jaga flash news

Sunday, 13 August 2017

ருத்ராட்சம் அணிவது பற்றி ஸ்ரீமத் தேவி பாகவதம்

எவ்வித மந்திரங்களை உச்சரிக்காதவனும்,எவ்வித யாகங்களைச் செய்யாதவனும் கூட ருத்ராட்ச மணிகளை வெறுமனே தொடுவதன்மூலம் தன் பாவங்கள் அனைத்திலிருந்தும் விடுபட்டு மறுபிறவியில் ருத்ரனாகவே அவதரிக்கிறான்.
ருத்ராட்சத்தை அணிபவனும்,வழிபடுபவனும் சம்சார பந்தங்களிலிருந்து விடுபட்டு,தொடரவிருக்கும் அனேக கோடி பிறப்புகளிலிருந்தும் விடுபடுகிறான்.
ருத்ராட்சம் அணிந்த ஒருவனுக்கு உணவும்,உடையும் தருபவனும்,ருத்ராட்சம் அணிந்த சிவனடியார்களின் பாதங்களைக் கழுவிய நீரை தீர்த்தமாக ஏற்றுக்கொள்பவனும் அனைத்துப்பாவங்களிலிருந்தும் விடுபட்டு,சிவலோகத்தை அடைகிறான்.
நம்பிக்கையோடும்,நம்பிக்கையில்லாமலும் ருத்ராட்சத்தை அணிந்துகொள்பவன் ருத்ர அம்சத்தைப் பெறுகிறான்.
ருத்ராட்சத்தின் மகிமையை என்னாலும் விளக்கிக் கூற முடியாது என்று சிவபெருமான் தேவிக்கு உரைத்ததாக ஸ்ரீமத் தேவிபாகவதம் கூறுகிறது.
அனைத்துவித ஸ்தோத்திரங்களை உச்சரிப்பதன் மூலமும்,விரதங்களை அனுசரிப்பதன் மூலமும் அடைகின்ற பலனை,ஒருவன் ருத்ராட்சத்தை அணிந்து கொள்வதன் மூலம் பெறுவான்.
ருத்ராட்ச மாலையை அணிந்தவருக்கு ஒருவன் உணவு அளிப்பானாகில்,அவனது 21 தலைமுறை மக்களும் பாவங்களிலிருந்து விடுபட்டு ருத்ரலோகத்தை அடைவார்கள்.
சண்டாளனாகப் பிறந்தவனும்,ருத்ராட்சத்தோடு தொடர்பு கொள்வானாயின் அவனது பாவங்கள் அவனை விட்டு விலகி ஓடிவிடும்.
கள் உண்பவனும்,மாமிசம் உண்பவனுமாகிய பாவியின் தலையில் ருத்ராட்சம் படுமேயானால் அவனது பாவங்கள் அனைத்தும் விலகும்.
ருத்ராட்சமாலையை ஒருவன் வெறுமனே கையில் பிடித்திருந்தாலும், நான்கு வேதங்களையும்,சாஸ்திரங்களையும்,உபநிடதங்களையும் கற்றறிந்தவனைவிட சிறப்பு பெறுவான்.அனைத்துக் கல்வி வேள்விகளும் அவன் வசமாகின்றன.
பல புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய பலனைவிட அதிக பலனைப் பெறுகிறான்.
ஒருவன் மரணம் அடையும் தருவாயில் ருத்ராட்சத்தை தரித்துக் கொண்டிருப்பானாகில்,அவன் இறந்தபின் ருத்ர லோகத்தை அடைகிறான்.
பிறப்பால் ஒருவன் பிராமணனோ அல்லது சண்டாளனோ அல்லது மிலேச்சனோ; உண்ணக்கூடாததை உண்பவனோ யாராகிலும் அவன் ருத்ராட்சத்தை அணிவானாகில் அவன் ருத்ரனுக்கு இணையாகிறான்.
ருத்ராட்சத்தைத் தலையில் தரிப்பவன் கோடி புண்ணியங்களைப் பெறுவான்.
காதுகளில் அணிபவன் பத்துகோடிப் புண்ணியங்களைப் பெறுகிறான்;
கழுத்தில் அணிபவன் நூறுகோடிப் புண்ணியங்களைப் பெறுகிறான்;
பூணூலில் அணிபவன் ஆயிரம் கோடிப் புண்ணியங்களைப் பெறுகிறான்;
கைகளில் அணிபவன் லட்சம் கோடிப் புண்ணியத்தைப் பெறுகிறான்;
இடுப்பில் அணிபவன் மோட்சத்தை அடைகிறான்.
ருத்ராட்சத்தை அணிந்தவாறு , வேத நியமங்களை ஒருவன் கடைபிடிப்பானாகில் அவன் பெறும் பலன்களை அளவிட முடியாது;
கழுத்தில் ருத்ராட்ச மாலையை அணிந்தவன் இந்த உலகத்தளைகளிலிருந்து விடுபடுகிறான்.
ருத்ராட்சத்தை உடலில் அணியாவிட்டாலும்,அதைப் பூஜிப்பவனும் கூட சிவலோகம் சென்றடைந்து சிவனைப் போலவே வணங்கப்படுகிறான்.
ருத்ராட்சம் அணிந்தவன் சிவபெருமானைப் போலவே முப்பத்துமுக்கோடி தேவர்களாலும் வணங்கப்படுகிறான்.
ருத்ராட்சத்தைத் தலையில் தரித்து ஒருவன் நீராடுவான் எனில்,ருத்ராட்சத்தைத் தொட்ட நீர் அவன் உடலைத் தீண்டுமாயின்,அது கங்கையில் நீராடியதைவிட அதிகப்புண்ணியப்பலன்களைத் தரும்.
மனிதன் மட்டுமல்ல;ஓரறிவுள்ள பிராணிகள் முதல் ஐந்தறிவுள்ள உயிர்கள் வரை ருத்ராட்சத்தோடு சம்பந்தம் பெற்றால்,அவை அனைத்தும் மறுபிறவியில் சிவலோகத்தை அடைந்தே தீரும்.
பல்வேறு யுகங்களில் நாயும்,கழுதையும்,கோழியும், ருத்ராட்சத்தோடு தொடர்பு பெற்றதால் அவை சிவலோகம் சென்றடைந்தன.
மறு ஜன்மத்தில் சிறந்த சிவ பக்தர்களாகப் பிறந்தன!!
காவாய் கனகத்திரளே போற்றி!
கயிலை மலையானே போற்றி போற்றி!!
சிவாயநம.🌿
திருச்சிற்றம்பலம்!!

**பாகுபாடு**

**பாகுபாடு**
ஒரு காட்டில் ஒரு பஞ்சவர்ணக் கிளியும், காகமும் வாழ்ந்து வந்தன.
கிளியோ எப்போது பார்த்தாலும் காகத்தைப் பார்த்து "கறுப்பா, கறுப்பா'' என அழைத்து அவமதித்தது. அதற்கு காகம் வருத்தத்துடன் "கடவுள் என்னைப் படைக்கும்போது மின்சாரம் இல்லாமல் இருட்டாக இருந்ததோ... என்னவோ... அதற்கு நான் என்ன செய்ய? ' என்று சலித்துக் கொண்டது.
ஒருநாள், அந்தக் காட்டிற்கு வந்த ஒரு வேட்டைக்காரர் மரத்தின் மீது அமர்ந்திருந்த பல வண்ணங்களால் ஆன கிளியை "லபக் 'கென்று பிடித்து, வீட்டிற்கு எடுத்துச் சென்று விட்டார். அச்சமயம் காகமோ "நல்ல வேளை நான் கறுப்பு' எனப் பெருமைப்பட்டது. இருந்தாலும், இத்தனை நாள் கிளியிடம் பழகிவிட்டோமே என்று நினைத்து, வேட்டைக்காரரைத் தொடர்ந்து சென்று கண்காணித்தது.
கிளியை, வேட்டைக்காரர் கூண்டில் அடைத்து "அக்கா சொல்லு... அக்கா சொல்லு... ' என்று பாடாய்படுத்திக் கொண்டிருந்தார். வசம்பைச் சுட்டுக் கிளியின் நாக்கில் வைத்து நாக்கைப் பேசுவதற்கு ஏற்றவாறு பதப்படுத்திக் கொண்டிருந்தார். கிளியோ வலி தாங்காமல் அலறியது. இதைப் பார்த்த காகம் மனம் வருத்தமுற்றது.
அன்று அமாவாசை நாள். வேட்டைக்காரரின் மனைவி வாசல் சுவரில் படையல் சோறு வைத்து "கா... கா... கா... ' எனக் கூவி காகத்தை அழைத்தாள்.
அப்போது அங்கு வந்த காகம், சிலிர்த்துக் கொண்டவாறு கிளியைப் பார்த்து சொன்னது... " கிளியே பார்த்தாயா? தன் மொழியில் உன்னைப் பேச வைக்க மனிதன் சூடு வைக்கிறான். ஆனால், என் மொழியில் கூவிக் கூப்பிட்டு எனக்குச் சோறு வைக்கிறாள் அவனது மனைவி!' ' என்று கூறிவிட்டு, காகம் சாப்பிட ஆரம்பித்தது.
பிறகு கொஞ்ச நேரம் கழித்து, யாரும் இல்லாத நேரம் பார்த்து. கிளியின் கூண்டைத் திறந்துவிட்டு, "நண்பா வெளியே வா' என அழைத்தது. கிளியும் வெளியேறி வந்தது. இரண்டும் காட்டை நோக்கிப் பறந்தன.
கிளி காகத்தை நோக்கி, "நண்பா! என்னை மன்னித்து விடு. அறியாமல் நிறப்பாகுபாடு பார்த்து உன்னை மனம் நோகச் செய்துவிட்டேன். இனிமேல் இதுபோல் பாகுபாடு பார்க்க மாட்டேன்' என்று மனதார வருத்தப்பட்டது

இந்து மதத்தின் அறிவியல்... ராமர் பாலம்..

