகள் இருக்கக்கூடியவர்கள்
துலா ராசியில் சனி
இது சனீஷ்வரனின் உச்ச வீடு. இங்கே சனி இருப்பது நன்மையைத் தரும். ஜாதகனை அவன் இருக்கும் துறையில் புகழ் பெற வைக்கும். ஜாதகன் அறநிலைகளை உருவாக்குபவனாக விளங்குவான் அல்லது தலைமை ஏற்பான். செல்வந்தனாக இருப்பான். உயரமாகவும் அழகுள்ளவனாகவும் விளங்குவான் (இது இயற்கையில் சுக்கிரனுடைய வீடு - அதனால் அந்த அம்சங்கள் ஜாதகனுக்கு ஏற்படும்) ஜாதகன் தற்பெருமை உடையவனாக இருப்பான் (இருக்காதா பின்னே?) அதிகாரம் உள்ளவன். மதிப்பும், மரியாதையையும் உடையவன். சாமர்த்தியசாலி எதையும் தீர்மானிக்ககூடியவன். சுதந்திரமனப்பான்மை மிக்கவன் சிலர் பெண்களுக்கு சேவகம் செய்வதில் ஆர்வம் கொண்டிருப்பார்கள்
விருச்சிகத்தில் சனி
இது செவ்வாயின் வீடு. இது சனி அமர்வதற்கு உகந்த இடம் அல்ல! ஜாதகன் அவசரக்காரன். படபடப்பானவன். கடினமானவன் (அதாவது கடினமான மனதையுடையவன்) மகிழ்ச்சியில்லாதவன். உடல்நலமில்லாதவன்.
சிலருக்கு நெருப்பு, விஷம், விபத்து போன்றவற்றால் தீமைகள் நிகழலாம். சிலர் கட்டுப்பெட்டித்தனமாக தான் என்று தனிமையாக வாழ்வார்கள் சிலருக்கு வாழ்க்கை மொத்தமும் பயனில்லாமல் போய்விடும்
தனுசு ராசியில் சனி!
இது குருவின் வீடு. இங்கே சனி இருப்பது நல்லது. இயற்கையில் ஒரு சுபக்கிரகத்தின் வீடாகையால் இங்கே அமரும் சனி அடக்கி வாசிப்பார்.
ஜாதகன் பெருந்தன்மை உடையவனாக இருப்பான். அவன் இருக்கும் துறையில் புகழ் பெறுவான். கடமை உணர்வுள்ள குழந்தைகள் அவனுக்கு இருக்கும். வயதான காலத்தில் அவைகள் அவனை அரவனைத்துக் காப்பாற்றவும் செய்யும். அவனுடைய வாழ்க்கை மகிழ்ச்சி நிரம்பியதாக இருக்கும்
மகரத்தில் சனி
இது சனியின் சொந்த வீடு. ஜாதகனின் குடும்ப வாழ்க்கை செழிப்பாகவும் மகிழ்ச்சி நிரம்பியதாகவும் இருக்கும். ஜாதகன் புத்திசாலியாகவும், சாமர்த்தியம் மிக்கவனாகவும் திகழ்வான்
சிலர் சுயநலம் மிக்கவர்களாக இருப்பார்கள். சிலர் சந்தேக மனப்பான்மை கொண்டவர்களாகவும், பழிவாங்கும் எண்ணம் மிக்கவர்களாகவும் இருப்பார்கள். சிலர் அதிகம் கற்றவர்களாகவும் இருப்பார்கள்
கும்பத்தில் சனி
இதுவும் சனியின் சொந்தவீடு. வாழ்க்கைத் தத்துவத்தை அறிந்தவர்களாக இருப்பார்கள். யதார்த்த அனுகுமுறைகளைக் கொண்டவர்களாக இருப்பார்கள் மகிழ்ச்சியோடு இருப்பார்கள்.வாழ்க்கை நிறைகுடமாக இருக்கும்.
மீனத்தில் சனி
இதுவும் குருவின் வீடு. இங்கே சனியின் அமர்வு நன்மைகளை உடையதாக இருக்கும். ஜாதகன் சாமர்த்தியசாலியாக இருப்பான். அதிர்ஷடமுள்ளவனாக இருப்பான். எல்லோரும் விரும்பும் வண்ணம் நடந்துகொள்வான்.
நல்ல விசுவாசமான மனைவி கிடைப்பாள். வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். மற்றவர்களுக்கும் ஜாதகன் உதவியாக இருப்பான்,