ராமன் என்ன பொறியியல் படித்தானா ?..
ஏன் கப்பல் செய்யவில்லை போன்ற மேடைதோறும் கேட்கப்படும் கேள்விகள்...
ராமர் பாலம் சொல்லும் அறிவியல்..
வீட்டில் அம்மா முட்டை வேக வைக்க தண்ணீரில் உப்பை போடுவார்கள்...ஏன்???
முட்டை கீழே போகாமல் மேலே மிதந்து சரியான பதத்தில் வேக..
இப்போது பாலத்தை பார்ப்போம்....
1. ராமர்_பாலம் ராமரால் கட்டப்பட்டது இல்லை. தேவலோக சிற்பி_விஸ்வகர்மா படைத்த நளன் என்பவன் மூலம் அமைக்கப்பட்டது தான் ராமன் பாலம்...
2. திருப்புல்லாணிக்கரையில் இருந்து ஆரம்பிக்கப்படும் இந்த பாலம் இந்தியாவிற்கும் இலங்கைக்குமான குறுகிய தூரத்தை உடையது..28மைல்...
3. ஆழம் குறைந்த பட்சம் 5 அடி(ஒரு ஆளின் உயரம்), அதிக பட்சம் 25 அடி(ஐந்து ஆள்களின் உயரம்) மட்டுமே...
4. Limestone Characteristics:
சுண்ணாம்பு கல்லின் வேதியியல் குணங்கள் உப்புதண்ணீரில் ஊரியவுடன் அது அந்த உப்பு தண்ணீரில் மிதக்கும் தன்மைஉடையது..
அதன் படிவ கல்லின் காற்று துகள்களில் உப்பு தண்ணீர் புகுந்து அதை மிதக்கவைக்கும்.( In limestone regions, the rocks are made out of a form of calcium carbonate (mainly a mineral known as calcite), which is similar to egg shell)
இப்போதும் Yorkshire Dales பகுதிகளில் காணலாம் ...
பாலம் இதன்மூலமே உருவாக்கப்பட்டது...
5.சுண்ணாம்பு கல் எவ்வாறு உப்பு_தண்ணீரில் மிதக்கும் என்ற அறிவியலும்,
இரண்டு நாடுகளுக்கு இடையான குறுகிய_மற்றும்_ஆழம்_இல்லா_இடத்தை எவ்வாறு ஆராய்ந்து தேர்வு செய்தனர என்ற அறிவியலும் வியக்கவைப்பதாகும் ....
கங்கையை கடக்க படகை குகனுக்கு செய்ய உதவிய ராமன்...
இலங்கை செல்ல கப்பல் செய்யவில்லை ஏன்?? இயற்கையை பாதுகாக்கவே அவன் மரங்களை வெட்டவில்லை....
கல்லை பிறயோகித்தான்..
இந்து மதத்தின் அறிவியல்...
ராமர் பாலம்..