ஜோதிடத்தில் இறப்பு மற்றும் ஆயுள்

ஜோதிடத்தில் இறப்பு மற்றும் ஆயுள்
ஜோதிட சாஸ்திரத்தில் ஆயுள் காரகன் என்ற அதிமுக்கியமான பதவியில் இருப்பவர். சூரிய பகவானின் இரண்டாவது புதல்வர். காக்கையை வாகனமாகக் கொண்டவர். ஈஸ்வர பட்டம் பெற்றவர்களில் சனியும் ஒருவர். முதல் புத்திரர் யமன். பின்னவர் ஆயுளை வளர்த்தால், முன்னவர் ஆயுளைப் பறிக்கும் தொழிலைச் செய்பவர். சகோதரி யமுனை. சனி கர்ம வினை கிரகம். கலியுகத்தில் சகல தெய்வங்களின் தூதுவனாக நின்று நன்மையோ தீமையோ செய்கிறார். அதனால் எந்த ராசியில் நின்றாலும் தப்பு செய்தால் அவருக்குப் பிடிக்காது.
ஜாதகத்தில் சனியின் நிலையே மரணத்தின் வகையை நிர்ணயிக்கும். ஒருவருக்கு நீண்ட சிறப்பான ஆயுளைத் தரும் கிரகம் சனி பகவான் ஆவார். ஒருவருக்கு நீண்ட ஆயுள் அமைய வேண்டுமானால் அவருடைய ஜாதகத்தில் கீழ்க்கண்ட அம்சங்களை நாம் பார்க்கவேண்டும்.
ஒரு குழந்தையின் ஜாதகத்தில் எட்டு வயது வரை பாலாரிஷ்ட காலம் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. பாலாரிஷ்டத்தின் தன்மையைப் பொறுத்து எட்டு வயதிற்குள் மரணம் ஏற்படுகிறது. எட்டு வயது முதல் இருபது வயது வரை யோகாரிஷ்டம் ஏற்படுகிறது. யோகாரிஷ்ட காலத்தில் ஆயுளை தீர்மானிப்பது என்பது சாதாரண விஷயம் அன்று.
லக்னத்துக்கு எட்டாம் இடம், லக்னத்துக்கு மூன்றாம் இடம், லக்னத்துக்கு பத்தாம் இடம் பத்தாம் இடத்தில் நின்ற கோள்கள், சூரியன், ஆயுளுக்கு அதிபதியான சனி பகவான். இவர்களைக் கவனிக்க வேண்டும். லக்னாதிபதியும் சூரியனும் ஒன்றுக்கு ஒன்று நட்பான கிரகமானால் ஆயுள் தீர்க்கம். லக்னாதிபதியும் சூரியனும் சமமானால் மத்திமமான ஆயுள். இரண்டும் ஒன்றுக்கு ஒன்று பகையான கிரகமானால் அற்ப ஆயுள். அற்ப ஆயுள் என்றால் அந்த ஜாதகன் 32 வயது மட்டுமே வாழ்வான்.
ஆயுளை அறியும் முறை
ஆயுள் கணிதம் என்பது மனிதனின் அறிவிற்கு அப்பாற்பட்ட செயல் என்றாலும் ஜோதிட சாஸ்திரத்தில் இதற்காக சில விதிமுறைகள் முனிவர்களாலும் ரிஷிகளாலும் வகுக்கப்பட்டிருக்கிறது.
1. லக்னாதிபதியின் நிலை மற்றும் எட்டாமதிபதியின் நிலை
2. லக்னாதிபதியின் நிலை மற்றும் சந்திரனின் நிலை
3. லக்னாதிபதியின் நிலை மற்றும் ஹோரா லக்னத்தின் நிலை
லக்னாதிபதியும் எட்டாமதிபதி, சந்திரன், ஹோரா லக்னாதிபதி ஆகிய அனைவரும் சர ராசியில் இருந்தால் பூர்ண ஆயுள். மாறாக இவை அனைத்தும் ஸ்திர ராசியில் இருந்தால் அற்ப ஆயுள். ஆனால் இவை அனைத்தும் உபய ராசியில் நின்றால் மத்திம ஆயுள் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது,
மரணம் நேரும் காலம்
ஒரு ஜாதகத்தில் 8-ஆம் இடத்தை கொண்டு ஆயுளைப் பற்றியும் 2, 7, 11-ம் இடத்தை கொண்டு மாரகத்தைப் பற்றியும் கூறமுடியும். மாரக தசை அல்லது புத்தி வரும் காலங்களில் மிகக் கவனமுடன் இருப்பது அவசியம்.
ஒருவருக்கு 2,7,11 அதிபதிகள் தொடர்பு கொள்ளும் காலங்களில் ராகு அல்லது கேதுவையும் தொடர்பு கொள்ளும் போது மரணம் நேர்ந்துவிடுகிறது. இந்த மாரகாதிபதிகளான 2,7,11 அதிபதிகளின் தசா புத்தி அந்தரங்கள் நடைபெற்று அப்போது கோசாரத்தில் ராகு/ கேது ஆகிய சர்ப்ப கிரகங்களின் பார்வை அல்லது சேர்க்கை ஆயுள் ஸ்தானத்திற்கு அமைந்து நிற்கும் போது மரணத்திற்கு நிகரான கண்டங்கள் நிகழ்கின்றது. அந்த நேரத்தில் லக்னமோ அல்லது லக்னாதிபதியோ 6/8/12 அதிபதிகளின் தொடர்புகொள்ளும்போது மரணம் நிகழ்ந்துவிடுகிறது. மாரகாதிபதிகளின் தசாபுத்திகாலத்தில் லக்னத்திற்கு ஏற்படும் கிரகங்களின் தொடர்பைப் பொருத்து மரணத்தின் தன்மை அமைந்துவிடுகிறது.
சூரியன் அல்லது குருவின் சேர்க்கை பெற்றால் புனித தினங்களிலோ அல்லது கோயில் போன்ற தெய்வீகத்தன்மைகள் நிறைந்த இடத்தில் நிகழும்.
சுக்கிரன் சேர்க்கை பெற்றால் சுகமான மரணமும் மருத்துவமனை போன்ற இடங்களில் பலர் சேவை செய்ய மரணம் நிகழும்.
சனி சேர்க்கை பெற்றால் பொது இடங்களிலோ அல்லது தர்ம ஸ்தாபனங்கள் போன்ற இடங்களிலோ மரணம் நிகழும்.
சந்திரன் சேர்க்கை பெற்றால் நீர் நிலைகளுக்கு அருகிலோ அல்லது பயணத்திலோ மரணம் நிகழும்.
செவ்வாய் சேர்க்கை பெற்றால் விபத்துகளாலும் அகால மரணமும், புதன் சேர்க்கை பெற்றால் அவஸ்தைகளுடன் கூடிய மரணமும் நிகழும்.
ராகு/கேது தொடர்பு கொண்டால் விபத்து, விஷ ஜெந்துகளாலோ அல்லது விஷம் அருந்துதல், தற்கொலை போன்றவையும் நிகழும்.
மாந்தி தொடர்பு கொண்டால் உடல் சிதைந்த நிலையிலான மரணம் நிகழும்.
எனவே "ஆடி அடங்கும் வாழ்க்கையடா ஆறடி நிலமே சொந்தமடா" என்பதை உணர்ந்து "எமன் ரொம்ப பொல்லாதவன் விடமாட்டான் அவன் சதாசிவ பக்தனென்றால் தொடமாட்டான்" என அறிந்து தர்ம நெறி தவறாமல் அமைதியாக வாழ்ந்தால் எமவாதனை இன்றி அமைதியான மரணம் நேரும்.
ஆயுள் வளர்க்கும் பரிகாரங்கள்
1. ஆயுள் காரகனான சனைஸ்வர பகவானை வணங்குவது மற்றும் பித்ரு வழிபாடுகள் தொடர்ந்து செய்வது. தர்ம காரியங்கள் செய்வது.
2. வருடம் தோறும் ஆயுஷ்ய ஹோமம் மற்றும் மிருத்யஞ்சய ஹோமம், சுதர்சன ஹோமம் போன்றவை பிறந்த நாட்களில் செய்வது.
3. எமனை சம்ஹாரம் செய்த திருக்கடையுர் அமிர்தகடேஸ்வரர் மற்றும் காலசம்ஹார மூர்த்தியைப் பிறந்தநாட்களிலும் ஜென்ம நட்சத்திர நாட்களிலும் வணங்குவது.
4. எமனை சாம்பலில் இருந்து உயிர்ப்பித்த திருச்சி திருப்பைஞ்சிலி ஸ்ரீ ஞீலிவண நாதர் ஆலயத்திற்குச் சென்று பிறந்த நாளில் ஒருமணி நேரமாவது தியான வழிபாடு செய்வது.
5. "காசியை விட வீசம் அதிகம்" என்று காசியைக் காட்டிலும் சிறப்பான சிவதலமாக புகழ்ந்து கூறப்படும் திருத்தலம் ஸ்ரீ வாஞ்சியத்தில் வாஞ்சிநாதேஸ்வரரை தரிசிப்பது மற்றும் ஆயுள் விருத்தி ஹோமங்கள் செய்வது.
6. இவற்றோடு உடல் ஆரோக்கியத்தை காக்க வருமுன் காக்க சரியான ஆரோக்கியமான உணவு முறைகளையும் வருடம்தோறும் மருத்துவ பரிசோதனைகள் செய்துகொள்வது மற்றும் தேவையான அளவு ஆயுள் காப்பீடு, விபத்து காப்பீடு, மருத்துவ காப்பிடு ஆகியவற்றைக் காலாவதியாகாமல் வைத்துக்கொள்வது
நமது வாழ்க்கை முடிந்து போகும் தருணத்தில் நாம் இறப்பு என்னும் காலகட்டத்தில் நுழைகிறோம், அது சில நாட்களோ அல்லது சில மணி நேரங்களோ பிடிக்கலாம். நோய் முற்றிப்போய் நாம் தளர்ச்சியடைந்து நமது உடல் அதன் முடிவை நெருங்கிக் கொண்டிருக்கும்போது அதன் செயல்பாடுகள் விரைவாகச் சரிந்து முடிவுக்கு வரும். அதுதான் இறக்கும் சமயத்தில் மிக முக்கியமான தருணம். ஏனெனில் அந்தக் கணம்தான் இறைமைக்கான நேரம்.
எனவே இதுவரை நாம் நல்ல செயல்கள் எதுவும் செய்யவில்லை என்றாலும் இனியாவது நாலாயிர திவ்ய பிரபந்தத்தில்
துப்புடை யாரை அடைவ தெல்லாம் சோர்விடத் துத்துணை யாவ ரென்றே
ஒப்பிலே னாகிலும் நின்ன டைந்தேன் ஆனைக்கு நீஅருள் செய்த மையால்
எய்ப்பு என்னை வந்து நலியும் போதுஅங்கு ஏதும்நா னுன்னை நினைக்க மாட்டேன்
அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் அரங்கத் தரவணைப் பள்ளி யானே
எனப் பெரியாழ்வார் கூறியுள்ளது போல் ஸ்ரீமன் நாராயணின் நாமத்தை மரணம் நேரும் காலத்தில் சொல்லமுடியாமல் போனாலும் இப்போதே சொல்லி வைகுண்ட வாசனின் அருளைப் பெறுவோமாக!