**தெரிந்த புராணம்...தெரியாத கதை**

**தெரிந்த புராணம்...தெரியாத கதை**
மகாபாரதத்தில் கௌரவர்கள் விதித்த நிபந்தனைப்படி, சூதாடித் தோற்ற பாண்டவர்கள், 12 வருட வனவாசமும், ஓராண்டு விராட நாட்டில் அஞ்ஞாத வாசமும் முடித்த பின்பு, சூதாட்ட நிபந்தனைப்படி, தாங்கள் இழந்த ராஜ்ஜியத்தையும், அரசு உரிமையையும் பெற விரும்பினார்கள். உறவையும், நட்பையும், அமைதியையும் பெரிதும் விரும்பிய யுதிஷ்டிரன், தங்கள் கோரிக்கைகளை துரியோதனனுக்கு எடுத்துக் கூறி, தங்கள் ராஜ்ஜிய பாகத்தைப் பெற, பொறுப்பும் திறமையும் மிக்க ஒருவரை ராஜதூதனாக அனுப்ப விரும்பினான். அவன் அறிவுக்கு எட்டியவரையில், பகவான் ஸ்ரீகிருஷ்ணனைத் தவிர, வேறு எவரும் இதற்குத் தகுதியுடையவர்களாகப்படவில்லை. எனவே, ஸ்ரீகிருஷ்ணனை அழைத்து தன் கருத்தைச் சொன்னான்.
''தம்பிமார்கள் கோபமாக இருக்கின்றனர். பட்ட துயரங்களுக்கெல்லாம் காரணமானவர்களைப் பழிவாங்கத் துடிக்கிறார்கள். எப்படியாவது போர் தொடுத்து, கௌரவர்களை அழித்து, தர்ம ராஜ்ஜியம் ஸ்தாபிக்க வேண்டும் என்று பீமனும் அர்ஜுனனும் உறுதியாக இருக்கிறார்கள். ஆனால் நானோ, அமைதியையும் சமாதானத்தையும்தான் விரும்புகிறேன். துரியோதனனிடம் பாண்டவர் தூதுவனாக நீ செல். நிபந்தனைப்படி எங்களுக்குச் சேர வேண்டிய ராஜ்ஜியத்தைக் கேள். பாதி ராஜ்ஜியம் தர மறுத்தால், நமக்கென ஐந்து சிறிய நாடுகள் கேள். அதுவும் இல்லை யென்றால், ஐந்து ஊர்களைக் கேள். அதையும் அவர்கள் தர மறுத்தால், ஐந்து இல்லங்களையாவது கேள். எப்படியும் அதையாவது கேட்டு வாங்கி, போர் வராமல் தடுத்து, தர்மத்தை நிலைநாட்டு'' என்றான் தர்மன்.
''யுதிஷ்டிரா, நிச்சயம் தர்மத்தை நிலைநாட்ட என்னால் ஆனதைச் செய்கிறேன். உங்களுக்காகத் தூது போய், நீ கூறியபடி, ஐந்து வீடுகளாவது யாசகம் கேட்டுப் பார்க்கிறேன். எதற்கும் தம்பிகளிடமும் திரௌபதியிடமும் கலந்தாலோசித்து, அவர்கள் அபிப்ராயங்களையும் கேட்டுத் தெரிந்துகொண்டு விடைபெற்றுச் செல்கிறேன்'' என்று கூறி, பீமார்ஜுனர்களைக் காணப் புறப்பட்டான் கண்ணன்.
பீமன், ராஜ்ஜியத்தை யாசகம் கேட்டுப் பெறுவதை விரும்பவில்லை. சூதாட்ட மண்டபத்தில் தான் செய்த சபதம் நிறைவேற, போர் வந்தே ஆக வேண்டும் என அவன் கர்ஜித்தான். அதே கருத்தை கண்ணனிடம் அடக்கமாகத் தெரிவித்தான் அர்ஜுனன். அதன்பின் திரௌபதியையும் நகுலனையும் சந்தித்தான் கண்ணன்.
''அண்ணா, நீ தூது போவது தர்மமா? அதுவும் ஐந்து வீடுகள் யாசகமாகக் கேட்கப் போகிறாயாமே! அதை அவர்கள் தர சம்மதித்துவிட்டால், அவிழ்ந்த என் கூந்தல் முடிவது எப்போது? உன் மீது ஆணையாக நாங்கள் செய்த சபதங்கள் என்னாவது?'' எனக் கண்ணீர் வடித்தாள் திரௌபதி. நகுலனும் தர்மனின் எண்ணத்துக்கு உடன்படவில்லை.
''பாஞ்சாலி, நீங்கள் அனைவரும் என் மீது ஆணையிட்டுத்தான் சபதங்கள் செய்திருக்கிறீர்கள். அதை நிறைவேற்று வதில் உங்களைவிட என் பொறுப்புதான் அதிகம். அவை நிச்சயம் நிறைவேறும். எப்படி என்று மட்டும் இப்போது கேட்காதே! நம்பிக்கையோடு பொறுத்திரு. நான் ஸஹதேவனைக் கண்டுவிட்டு, நாளை ஹஸ்தினாபுரம் புறப்படுகிறேன்.'' எனக் கூறி, ஸஹதேவன் குடில் நோக்கிப் புறப்பட்டான் கண்ணன்.
அங்கே, அமைதியாக ஜோதிடச் சுவடிகளை ஆராய்ந்து கொண்டிருந்த ஸஹதேவன், கண்ணனைக் கண்டதும் பணிந்து, வரவேற்றான்.
''ஸஹதேவா, இந்த உலகில் அமைதியை நிலைநாட்டுவதற்காக, நான் நாளை ஹஸ்தினாபுரம் செல்கிறேன். அதற்காக எல்லா உபாயங்களையும் கையாளப் போகிறேன். நீ சாஸ்திர வல்லுநன்; சிறந்த அறிவாளி. அமைதியை விரும்புபவன். போரைத் தடுக்க ஏதாவது வழியிருக்கிறதா, சொல்... அதையும் முயன்று பார்க்கிறேன்'' என்றான் கண்ண பிரான். ஸஹதேவன் சிரித்தான். ''போர் வராமல் தடுக்கத்தானே உபாயம் தேடுகிறாய்! நல்லதொரு உபாயம் உண்டு. சொல்கிறேன். செய்ய முடியுமா, பார்?'' என்று ஆரம்பித்தான் ஸஹதேவன்.
தர்மத்தை நிலைநாட்ட ஒரு குருக்ஷேத்திரப் போரை உருவாக்கவே, கண்ணன் தூது செல்கிறான் என்பதை, அவனது ஆரூட சாஸ்திர அறிவால் ஊகிக்க முடிந்தது. அதனால், அவன் வேடிக்கையான வழி ஒன்றைச் சொன்னான்.
''கண்ணா, கேள்... பீமன் கையில் உள்ள கதையை முறித்து, அர்ஜுனன் வில்லை ஒடித்து, பாஞ்சாலி கூந்தலை அறுத்துவிட்டு, கர்ணனுக்கு முடிசூட்டிவிட்டு, எல்லாவற்றுக்கும் மேலாக, நீ அஸ்தினாபுரத்துக்கு தூது போக முடியாமல் நான் உன்னைக் கட்டிப்போட்டால், போரை நிச்சயம் தடுக்கலாம்'' என்றான் ஸஹதேவன்.
கண்ணன் உரக்கச் சிரித்தான். ''என்னைக் கட்டுவதா? எப்படி முடியும் ஸஹதேவா?'' என்றான். ''ஏன் முடியாது?'' என்று எதிர் சவால் விட்டான் ஸஹதேவன். அந்தக் கணமே, பல்லாயிரம் கண்ணனாக வடிவெடுத்து மண்டபம் எங்கும் வியாபித்தான் ஸ்ரீகிருஷ்ணன். பார்த்த பரவெளியெல்லாம் கிருஷ்ணனாகத் தோன்றியது. இத்தனைப் பரிமாணங்களையும் எப்படிக் கட்டுவது?
ஸஹதேவன் கலங்கவில்லை. பத்மாசனத்தில் அமர்ந்தான். கண்களை மூடினான். பகவான் ஸ்ரீகிருஷ்ணனின் ரூப, குண, நாமங்களை மனதில் தீவிரமாகத் தியானித்தான். பக்திப் பரவச நிலையில் கண்ணனின் புகழை, அவன் நா ஒலித்தது. அப்போது பிறந்தது ஸஹதேவன் இயற்றிய கிருஷ்ண மந்திரம்.
'ஓம் நமோ விஸ்வரூபாய விஸ்வ சித்யந்த ஹேதவே
விஸ்வேஸ்வராய விஸ்வாய கோவிந்தாய நமோ நமஹ
நமோ விக்ஞான ரூபாய பரமானந்த ரூபினே
கிருஷ்ணாய கோபிநாதாய கோவிந்தாய நமோ நமஹ!’
என்பதே அந்த மந்திரம். ஸஹதேவன் மந்திரத்தை உச்சரிக்க உச்சரிக்க, கண்ணன் எடுத்த வடிவங்கள் ஒவ்வொன்றாய்க் கலந்து, ஒன்றோடொன்று இணைந்து ஒரே கண்ணனாகி, அவனும் ஸஹதேவனின் இதயத்துக்குள்ளே கட்டுண்டான். ''ஸஹதேவா, நீ வென்றுவிட்டாய்! என் தாய் என்னை உரலில் கட்டினாள். பிருந்தாவன கோபியர், கட்டுத்தறியில் கட்டினார்கள். நீயோ இதயத்தில் கட்டிவிட்டாய். பக்தியினால் கடவுளையும் கட்ட முடியும் என்று காட்டிவிட்டாய். போதும்! என் கட்டுக்களை அவிழ்த்து, என்னைப் போக விடு!'' என்று கூறினான் கண்ணன்.
இப்போது ஸஹதேவன் பேரம் பேசினான். ''கட்டுக்களை அவிழ்த்துவிடுவதானால், எனக்கு ஒரு வரம் கொடு'' என்றான். ''கேள், தருகிறேன்'' என்றான் கண்ணன். ''பாரதப் போரில் குந்தி புத்திரர்களான எங்கள் ஐவரையும் காப்பாற்றுவதாக வரம் கொடு'' என்றான் ஸஹதேவன்.
கண்ணன் மீண்டும் உரக்கச் சிரித்தான். ''ஸஹ தேவா! சற்று அவகாசம் தருகிறேன். ஏதாவது விட்டுப் போயிருந்தால், அதையும் வரத்தில் சேர்த்துக் கொண்டு வாசகங்களைச் சரியாக அமைத்து வரத்தை மீண்டும் கேள், தருகிறேன்'' என்றான் கண்ணன்.
''இல்லை கிருஷ்ணா! நீ என்னைக் குழப்பப் பார்க்கிறாய். நான் கேட்டது கேட்டதுதான். பாரதப் போரில் குந்தி புத்திரர்கள் எங்கள் ஐவரையும் எப்படியாவது காப்பாற்றிவிடு!'' என்றான். ''நல்லது ஸஹதேவா. வரம் மட்டுமல்ல. வாக்கும் அளிக்கிறேன். பாரதப் போரில் குந்தி புத்திரர்கள் உங்கள் ஐவரையும் காப்பாற்றுகிறேன். என்னைக் கட்டவிழ்த்து விடு'' என்றான் கண்ணன். ஸஹதேவன் தியான நிலையைக் கலைத்து கண்ணனைக் கட்டவிழ்த்தான்.
கர்ணனோடு சேர்ந்து குந்திக்கு ஆறு புதல்வர்கள் என்பதை அறியாமல், 'குந்தி புத்திரர்கள் ஐவரை மட்டும் காப்பாற்று’ என வரம் கேட்டுவிட்டானே ஸஹதேவன். பாவம், கர்ணனைக் காப்பாற்ற இவனும் தவறிவிட்டானே! விதி யாரை விட்டது!'' என்று எண்ணிக் கொண்டே கண்ணன் ஹஸ்தினாபுரப் பயணத்தை தொடங்கினான்.
கண்ணன் சங்கல்பப்படி, குருக்ஷேத்திரப் போர் தொடங்கியது. போரின் கடைசி நாட்களில் கர்ணனின் மரணம் நிகழ்ந்தது. அப்போது அவனுக்குக் கொடுத்த வாக்கின்படி யுத்த பூமியில் வந்து, தன் மகன் கர்ணனை மடி மீது கிடத்தி, ''மகனே'' என்று கதறி அழுதாள் குந்தி. அப்போதுதான் பாண்டவர்களுக்கு, கர்ணன் தங்கள் சகோதரன் என்பது தெரிந்தது. அனைவரும் கதறினர். ஸஹதேவனின் நினைவலைகள் பின்னே சுழன்றன. கட்டுண்ட கண்ணனிடம் தான் கேட்ட வரமும், அப்போது அவன் தந்த வாய்ப்பும், தன் அறியாமையால் அந்த வாய்ப்பை இழந்து, ஐவரை மட்டுமே காப்பாற்ற தான் கேட்ட வரமும், அவன் நினைவுக்கு வந்தன. தான் கற்ற சாஸ்திர அறிவு தன்னைக் காப்பாற்றவில்லை என்பதை ஒரு கணம் உணர்ந்தான்.
''ஊருக்கெல்லாம் ஜோசியமும் ஆருடமும் சொல்ல உதவிய சாஸ்திரம், எனக்குக் கூடப் பிறந்த சகோதரன் இன்னொருவன் இருக்கிறான் என்பதைச் சுட்டிக் காட்டவில்லையே? இதனை நான் கணிக்கத் தவறிவிட்டேனே... இது மாயை. கண்ணன் காட்டும் வழி ஒன்றே மெய். அதுவே உயர்ந்த சாஸ்திரம். இனி எந்த சாஸ்திரமும் வேண்டாம்'' என்று கோபத்தில் தன் ஜோதிடச் சுவடிகளை எல்லாம் கிழித்தெறிந்தான். அவற்றில் பல, போர்க்களத் தீயில் விழுந்து அழிந்தன. எஞ்சியவற்றை ஸஹதேவனின் சீடர்கள் எடுத்து, பல வருடங்கள் ஆராய்ச்சி செய்து, விட்டுப் போன பல விஷயங்களை ஊகத்தால் சேர்த்து, ஸஹதேவனின் ஜோதிட சாஸ்திரத்துக்கு மறு உயிர் தந்தார்கள். மறைந்தவை மறைந்தே போயின. அதனால்தான் இன்றும் ஆரூட ஜோஸ்ய சாஸ்திரத்தில் 'ஜோஸ்யம் பாதி, ஹேஷ்யம் மீதி’ என்று சொல்கிறார்கள்

**கல் உப்பு ஒரு வரப்பிரசாதம்**

**கல் உப்பு ஒரு வரப்பிரசாதம்**
அதிகாலை எழுந்தவுடனே ரெண்டு கையிலயும் கல்லு உப்பை வச்சு மூடிக்கிட்டு கிழக்கு பக்கமாப் பாத்து உட்கார்ந்துக்கணும்!
மடியில ஒரு ஒயிட் பேப்பர் வச்சுக்கணும்!
மாமியாரால பிரச்னைன்னு வச்சுக்கோங்க... கண்ண மூடிக்கிட்டு எனக்கும் என் மாமியாருக்கும் எந்த பிரச்னையும் இல்லை. நாங்க சந்தோஷமா இருக்கோம். என் மாமியார் ரொம்ப நல்லவங்க. நான் அவங்களைப் புரிஞ்சுக்கிட்டேன். என் மேல அவங்களுக்கு ரொம்ப பாசம்னு திரும்பத் திரும்பச் சொல்லணும்!!
அதேபோல, பணப்பிரச்னைன்னு வச்சுக்கோங்க...; கண்ணை மூடிக்கிட்டு, எனக்கு நிறைய பணம் கிடைக்கும்!!; என்னோட கஷ்டம் எல்லாம் தீர்ந்திடும்னு சொல்லணும்!!
உடம்புல ஏதாவது பிரச்னைன்னா, எனக்கு எந்த நோயும் இல்லை..!!; உடம்புல இருக்கிற பிரச்னை எல்லாம் தீர்ந்துடுச்சு...!! நான் ஆரோக்கியமா இருக்கேன்னு சொல்லணும்!!;
மனசுக்குள்ளயும் சொல்லலாம்!! வாய்விட்டு சத்தமாவும் சொல்லலாம். 10 நிமிஷம் சொன்னாப் போதும்.
முடிச்சதும் கையில வச்சிருந்த உப்பை மடியில வச்சிருக்கிற ஒயிட் பேப்பர்ல கொட்டி, சிந்தாம மடிச்சு ஓடுற தண்ணியில கலந்து விட்டுடணும்!!
நீங்களும் செஞ்சு பாருங்க!!; பத்து நாளுக்குள்ள பலன் தெரியும் என்று நமக்கே மந்திரம் கற்றுத்
தருகிறார் ஷீலா!!
இது என்ன வேடிக்கை?! கையில் இருக்கிற உப்பு எப்படி வேலை செய்யும்??
இந்த உப்பு மந்திரத்தைக் கற்றுத் தந்த டாக்டர் ஜிதேந்திராவிடம் கேட்டோம்!
“இது ஒண்ணும் புதியதில்லை. காலங்காலமா நம்ம மக்கள் மத்தியில புழக்கத்தில இருக்கிற ஒரு விஷயம்தான்!!
மந்திரிக்கும் போதும், திருஷ்டி சுத்தும்போதும் நம்ம மக்கள் கையில உப்பு வச்சு சுத்துவாங்க. சில கோயில்கள்ல உப்பு வாங்கிக் கொட்டுவாங்க!
‘பாவத்தைப் போக்குறோம்’னு சொல்லி கடல்ல குளிக்கிறது, கடல் தண்ணியை தலையில அள்ளித் தெளிக்கிறது, கடலோரத்துல ஈமக்கிரியைகள் செய்றது, கடல்ல கால் நனைக்கறதுன்னு சொல்றதுக்கெல்லாம் காரணம் என்ன?
இதையெல்லாம் சர்வசாதாரணமா மூடநம்பிக்கைன்னு அறிவாளிகள் புறம் தள்ளிடுவாங்க!!
உண்மையிலேயே அதுக்குள்ள அறிவியல் இருக்கு. அந்த அறிவியலை *""Ora Science""*என்று சொல்வாங்க!!
*எதிர்மறை சக்தி (Negative Energy) & நேர்மறை சக்தி (Positive Energy)*..... இது ரெண்டும்தான் மனிதனோட குணநலன்களையும் வாழ்க்கையையும் தீர்மானிக்குது!!!
உப்பு, நெகடிவ் எனர்ஜியை வெளியேத்துற *சக்தி கொண்ட ஒரு பொருள்!!!*
கைக்குள்ள உப்பை வச்சுக்கிட்டு பாசிட்டிவ்வா நினைத்தாலோ; அல்லது பேசினாலோ உடம்புக்குள்ள இருக்கிற நெகட்டிவ் எனர்ஜி வெளியேறிடும்!!!
*இது மாயமோ, மந்திரமோ இல்லை!! முற்றிலும் அறிவியல்!!*
உடம்புல நெகட்டிவ் எனர்ஜி வெளியாகி பாசிட்டிவ் எனர்ஜி அதிகரிக்கும்போது; அதுவே *அதிர்வுகளாக* (Vibration) வெளியில வந்து எதிராளிக்கிட்ட போகும்!!! எதிராளியோட அணுகுமுறையும் பாசிட்டிவ்வா மாறும்!!!
ஒரு விஷயத்தை திரும்பத்திரும்ப சொல்லும்போது நாம் அதுவாவே மாறிடுவோம்!! இதுவும் *அறிவியல்தான்!!*
எப்பவும் திட்டிக்கிட்டே இருக்கிற மாமியார், மருமகளை மரியாதையா நடத்துறதும்; எப்பவோ விட்டுட்டுப் போன அம்மா மகளைத் தேடி வந்ததும்; விபத்துல இருந்தவங்க குணமாகுறதும் இப்படியான நிகழ்வுகள் பாசிட்டிவ் எனர்ஜியோட விளைவுதான்!!!
இன்னைக்கும் கிராமங்கள்ல உப்பை மட்டும் ஓசி வாங்கக்கூடாதுன்னு சொல்வாங்க!! அப்படியே வாங்கினாலும் கையால வாங்க மாட்டாங்க!! அப்படி வாங்கினால், கொடுக்கிறவங்களோட நெகட்டிவ் எனர்ஜி வாங்குறவங்களுக்கு வந்திடும்!!! இந்த உண்மை கிராமத்து மக்களுக்குத் தெரிஞ்சிருக்கு.

அன்பும் அறிவும் ஒன்றிணைந்தால் வாழ்வில் ஆனந்தமே....