திதி

1.பிரதமை
பிரதமை
முதல் சந்திர நாள் முக்கிய தெய்வம் அக்னி ஆகும். பூஜைகள் மற்றும் மங்கள காரியங்கள் செய்ய உகந்த நாள்.
2.துவிதியை
துவிதியை
இது ப்ரம்மாவுக்கு உரிய நாள் இன்று கட்டிடம் கட்டுவதர்கான அஸ்திவாரம் அமைத்தல் மற்றும் நிலைத்தன்மை கொண்டவை உருவாக்குதல் நன்மைதரும்.
3.திருதியை திருதியை கெளரிமாதாவுக்கு உகந்த நாள்.சிகை திருத்தம் செய்தல்,முகசவரம், நகம் வெட்டுதல் முதலியன நன்ைம தரும்.
4.சதுர்த்தி சதுர்த்தி நான்காம் நாள் எமன் மற்றும் வினாயகருக்குரிய நாள். எதிரிகளை வீள்த்துதல்,தடை தகர்தல் முதலிய போர் காரியங்கள் வெற்றி தரும்.
5.பஞ்சமி பஞ்சமிஇது நாகதேவனின் நாள்,விஷம் முரித்தல்,மருத்துவம் செய்தல் அறுவை சிகிச்சை முதலியன பலன் தரும்.
6.சஷ்டி
சஷ்டிநாளின் தெய்வம் முருகன்.புதிய நண்பர்களை சந்தித்தல்,கொண்டாட்டம் கேளிக்கை முதலியன சிறப்பு.
7.சப்தமி
சப்தமிசூரியனின் நாள்.பிரயாணம் தொடங்குதல்,பிரயாண படி கேட்டல், முதலிய நகர்தல் சம்மநதமான காரியங்கள் கைகூடும்.
8.அஷ்டமி
அஷ்டமிஇன்னாளின் கடவுள் மஹாருத்ரன் ஆவார்.ஆயுதம் எடுத்தல்,அரன் அமைத்தல்,போர் மற்றும் தற்காப்பு கலை கற்றல் ஆகியவை உகநதது.
9.நவமி
நவமிஅம்பிகையின் நாள்.எதிரிகளை கொல்லுதல்,வினாசம் செய்தல்.
10.தசமி
தசமிதர்மராஜாவின் நாள்.மதவிழாக்கள்,ஆன்மீக செயல்கள் நன்மை தரும்.
11.ஏகாதசி.
ஏகாதசிமஹாருத்ரனின் நாள். இன்னாளில் விரதம் மேற்கொள்ளுதல் மற்றும் பரமாத்வாவை தியனிதல் சிறப்பு.
12.துவாதசி
துவாதசிமஹாவிஷ்ணுவின் ஆதிக்கமுடய நாள்.விளக்கு ஏற்றுதல், மதவிளாக்கள், பணிகள் செய்தல்.
13.திரயோதசி திரயோதசிமன்மதனின் நாள்.அன்பு செலுதுதல்,நட்பு வளர்தல்.
14.சதுர்த்தசி
சதுர்த்தசிகாளியின் ஆதிக்கமுடய நாள்.விஷத்தை கைய்யாளுதல்,தேவதைகளை அைழத்தல்.
15.அமாவாசை பௌர்ணமி
அமாவாசை பித்ருகளுக்கு காரியங்கள் செய்யவும்.பௌர்ணமி அன்று அக்னிக்கு ஆஹுதி கொடுத்தல் முதலியன நலம் தரும்

கேந்திர ஆதிபத்திய தோஷம் என்றால் என்ன?