**மீனவனின் சமயோஜித புத்தி**
ஒரு ஊரில் ஏழை மீனவன் ஒருவன் இருந்தான். அவனுடைய அம்மாவிற்குக் கண்பார்வை இல்லை. அவனுக்கு வெகு நாட்களாகக் குழந்தையும் இல்லை. ஒரு நாள் அவன் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றான். அப்போது, கரையில் ஒதுங்கிக் கிடந்த பெரிய மீனொன்று அவனைப் பார்த்துக் கெஞ்சியது:
÷""மீனவனே, நான் சாதாரண மீன் இல்லை. கடலில் உள்ள மீன்களுக்கெல்லாம் தலைவன். ஆழ்கடலில் வசிக்கும் நான், ஒரு பெரிய அலையில் சிக்கி இந்தக் கரைப் பகுதிக்கு வந்துவிட்டேன். இப்போது நீந்த முடியாத அளவிற்கு மிகவும் சோர்வாக உள்ளேன். எனக்கு ஒரு உதவி செய் மீனவனே. என்னை பத்திரமாக ஆழ்கடலுக்குக் கொண்டு போய்ச் சேர்த்துவிட்டால் உனக்கு ஒரு வரம் தருவேன்.''
÷மீனவன் அந்த மீனைத் தூக்கி படகில் போட்டான். மிகவும் கஷ்டப்பட்டு படகைச் செலுத்திக் கொண்டுபோய் மீனை நடுக்கடலில் விட்டான். பிறகு, என்ன வரம் கேட்பது என்று யோசித்தான். அவனால் ஒரு முடிவு எடுக்க முடியவில்லை. எனவே அவன் சொன்னான்:
÷""மீன்களின் ராஜாவே, நீ சொன்னபடி நான் செய்துவிட்டேன். ஆனால், என்ன வரம் கேட்பது என்று எனக்கு இப்போது தெரியவில்லை. வீட்டுக்குச் சென்று மற்றவர்களிடம் கலந்து ஆலோசித்துவிட்டு நாளை வந்து கேட்கிறேன்.''
÷மீனும், ""நீ ஒரே ஒரு வரம்தான் கேட்க வேண்டும்''என்று நினைவுபடுத்தி நன்றி கூறிச் சென்றது. மீனவன் வீட்டுக்குச் சென்றான். வீட்டில் பெற்றோரிடமும், மனைவியிடமும் நடந்ததைக் கூறினான். ராஜா மீனிடம் என்ன வரம் கேட்பது என்று ஆலோசித்தான்.
÷அவனது தந்தை கூறினார்:
÷""மகனே, நாம் நெடுங்காலமாக இந்த ஓட்டைக் குடிசையில்தான் வாழ்ந்து வருகிறோம். நமக்கு ஒரு நல்ல வீடு வேண்டும் என்று ராஜா மீனிடம் கேளேன்...''
÷அடுத்ததாக அவனது அம்மா சொன்னார்கள்:
÷""மகனே, எனக்குக் கண் தெரியாமல் மிகவும் சிரமமாக இருக்கிறது. என் கண்கள் பார்வை பெற வேண்டும் என்று அந்த மீனிடம் கேள்...''
÷கடைசியாக மனைவி கேட்டாள்:
÷""நமக்குத் திருமணம் ஆகி பல வருடங்கள் ஆகிவிட்டன. இன்னும் நமக்கு ஒரு குழந்தை இல்லை. எனவே, அந்த மீனிடம் நமக்கு ஒரு குழந்தை வேண்டும் என்று கேளுங்கள்.''
÷மறுநாள், அந்த மீனவன் கடலுக்குச் சென்று ராஜா மீனிடம் ஒரே ஒரு வரம்தான் கேட்டான். அந்த ஒரு வரத்தில் அவன் பெற்றோரின் ஆசையும், அவன் மனைவின் விருப்பமும் நிறைவேறின. அப்படி அவன் என்ன வரம் கேட்டான்?
விடை: ÷""என் மகன் கீழே விளையாடிக் கொண்டிருப்பதை, எங்கள் வீட்டு மாடியிலிருந்து என் பெற்றோர் பார்த்து மகிழ வேண்டும்'' என்பதுதான் அவன் கேட்ட வரம்.
நீதி: உங்கள் உடன் வாழ்பவர்களின் மீது உங்களுக்கு ஆழமான அன்பும் அக்கறையும் பாசமும் இருப்பின்.. அந்த எண்ணமானது உங்களை அறியாமலேயே உங்கள் புத்திகூர்மையையும் முடிவொடுக்கும் திறமையையும் இயல்பாகவே வெளிப்படும் என்பதே உலகம் கண்ட உண்மை.. இதற்கு நமது மெய்ஞானிகளும் விஞ்ஞானிகளும் சாட்சி..
*******************************
அன்பே சிவம் என்பது மெய்ஞானிகளின் வாக்கு..
அறிவே சிவம் என்பது விஞ்ஞானிகளின் வாக்கு..
அன்பும் அறிவும் ஒன்றிணைந்தால் வாழ்வில் ஆனந்தமே.....
**இது இறைவனின் திருவாக்கு**

மாற்றம் ஒன்றே மாறாதது...