கேந்திர ஆதிபத்திய தோஷம் என்றால் என்ன?
கேந்திர ஆதிபத்திய தோஷம் என்பது சுபர்களான குரு, சுக்கிரன், புதன் கேந்திரங்களில் அமையப்பெற்றால் ஏற்படும் தோஷம் ஆகும். ஒருவர் ஜாதகத்தில் கேந்திர ஸ்தானங்கள் என்பது 1,4,7,10 ஆகிய ஸ்தானங்களை குறிப்பதாகும். இதில் 1ம் இடம்( லக்கினம் ) கேந்திரம் மற்றும் திரிகோணத்தில் அமைப்பெற்றால் அதிக பாதிப்பு ஏற்படுவதில்லை.
பஞ்ச மஹா புருஷ யோகம் என்பது செவ்வாய், புதன், குரு, சுக்ரன், சனி ஆகியோர் லக்ன கேந்திரத்தில் ஆட்சியோ அல்லது உச்சமோ பெற்று இருந்தால் ஏற்படுகிறது. அதே வேலையில் இயற்கையில் சுபர்களான புதன், குரு, சுக்ரன் கேந்திரத்திரக்கு அதிபதி அனால் கேந்திர ஆதிபத்திய தோஷம் ஏற்படும்.
இதில் முக்கியமாக கவனிக்க பட கூடிய விஷயம் என்ன வென்றால் , இயற்கையில் சுபர்களான புதன், குரு, சுக்ரன் கேந்திரங்களில் நிற்கும்பொழுது பஞ்ச மஹா புருஷ யோகம் தந்தாலும் கேந்திர ஆதிபத்திய தோஷம் அமைந்த காரணத்தினால் பஞ்ச மஹா புருஷ யோகம் கொடுக்க வேண்டிய சுப பலன்கள் தடுக்கப்படுகிறது.- தீய பலன்களே ஏற்படுகிறது.
இனி கேந்திர ஸ்தானங்களை வைத்து என்ன மாதிரியான பலன்கள் சொல்லலாம் என்பது கீழே தரப்பட்டுள்ளது.
லக்கினம் அல்லது 1 ம் இடம்
ஜாதகரின் ஆயுள் ஆரோக்கியம், குண அமைப்புகள் பற்றி அறிந்து கொள்ளலாம்
நான்காம் இடம்- சுக ஸ்தானம்
ஜாதகரின் சொகுசு வாழ்வு, வண்டி வாகன யோகம், வீடு மனை யோகம், உயர் கல்வி, தாய் ,தாய் வழி உறவுகளால் உண்டாக கூடிய பலன்கள் பற்றி அறிந்து கொள்ளலாம்
ஏழாம் இடம்- களத்திர ஸ்தானம்
ஜாதகரின் மண வாழ்க்கை, நட்பு கூட்டுத்தொழிலில் உண்டாக கூடிய பலன்கள் பற்றி அறிந்து கொள்ளலாம்
பத்தாம் வீடு- ஜீவன ஸ்தானம்
ஜாதகரின் உத்தியோகம் வியாபாரம், தொழில் பற்றி அறிந்து கொள்ளலாம்
சுப பலனை தரக் கூடிய சுப கிரகங்கள் கேந்திர ஸ்தானங்களில் அமைந்து ஆட்சி அல்லது உச்சம் பெரும்பொழுது நற்பலனை தருவதற்கு பதில் கேந்திராபத்திய தோஷத்தை ஏற்படுத்தி கெடு பலன்களை தருகின்றது.
மேலும் சுப கிரகங்களின் கேந்திர ஸ்தானங்களில் தனித்து ஆட்சிப் பெற்று அதன் திசா புக்தி காலங்கள் நடைபெறும்பொழுது பல்வேறு தீய பலன்களை தருகிறது.
கீழே தரப்பட்டுள்ள அட்டவணை மூலம் 12 லக்னங்களிற்கும் கேந்திர ஸ்தானம் என்ன என்ன என்றும், எந்தெந்த கிரகங்கள் எந்தெந்த லக்னத்திற்கு தோஷத்தை ஏற்படுத்துகிறது என்பதனை பார்ப்போம்.
லக்னம்
எந்த கிரகங்கள் கேந்திர ஆதிபத்திய தோஷம் ஏற்படுத்தும்?
மேஷ இலக்னம்
4ஆம் வீடான கடகமும் 7ஆம் வீடான துலாமும், 10ம் வீடான மகரமும் கேந்திர ஸ்தானங்கள் ஆகும்.
4ஆம் வீடான கடகத்தில் சந்திரன் ஆட்சி பெற்றிருந்தால் மனக்குழப்பங்கள், வாகனம் சொந்த வீடு அமையத் தடை, சுகமான வாழ்க்கை அமையத் தடை ஏற்படுகிறது.
7ம் வீடான துலாத்தில் சுக்கிரன் ஆட்சிப் பெற்றிருந்தால் தாமத திருமணம், திருமண வாழ்வு அமைவதற்கு தடை அப்படி திருமண வாழ்வு அமைந்தாலும் நிம்மதியில்லாத நிலை உண்டாகிறது. நல்ல நண்பர்கள் கிடைப்பதில் தடை மற்றும் கூட்டு தொழிலில் பிரச்சனைகள் ஏற்படுகிறது.
ரிஷப இலக்னம்
ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகிய வீடுகள் கேந்திர ஸ்தானங்களாகும். ரிஷப லக்கினத்திற்கு லக்கினாதிபதியான சுக்கிரன் ஒருவரே ஷுப கிரஹம் ஆவார். சுக்கிரன் லக்கினாதிபதி என்பதால் , அவர் லக்கினத்தில் அமர்ந்து கேந்திர ஆதிபத்திய தோஷம் ஏற்பட்டாலும் , சுக்கிரணடைய தசா புக்திகள் உயர்ந்த ஷுப பலன்களையே தருகிறது.
மிதுன இலக்னம்
மிதுன லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு புதனும் குருவும் கேந்திர ஆதிபத்திய தோஷத்தை தருகிறார்கள் லக்கினாதிபதியான புதன் லக்கனத்தில் அமர்ந்தால் , அதிக கெடு பலன்களை தருவதில்லை. நான்காம் இடத்தில அமர்ந்தால் , தாய்க்கு ஆரோக்கிய குறைவு , சொந்த வீடு அமைய தடை கல்வியில் முன்னேற்றம் இல்லாத நிலை ஏற்படுகிறது.
ஏழாம் வீட்டில் குரு ஆட்சி பெற்று காணப்பெற்றால் கடுமையான கேந்திர ஆதிபத்திய தோஷம் அமைகிறது. ஜாதகருக்கு திருமண வாழ்வு அமையப்பெறுவதில்லை. அப்படி அமைந்தாலும் , மணமுறிவு , விவாகரத்து ஏற்படுகிறது.
கடக இலக்னம்
கடக லக்கினக்காரர்களுக்கு நான்காம் இடமான துலாத்தில் சுக்கிர பகவான் ஆட்சி பெற்று காணப்பெற்றால் கேந்திராதிபத்ய தோஷம் ஏற்படுகிறது. சுக்கிர பகவான் கடக லக்கின காரர்களுக்கு பாதகாபதி என்பதால் , சொல்லணா துயரங்களை அவருடைய தசை புக்தி காலங்களில் சந்திக்க நேரிடுகிறது.
சிம்ம இலக்னம்
சிம்ம லக்கனத்தில் பிறந்தவர்களுக்கு ஜீவன ஸ்தானமான 10ம் இடத்தில சுக்கிரன் ஆட்சி பெற்று காணப்பட்டால் கேந்திராதிபத்ய தோஷம் ஏற்படுகிறது, ஜாதகர் தொழில் ரீதியாக பல சங்கடங்களை சந்திக்க நேரிடும்.
கன்னி இலக்னம்
கன்யா லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு புதன் லக்கினத்தில் ஆட்சி , உச்சம் , மூலதிரிகோணம் பெற்று காணப்பட்டால் , கேந்திராதிபத்ய தோஷம் ஏற்படுகிறது. சிறு சிறு தடைகளை ஜாதகர் வாழ்வில் சந்திக்க நேரிடும்.
சுக ஸ்தானமான நான்காம் வீட்டில் குரு ஆட்சி பெற்றால் வீடு வாகனம் வாங்க இடையூறுகள், சுக வாழ்வில் தடை, தாய் வழி உறவினர்களிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் உண்டாகும்.
களத்திரஸ்தானமான ஏழாம் இடத்தில் குரு ஆட்சிப் பெற்றால் கடுமையான கேந்திராதிபத்ய தோஷம் ஏற்படுகிறது. ஜாதகருக்கு திருமணம் என்பது ஒரு கானல் நீராக அமைகிறது. மேலும் திருமண வாழ்வில் பல சங்கடங்கள், கூட்டு தொழிலில் பிரச்சனைகள் உண்டாகும்.
துலா இலக்னம்.
துலா லக்கணத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் லக்கினாதிபதி என்பதால் , சுக்கிரன் லக்கினத்தில் அமைந்தாலும் , பெரிய பாதிப்பகளை ஏற்படுத்த மாட்டார்.
விருச்சிக இலக்னம்.
7ஆம் அதிபதி சுக்கிரன் மட்டுமே விருச்சிக இலக்னத்தில் பிறந்தவர்களுக்கு சுப கிரகமாவார். ஏழாம் அதிபதியான சுக்கிரன் ஏழாம் இடத்திலே அமையப்பெற்றால் கடுமையான கேந்திர ஆதிபத்திய தோஷத்தை ஏற்படுத்தும். மேலும் சுக்கிரன் களத்திர காரகர் என்பதால் கரோகோ பாவ நாஸ்தி ஏற்பட்டு ஜாதகருக்கு திருமணம் நடை பெறுவதில் சிக்கலை ஏற்படுத்தும்.
தனுசு இலக்னம்.
தனுசு லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு சுபர்களான புதனும் குருவும் கேந்திர ஆதிபத்திய தோஷத்தை ஏற்படுத்துகின்றனர்.
நான்காம் இடத்தில் குரு பகவான் ஆட்சி பெற்று அமைந்தால் சுகமான வாழ்வு ஏற்படுவதற்கு தடை , வீடு மனை, வண்டி வாகனங்கள் அமைவதற்கு தடை,உயர் கல்வி அமைய, தடை உண்டாகும்.
7,10இல் புதன் ஆட்சிப் பெற்றால் மண வாழ்க்கையில் சங்கடங்கள், திருமண தடைகள், வியாபார தொழில் உத்தியோக ரீதியாக வீண் வீண் பிரச்சினைகள் ஏற்படக்கூடும்.
மகர இலக்னம்.
மகரலக்கினத்தில் பிறந்தவர்களுக்கு
ஐந்து , பத்துக்கு உரியவரான சுக்கிரன் பத்தாம் இடத்தில் ஆட்சி பெற்று காணப்பட்டால் , தொழில் , உத்தியோக ரீதியாக பல சங்கடங்களை உருவாக்குவார்.
கும்ப இலக்னம்.
கும்ப இலக்னத்தில் பிறந்தவர்களுக்கு நாலாம் அதிபதி யான சுக்கிரன் நான்கில் ஆட்சிப் பெற்று அமைந்தால் கடுமையான கேந்திராதிபத்திய தோஷம் ஏற்படுத்தும். வீடு வாகனம் வாங்க இடையூறுகள், சுக வாழ்வில் தடை, தாய் வழி உறவினர்களிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் உண்டாகும்.
மீன லக்கினம்
மீன இலக்னத்தில் பிறந்தவர்களுக்கு ஜீவன ஸ்தானமான 10இல் குரு பகவான் ஆட்சிப் பெற்றால் தொழில் உத்தியோக ரீதியாக இடைஞ்சல்கள் வாழ்வில் முன்னேற்றத்திற்கு தடை, உண்டாகும்.
நான்கு , எழில் , ஸூபர் ஆன புதன் ஆட்சிப் பெற்றால் சுகமான வாழ்க்கை அமைவதற்கு தடை, வீடு வாகனம் அமைவதில் இடைஞ்சல்கள் உண்டாகும் இல்வாழ்க்கை ரீதியாகவும் நிறைய பிரச்சனைகள் எதிர் கொள்ள நேரிடும்.. மண வாழ்க்கை அமைவதிலும் தாமதம் உண்டாகும்.
கேந்திர ஆதிபத்திய தோஷத்திலிருந்து விலக்கு பெற
1. ஷுப கிரஹங்கள் லக்கினத்தில் இருந்தால் , கேந்திர ஆதிபத்திய தோஷத்திலிருந்து விலக்கு உண்டு. ஏனென்றால் , லக்கினம் கேந்திர திரிகோணமாக அமைவதால்.
2. 1, 4, 7, 10 இடத்தில் ஷுப கிரஹங்கலான குரு , புதன் , சுக்கிரன் தனியாக அமையாமல் அவர்களுடன் ஒன்று அல்லது பல பாப கிரஹங்கள் அமையப்பெற்றால் , கேந்திர ஆதிபத்திய தோஷத்தால் கெடு பலன்கள் ஏற்படாது

மூலத்திரிகோணம் என்றால் என்ன?

மூலத்திரிகோணம் என்றால் என்ன?
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++
சோதிடத்தில் திரிகோணம் என்றால் என்ன? என்பது நமக்குத் தெரியும். அதென்ன மூலத்திரிகோணம்?
ஒரு கோளின் வேர்ப்பகுதி என்று பொருள். அதாவது கட்டிடத்தின் கடைக்கோள் ( அதாவது அஸ்திவாரம் ) போன்றதாகும். ஒரு மரத்தின் ஆணிவேரானது, நிலத்துக்குள் ஊடுருவி மரத்தை நிலைநிறுத்துவது அல்லாமல், மரத்திற்கு வேண்டிய ஊற்று நீரை உறிஞ்சி, அடிமுதல் நுனி வரை பாய்ச்சி மரத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது அல்லவா? அதுபோல, பஞ்சமகா கோள்களான புதன், சுக்கிரன், செவ்வாய், குரு, சனி போன்ற இரண்டு ஆதிபத்யமுள்ள வீடுகளைக் கொண்ட கோள்கள், அதில் ஒன்றை தனது வேர்ப்பகுதியாக சாதகர்க்கு நன்மை செய்யும்.
ஒரு வீட்டை ஆதிபத்யமாகக் கொண்ட சூரியனுக்கு, தனது சொந்த வீடான சிம்மமே மூலத்திரிகோண வீடாகும்.
ஒரு வீட்டை ஆதிபத்யமாகக் கொண்ட சந்திரனுக்கு, அதன் உச்சவீடான இரிடபம் மூலத்திரிகோணமாகும்.
செவ்வாய்க்கு மேடமும், புதனுக்கு கன்னியும், வியாழனுக்கு தனுசுவும், சுக்கிரனுக்கு துலாமும், சனிக்கு கும்பமும், இராகுவிற்கு கன்னியும், கேதுவிற்கு மூனமும், மூலத்திரிகோண வீடுகளாகும்.
சத்தியாச்சாரியாரின் சூத்திரம் ” ஒரு கிரகம் தான் மூலத்திரிகோணம் அடையும் ராசியிலிருந்து, 2. 4. 5. 8. 9. 12 ஆம் வீடுகளை நட்பாகவும், அதன் ராசியதிபதிகளை நண்பர்களாகவும் கொள்ளும். அது போல் 3. 6. 7. 10. 11 ஆம் வீடுகளை பகை வீடாகவும், அதன் ராசியதிபதிகளை பகைவர்களாகவும் கொள்ளும்”. இதன்மூலம் நட்பு, பகையையும் அறியலாம்.
மூலத்திரிகோணத்தில் இருக்கும் கோள் அலுவலகத்தில் இருப்பதைப் போன்றது. அவைகள் அயராமல் வேலை செய்து கொண்டிருக்கும். இங்கிருக்கும் கோள், எப்போதும் சாதகர்க்கு நன்மை மட்டுமே செய்யும். (உ.ம்) துலாமில் மூலத்திரிகோணம் பெறு சுக்கிரன் நல்ல மனைவியையும், தனுசுவில் மூலத்திரிகோணம் பெறும் குரு நல்ல குழந்தைகளையும், கும்பத்தில் மூலத்திரிகோணம் பெறும் சனி, நல்ல வேலையையும், ஆயுளையும் தருவார் என்பதைப் போல பலன்கள் நடக்கும். இது போல் மற்றக் கோள்களுக்கும் பலன்கள் காணலாம்.
ஒரு கோள் வர்க்கோத்தமம் பெற்று பலன் தருவதை விட, மூலத்திரிகோணம் பெறும் கோள், அதிக உச்சப்பலனைத் தரும். தீயக்கோள்கள் வர்க்கோதமம் பெறும் போது, இரட்டிப்பான தீயப்பலன்கள் நடக்கும். ஆனால், மூலத்திரிகோணத்தில் தீயக்கோள்கள் இருந்தாலும், இரட்டிப்பான நற்பலன்களே நடக்கும். எந்தவகையில் பார்த்தாலும், மூலத்திரிகோணம் பெறும் கோளால் நன்மையே ஏற்படம்.

திருமணம் தாமதமாகும் அமைப்புகள்.

திருமணம் தாமதமாகும் அமைப்புகள்.