ஒரு நாட்டின் ராஜாவுக்கு ஒருநாள் சிந்தனை ஒன்று தோன்றியது , அதாவது, "தனது வாழ்வில் துன்பத்தினால் இறுதியை அடைந்த ஒருவனுக்கு , அவனை காப்பாற்றக் கூடிய ஒரு மந்திரம் எதுவாக இருக்கும்?" என்பதே அந்த சிந்தனை.
மன்னனும் எவ்வளவோ முயன்றும் அப்படி ஒரு மந்திரம் என்னவென்று தெரியவில்லை , உடனே நாட்டு மக்களுக்கு பறையறிவிக்க சொன்னான்.
“வாழ்வின் துன்பத்தில் சிக்கி இறுதி நாளில் இருக்கும் ஒருவனை காப்பற்றக் கூடிய மந்திரத்தினை" சொல்பவருக்கு தனது நாட்டில் ஒருபகுதியை தருவதாக அறிவித்தான்.
நிறைய பேர் தினமும் வரத் துவங்கினார்கள்...
ஒவ்வொருவர் ஒவ்வொரு மந்திரங்களை சொன்னார்கள்.
நமசிவாய என்றார் ஒருவர்.
ஓம் சக்தி என்றார் மற்றவர்.
உன்னையே நம்பு என்றார் இன்னொருவர்.
ஆனால் மன்னன் திருப்தியாகவில்லை .
எல்லோர் சொன்னதையும் ஏதோ ஒரு காரணம் சொல்லி மறுத்தான். அவர்களின் பதிலில் அவன் மனம் ஏனோ சமாதானமாகவில்லை.
இந்நிலையில் ஒருநாள் மன்னனைக் காண ஒருவன் வந்தான்.
அவன் மன்னனிடம் ஒரு மோதிரம் தந்து, “மன்னா! நீங்கள் எந்த குறையுமின்றி நீடுழி வாழ வேண்டும், ஒருக்கால் நீங்கள் சொன்னதுபோல ஒரு நிலை உங்களுக்கே வருமானால் அன்றைய தினம் இந்த மோதிரத்தை திறந்து பாருங்கள்... அதுவரை இதனை பார்க்கவேண்டாம்” என்று சொல்லி மோதிரத்தை மிகவும் பவ்யமாக மன்னனிடம் தந்து விட்டு சென்றான்.
மன்னனுக்கு அந்த மனிதனின் சொல்லும் செயலும் ஒருவிதமான நம்பிக்கையும், எதிர்பார்ப்பையும் , மன அமைதியையும் தந்தது.
இந்த சம்பவத்திற்கு பின் மன்னன் இதனை மறந்தே போனான்.
சில வருடங்களுக்குப்பின்...
திடீர் என இந்த மன்னனுக்கும் வேறு நாட்டு மன்னனுக்கும் போர் மூண்டது.
தயார் நிலையில் இல்லாததால் இந்த மன்னன் தோற்றுப் போனான்.
நாடு, மனைவி, மக்களை இழந்த மன்னன் மிகவும் மனம் தளர்ந்து வாழ்வினை முடித்துக்கொள்ள எண்ணினான். தப்பித்து உயிர் பிழைத்த தன் நிலையை எண்ணி எண்ணி மனம் சஞ்சலமான மன்னன்...
தூரத்தில் ஒரு மலையினை கண்டான்...
இந்த மலையில் இருந்து விழுந்து தற்கொலை செய்துகொள்ள தீர்மானித்த அந்த மன்னன் மலையின் மீதேறினான்.
தட்டுத்தடுமாறி மலையின் உச்சியை அடைந்த மன்னன், இறைவா, என்னை ஏற்றுக்கொள் என்று வானத்தை நோக்கி இரு கைகளையும் உயர்த்தி விண்ணைப் பார்த்து உரக்க கூவினான்.
அப்போது அவன் கையில் இருந்த மோதிரம் சூரிய ஒளியில் மின்னியதை கண்டான்.
உடனே, அவன் மனதில் அந்த மனிதன் சொல்லிய வார்த்தைகள் ஒலித்தன.
“மன்னா! நீங்கள் எந்த குறையுமின்றி நீடுழி வாழ வேண்டும், ஒருக்கால் நீங்கள் சொன்னதுபோல ஒரு நிலை உங்களுக்கு வருமானால் அன்றைய தினம் இந்த மோதிரத்தை திறந்து பாருங்கள்... அதுவரை இதனை பார்க்க வேண்டாம்”
இப்போது அதுபோன்ற நிலைதானே அதில் என்னதான் உள்ளது பார்ப்போம்... என்று தற்காலிகமாக கீழே விழுந்து மரணிக்கும் எண்ணத்தை கைவிட்டு விட்டு அமர்ந்து அந்த மோதிரத்தை திருப்பி உள்ளே என்ன இருக்கின்றது என பார்த்தான்.
மோதிரத்தின் உள்ளே சிறிய காகிதம் ஒன்று சுருட்டி வைக்கப்பட்டிருந்தது, அதனை மிகவும் ஜாக்கிரத்கையாக எடுத்து பார்த்தான்...
ஒரே ஒரு வாசகம் ஒரே ஒரு வரியில் எழுதப்பட்டிருந்தது .
அந்த வாசகம் இதுதான்...
"இந்த நிலை மாறும்..."
அவ்வளவுதான், வேறொன்றும் இல்லை. முன்னும் பின்னும் திருப்பிப் பார்த்த மன்னன் ஏதும் காணாததால் அந்த வாசகத்தினை பற்றி யோசித்தான்.
தான் தற்போது உள்ள நிலை மாறும், இதற்காக தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு வந்து விட்டோமே என்றெண்ணி மனதினை தைரியப்படுத்திக் கொண்டு மன்னன் மலையிலிருந்து கீழிறங்கினான்..
.
தனது ஆதரவாளர்களைக் தேடிக் கண்டு பிடித்தான் , கிராமங்களில் வாழும் மக்கள் தங்களது மன்னனைக் கண்டதும் மகிழ்ந்து கொண்டாடினார்கள். இளைஞர்களை ஒன்று திரட்டி படைகளை உருவாக்கினான்.
அரண்மனையில் இருந்த அவனது பழைய படைவீரர்களின் ரகசிய ஒத்துழைப்போடு, எதிர்பாராமல் திடீரென்று அரண்மனையின் ரகசிய வாசல் வழியாக உள்நுழைந்து எதிரி நாட்டு மன்னனை அதிரடியாக கைது செய்து சிறையிலடைத்து மீண்டும் மன்னனான்.
மீண்டும் மன்னன் ஆட்சியில் அமர்ந்ததும் மக்கள் மிகவும் ஆனந்தமானார்கள்.
இந்நாளை விமரிசையாகக் கொண்டாட எண்ணிய மன்னன், இந்த வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்த மோதிரம் கொடுத்த மனிதனை பறையறிவித்து வரவழைத்தான்...
நாடு முழுக்க ஒரே கொண்டாட்டமாக இருந்தது...
அரண்மனையில் மக்கள் கூட்டம்..
அரியணையில் மன்னன்... அருகில் மகாராணி, மன்னனின் குழந்தைகள், மந்திரி, பிரதானிகள்...
ஆடல் பாடல் என்று எங்கும் சந்தோஷ வெள்ளம் அலை பாய்ந்து கொண்டிருந்தது...
மோதிரம் கொடுத்த மனிதன் வந்தான், மன்னனை தாழ்ந்து பணிந்தான். மன்னன் அரியணையில் இருந்து இறங்கி வந்து வரவேற்றான்.
தான் அறிவித்திருந்தபடி பாதி நாட்டினை நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றான் மன்னன்.
"மன்னா, நாட்டினை ஆளும் தகுதி கொண்டவர் தாங்கள்தான், எனக்கு ஏதும் வேண்டாம்" என்று பணிவோடு சொன்னான் அந்த மனிதன்.
மன்னன் எவ்வளவோ மன்றாடியும் எதனையும் ஏற்க மறுத்தான் அந்த மனிதன்.
இறுதியாக மன்னன் சொன்னான், அன்பரே , நீங்கள் ஏதேனும் என்னிடம் இருந்து பெற விரும்பினால் தயங்காமல் கேளுங்கள்.
அந்த மனிதன், "மன்னா! இப்போது நீங்கள் வாழ்வின் மிக அதிக சந்தோஷத்தின் உச்சாணியில் இருக்கிறீர்கள் என்பது உண்மைதானே “
மன்னன், “ஆமாம் அது உண்மைதான் அன்பரே...”
அப்படியானால் அந்த மோதிரத்தினை இப்போது எடுத்துப் பாருங்கள் என்றான் அந்த மனிதன்.
உடனே, மன்னன் தனது விரலில் இருந்த மோதிரத்தினை எடுத்து உள்ளிருக்கும் அந்த சிறிய காகிதத்தை பிரித்துப் பார்த்தான்.
அதில் அதே மந்திர வாசகம் இருந்தது.
"இந்த நிலை மாறும்..."
மன்னர் விழிக்க, அந்த மனிதன், "இதுதான் மன்னா வாழ்க்கை... இந்த நிலையும் மாறும், எனவே எதிலும் கவனமாகவும் சந்தோஷமாகவும் இருங்கள்... நான் வருகின்றேன்..." என்று அவையோரை பணிந்து மன்னனிடமிருந்து விடை பெற்றான் அந்த மனிதன்...
நெஞ்சம் தழுதழுக்க அவன் செல்லும் திசையைப்பார்த்து வணங்கி நின்றான் மன்னன்.
இழந்த வாழ்வை மீட்டுத் தந்த மந்திரம் தந்தவனல்லவா இந்த மனிதன்!
ஆதனால், நாம் எந்த நிலையில் இருந்தாலும், எந்த முடிவெடுக்கும் முன்னரும் நமக்கும் இந்த மந்திர வாசகம் நினைவில் வரட்டும்...
"இந்த நிலை மாறும்..."
நமது எண்ணம்,
உணர்வுகள்,
சிந்தனை,
சொல் மற்றும் செயல் அனைத்தும் சரியாக இருப்பின் சரியான நிலைக்கும்...
தவறாக இருப்பின் தவறான நிலைக்கும் மாறும்...
ஆக, மாற்றம் ஒன்றே மாறாதது...
நல்ல மாற்றம் உயர்வையும்,
தவறான மாற்றம் தாழ்வையும் தரும்...
இந்த வாழ்வியல் உண்மையை உணர்ந்து
நல்ல மாற்றத்தை அடைவோம்....

!!*எல்லாம் மாதவன் செயலே*!!