1ஏழாம் வீட்டதிபதி 12ல் மறைந்திருக்கும் அமைப்பு
2. ஏழாம் வீட்டில் சனி சேர்ந்துள்ள அமைப்பு திருமணம் தாமதப்படும்.
3. ஏழாம் வீட்டதிபதி எட்டாம் வீட்டில், எட்டாம் அதிபதியுடனும், சனியுடனும் கூட்டாக இருந்தால் திருமணம் தாமதப்படும்.
4. ஒன்று & ஏழாம் வீடுகளின் மேல் (1/7 house axis) சனி, மற்றும் செவ்வாயின் ஆதிக்கம் இருந்தால் திருமணம் தாமதப்படும். (லக்கினத்தில் செவ்வாய் அல்லது சனி இருந்தால், அவர்களுடைய நேரடிப்பார்வை ஏழாம் வீட்டின் மேல் விழுந்து ஜாதகனின் திருமணத்தைத் தாமதப்படுத்தும்)
5. அதேபோல இரண்டு & எட்டாம் வீடுகளின் மேல் (2/8 house axis) சனி, மற்றும் செவ்வாயின் ஆதிக்கம் இருந்தாலும் திருமணம் தாமதப்படும்.
6. சுபக்கிரகங்கள் வக்கிரகதியில் இருந்தால் திருமணம் தாமதப்படும்.
7. சுக்கிரன் அஸ்தமனமாகியிருந்தால் திருமணம் தாமதப்படும்.
8. ஏழாம் அதிபதி ஒன்றிற்கு மேற்பட்ட தீய கிரகங்களின் பார்வையில் இருந்தால் திருமணம் தாமதப்படும்.
9. ஐந்தாம் வீட்டில் செவ்வாய் இருந்தால் தாமதமான திருமணம்!
10. மிதுனம் அல்லது சிம்மம் அல்லது கன்னி ராசி ஆகிய இடங்கள் ஏழாம் வீடாக இருந்து, அங்கு சனி இருந்தால் திருமணம் தாமதப்படும்.
11. சூரியனும், சுக்கிரனும் கூட்டாக மிதுனம் அல்லது சிம்மம் அல்லது கன்னி ராசியில் இருந்தால் ஜாதகனுக்குத் தாமதமாகத் திருமணம் நடைபெறும். அதுவே பெண்ணின் ஜாதகமாக இருந்தால் திருமண வாழ்வு வேண்டாம் எனக் கூறக்கூடும்.
ஜாதகத்தில் உள்ள வேறு சில நல்ல அமைப்புக்களை வைத்து இந்த விதிகள் மாறலாம்

கன்னிராசி

சாதுரியமாக பேசி காரியத்தை சாதிக்கக்கூடியவர்கள் இந்த ராசிக்காரர்கள்!
ஜோதிடத்தில் ஆறாவது ராசி கன்னி. தமிழ் மாதங்களில் புரட்டாசி ஆரம்பமாகும் ராசி இதுதான். மாதுலக்காரகன், வித்தைக்காரகன், வித்யாக்காரகன் என்றெல்லாம் போற்றப்படும் புத பகவானே இந்த ராசியின் அதிபதி. இது ஒரு பெண்தன்மைக் கொண்டராசி. திசைகளில் தெற்கை குறிக்கும். பஞ்ச பூதங்களில் மண்ணைக் குறிக்கும் ராசி இது.
கன்னிக்கு உரியத் தெய்வம் விஷ்ணு. இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு புரட்டாசி மாதம் சூன்யமாதம். அதனால் புரட்டாசி மாதத்தில் இந்த ராசியில் பிறந்தவர்கள் தங்களுக்குரிய எந்தச் சுபகாரியங்களும் செய்யக்கூடாது. கன்னியில் பிறப்பவர்கள் பொதுவாக நல்லவர்கள். தாய் தந்தையர் மீது தனி அன்பு செலுத்துவார்கள். இளமையில் கொஞ்சம் கஷ்டப்பட்டே முன்னேற வேண்டியிருக்கும். கன்னி ராசியின் அதிபதி புதன் ஆட்சி பெறுவது மட்டுமல்லாமல், உச்சமும் அடைகின்றார். அதனால் அவரின் பலமும் அதிகரிக்கின்றது.
அறிவாளிகள், அதிகம் யோசிப்பவர்கள், ஆளுமைத்திறன் மிக்கவர்கள். மிகத் தீர்க்கமாக முடிவெடுக்கும் ஆற்றல் மிக்கவர்கள். எளிதில் மற்றவர்களைக் கவரும் தோற்றமும், ஈர்க்கும் அமைப்பையும் கொண்டவர்கள். எந்த நிலையானாலும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். நல்ல உள்ளமும், எண்ணமும் உடைய இவர்கள் இனிமையான குரல் வளம் உடையவர்கள்.
எதிரிகளையும் திருத்தி தன் வசம் வைத்துக்கொள்ளும் சாதுர்யசாலிகள். எதிலும் பெருந்தன்மையாக நடந்து கொள்ளக்கூடியவர்கள். தர்ம சிந்தனையும், தானம் செய்வதிலும் ஈடுபாடு உடையவர்கள். சிந்தித்துச் செயல்படுபவர்கள். தவறுகள் ஏற்பட்டாலும் அதைச் சாமர்த்தியமாக சமாளிக்கும் திறமை உடையவர்கள். எடுத்த செயலில் உள்ள நிறை மற்றும் குறைகளை நன்கு அறிந்தவர்கள். சூழ்நிலைக்கேற்றாற் போல் தன்னை மாற்றிக் கொள்ளக்கூடியவர்கள்.
மற்றவர்கள் தங்களை புகழ வேண்டும் என எண்ணக்கூடியவர்கள். தன்னைப் பற்றி விளம்பரப்படுத்திக் கொள்வதில் அதிக விருப்பம் உடையவர்கள். ஆன்மீக பணிகளுக்கு செலவு செய்வதில் விருப்பம் உடையவர்கள். கௌரவமின்றி எந்தத் தொழிலாக இருந்தாலும் செய்யக்கூடியவர்கள். ஆனால், கௌரவம் குறையாதபடி நடந்து கொள்ளக்கூடியவர்கள். தனது வெற்றிக்கான ரகசியத்தை எவரிடமும் பகிரமாட்டார்கள். விகடகவியாகவும், சாதுரியமாகவும் பேசி தனது காரியத்தை நிறைவேற்றிக் கொள்ளக்கூடியவர்கள்.
அறிவுத்திறன் மிக்க துறைகளில் அதிகம் இருப்பார்கள். ஆசிரியராக இருப்பதும் இவர்களே. வங்கித்துறைகளிலும் இவர்கள் கால்பதிப்பார்கள். ஜோதிடம், எண்கணிதம், வானசாஸ்திரம் போன்ற துறைகளிலும் இருப்பார்கள். நடுத்தர வயதில் சில கண்டங்கள் ஏற்படும். இதைத் தாண்டினால் எழுவது வயது வரை வாழ்வார்கள் என்கிறது சாஸ்திரம்.

யோகம்

யோகம்
யோகம் என்றால் என்ன?
ஜோதிட சாஸ்திரம் பிறவிப்பலனோடு பயனுள்ளாவைகளை ஆன்மாவோடு இணைப்பதை யோகம் என்று குறிப்பிடுகின்றனர். இதில் உயர்ந்த வாழ்க்கையை ராஜயோகம் என்கின்றனர். ஒன்றும் இல்லாதவனை தரித்திர யோகம் என்கின்றனர். இரண்டுமே யோகம் தான். இதற்க்கும் கர்ம வினைக்கும் சம்பந்தம் உண்டு.
யோகங்கள் பலவகையாக இருந்தாலும் ஆறு வகையாக பிரிக்கலாம்.
1) இராஜயோகம்
2) நாபசயோகம்
3) பஞ்சமகாபுருஷயோகம்
4) சந்திரயோகம்
5) சூரியயோகம்
6) அவயோகம்
இராஜயோகம்: இது மேலும் ஆறு பிரிவுகளை கொண்டது.
1) தனயோகம்
2) முத்திரிகாயோகம்
3) இராஜயோகம்
4) மகாராஜயோகம்
5) சக்கரவர்த்தியோகம்
6) சிம்மாசனயோகம் என்பன.
1) தனயோகம்: செல்வசெழிப்பை கொடுத்து வளமான வாழ்க்கைக்கு வழிவகுப்பது
2) முத்திரிகாயோகம்: முத்திரிகா என்றால் சின்னம் என்று பொருள். அரசு சின்னம், விருது ஆகியவற்றோடு தொடர்புடைய பதவியை கொடுப்பது.
3) இராஜயோகம்: அரசு சார்ந்த பதவிகளை கொடுத்து சிறப்பிப்பது.
4) மகாராஜாயோகம்: அரசவம்சத்தில் பிறந்து செங்கோல் செலுத்துவது. இஃது இன்றைய முதன்மையான பதவிகளை குறிப்பது.
5) சக்கரவர்த்தியோகம்: மன்னர்களூக்கெல்லாம் மன்னர் விளாங்குவது. இஃது நாட்டின் உயர்பதவியை கொடுப்பது.
6) சிம்மாசனயோகம்: சிம்மாசனத்துக்கு சரியான பட்டாபிசேகத்தை கொடுப்பது.
2) நாபசயோகம் நான்கு பிரிவுகளை கொண்டது.
1) ஆகிருத் யோகம்
2) சுங்கியா யோகம்
3) ஆசிரியா யோகம்
4) தன யோகம்
மேலும் இவை 32 வகையாக பிரிகின்றன். நிற்க.
3) பஞ்சமகா புருஷ யோகம், இஃது பஞ்ச பூதங்களுக்குறிய கிரகங்களான செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி இவர்கள் கொடுக்கும் யோகம்.
1) ஹம்ச யோகம்: இது குருபகவான் மூலம் கிடைக்கும் யோகம்
2) ருசக யோகம்: இது செவ்வாய் பகவானால் கிடைக்கும் யோகம்.
3) பத்ர யோகம்:இது புதன் பகவானால் கிடைக்கும் யோகம்.
4) மாளவியா யோகம்: இது சுக்கிர பகவானால் கிடைப்பது.
5) சச யோகம்: இது சனி பகவானால் கொடுக்கப்படக்கூடியது.
1) ஹம்ஸ யோகம்: லக்னம் அல்லது சந்திர லக்கனத்துக்கு 1,4,7,10 எனும் கேந்திரங்களீல் குரு ஆட்சி அல்லது உச்சம் பெற்றிருப்பது. அரசு விருதுகள் பதவிகள் ஆலய மரியாதை, நிதிகாப்பீடு, டிரஸ்டு, மற்றும் அதிகாரமான பதவிகளை கொடுத்து சிறப்பிக்க கூடியது.
2) பத்ரயோகம்: புதன் ஆட்சி, உச்சம் பெற்று லக்னம் அல்லது சந்திரா லக்னத்திற்க்கு கேந்திரத்தில் நிற்பது பத்ரயோகம் எனப்படும். அறிதல், தெளீதல், புரிதல், சமயோசித்தம், சந்தர்ப்பசூழ்நிலையை தனதாக்கும் திறன், பேச்சு, எழுத்து, காலத்தை அறிந்து அதன் வழி நடப்பதும், நன்னிலை கொள்வதும் பத்ரயோகம்.
3) சசயோகம்: லக்கனம் அல்லது சந்திரனுக்கு கேந்திரங்களீல் சனி பகவான் கேந்திர ஸ்தானங்களீல் ஆட்சி உச்சம் பெற்றூ இருப்பது சசயோகம் எனப்படும். குடிசையில் பிறப்பினும் விடாமுயற்சியில் உழைத்து முன்னேறி மற்றாவர்களூக்கு முன் உதாரணமாய் விளங்குவது. கர்ம மேன்மையை அடைவது, அழியா புகழைத் தரும்.
4) ருசக யோகம்: லக்னம் அல்லது சந்திரனுக்கு கேந்திரத்தில் செவ்வாய் ஆட்சி, உச்சம் பெற்று இருப்பது ருசகயோகம். இதற்க்கு பொதுவாக பூமியோகத்தை கொடுக்கும் இயல்பான நிலை உண்டு. எந்த துறையில் இருந்தாலும் அதில் தனித்தன்மையை கொடுக்கும் குணம் இதற்க்கு பொருந்தும்.
5) மாளவ்யாயோகம்: லக்னம் அல்லது சந்திரனுக்கு கேந்திரத்தில் சுக்கிரன் ஆட்சி, உச்சம் பெறின் இவ் யோகம் சித்திக்கும். சுகபோகத்தின் உச்சம், சகல சொளபாக்கியத்தைக் கொடுக்கும் யோகம். இது சிலருக்கு இரண்டு களத்திரத்திற்க்கு வழி வகுத்துவிடும்.
சந்திரயோகம்:
மனதை ஆளும் சந்திரன் இப்பூமியில் பிறக்கின்ற காரணத்தை தாயின் தயவினால் கிடைக்கச்செய்கிறது. சந்திரனின் நிலையிலிருந்துதான் பிறப்பின் ரகசியத்தை அறியலாம். ஏன்? எதற்கு? என்பதை உணர்த்துவது சந்திரனே!!
சந்திரனுக்கு யோகங்கள் பல அதில் சில நாம் பார்ப்போம்.
1) கெஜகேசரி யோகம்: சந்திரனுக்கு கேந்திரத்தில் குருவின் நிலையை கெஜகேசரி யோகம் என்பர். இந்த யோகம் வீழ்ச்சியிலும், தாழ்ச்சியிலும் உயர்வை கொடுக்ககூடியது. கெஜம் என்றால் யாணை, கேசரி என்றால் சிங்கம், இவை இரண்டும் நீண்டகாலம் வாழும் திறன் கொண்டது. இந்த யோகம் நீண்ட ஆயுளையும், பல தலைமுறையை பார்த்து வீடுபேறு அடையும் நிலைக்குரியது.
2) குருசந்திர யோகம்: இஃது சந்திரனுக்கு திரிகோணாங்களில் குரு நிற்பினும், குருவும் சந்திரனும் சேர்ந்து இருந்தாலும், சந்திரனுக்கு 12ல் குரு இருப்பினும் இந்த யோகம் சித்திக்கும். இஃது ஆன்மீக விருத்தியையும் , செல்வ செழிப்பும், கல்வியில்லை என்றாலும் கற்றோர் சபையில் மதிப்பும், பெருமையும் கொடுக்கும் குணம் கொண்டது.
3) சந்திர மங்கள் யோகம்: சந்திரனும் செவ்வாயும் இணைவு என்பது இந்த யோகத்தை கொடுக்கும். இந்த யோகம் வளர்பிறை, தேய்பிறை, என்பதையும், சந்திரன் செவ்வாய் ஆரோகனம் அவரோகனம் பார்த்து முடிவு செய்ய வேண்டும்.
சந்திரனைக் கொண்டுதான் நாடி சூத்திரங்கள் இயங்குகின்றன. யோக சூத்திரத்தில் 2300 யோகங்களூக்கும் தலையாய யோகம் முதல் யோகம் எது என்றால் சுனபா, அடுத்து அனபா, துருதரா, கேமதுரும.
1) சுனபாயோகம்: சந்திரனுக்கு இரண்டில் கிரகங்கள் நிற்பின் சுனபா யோகம் என்று பெயர். இதன் பொருள் பிறந்த ஆன்மா ஒன்றை நாடிச்செல்வதை குறிக்கும். உதாரணமாக சந்திரனுக்கு இரண்டில் குரு நிற்க்கிறார் என்று கொண்டால், உயர்வை நாடி உண்மையை நாடி செல்வத்தை நாடி இறையான்மையை நாடி, கல்வியை நாடி ஒழுக்கத்தை நாடி வாழ்க்கை பயணம் அமையும். இப்படி சுனபா யோகத்தை அறிய வேண்டும்.
2) அனபாயோகம்: சந்திரனுக்கு 12ல் கிரங்கங்கள் நிற்ப்பதை அனபா யோகம் என்பதாகும். இஃது நம்மை நாடி வரக்கூடிய யோகத்தை குறிக்கும். 12ல் குரு நல்ல மனிதர்கள், செல்வம், கல்வி, சிறப்புகள், மகான்களீன் பார்வை, இறையாண்மை தேடி வரும். இவ்வாரு ஒவ்வோரு கிரகங்களூக்கும் அறிந்து கொள்ள வேண்டும்.
3) துருதராயோகம்: சந்திரனுக்கு முன்னும் பின்னும் கிரகங்கள் இருப்பதை (இராகு, கேது நீங்களாக) துருதராயோகம் என்பர். ஒன்றை நாடிச்செல்வதும், ஒன்று நம்மை நாடி வருவதையும் குறிக்கும். இஃது வளர்ச்சிப்பாதைக்கு துணையாக இருக்கும்.
அதியோகம்: சந்திரனுக்கு 6,7,8 ல் சுபகிரகங்கள் நிற்பது அதியோகம் என்று பெயர். இஃது திடீர் யோகத்தை கொடுக்க வல்லது.
சகடயோகம்: சந்திரனுக்கு 6,8,12 ல் குரு நிற்பது சகடயோகம் எனப்படும். இஃது வண்டிச் சக்கரம் போல் இன்பமும் துன்பமும் கலந்ததாக இருக்கும். இதில் சந்திரன்,அல்லது குரு நின்ற வீட்டதிபதி ஆட்சி, உச்சம் பெற்றால் நன்மை செய்யும் சகடயோகமாக விளங்கும். இஃது கலயாண சகட யோகமாகும். இதி அரசியல்வாதிகளூக்கு இருப்பின் அழியா புகழைக் கொடுக்கும்.
சூரிய யோகங்கள்:
நவக்கிரகத்தின் ராஜாவான சூரியனின் நிலையைக்கொண்டு பிறந்த ஆன்மாவின் சிறப்பைப் பற்றீ கூறிவிடலாம். சூரியன் இல்லையேல் இப்பிரபஞ்சம் இல்லை என்று கூறலாம்.
சூரியன் நிற்கின்ற நிலையைக் கொண்டு பாரியாயத்தையும், பரம்பரையையும் அறியமுடியும்.
1) தன் தகப்பனின் நிலையைப் பற்றி அறியவும்,
2) தன்னுடைய ஆன்ம பிரகாசத்தைப் பற்றி அறியவும்
3) தன் சந்ததியைப் பற்றியும் அறீயும் சூட்சுமம் கொண்டதாக விளங்கும்.
வாசியோகம்: சூரியனுக்கு இரண்டில் சுக்கிரன் நிற்பது வாசியோகம்.
வேசியோகம்: சூரியனுக்கு 12ல் சுக்கிரன் நிற்பது வேசியோகம் ஆகும்.
மற்றா கிரகங்களையும் கொண்டு பலன் தீர்மானிக்கலாம்.
அமாவாசையோகம்; சூரியனும் சந்திரனும் ஒரே பாகயில் அல்லது ஒரே வீட்டில் நிற்பது இந்த யோகம் ஆகும். இவர்கள் ஆட்சி உச்சம் பெற்று அடையும் அமாவாசைக்கு அதிக பலம், பலன் உண்டு. ஆற்றல் உடையவர்களாய் உலகத்தை வலம் வருவார்கள்.

ஜோதிட டிப்ஸ்;

ஜோதிட டிப்ஸ்;
1)4-ல் சனி பழைய வீடு வாங்க வேண்டும்.
2)10-ம் அதிபதி சர ராசியான மேஷம்,கடகம்,துலாம்,மகரம் ராசிகளில் இருந்தால் 400 கிலோமீட்டருக்கு அப்பால் வேலை செய்ய முன்னேற்றம் உண்டு.
3)5-ல் கேது இருப்பின் கரு ஒன்று சேதமாகும்.
4)புதன் கேது காதல் உருவாகி தோல்வி ஆகும்.
5)சுக்கிரன் கேது இணைந்து கேது சுக்கிரனை நோக்கிச் சென்றால் திருமண வாழ்வில் விரக்தி ஏற்படும்.
6)சனி கேது இணைந்து கேது சனியை நோக்கிச் சென்றால் சொந்த தொழில் சுணக்கம் ஏற்படும்.
7)7-ல் சந்திரன் சனி பெண்ணுக்கு இருந்தால் திருமண வாழ்க்கை முறிவு அல்லது கசப்பு.
8)சூரியன் சுக்கிரன் 5-பாகைக்குள் இணைந்தால் சுக்கிலம் நீர்த்து போகும். பலருக்கும் ஆண்வாரிசு தோன்றுவதில்லை. மீறி கிடைத்தாலும் எதிர்ப்பு சக்தி குறைவாகும்.மருத்துவசெலவுகள் அதிகம் ஏற்படும்.
9)சனி திசை செவ்வாய் புத்தியில் புது முயற்சிகள் செய்யக்கூடாது. மீறி செய்தால் அது வெற்றி பெறாது. வெற்றி பெறுவது போல தோன்றினாலும் பின் வாழ்க்கையில் அது உங்களுக்கு பயன்படாது.
10)8,10-ல் புதன் இருக்க புது வீடு கட்டுவார்கள். வாழ்நாளில் அது நடந்தே தீரும்.

அதிரதன்

அதிரதன் (अधिरथ) இந்து தொன்மவியலில் மகாபாரதத்தில் கர்ணனின் வளர்ப்பு தந்தையாகும். தேரோட்டத்தில் சிறந்தவன். அங்க தேசத்தின் மன்னன் எனவும் சிலர் கூறுவர். சாந்தனு மற்றும் திருதராட்டிரன்ஆகிய குரு குல மன்னர்களுக்கு தேரோட்டியாக பணி புரிந்தவர். இவர் திருதராஷ்டிரனின்  தலைமைத் தேரோட்டி. ஸ்ரீமத் பாகவதத்தின்படி அதிரதன் யயாதியின் வழிவந்தவர். கிருஷ்ணனின் உறவினர்.
கங்கையில் நீராடும்போது ஆற்றில் மிதந்து வந்த அழகான கூடைப்பெட்டியை காண்கிறாள் அதிரதனின் மனைவி. அதனை பிரித்து உள்ளே காதில் பளிச்சிடும் குண்டலங்களுடன் குழந்தையைக் கண்டு அதற்கு கர்ணன் எனப்பெயரிட்டு எடுத்து வளர்க்கிறார்கள் (கர்ணன் குந்திதேவிக்கு  சூரியனின் அருளால் திருமணத்திற்கு முன் பிறந்த குழந்தை. எனவே பயந்த குந்தி குழந்தையை பட்டு வஸ்திரத்தில் சுற்றி கூடையில் வைத்து ஆற்றில் விட்டார்). போர்கருவிகளில் பயிற்சிபெற மகனை அத்தினாபுரம் அனுப்புகிறான் அதிரதன். அங்கு கர்ணனுக்கு துரியோதனனுடன் நட்பு ஏற்படுகிறது.
சூதர் குல தலைவனான அதிரதனால் வளர்க்கப்பட்டதால், கர்ணனை சூதபுத்திரன் என பாண்டவர்கள் மற்றும் திரௌபதி போன்றவர்கள் ஏளனம் செய்து பேசினர். அதிரதனின் மனைவி இராதை ஆவார். எனவே கர்ணன் இராதேயன் என்றும் அழைக்கப்பட்டார். [1][2]
கர்ணனுக்குப் பின் இவர்களுக்கு பிறந்த குழந்தையின் பெயர் ஷான்.