!!*எல்லாம் மாதவன் செயலே*!!
பஞ்ச பாண்டவர்களில் பீமனுக்கும், இடும்பிக்கும் பிறந்தவன் கடோத்கஜன்.கடோத்கஜனுக்கும் கம்கன்கடவிற்கும் பிறந்தவன் பார்பாரிக்கா.
தாய் கம்கன்கட, மகன் பார்பாரிக்காவிற்கு தானே பயிற்சி அளித்து சிறந்த வீரனாக தயார் செய்திருந்தாள்.
சிவ பெருமான் பார்பாரிக்காவிற்கு மூன்று அம்புகளை பரிசளித்திருந்தார்.முதல் அம்பு, தான் அழிக்க நினைக்கும் இலக்குகளை குறியிட்டு விடும். இரண்டாவது அம்பு,தான் காப்பாற்ற நினைக்கும் இலக்குகளை குறியிட்டு ஒதுக்கிக் காப்பாற்றி விடும்.மூன்றாவது அம்பு அழிக்கக் குறியிட்ட இலக்குகளை அழித்து விடும்.
மூன்று அம்புகளும் தத்தம் பணிகளைச் செய்து விட்டு பார்பாரிக்காவிடம் திரும்பி விடும்.இது தவிர அக்னி பகவான் மூவுலகையும் வெல்லக்கூடிய வில் ஒன்றை பார்பாரிக்காவிற்கு பரிசளித்திருந்தார்.இதன் காரணமாக பார்பாரிக்கா மிகவும் பலம் பொருந்தியவனாக விளங்கினான்.
பாண்டவர்களுக்கும் கெளரவர்களுக்கும் இடையே யுத்தம் துவங்க இருந்ததை அறிந்த பார்பாரிக்கா போரைக் காண ஆவலுற்றான்.தாயிடம் ஆசிப் பெற்று தன் நீலக் குதிரை மீதி புறப்பட்டான்.புறப்படும் முன்,போரில் பலவீனமாக இருந்தவர்கள் பக்கம் சேர்ந்து அவர்களை வெற்றி பெறச்செய்வேன் என்று தாயிடம் சூளுரைத்தான்.
பாண்டவர்களுக்கும் கெளரவர்களுக்கும் இடையே யுத்தம் துவங்க இருந்ததை அறிந்த பார்பாரிக்கா போரைக் காண ஆவலுற்றான்.தாயிடம் ஆசிப் பெற்று தன் நீலக் குதிரை மீதி புறப்பட்டான். புறப்படும் முன்,போரில் பலவீனமாக இருந்தவர்கள் பக்கம் சேர்ந்து அவர்களை வெற்றி பெறச்செய்வேன் என்று தாயிடம் சூளுரைத்தான். என்ன பிராமணரே என்னை ஏன் வழி மறித்தீர் “ என்று கேட்டான் பார்பாரிக்கா.
“போர் உடையில் நீ வேகமாகச் செல்வது கண்டு ஏன் இந்த பரபரப்பு என்று தெரிந்து கொள்ளும் ஆவல் மிகுதியில் நிறுத்தி விட்டேன் “ என்றான் கிருஷ்ணன். “ பாண்டவர்களுக்கும் கெளரவர்களுக்கும் குருக்‌ஷேத்திரத்தில் போர் நடக்க உள்ளது, அதில் கலந்து கொள்ளப் போகிறேன்” என்றான் பார்பாரிக்கா.” யார் பக்கம் சேர்ந்து போரிட போகிறாய் “ என்று வினவினான் கிருஷ்ணன்.”அங்கு போய் பார்ப்பேன்,யார் பக்கம் பலவீனமாக உள்ளதோ அவர்கள் பக்கம் சேர்ந்து அவர்களை ஜெயிக்க வைப்பேன்” என்றான் பார்பாரிக்கா.
” நீ அவ்வளவு பெரிய பராக்கிரமசாலியா” என்ற வினவினான் கிருஷ்ணன்.” நீங்கள் வேண்டுமானால் என் பராக்கிரமத்தைச்சோதித்து பாருங்களேன்” என்றான் பார்பாரிக்கா.”இதோ இந்த அரச மரத்தில் உள்ள இலைகளை ஒரே அம்பால் உன்னால் கோர்க்க முடிந்தால் உன்னை பராக்கிரமசாலி என்று ஒப்புக்கொள்கிறேன்” என்றான் கிருஷ்ணன்.
மரத்தின் ஒரு இலையை மட்டும் பிடுங்கி பார்பரிக்காவிற்கு தெரியாமல் தன் காலடியில் போட்டுக் கொண்டான்.”இதோ ஒரு நொடியில் செய்து விடுகிறேன்” என்று ஒரு மந்திரத்தை உச்சரித்து அம்பை எய்தான் பார்பாரி்க்கா.அம்பு மரத்தில் இருந்த இலைகளையெல்லாம் கோர்த்துக் கொண்டு கடைசியாக கிருஷ்ணனின் பாதத்தை நோக்கிப் பாய்ந்தது.
”இது என்ன விபரீதம் அம்பு என் பாதத்தைத் துலைக்க முற்படுகிறதே” என்றான் கிருஷ்ணன்.”பிராமணரே உன் காலடியில் ஒரு இலை இருக்கும் என்று நினைக்கிறேன்,உடனே பாதத்தை எடுத்து விடும்” என்றான் பார்பாரிக்கா.கிருஷ்ணர் பாதத்தை எடுத்தவுடன் பார்பாரிக்காவின் அம்பறாத்தூணியில் இருந்து புறப்பட்ட அம்பு ஒன்று எல்லா இலைகளையும் ஒன்றாகக் கோர்த்தது.
இந்த இடத்தில் ஒரு குட்டி கிளைக் கதை ஒன்று உள்ளது.
துருவாச முனிவர் கிருஷ்ணருக்கு ஒரு வரம் அளித்திருந்தார்.கிருஷ்ணரின் பாதம் தவிர்த்த ஏனைய இடங்களில் எந்த ஆயுதத்தாலும் பாதிப்பு எற்படாது என்பதே அந்த வரம்.மெளசால பர்வத்தில் ஜாரா என்னும் வேடன், மான் என்று எண்ணி கிருஷ்ணரின் பாதத்தில் அம்பு எய்து கிருஷ்ணரின் மரணத்திற்கு காரணமானதிற்கு முன் பார்பாரிக்காவின் அம்பு கிருஷ்ணரின் பாதத்தை பதம் பார்த்து பலீனப்படுத்தியது, குறியிட்டு விட்டது முக்கிய காரணம் என்கிறது புராணம்.
துருவாச முனிவர் கிருஷ்ணருக்கு ஒரு வரம் அளித்திருந்தார்.கிருஷ்ணரின் பாதம் தவிர்த்த ஏனைய இடங்களில் எந்த ஆயுதத்தாலும் பாதிப்பு எற்படாது என்பதே அந்த வரம்.மெளசால பர்வத்தில் ஜாரா என்னும் வேடன், மான் என்று எண்ணி கிருஷ்ணரின் பாதத்தில் அம்பு எய்து கிருஷ்ணரின் மரணத்திற்கு காரணமானதிற்கு முன் பார்பாரிக்காவின் அம்பு கிருஷ்ணரின் பாதத்தை பதம் பார்த்து பல வீனப்படுத்தியது,குறியிட்டு விட்டது முக்கிய காரணம் என்கிறது புராணம்.
பார்ப்பாரிக்காவின் பராக்கிரமத்தை உணர்ந்து கொண்ட கிருஷ்ணர் பஞ்ச பாண்டவர்களை ஒளித்து வைத்தாலும் பார்பாரிக்காவின் அம்பு தேடிக் கண்டு பிடித்துக் கொன்று விடும் என்று உணர்ந்தார்.”உன்னிடம் எனக்கு ஒரு யாசகம் வேண்டுமே” என்றான் கிருஷ்ணன்.”எது வேண்டுமானாலும் தயங்காமல் கேளும் பிராமணரே !” என்றான் பார்பாரிக்கா.”உன் தலையை கொய்து விட வேண்டும் என்று விரும்புகிறேன்” என்றான் கிருஷ்ணன்.
சற்றே திகைத்து விட்ட பார்பாரிக்கா,” நீர் யார், உண்மையை சொல்லும்,நீங்கள் சாதாரண பிராமணரே அல்ல” என்றான். பகவான் கிருஷ்ணர் தன் சுய உருவத்தில் திவ்ய சொரூபனாகக் காட்சித் தந்தார்.” கேசவா,நாராயணா, மாதவா, கோவிந்தா, மதுசூதனா.. என்று பல்வேறு நாமங்களால் கிருஷ்ணரை துதித்தான்.
” பார்பாரிக்கா, நீ மாவீரன். உன் தாயிடம் நீ மேற்கொண்ட பிரத்திக்ஞையின் விளைவுகளை நீ அறியவில்லை. நீ பாண்டவர்களுக்கு 7 அக்‌ஷொனி படைகளும், கெளரவர்களுக்கு 11 அக்‌ஷொனி படைகளும் இருப்பதைப் பார்த்து பாண்டவர்கள் பக்கம் சேர்வாய்; உன் பராக்கிரமத்தால் கெளரவ படை தோற்கத் துவங்கும்.அது பலவீனமாவதை உணர்ந்து,உன் தாய்க்கு செய்து கொடுத்த சத்தியத்தின் காரணமாக நீ கெளரவர்கள் பக்கம் சேர்வாய்.
பாண்டவர்கள் தோற்க துவங்குவார்கள்.முடிவில் பாண்டவ,கெளரவ சேனைகள் முற்றிலும் அழிந்து நீ மட்டுமே மிஞ்சுவாய்.இது தர்மத்திற்கு நல்லதல்ல. ஆகவே நீ போரில் பங்கேற்கக் கூடாது.உன் தாய்க்குச் செய்து கொடுத்த சத்தியத்தின் காரணமாக இது சாத்தியமல்ல.ஆகவே தர்மத்தின் பொருட்டு நீ உயிர் தியாகம் செய்து விடு” என்றான் கிருஷ்ணன். பார்பாரிக்காவும் இசைந்தான்

!!**வாழ்க்கையின் உண்மை**!!

!!**வாழ்க்கையின் உண்மை**!!
ஞானி ஒருவர் கோயில் ஒன்றில் பிரசங்கம் செய்து கொண்டிருந்தார். இடையே நகைச்சுவை ஒன்றைச் சொன்னார். கூட்டத்தில் அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தனர். அதே நகைச்சுவையை மறுபடியும் சொன்னார். இம்முறை கொஞ்சம் பேர் மட்டும் சிரித்தனர். அதே நகைச்சுவையை இடையிடையே சொல்லிக் கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் யாருமே சிரிக்காமல் அமைதியாய் இருந்தனர். ஞானி சொன்னார், திரும்பத் திரும்ப கேட்ட ஒரு நகைச்சுவைக்கே சிரிக்க முடியாத உங்களால், என்றோ நடந்து முடிந்த துயர சம்பவங்களை மட்டும் நினைத்து, எப்படி திரும்பத் திரும்ப அழ முடிகிறது ? ஒரே விஷயத்திற்காக எப்படிப் பல காலம் பகையும் வன்மமும் கொள்ள முடிகிறது?
"அந்த இடமே ஆழ்ந்த அமைதியானது"..
"கூட்டத்தினர் யோசிக்கத் தொடங்கினர்"..

"நான் கேட்பதை என் தாய் நிச்சயம் கொடுப்பாள்'

சந்நியாசி ஒருவர் ஊர் ஊராக திருத்தலப் பயணம் சென்று கொண்டிருந்தார்.ஒரு சமயம் அவர் ஓர் ஆற்றில் நீராடிவிட்டு, ஆற்றங்கரையில் இருந்த மரத்தடியில் அமர்ந்து தியானம் செய்தார். இவ்விதம் சந்நியாசி செய்ததை, மாடு மேய்க்கும் சிறுவன் ஒருவன் பார்த்தான். கண்விழித்த பிறகு, அவர் என்ன செய்யப் போகிறார் என்பதை அறியும் ஆவல் அவனுக்குள் வந்து விட்டது. அவரையே கண்கொட்டாமல், கவனித்துக்கொண்டிருந்தான்.
நீண்ட நேரம் கழிந்தது. சந்நியாசி தியானம் கலைந்து எழுந்தார்.
அவர் அருகில் மாடு மேய்க்கும் சிறுவன் சென்றான்.
""சுவாமி! நீங்கள் இது வரையில் என்ன செய்துகொண்டிருந்தீர்கள்?'' என்று கேட்டான்.
அதற்குத் துறவி, ""நான் இறைவனைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலில் தியானம் செய்து கொண்டிருந்தேன்'' என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட்டார்.
அதைக் கேட்ட சிறுவன், "இந்த ஆற்றில் நீராடி, இந்த மரத்தடியில் உட்கார்ந்து தியானம் செய்தால் இறைவனைப் பார்க்க முடியும் போலும்! சந்நியாசி அதைத்தானே செய்தார். ஏன் நாமும் அவரைப் போலவே இறைவனை பார்க்க முயற்சிக்கக் கூடாது' என்று நினைத்தான்.
உடனடியாக ஆற்றில் நீராடிவிட்டு, மரத்தடியில் கண்களை மூடி அமர்ந்து இறைவனை நினைத்து, ""இறைவனே! நீ என் முன்னால் தோன்றி, எனக்குத் தரிசனம் தர வேண்டும்,'' என்று, மனதிற்குள் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தான்.
கள்ளம் கபடமில்லாத குழந்தை உள்ளத்துடன், அவன் தன்னை நினைத்து பிரார்த்தனை செய்ததைக் கண்ட கடவுளும் சிறுவன் முன்னால் தோன்றினார்.
சிறுவன் அதற்கு முன் இறைவனை நேரில் பார்த்ததில்லை. அதனால் அவன் அவரிடம், ""நீங்கள் யார்?'' என்று வினவினான்.
இறைவன், ""நான்தான் இறைவன். நீ என்னை பார்க்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்தாய் அல்லவா! அதனால் தான், இப்போது உனக்குக் காட்சி கொடுத்திருக்கிறேன்'' என்றார்.
சிறுவன், ""நீங்கள்தான் இறைவன் என்று நான் எப்படி நம்புவது? ஏற்கனவே உங்களைப் பார்த்த ஒருவர் இங்கு வந்து, "இவர்தான் இறைவன்!' என்று உங்களைச் சுட்டிக்காட்டி கூறினால் தான், நீங்கள் இறைவன் என்று நம்புவேன்!'' என்றான்.
""அப்படியா!'' என்ற இறைவன், ""என்னை இதற்கு முன் பார்த்த யாரையாவது உனக்கு தெரியுமா?'' என்று கேட்டார்.
""ஏன் தெரியாது?'' என்ற சிறுவன், ""இங்கு சற்று முன் அமர்ந்து தியானம் செய்த துறவிக்கு உங்களைத் தெரியும். அவர் இதற்குள் நீண்ட தூரம் சென்றிருக்கமாட்டார். நான் அவரைத் தேடிப் பிடித்து இங்கு அழைத்து வருகிறேன். அதுவரை நீங்கள் இங்கேயே இருக்க வேண்டும். புரிகிறதா!'' என்றான்.
அதற்கு இறைவனும், "சரியப்பா...நீ கூறியபடியே அந்தத் துறவியை இங்கு அழைத்து வா! நான் காத்திருக்கிறேன்,'' என்றார்.
அவரிடம் சிறுவன், "இப்படிச் சொல்லிவிட்டு, நான் இங்கிருந்து சென்றதும் போய்விடலாம் என்று நினைக்கிறாயா? என்னை ஏமாற்ற முடியாது. நீ இங்கிருந்து தப்ப முடியாதபடி நான் உன்னை மரத்தில் கயிற்றால் கட்டிவிட்டு, பிறகு சென்று இங்கு துறவியை அழைத்து வருகிறேன்,'' என்றான்.
சிறுவன் நாலைந்து மாடுகளின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த கயிறுகளை அவிழ்த்தான். அந்தக் கயிறுகளைக் கொண்டு இறைவனை மரத்தில் நன்றாகக் கட்டினான்.
பிறகு சிறுவன் துறவி சென்ற திசையை நோக்கி வேகமாக ஓடினான்.
துறவியை நெருங்கிய அவன், ""சுவாமி! நீங்கள் கூறியபடி நான் ஆற்றில் நீராடிவிட்டு மரத்தடியில் அமர்ந்து, "இறைவனே! நீ என் முன்னால் தோன்றி எனக்குத் தரிசனம் தர வேண்டும்' என்று பிரார்த்தனை செய்தேன். அப்போது என் முன்னால் ஒருவர் தோன்றி, "நான்தான் இறைவன். நீ பிரார்த்தனை செய்ததால், இப்போது உனக்குக் காட்சி கொடுத்திருக்கிறேன்' என்று கூறினார். அவர் கூறியதை நான் நம்பவில்லை. ஆதலால் அவரை நான் ஒரு மரத்தில் கட்டிப் போட்டு விட்டு வந்திருக்கிறேன். நீங்கள் அங்கு வந்து அவர் இறைவனா, இறைவன் இல்லையா? என்று எனக்குச் சொல்லுங்கள்'' என்று கூறி அழைத்தான். அதிர்ந்து போன துறவி சிறுவனுடன் சென்றார்.
சிறுவன் மரத்தில் கட்டப்பட்டிருந்த இறைவனைச் சுட்டிக்காட்டி துறவியிடம், ""அதோ பாருங்கள்! நான் இவரைத்தான் மரத்தில் கட்டிப்போட்டேன். இவர்தான் இறைவனா?'' என்று கேட்டான்.
துறவியின் கண்களுக்கு மரத்தில் கட்டியிருந்த இறைவன் தெரியவில்லை.
எனவே அவர் சிறுவனிடம், ""நீ என்ன சொல்கிறாய்? இங்கு யாருமே இல்லையே!'' என்றார்.
அதற்குச் சிறுவன், ""என்ன சுவாமி சொல்கிறீர்கள்? நன்றாகப் பாருங்கள்! அதோ, அங்கு நான் மரத்தில் கட்டியவர் இருக்கிறாரே!'' என்றான்.
துறவிக்கோ ஒன்றும் புரியவில்லை.
அப்போது மரத்தில் கட்டப்பட்டிருந்த இறைவன், "சிறுவனே! நீ கள்ளம் கபடமற்ற தூய உள்ளத்துடன், நம்பிக்கையோடு என்னை அழைத்தாய். அதனால் நான் உனக்குத் தரிசனம் கொடுத்தேன். உனக்கு இருக்கும் நம்பிக்கை இந்தத் துறவிக்கு இல்லை. அதனால் நான் உன் கண்களுக்கு மட்டும் தெரிகிறேன். துறவியின் கண்களுக்குத் தெரியவில்லை!'' என்றார்.
அதைக் கேட்ட சிறுவன், "இறைவனே! இவர் எனக்கு குரு போன்றவர். இவர் கூறிய வழியைப் பின்பற்றியதால்தான், எனக்கு உங்கள் தரிசனம் கிடைத்தது. எனவே இவருக்கும் நீங்கள் இப்போது தரிசனம் கொடுங்கள்,'' என்று கேட்டுக்கொண்டான்.
சிறுவனின் பிரார்த்தனையை ஏற்று, இறைவன் துறவிக்கும் தரிசனம் கொடுத்தார்.
ஆன்மிக வாழ்க்கையில் "இறைவன் மீது நம்பிக்கை' என்பது மிகவும் முக்கியத்துவம் உடையது.
ஒரு குழந்தை, "நான் கேட்பதை என் தாய் நிச்சயம் கொடுப்பாள்' என்ற நம்பிக்கையுடன் தாயிடம் கேட்கிறது. அது போன்ற நம்பிக்கையுடன் தான், நாம் இறைவனிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும்