Friday, 29 December 2023

இறால் மீன்...


மீனில் சூப்பர் இதுதான்.. இறால் மீன் செய்றீங்களா? இறால் சாப்பிட்டா என்னாகும் தெரியுமா? எத்தனையோ மீன்வகைகள் இருந்தாலும், குழந்தைகளுக்கு அதிகம் தரக்கூடிய மீன் என்றால் அது இறால் மீன்கள்தான்.. ருசி மட்டுமல்லாமல், அதிக சத்துக்களை உடைய மீன்களில் ஒன்றாக இந்த இறால் திகழ்கிறது.


இறால் மீன்களில் நிறைய புரோட்டீனும், வைட்டமின் D-யும் உள்ளன.. முக்கியமாக இதில் கார்போஹைட்ரேட் அவ்வளவாக கிடையாது. அதனால்தான், உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், இந்த மீனை தாராளமாக சாப்பிடலாம்.

Do you know the Health Benefits of Prawn and Prawn Fish is the Best Food for Weight Loss
சத்துக்கள்: இறாலில் அஸ்டக்ஸாந்தின் என்ற கரோடெனாய்ட் அதிக அளவில் உள்ளது.. மிகச்சிறந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டாக இது விளங்குகிறது. அதனால்தான், சருமத்துக்கு பாதுகாப்பை இறால் மீன்கள் தருகின்றன.. வயதான தோற்றத்தையும் தள்ளிப்போட உதவியாக இருக்கிறது, இறாலிலுள்ள வைட்டமின் D சத்துக்கள்.





இறால்களில் ஒளிந்திருக்கும், ஹெபாரின் என்ற பொருள், கண் கோளாறுகளை நீக்குகிறது.. விழித்திரைக்கு பாதுகாப்பை தருவதுடன், கண் பார்வையை கூர்மையடைய செய்கிறது. தலைமுடி அதிகமாக கொட்டினால், உணவில் தாராளமாக இறாலை சேர்த்து கொள்ளலாம்.. எலும்புகள் சிதைவு ஏற்படாலும், பற்களின் உறுதிக்கும், இறாலிலுள்ள கால்சியம் துணை நிற்கிறது.
பிளஸ் பாயிண்ட்: இறால் மீனில், மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட்டாக இருப்பது, அதிலிருக்கும் அயோடின் சத்துக்களும், அளவுக்கதிகமான கனிமச்சத்துக்களும்தான்.. ஹீமோகுளோபினில் ஆக்ஸிஜன் கலக்கும் செயலில் முக்கிய பங்கு வகிக்கிறது இந்த கனிமம்...

அதிகமான இரும்புச்சத்து உடம்பில் கலக்கும்போது, தசைகளுக்கு கூடுதல் அளவிலான ஆக்ஸிஜன் செல்லக்கூடும்.. இப்படிப்பட்ட இறால் மீனை குழந்தைகளுக்கு சாப்பிட தருவதால், மூளைக்கு செல்லும் ஆக்ஸிஜனின் அளவும் அதிகரித்து ஞாபக சக்தியும் அதிகரிக்கிறதாம்.

கால்சியம்: அதுமட்டுமல்ல, அயோடின் சத்துக்கள் இந்த மீனில் நிறைய உள்ளது.. உடலில் தைராய்டு ஹார்மோன்கள் சுரக்கவும் அடித்தளமாக உள்ளது.. இந்த ஹார்மோன்கள் குழந்தை பருவத்திலும், கர்ப்பமாக இருக்கும் நேரத்திலும், மூளையின் வளர்ச்சிக்காக தேவைப்படுகிறது.

இதைத்தவிர, புரோட்டீன், கால்சியம், பொட்டாசியம் உட்பட ஏகப்பட்ட வைட்டமின்கள் நிறைந்திருப்பதால், புற்றுநோய்களிலிருந்து மனிதர்களை காக்கிறது.. முக்கியமாக, நுரையீரல் புற்றுநோய்க்கு எதிராக போராடுவதில், இறால் மீன்களுக்கு நிறைய பங்குள்ளது. அந்தவகையில், தவிர்க்க கூடாத உணவாக, இறால் மீன்கள் விளங்கி வருகின்றன.

மாதவிடாய்: இறாலில் அயோடின் அபரிமிதமாக உள்ளதால், உடலில் தைராய்டு ஹார்மோன்கள் சுரக்க பேருதவி செய்கிறது.. இந்த ஹார்மோன்கள் குழந்தை பருவத்திலும், கர்ப்பமாக இருக்கும் நேரத்திலும், மூளையின் வளர்ச்சிக்காக தேவைப்படுகிறது. இறாலில் ஒமேகா-3 கொழுப்பமிலங்கள் நிரம்பி உள்ளன.. பெண்களுக்கு மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் வலியை குறைக்கவும், பிறப்புறுப்புகளுக்கு சீரான முறையில் இரத்த ஓட்டம் இருக்கவும், இந்த இறால்கள் மிகவும் பயன்படுகின்றன.


Thursday, 28 December 2023

மாசிக்காய்.. மகத்துவம் நிறைந்த காய்..


மாசிக்காய்.. மகத்துவம் நிறைந்த காய்..பச்சிளம் குழந்தை முதல் முதியோர்வரை காக்கும் மாசிக்காய் அற்புதம
குழந்தைகள் முதல் முதியவர்கள்வரை நோய் நொடியில்லாமல் காக்கக்கூடிய அருமருந்துதான் மாசிக்காய்.. இதன் பயன்கள் என்னென்ன தெரியுமா? எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா?


இந்த மாசி மரத்தின் கிளைகளை ஒருவித பூச்சிகள் துளையிடுமாம்.. அப்போது, அந்த கிளையிலிருந்து வடியும் பால், நாளடைவில் காய்ந்து கெட்டிப்பட்டுவிடும். இந்த கெட்டித்தன்மை வாய்ந்த பொருள்தான் மாசிக்காய் என்பார்கள்.

Do you know the Excellent Health Benefits of Masikkai and Maasikkai is the Best Herbal Medicine for Born Babies
மாசிக்காய்: பெரும்பாலும், பச்சிளம் குழந்தைகளுக்கு இந்த மாசிக்காயை உரைமருந்தாக பயன்படுத்துவார்கள்.. குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க வழங்கப்படுவதுதான் இந்த மாசிக்காய்.. மாசிக்காயை பொடி செய்து, ஒரு ஸ்பூன் எடுத்து தேன் சேர்த்து தந்தால் பேதி, சீத பேதி நிற்கும். அல்லது மாசிக்காயை தாய்ப்பால் விட்டு இழைத்து குழந்தையின் நாவில் தடவி வந்தால் பேதி நின்றுவிடும்.




பச்சிளம் குழந்தைகளுக்கு நாக்கில் மாவு போன்று வெள்ளை நிறத்தில் படிந்திருக்கும்.. இந்த வெண்மையை நீக்கவும் மாசிக்காய் உதவுகிறது. மாசிக்காய் பொடி என்றே நாட்டு மருந்து கடையில் தனியாக கிடைக்கிறது என்றாலும், மாசிக்காயை உரைத்து இழைத்து பயன்படுத்துவதே குழந்தைக்கு நல்லது.

மாதவிடாய்: பெண்களுக்கு இந்த மாசிக்காய் மிகவும் பயன்தருகிறது.. மாசிக்காயை பொடி செய்து, ஒருநாளைக்கு 3 முறை சாப்பிட்டு வந்தால், மாதவிடாயின்போது ஏற்படும், அதிக ரத்தப்போக்கு கட்டுப்படும்..

அதேபோல, மாசிக்காய் தூள் செய்து, 50 கிராம் எடுத்து, 800 மி.லி., தண்ணீருடன் கலந்து, 10 நிமிடம் காய்ச்சி வடிகட்டி வைத்து கொள்ள வேண்டும். இதிலிருந்து 30 மி.லி. முதல் 60 மி.லி. வீதம் குடித்து வந்தால், பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் குணமாகும். அல்லது மாசிக்காய் தூள் செய்து, பாலில் அல்லது மோரில் கலந்து குடித்துவரலாம்.

மாசிக்காய்: தொண்டை, சளி, இருமல், சுவாச கோளாறுகளுக்கு மாசிக்காய் பேருதவி செய்கிறது. இந்த மாசிக்காயை தூளாக்கி, வெந்நீரில் போட்டு மூடிவைத்துவிட வேண்டும்.. 10 நிமிடம் கழித்து, அந்த தண்ணீரை மட்டும் வடிகட்டி வாய் கொப்பளித்து வந்தால் வாய்ப்புண்கள் குணமாகும்.. ஈறுகளிலிருந்து ரத்தம் வடிவது நின்றுவிடும். கிருமிகள் இருந்தாலும் நீங்கிவிடும்.. தொண்டை வலி அகலும். அல்லது மாசிக்காய் பட்டை பயன்படுத்தி, கஷாயம் போல வைத்து குடிக்கலாம்.

கால் இடுக்குகளில் சேற்றுபுண்களை போக்க இந்த மாசிக்காய் உதவுகிறது.. இரவு தூங்க செல்வதற்கு முன்பு, மாசிக்காயை தண்ணீரில் குழைத்து விரல் இடுக்குகளில் உள்ள புண்களில் தடவி வந்தால், சேற்றுபுண்கள் முழுமையாக குணமாகும்.. இனி வரும் நாட்களில் சேற்றுப்புண்கள் வருவதும் தடுக்கப்பட்டுவிடும்.


சர்க்கரை நோயாளிகள்: உடலில் அடிபட்டு ரத்தம் வந்தாலோ அல்லது கட்டிகள், புண்கள், ரணங்கள் ஏற்பட்டுவிட்டாலோ, மாசிக்காயை உரைத்து தடவி வரலாம்.. முக்கியமாக சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் புண்களை ஆற்றக்கூடியதாக இந்த மாசிக்காய் விளங்குகிறது.. ஆசனவாய் வெடிப்பகள் இருந்தால், அல்லது மூலநோய் காரணமான எரிச்சல் இருந்தால், மாசிக்காயை தண்ணீரில் குழைத்து, வெடிப்பு இருக்கும் பகுதியில் தடவி வந்தால் போதும்.. புண்கள் மெல்ல ஆறிவிடும்.


Sunday, 24 December 2023

கணவன்-மனைவி இடையே வயது வித்தியாசம் எவ்வளவு இருக்க வேண்டும்..?


கணவன்-மனைவி இடையே வயது வித்தியாசம் எவ்வளவு இருக்க வேண்டும்..? அறிவியல் தரும் விளக்கம் இதுதான்..!
கணவன்-மனைவி இடையே வயது வித்தியாசம் எவ்வளவு இருக்க வேண்டும்..? அறிவியல் தரும் விளக்கம் இதுதான்..!
அறிவியலில் இதற்கு copulation (physical relationship) என்ற ஆங்கில வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, ஆண் மற்றும் பெண் உடலில் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படும் போது, ​​​​அவர்கள் உடலுறவு கொள்ளும் திறன் கொண்டவர்களாக மாறுகிறார்கள்.


பாரம்பரியமாக, திருமணம் என்பது இந்திய சமூகத்தில் ஒரு புனிதமான பந்தம். இது ஏழு பிறவிகளின் பந்தம் என்று கூறப்படுகிறது. ஆனால், மாறிவரும் சமூகத்தில் திருமணம் தொடர்பான மக்களின் எண்ணங்களும் பல மரபுகளும் மாறிவிட்டன. பொதுவாக நம் சமூகத்தில் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்ற வழக்கம் இருந்து வந்தாலும், தற்போது இளம் தலைமுறையினர் காதல் திருமணத்தின்பால் ஈர்க்கப்பட்டு வருகின்றனர். அத்தகைய சூழ்நிலையில், திருமணம் தொடர்பான ஒரு உண்மையைப் பற்றி இன்று பேசுவோம்.


பாரம்பரியமாக, திருமணம் என்பது இந்திய சமூகத்தில் ஒரு புனிதமான பந்தம். இது ஏழு பிறவிகளின் பந்தம் என்று கூறப்படுகிறது. ஆனால், மாறிவரும் சமூகத்தில் திருமணம் தொடர்பான மக்களின் எண்ணங்களும் பல மரபுகளும் மாறிவிட்டன. பொதுவாக நம் சமூகத்தில் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்ற வழக்கம் இருந்து வந்தாலும், தற்போது இளம் தலைமுறையினர் காதல் திருமணத்தின்பால் ஈர்க்கப்பட்டு வருகின்றனர். அத்தகைய சூழ்நிலையில், திருமணம் தொடர்பான ஒரு உண்மையைப் பற்றி இன்று பேசுவோம்.



காதல் நிச்சயமற்றது என்று கூறப்படுகிறது. எந்த ஆணின் இதயத்தில் எந்தப் பெண் இருப்பாள், எந்தப் பெண்ணின் இதயத்தில் எந்த ஆண் இடம் பெறுவான் என்பது பற்றி எதுவும் சொல்ல முடியாது. இங்கே எல்லா விஞ்ஞானமும் தோல்வியடைகிறது. இதுபோன்ற பல உதாரணங்கள் நம் முன்னே உள்ளன. மூத்த கிரிக்கெட் வீரர்கள் சச்சினின் மனைவி அஞ்சலி டெண்டுல்கர் அவரை விட நான்கு வயது மூத்தவர்.ஆனால், அறிவியலின்படி கணவன் மனைவிக்கு இடையே வயது வித்தியாசம் என்னவாக இருக்க வேண்டும் என்பதை இன்று உங்களுடன் விவாதிக்க விரும்புகிறோம்.



இந்த தலைப்புக்கு வருவதற்கு முன், அறிவியலில் திருமணம் என்ற கருத்து இல்லை என்பதை உங்களுக்கு தெளிவுபடுத்த விரும்புகிறோம். மாறாக, இங்கு ஆணும் பெண்ணும் உடலுறவு கொள்ள குறைந்தபட்ச வயது என்னவாக இருக்க வேண்டும் என்பது பற்றிய விவாதம் என்றும் சொல்லலாம்.



அறிவியலில் இதற்கு copulation (physical relationship) என்ற ஆங்கில வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, ஆண் மற்றும் பெண் உடலில் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படும் போது, ​​​​அவர்கள் உடலுறவு கொள்ளும் திறன் கொண்டவர்களாக மாறுகிறார்கள்.



ஏழு முதல் 13 வயது வரையிலான பெண்களில் இந்த மாற்றம் ஏற்படத் தொடங்குகிறது. அதேசமயம் ஆண்களில் இந்த மாற்றம் 9 முதல் 15 வயதுக்குள் ஏற்படுகிறது. அதாவது ஆண்களை விட பெண்களுக்கு இந்த ஹார்மோன் மாற்றம் விரைவில் நிகழ்கிறது. இதன் காரணமாக, ஆண்களை விட அவர்கள் விரைவில் உடல் ரீதியான உறவைப் பெற தகுதியானவர்களாக மாறுகிறார்கள்.



இருப்பினும், இந்த ஹார்மோன் மாற்றம் பெண்ணோ அல்லது ஆணோ அதன் பிறகு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று அர்த்தமல்ல. உலகின் பல நாடுகளில் உடலுறவுக்கான குறைந்தபட்ச வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வயது 16 முதல் 18 வயது வரை. நம் நாட்டில் உடலுறவு கொள்வதற்கான குறைந்தபட்ச வயது 18 ஆகும்.



இதனுடன், நம் நாட்டில் திருமணத்திற்கான குறைந்தபட்ச வயது சட்டப்பூர்வமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பெண் குழந்தைகளின் வயது 18 ஆகவும், ஆண் குழந்தைகளின் வயது 21 ஆகவும் வைக்கப்பட்டுள்ளது. அதன்படி, கணவன்-மனைவியின் வயதில் மூன்று வருட இடைவெளி சட்டப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.



இருப்பினும், சமீபத்தில் பெண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயதை 21 ஆக உயர்த்துவது குறித்து விவாதம் நடந்தது. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், உச்ச நீதிமன்றம் அதை நிராகரித்தது.



ஒட்டுமொத்தத்தில், பாரம்பரியமாக இந்திய சமுதாயத்தில், கணவன்-மனைவியின் வயதில் மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் இடைவெளி ஏற்றுக்கொள்ளத்தக்கது. ஆண் குழந்தைகளை விட பெண்ணின் வயது குறைவாக இருக்க வேண்டும் என்று சமூகமும் கூறுகிறது. அதுதான் இந்திய திருமண கட்டமைப்பில் உருவாக்கி வைத்துள்ளது. ஆனால், சில நேரங்களில் இந்த இடைவெளி 10 முதல் 15 ஆண்டுகள் வரை இருக்கும்.


Saturday, 23 December 2023

முருங்கை பூ....

முருங்கை பூ பொடியே போதும்.. நோயை நாலடி தள்ளி நிறுத்தும்.. வாவ் முருங்கையிலையை சமையலில் சேர்த்து கொள்வது போலவே, முருங்கைப்பூக்களையும் சேர்த்து கொண்டால், கூடுதல் பலன்கள் கிடைக்கும். இதில், முருங்கைப்பூ பொடி தரும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
கண்களில் உள்ள எல்லா கோளாறுகளையும் சரிசெய்யக்கூடியது இந்த பூக்கள்.. முருங்கைப் பூவை பாலில் வேகவைத்து, பிறகு அந்த பாலை வடிகட்டி குடித்து வந்தால் கண்களுக்கு குளிர்ச்சி கிடைக்கும்..


நீரிழிவு நோயாளிகள்: நீரிழிவு நோயாளிகளுக்கு முருங்கைப்பூக்கள் மிகவும் நல்லது.. காரணம், இந்த பூக்கள் உடல் சூட்டை தணிக்கக்கூடியது.. மாதவிடாய் நேரத்தில் அளவுக்கு அதிகமான உதிரப்போக்கை கட்டுப்படுத்தக்கூடியது.. குழந்தைகளின் நினைவாற்றலுக்கு, முருங்கைப்பூ உதவுகிறது. முருங்கைப்பூவில் அரைத்து பாலில் கலந்து கொதிக்க வைத்து, பனங்கல்கண்டு சேர்த்து குடித்து வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.

Do you know Excellent Health benefits of Drumstick Flowers and Drumstick Flowers Powder is the Best Medicine
முருங்கைப் பூவை அரைத்து பாலில் கொதிக்க வைத்து பனங்கற்கண்டு கலந்து 48 நாட்கள் அதாவது ஒரு மண்டலம் அருந்தி வந்தால் தாம்பத்ய உறவில் நாட்டம் உண்டாகும். ஆனால், இந்த பூக்களை காயவைத்து பொடி செய்து சாப்பிட்டால், என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?


வாதம், கபம்: இந்த பொடியை தொடர்ந்து சாப்பிட்டு வரும்போது, பித்தம், வாதம், கபம் போன்ற பிரச்சனைகள் தீர்கின்றன.. ரத்த சோகையும் நீங்கி, உடலில் ரத்த விருத்தி ஏற்படுகிறது.. சிறுநீரக கற்கள் வராமல் இருக்கவும் இந்த பொடி துணை செய்கிறது..

அதிக வேலைப்பளு, மன அழுத்தம் காரணமாக சிலருக்கு நரம்புகள் செயலிழந்துவிடும். இதுபோன்ற பாதிப்பு உள்ளவர்கள், முருங்கை பூ பொடியில் கஷாயம் போல செய்து வாரம் 2 முறை குடித்து வரலாம். இதனால், மன அழுத்தம் நீங்குவதுடன், பயம், கோபம், அசதி, தலைவலி குணமாகி நன்றாக தூக்கம் வரும்.. மனம் அமைதி பெறும். இந்த பொடியை 5 கிராம் வீதம் தேன் கலந்து தினமும் 2 வேளை சாப்பிட்டு வந்தால், கண்ணில் ஏற்படும் வெண்படலம் மாறும்..

முருங்கை பூக்கள்: முருங்கை பூக்களை நிழலில் உலர்த்தி காயவைத்து பொடி செய்து தேன்கலந்து சாப்பிட்டு வந்தால், பார்வைத்திறன் அதிகரிக்கும். இந்த பொடியை, கஷாயம் செய்து அதனுடன் பனைவெல்லம் சேர்த்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால், உடல் வலுவடைவதுடன், நரம்புகள் புத்துணர்வு பெறும்.

முருங்கைப் பூவின் பொடியை தேனில் கலந்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் ஆண்மை பெருகும். நீர்த்துப்போன விந்து கெட்டிப்படும். பெண்களுக்கு வெள்ளைப்படுதல் குணமாகி, கர்ப்பப்பை பலமடையும்..

ஆலோசனை: முருங்கைப் பூ பொடியை பச்சை பாலுடன் 60 நாட்களுக்கு சாப்பிட்டு வந்தாலும், குழந்தையின்மை பிரச்சனைகள் நீங்கும்.. ஆனால், உள்ளுக்குள் இப்படி மருந்தாக உட்கொள்ள நேர்ந்தால், கட்டாயம் டாக்டர்களின் சித்தா அல்லது ஆயுர்வேத மருத்துவரை அணுகி ஆலோசனையை பெற வேண்டும்.


Friday, 22 December 2023

வைகுண்ட ஏகாதசி அன்று இறந்தவர்களுக்கு மறுபிறவி இல்லை என்று சொல்வார்கள்.


ஏகாதசி திதியன்று உயிர் நீப்பவர்களும் கூட அவரவர் பாவ, புண்ணிய பலன்களை அனுபவித்தே தீரவேண்டும். வைகுண்ட ஏகாதசி அன்று இறந்தவர்களுக்கு மறுபிறவி இல்லை என்று சொல்வார்கள். ஜோதிட சாஸ்திரங்கள் என்ன சொல்கின்றன என்று பார்க்கலாம்.


வைணவ ஸ்தலங்களில் பகல் பத்து இராப்பத்து என்று சொல்லக்கூடிய பகல் பத்து முடிந்து ராப்பத்து தொடங்கும் நாளான வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக பக்தர்களுக்கு காட்சி கொடுப்பது வழக்கம். அதனை தொடர்ந்து முக்கிய நிகழ்வான வைகுண்ட ஏகாதசியான இன்று அனைத்து வைணவ ஸ்தலங்களிலும் பெருமாள் சொர்க்கவாசல் வழியாக எழுந்தருளி அருள்பாலித்தார்.

Sorgavasal Tiruappu: Vaikunta ekadasi day death Can you go to heaven 
வைகுண்ட ஏகாதசி திதியில் சொர்க்கவாசல் முழுமையாக திறந்திருக்கும். அதற்காக, வைகுண்டத்துக்குள் எல்லாரும் புகுந்து விடமுடியாது. புண்ணியம் செய்பவர்கள் மட்டுமே வைகுண்ட ஏகாதசி நாளில் சொர்க்கத்திற்கு சென்று இறைவனின் பாதத்தை அடையமுடியும். ஏகாதசியில் பகவான் விஷ்ணுவின் நாமம் சொல்லி, அவன் சிந்தனையாகவே இருந்து சொர்க்கவாசல் வழியாக சென்று வணங்கினால் பிறவிப்பயனை அடையலாம்.


ஏகாதசி என்ற சொல்லுக்கு ஸ்ரீமந்நாராயணருக்குரிய பதினோராவது நாள் என்பது பொருள். இதை முப்பத்து முக்கோடி தேவர்களும் கடைபிடிப்பதால் முப்பத்து முக்கோடி ஏகாதசி என்றும் குறிப்பிடுவர். ஒரு ஆண்டில் 24 அல்லது 25 ஏகாதசிகள் வருகின்றன. இவற்றில் மூன்று மிகவும் சிறப்புமிக்கவை. ஆனி மாத சயன ஏகாதசி, கார்த்திகை மாத கைசிக ஏகாதசி, மார்கழி மாத வைகுண்ட ஏகாதசி. இந்த நாட்களில் பெருமாளை தரிசிப்பது சிறப்பு. இதிலும் வைகுண்ட ஏகாதசியே மிக விசேஷம்.

ஞானேந்திரியங்கள் கண், காது, மூக்கு, நாக்கு, தோல்), கர்மேந்திரியங்கள் கை, கால், வாக்கு, பிறப்புறுப்பு, கழிவு உறுப்பு மனம் என்னும் பதினொன்றையும் ஒன்றிணைத்து கடவுளைக் குறித்து செய்யும் விரத வழிபாடு ஏகாதசி விரதம். தாயை விட சிறந்த தெய்வமில்லை காயத்ரியை விட சிறந்த மந்திரமில்லை; ஏகாதசியைவிட சிறந்த விரதமில்லை என்பது ஏகாதசியின் பெருமையை நமக்கு எடுத்துச் சொல்கிறது. அஸ்வமேத யாகம் செய்த புண்ணியத்தை இவ்விரதம் அளிக்கிறது.

ஓராண்டின் அனைத்து ஏகாதசிகளிலும் விரதமிருந்த பலனை வைகுண்ட ஏகாதசியன்று விரதமிருந்தால் பெற முடியும் என்கிறது விஷ்ணு புராணம். சாதாரண ஏகாதசி நாட்களில் விரதமிருக்க இய லாதவர்கள் கூட வைகுண்ட ஏகாதசியன்று விரதமிருப்பது அவசியம். அன்று அதிகாலையில் கோவில்களில் நடக்கும் சொர்க்கவாசல் வைபவத்தை தரிசிக்க வேண்டும்.

பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் தரிசிப்பது மிகச்சிறப்பு. பூலோகத்தில் முதன் முதலில் சொர்க்க வாசல் திறந்த திருத்தலம் ஸ்ரீரங்கம் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீரங்கம் ரங்கநாதர், பண்டரிபுரம் விட்டலன், குருவாயூரப்பன் துவாரகை கிருஷ்ணர் கோவில்களில் ஏகாதசிக்கு பக்தர்களின் கூட்டம் அதிகமாக கூடும்.


இதற்கான புராண நிகழ்வு என்னவென்றால், தேவர்களுக்கு இடையூறு செய்த அசுரர்களான மது, கைடபரை அழிக்க முற்பட்டார் மகா விஷ்ணு. ஆனால் அவர்கள் சரணடைந்தனர். காரணம் இருவரும் விஷ்ணுவின் காதில் இருந்து தோன்றியவர்கள். தங்களின் அருட்சக்தியால் உருவான எங்களை கொல்லாமல், என்றென்றும் வைகுண்டத்தில் தங்கியிருக்கும் பாக்கியத்தை அருள வேண்டும் என வேண்டினர்.

விஷ்ணுவும் சம்மதித்தார். மேலும் அவரிடம், சுவாமி, வைகுண்ட ஏகாதசி நன்னாளில் ஸ்ரீரங்கத்தின் வடக்கு வாசல் வழியே தாங்கள் எழுந்தருளும் போது தரிசிப்பவர்களும், தங்களை பின் தொடர்ந்து வருபவர்களும் பாவம் நீங்கி முக்தி இன்பத்தை அடைய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர். அதன்படி, ஸ்ரீரங்கத்தில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டதும் பெருமாள் பவனி வரும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.

வைகுண்ட ஏகாதசி திதியில் சொர்க்கவாசல் முழுமையாக திறந்திருக்கும். அதற்காக, வைகுண்டத்துக்குள் எல்லாரும் புகுந்து விடமுடியாது. புண்ணியம் செய்பவர்கள் மட்டுமே வைகுண்ட ஏகாதசி நாளில் சொர்க்கத்திற்கு சென்று இறைவனின் பாதத்தை அடையமுடியும்.

ஏகாதசி திதியன்று உயிர் நீப்பவர்களும் கூட அவரவர் பாவ, புண்ணிய பலன்களை அனுபவித்தே தீரவேண்டும். வைகுண்ட ஏகாதசி அன்று இறந்தவர்களுக்கு மறுபிறவி இல்லை என்று சொல்வார்கள். இவர் பெருமாளின் பாதத்தில் போய் சேர்ந்துவிட்டார் என்று கிராமங்களில் சொல்வார்கள். வாழ்நாள் முழுவதும் இறை பக்தியுடனும், தர்ம சிந்தனையுடனும், இனிய குணத்துடனும் இருப்பவர்களே ஏகாதசியன்று மரணம் அடைவார்கள் என்பதால் அவர்கள் நிச்சயம் சொர்கத்திற்கு செல்வது உறுதி.


Tuesday, 19 December 2023

பாரசீகம் என்று நாம் எந்த நாட்டை கூறுகிறோம்?

ஈரான் நாட்டை தான் பண்டைய காலத்தில் பாரசீகம் என்று அழைத்தோம். இவ்வுலகத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மிக மிக முக்கிய நாடுகளில், இந்தியா, சீனா, பாரசீகம், ஆகியனவற்றை குறிப்பிடலாம்.

நாம் அதிகம் கேள்விப்பட்டிருக்கும் “ஆரியர்கள்” பாரசீகத்தில் இருந்து வந்தார்கள் என்று பெரும்பான்மை அறிஞர்களால் நம்பபடுகிறது. உதாரணம், அன்றைய பாரசீக மக்களின் “சொராட்டிரிய” மதத்தின் (Zoroastrianism) புனித நூலான ஜெந் அவெஸ்தா (Avesta) விலும், நம் நாட்டின் ஹிந்துக்களின் புனித நூலான “ரிக் வேதத்திலும்” பல சொற்கள், வாக்கியங்கள், சமமாக பொறுந்தி உள்ளது. ஆகையால், நம் இந்திய கலாச்சாரத்திற்கும் பாரசீக கலாச்சாரத்திற்கும் நிறைய ஒற்றுமை உள்ளன !
பாரசீகம் என்று நாம் எந்த நாட்டை கூறுகிறோம்? சமூக அறிவியல் புத்தகம் படிக்கும் போது எனக்கு எழுந்த சந்தேகம் இது.
இன்றைய ஈரான் நாட்டை தான் பண்டைய காலத்தில் பாரசீகம் என்று அழைத்தோம். இவ்வுலகத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மிக மிக முக்கிய நாடுகளில், இந்தியா, சீனா, பாரசீகம், ஆகியனவற்றை குறிப்பிடலாம்.

நாம் அதிகம் கேள்விப்பட்டிருக்கும் “ஆரியர்கள்” பாரசீகத்தில் இருந்து வந்தார்கள் என்று பெரும்பான்மை அறிஞர்களால் நம்பபடுகிறது. உதாரணம், அன்றைய பாரசீக மக்களின் “சொராட்டிரிய” மதத்தின் (Zoroastrianism) புனித நூலான ஜெந் அவெஸ்தா (Avesta) விலும், நம் நாட்டின் ஹிந்துக்களின் புனித நூலான “ரிக் வேதத்திலும்” பல சொற்கள், வாக்கியங்கள், சமமாக பொறுந்தி உள்ளது. ஆகையால், நம் இந்திய கலாச்சாரத்திற்கும் பாரசீக கலாச்சாரத்திற்கும் நிறைய ஒற்றுமை உள்ளன !


பாரசீகத்தின் மிக முக்கிய பேரரசுகள்,

அகாமனிசியப் பேரரசு (Achaemenid Empire) - காலம் -கிமு 550-330,

செலூக்கியப் பேரரசு (Seleucid Empire) - காலம் - கி.மு. 312 - கி.மு. 63,

பார்த்தியப் பேரரசு (Parthian Empire)- காலம் - கி மு – 247 - கி பி 224,

சாசானியப் பேரரசு (Sasanian Empire) - காலம் - கி.பி. 224 - 651 .

மேற்கண்ட அனைத்து பேரரசுகளும், சொராட்டிரிய மதத்தையே பின்பற்றின. சொராட்டிரிய மதம் ஓரிறைக்கொள்கை உடைய மதம் (Monotheistic religion ).

பின்பு வந்த இஸ்லாமியர்களால் பாரசீக நாடு முழுவதும் இஸ்லாம் மதம் மிக வேகமாக பரவியது. இதில் வருத்தம் என்னவென்றால்,சொராட்டிரிய மதம் முற்றிலுமாக அழிய தொடங்கியது. பல நூறு சொராட்டிரியர்கள் இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இடம்பெயர்ந்தார்கள். இந்தியாவிற்கு வந்தவர்களை நாம் பார்சிகள் (Parsi) என்று இன்றும் அழைக்கிறோம். இந்தியாவின் குஜராத், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் பார்சிகள் அதிகம் வசிக்கிறார்கள்.

பின்பு இஸ்லாம் மதம், அரசியல் ரீதியாக பிளவுப்பட்டு, சன்னி, ஷியா என்று ஆனது. பெரும்பான்மை பாரசீகர்கள் ஷியா பிரிவு இஸ்லாத்தை பின்பற்றினார்கள் (பின்பற்றுகிறார்கள்). பின்பு

சபாவித்து வம்சம் (Safavid dynasty) - 1501 கி.பி - 1736 கி.பி,

குவாஜர் வம்சம் (Qajar dynasty)- 1794கி.பி. - 1925 கி.பி.

பகலவி வம்சம் (Pahlavi dynasty) - 1925 கி.பி. - 1979 கி.பி.

ஆகிய வம்சங்கள் பாரசீகத்தை ஆண்டன. இங்கே, நம் இந்தியாவை ஆண்ட முகலாய பேரரசின் (1526 கி.பி. - 1857 கி.பி.) ஆட்சி மொழி பாரசீகம் என்பது குறிப்பிடத்தக்கது.

கடைசியாக, பகலவி வம்சத்தை 1979 இல் ஈரானியப் புரட்சி மூலம் ஆயதுல்லா ரூகொல்லா கொமெய்னி (Ayatollah Ruhollah Khomeini) முடிவிற்கு கொண்டு வந்தார். இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய முடியாட்சி முறை 1979 இல் மக்களாட்சியாக மறுமலர்ச்சி பெற்றது. ஈரான் என்று தற்போது அழைக்கப்படுகிறது.


இங்கே கவனிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம், பகலவி வம்சம், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு மிக நெருக்கமாக இருந்தது. ஆனால், தற்போதைய ஈரான், அமெரிக்காவையும், இஸ்ரேலையும் மிகக்கடுமையான முறையில் எதிர்கிறது. தற்போது ஈரானின் ஆதிக்கம் மத்தியகிழக்கில் பல அரசியல் மாற்றத்தை தந்துள்ளது. இந்தியாவிற்கு மிக நெருக்கமான நாடக ஈரான் தற்போது உள்ளது.

Sunday, 17 December 2023

சாம தான பேத தண்டம் என்றால் என்ன?

சாம தான பேத தண்டம் என்றால் என்ன?
திருக்குறள்:-
----------------------
ஒல்லும்வா யெல்லாம் வினை நன்றே ஒல்லாக்கால்
செல்லும் வாய் நோக்கிச் செயல்
பொருள் - ஒரு செயலைச் செய்யும்போது சாம, தான, பேத, தண்டம் என்னும் எல்லா உபாயங்களிலும் தண்டம் என்னும் உபாயம் கொண்டு செய்வது நல்லது. அது பலன் அளிக்காத போது, பிற மூன்றினுள் ஏற்ற ஒன்று கொண்டு செய்க.
#சாம #தான, #பேத, #தண்டம் என்றால் என்ன என்பதை உங்களுக்கு பின்வருமாறு ஆழமாக இன்று விளக்குகிறேன்....
சாமம் (conciliation):
---------------------------------
  இருவருக்கும் பொதுவான நன்மைகளை எடுத்துக் கூறியோ, எதிராளியின் மனம் குளிர அவரைப் பாராட்டியோ, ஒரே இயல்புகளைக் கருத்தில் கொண்டோ சமரசம் செய்தல்.
தானம் (placating with gifts):
-----------------------------------------------
பணம், சலுகைகள் அளித்து எதிர்ப்பை அடக்கிவிடுதல்.
பேதம் (sowing dissension):
---------------------------------------------
இருவருக்குள் பிளவுகளை ஏற்படுத்தி, பிரச்னையை வளர்த்தல்.
தண்ட (use of force):
-----------------------------------
ஆதிக்கத்தையும், அதிகாரத்தையும், வலிமையையும் பயன்படுத்தி பிரச்னையை அடக்குதல்!


Saturday, 16 December 2023

தலையில் இரட்டை சுழி இருந்தால் என்ன அர்த்தம் தெரியுமா..


தலையில் இரட்டை சுழி இருந்தால் என்ன அர்த்தம் தெரியுமா..? 
பொதுவாக பலருக்கும் இப்படி இரட்டை சுழி இருக்காது. எங்கோ , யாருக்கோதான் இருக்கும். அந்த வகையில் NHGRI ஆய்வுப்படி உலக மக்கள் தொகையில் 5% பேருக்குத்தான் இரட்டை சுழி இருகிறதாம்.
 பொதுவாக தலையில் ஆண்களுக்கு இரட்டை சுழி இருந்தால் உடனே கிண்டல் செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். ஏனெனில் அவ்வாறு இரட்டை சுழி இருந்தால் அவர்களுக்கு இரண்டு திருமணம் நடக்கும் என்று கூறப்படும். இவ்வாறு சொல்வதை கிராமங்களில் அதிகமாக கேட்க முடியும். ஆனால் இது உண்மையா அல்லது இதற்கு பின் வேறு அறிவியல் காரணங்கள் உள்ளனவா என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.

பொதுவாக தலையில் ஆண்களுக்கு இரட்டை சுழி இருந்தால் உடனே கிண்டல் செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். ஏனெனில் அவ்வாறு இரட்டை சுழி இருந்தால் அவர்களுக்கு இரண்டு திருமணம் நடக்கும் என்று கூறப்படும். இவ்வாறு சொல்வதை கிராமங்களில் அதிகமாக கேட்க முடியும். ஆனால் இது உண்மையா அல்லது இதற்கு பின் வேறு அறிவியல் காரணங்கள் உள்ளனவா என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.

 பொதுவாக பலருக்கும் இப்படி இரட்டை சுழி இருக்காது. எங்கோ , யாருக்கோதான் இருக்கும். அந்த வகையில்  ஆய்வுப்படி உலக மக்கள் தொகையில் 5% பேருக்குத்தான் இரட்டை சுழி இருகிறதாம்.

 உண்மையில் அறிவியல் படி ஒருவருக்கு இரட்டை சுழி இருக்கிறது எனில் மரபணு முக்கிய காரணம். அவர்களுடைய தாத்தா , பாட்டி என முன்னோர்களுக்கு இப்படி இரட்டை சுழி இருந்தால் அதனால் இவர்களுக்கும் இரட்டை சுழி இருக்கலாம்.

உண்மையில் அறிவியல் படி ஒருவருக்கு இரட்டை சுழி இருக்கிறது எனில் மரபணு முக்கிய காரணம். அவர்களுடைய தாத்தா , பாட்டி என முன்னோர்களுக்கு இப்படி இரட்டை சுழி இருந்தால் அதனால் இவர்களுக்கும் இரட்டை சுழி இருக்கலாம்.

 இப்படி இரட்டை சுழி இருப்பவர்களுக்கு இரட்டை திருமணம் நடக்கும் அல்லது முதல் திருமணம் நிச்சயித்து பின் ஏதோ ஒரு காரணத்திற்காக நிறுத்தப்பட்டு பின் மீண்டும் இரண்டாவது திருமணம் நிச்சயிக்கப்படலாம். இதற்கு சுழிதான் காரணம் என கிராமப்புறங்களில் அதிகமாக பேசுவதை காணலாம். ஆனால் இப்படி கூறுவதற்கு பின்னால் எந்த வித நிரூபிக்கப்பட்ட உண்மைகளோ, தகவல்களோ இல்லை.
இப்படி இரட்டை சுழி இருப்பவர்களுக்கு இரட்டை திருமணம் நடக்கும் அல்லது முதல் திருமணம் நிச்சயித்து பின் ஏதோ ஒரு காரணத்திற்காக நிறுத்தப்பட்டு பின் மீண்டும் இரண்டாவது திருமணம் நிச்சயிக்கப்படலாம். இதற்கு சுழிதான் காரணம் என கிராமப்புறங்களில் அதிகமாக பேசுவதை காணலாம். ஆனால் இப்படி கூறுவதற்கு பின்னால் எந்த வித நிரூபிக்கப்பட்ட உண்மைகளோ, தகவல்களோ இல்லை.

 ஒருவருக்கு இரட்டை சுழி இருக்கிறது எனில் அவர்கள் நேரடியாக எதையும் பேசுபவர், பொறுமையானவர், எல்லோரிடத்திலும் அன்பாக பழகக்கூடியவர், ஒருவருக்கு கஷ்டம் எனில் முதலில் நிர்ப்பவர் என இதுபோன்ற குணங்களுடன் இருப்பார்கள். மேலும் தன்னை சுற்றி இருப்பவர்களை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வார்கள்.


Thursday, 14 December 2023

சந்தியாகாலம்

பகலும், இரவும் கலக்கும் நேரம் சந்தியாகாலம் எனப்படும். சூரிய அஸ்தமன நேரம், தோஷம் நிறைந்த சமயமாக இது கருதப்படுகிறது. அசுரர், பூதம், பேய், பிசாசு போன்ற தீய சக்திகள் வலிமை பெரும் நேரமிது. ஆகவே இவ்வேளையில் உண்பதையும், உறங்குவதையும் தவிர்க்கவேண்டும்.


தோஷம் நிறைந்த இந்த நேரத்தில் உணவு உண்டால் அந்த உணவு விஷமாக மாறும். எனவே இந்த நேரத்தில் சாப்பிடுவதை தவிர்ப்பது மிகவும் நல்லது

பாலாரிஷ்ட.....

பிறந்த ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து எண்ண வரும் 6,8,12-ம் இடங்களில் குரு கிரகம் நின்றாலும் (அல்லது) சூரியன் (ஆத்மகாரகன்),சந்திரன் (உடல் காரகன்) நின்றாலும் 8-ம் இடமான ஆயுள் தானத்தில் ஆயுள் காரகன் சனி நின்றாலும் அது பாலாரிஷ்ட தோஷமாகும். இந்த குழந்தைகளுக்கு நோய் நொடிகளே பிறந்த காலத்திலிருந்து ஒன்று (அல்லது) இரண்டு ஆண்டுகள் வரை தரக்கூடிய வாய்ப்புகள் உண்டு.


பரிகாரம்...


இந்த தோஷம் நீங்க மிருத்யுஞ் ஹோமம் செய்யலாம். (அல்லது) பிரதோஷ வேளையில் சிவ வழிபாடு, லட்சுமி நரசிம்மர் வழிபாடு இயற்றலாம். (அல்லது) ஸ்ரீசக்கரத்தாழ்வாரை வழிபட்டு வரலாம். விஷ்ணு சகஸ்வரநாமம் லலிதா நாமம் பாராயணம் செய்து வரலாம். இந்த மந்திரத்தை வழிபட்டு விபூதியை குழந்தையின் நெற்றியில் பூசலாம்.

குழந்தைகளின் பாலாரிஷ்ட நோய் தீர்த்தருளும் மந்திரம்



குழந்தைகளின் பாலாரிஷ்ட நோய் தீர்த்தருளும் மந்திரம்!


மிகப்பெரிய செல்வம், குழந்தைகள்தான். குழந்தைச் செல்வம் இல்லாத வீட்டில், வேறு எத்தனைச் செல்வங்கள் இருந்தாலும் பயனில்லை. ‘எவ்வளவு சொத்துகள் இருந்து என்ன... அள்ளியெடுத்துக் கொஞ்சி விளையாடக் குழந்தை இல்லை’ என்றால் அதுவே மிகப்பெரிய ஏக்கமாகவும் துக்கமாகவும் கலங்கடித்து விடுவதை அனுபவித்தவர்களால் மட்டுமே சொல்ல முடியும்!

நம் குழந்தைகளுக்கு ஒன்றென்றால், நாம் துடித்துப் போய்விடுவோம். அவர்களின் ஒரு சின்ன தலைவலியைக் கூட நம்மால் தாங்கிக் கொள்ளமுடியாது. அந்தக் குழந்தை, சின்னச் சின்ன நோய்கள் வந்து சரியாகச் சாப்பிடாமல் இருக்கும். அப்படியே சாப்பிட்டாலும், சாப்பிட்டதையெல்லாம் வாந்தி எடுத்துவிடும். சாப்பிடாததாலும் சாப்பிட்டதை வாந்தி எடுத்துவிட்டதாலும் இரவில் தூங்காமல், எதற்காகவேனும் அழுது கொண்டே இருக்கும். இதை பாலாரிஷ்ட நோய் என்பார்கள்.


இந்தப் பிரச்சினைகளில் இருந்து குழந்தைகளை மீட்டெடுக்கவும் குழந்தைகள் சத்தாக ஆரோக்கியதுடன் வலம் வரவும் வளரவும் இந்த ஸ்லோகம் உதவும் என்கிறார் சென்னை நங்கநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் ஆலயத்தின் பாலாஜி வாத்தியார்.

பால க்ரஹ விநாச்ச தர்மநேதா கிருபாகர:
உக்ரக்ருத்யோக்ரா வேகச்ச உக்ர நேத்ர: சதக்ரது:

குழந்தைகளுக்கு எப்போதெல்லாம் முடியவில்லையோ, உணவின்மையால் தவித்து அழுகிறார்களோ அப்போதெல்லாம் சொல்லுங்கள். குழந்தைகள் உடனே துள்ளிக்குதித்து ஆடத் தொடங்குவார்கள்.

    

 

பாலாரிஷ்ட வழிபாடு,



புத்திர பாக்கியத்தை விரும்பாதவர் யாரும் இல்லை. திருமணமான நாளில் இருந்தே வம்சம் தழைக்க ஒரு வாரிசு எப்போது பிறக்கும் என்று எதிர்பார்ப்பது மனித இயல்பு. அப்படி பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாகப் பிறந்தால்தானே சந்தோஷம் இருக்கும்? ஆனால், ஜோதிடத்தில் பாலாரிஷ்ட தோஷம் என்று ஒன்று இருக்கிறதே..?

அது என்ன பாலாரிஷ்டம்?

ஒரு குழந்தை எந்தவிதமான குறைபாடுகளும் இல்லாமல் ஆரோக்கியமாகப் பிறக்கவேண்டுமானால், பெற்றோர்களின் ஜனன ஜாதகத்தில் சத்புத்திரயோகம் இருக்க வேண்டும்.


அப்படி இல்லாமல் கருவில் உருவான குழந்தை கை - கால்கள் ஊனத்துடனோ, மன வளர்ச்சி இல்லாமலோ பிறக்கும் நிலையில், பெற்றோர்களுக்கும் பிள்ளைக்கும் பாலாரிஷ்டம் உள்ளதென்று சொல்லலாம். பால - குழந்தைப் பருவம்; அரிஷ்டம் - நோய் என்று பொருள்.

குழந்தை பிறக்கும்போது ஏற்படக்கூடிய உடல் குறைபாடு மற்றும் மனவளர்ச்சிக் குறைபாடு மட்டும்தான் பாலாரிஷ்ட தோஷம் என்பது இல்லை. வளரும் பருவத்தில் விபத்து மற்றும் அதிர்ச்சிகளின் காரணமாக ஏற்படக்கூடிய உடல் குறைபாடு, மனச்சிதைவு போன்றவற்றுக்கும்கூட காரணம் பாலாரிஷ்ட தோஷம்தான்.

பாலாரிஷ்ட தோஷத்திற்கான அறிகுறிகள்:

* சுய நினைவில்லாமலும், பால் குடிக்காமலும், அழாமலும் அமைதியாக இருத்தல்.

* மூக்கு சப்பையாகவும் கண்கள் சொருகியது போன்றும் இருத்தல்.

* கால்கள் மடங்கி, உட்கார முடியாமல் கஷ்டப்படுதல்.

* வயிற்றுப் பக்கம் சுருக்கமாகி வளைந்தது போல உடல் அமைப்பு காணப்படுதல்.

* சுய நினைவு இல்லாமல், பால் அருந்தாமல், பிரக்ஞை இல்லாமல் படுத்துக் கிடக்கும் நிலை.

* மூன்று மாதங்கள் ஆனபிறகும் இமைகளைத் திறக்காது, கண்களில் வெண்மையாகக் காணப்படுதல்.

* ஊமைத்தன்மை, காது கேளாமை.

* கைகள் இல்லாமல், காதுகள் உள்சுருங்கி, தலை பள்ளமாகி அமைந்திருத்தல்.

இவ்வாறு இன்னும் 76-க்கும் மேற்பட்ட பாலாரிஷ்ட தோஷங்கள் குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

பொதுவாக, பாலாரிஷ்ட தோஷங்களில், 1. அங்க ஹீன பாலாரிஷ்ட தோஷம், 2. ஜென்ம அரிஷ்டம், 3. சந்ததி விருத்தியா பாலாரிஷ்ட தோஷம் என மூன்று வகைகள் இருக்கின்றன. இதுபற்றிப் பெற்றோர்கள் கவலைப்படவேண்டியதில்லை. உரிய பரிகாரங்களைச் செய்து பலன் பெற முடியும்.

பாலாரிஷ்டம் வரும் கிரஹ நிலைகள்:

சூரியன், புதன், கேது, சிம்மத்தில் அமர்ந்து குரு நீசம் பெற்றிருந்தாலும், நவாம்சத்தில் குருவும் கேதுவும் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இருந்தாலும், புதனும் குருவும் 12-லும் ஞானகாரகன் கேது 5-ம் இடத்தில் இருந்தாலும் இந்நிலை ஏற்படக்கூடும்.

புத்திரகாரகனான குரு, பெற்றோர்களது ஜனன ஜாதகத்தில் பலவீனமாக அமைந்தாலும் குழந்தைக்குப் பாலாரிஷ்ட தோஷ நிலை தாக்கக்கூடும் என்கின்றன ஜோதிட விதிகள்.

பாலாரிஷ்ட தோஷம் நீங்க... சிசுவின் ஜனன ஜாதகத்தில் ஆயுள்காரகனாகிய சனியின் அஷ்டவர்க்கம்வரை உள்ள ஸ்தான நிலை, குழந்தையின் தசாபுக்திக் காலம் என்ன, நட்சத்திரப்படி கோள்களின் அசைவுகள் என்ன சொல்கின்றன, குழந்தை பிறந்தபோது பெற்றோருக்கு நடைபெற்ற தசாகாலம் போன்றவற்றுக்குத் தக்கபடி, செய்யவேண்டிய பரிகாரங்கள் உள்ளன. சூரிய தசை - ராகு, கேது புக்திகளில் அதற்கு உரிய பூஜாக்ரமங்களைச் செய்துவிட வேண்டும்.

செவ்வாய் தசையில் ராகு அல்லது கேது புக்தி, சனி தசையில் ராகு அல்லது கேது புக்தி, ராகு, கேது தசையில் புதன் புக்தி போன்ற காலங்களில் பாலாரிஷ்ட பாதிப்புக்கு உள்ளான குழந்தைகள் கடுமையான சோதனைகளை, அழற்சியைச் சந்திக்க நேரிடும்.


வழிபடும் முறை: குழந்தை பிறந்த நட்சத்திர தினத்தன்று (கரி நாள் இல்லாத) அல்லது சனி, செவ்வாய்க்கிழமைகளில் உன்மத்த பைரவரை அவருடைய சக்தி தேவியான வராஹியுடன் சேர்த்து கலசத்தில் வர்ணித்து ஒன்பது செங்கற்களால் யக்ஞ மண்டலமிட்டு 108 யாகக் கூட்டுப் பொருளால் உன்மத்த பைரவ மூர்த்தியை அவரது காயத்ரி மற்றும் மூலமந்திரத்தால் விசேஷ ஆவர்த்தி செய்து, பெற்றோர் மடியில் குழந்தையை வைத்து கலச நீரை மங்கள ஸ்நானம் செய்து விட வேண்டும்.

பராக்கியம், வாருண பத்ததி ஆகிய நூல்களில் உன்மத்த பைரவ மூர்த்தி அசிதாங்க பைரவர், குரு பைரவர், சண்ட பைரவர், குரோத பைரவர் வரிசையில் ஐந்தாவது மூர்த்தியாக வீற்றுள்ளார்.

முதலில் விக்னேஸ்வர பூஜை, குரு வந்தனத்தைச் செய்த பிறகு,

'மமபுத்திர பாலாரிஷ்ட தோஷ

நிவாரணார்த்தம் ஆரோக்ய திடகாத்ரதா சித்யர்த்தம், பாலக்ரஹ துர்தசாகால சாந்தியர்த்தம், பாலஹிஷ்ட நிக்ரஹ ப்ரார்த்தனா காலே உன்மத்த பைரவ பூஜாம் கரிஷ்யே!’ என்று சங்கல்பம் செய்து, கலசத்தில் பைரவரை வரிக்கவும். தொடர்ந்து,

ஓம் உன்மத்த பைரவாய நம: ஓம் பூதபாவநாயநம: ஓம் க்ஷேத்ர பாலாய நம: ஓம் கால சமனாய நம: ஓம் த்ரிநேத்ராய நம: ஓம் அரிஷ்ட நிக்ரஹாய நம: ஓம் கங்கானாய நம: ஓம் வராஹி சக்தி சகிதாய நம: ஓம் கட்க பாணினே நம; ஓம் பசுபதயே நம: ஓம் சாந்திதாய நம: ஓம் நாகஹாராய நம: ஓம் வைத்யாய நம: ஓம் துஷ்டபூத நிவேவிதாய நம: ஓம் சர்வாபத் தாரணாய நம; ஓம் அஷ்ட மூர்த்தயே நம:

என்று அர்ச்சனை செய்து, கை கூப்பியபடி தியான மந்திரம் கூறுக:


உன்மத்த பைரவ தியானம்:

த்ரிநேத்ரம் வரதம் சாந்தம் குமாரஞ்ச திகம்பரம்
ஹேம வர்ணம் மகாதேவம் அஸ்வவாஹன சுஸ்திதம்
கட்கம் கபாலம் முசலம் ததந்தம் கேடகம் ததா
வராகி சக்தி சகிதம் வந்தே உன்மத்த பைரவம்:

மூலமந்திரத்தால் எளிய யாகமுறை செய்து, தூப தீபம் காட்டி மிளகுவடை, பேரீச்சம் பழம், மிளகு சாதம், கொண்டைக் கடலை சுண்டல், தயிர் சாதம், கறிவேப்பிலைசாதம் இவற்றில் ஏதேனும் ஒன்றை நிவேதனம் செய்து, ஆரத்தி செய்ய வேண்டும். பாலாரிஷ்ட ரட்சை ஒன்றை கலசம் நடுவில் செய்து வைத்து,

அதில் ஜவ்வாது புனுகு தடவவும்.

பூஜை முடிந்ததும் ஓம் ------------ (குழந்தை பெயர்) பாலகம் ரக்ஷ: ரக்ஷ: என்று 108 முறை ஜபம் செய்ய வேண்டும். பிறகு இப்பாடலை 3 முறை சொல்லி வணங்கிவிட்டு கலச நீரில் பெற்றோரும் குழந்தையும் குளித்தல் வேண்டும்.

தெருட்கபரு நலன வாவித் தீவிர தலத்துற்றோர்க்கு
மருட்பெரு மாயை நூறி வல்வினைப் படலங்கீறி
கருட்பெருங் கொடிய துக்க நிவர்த்தியும் அகத்தின் பேறும்
அருட்பெருஞ்செயலா நல்கும் வடுகனை அடைந்து வாழ்வாம்.

பாலாரிஷ்ட ரட்சை செய்முறை: பனை ஓலையிலோ, தாமிரத் தகட்டிலோ இந்த ரட்சையைச் செய்யலாம். பனை ஓலையில் செய்வதானால் குங்குமப்பூ, கோரோசனை, பச்சைக் கற்பூரத்துடன் ஊமத்தை இலைச்சாறு விட்டுக் குழைத்து இந்தச் சக்கரத்தை குழந்தையின் நட்சத்திர நாளில் எழுதி குலதெய்வ பூஜை செய்து, உன்மத்த பைரவரை தியானித்து பூஜை செய்து வெள்ளி தாயத்தின் உள்ளே வைத்து கழுத்திலோ, இடுப்பிலோ கட்டி விட வேண்டும். இதன் பலனாக, மன வியாதி, மந்த நிலை ஆகியன விரைவிலேயே விலகி குழந்தை ஆரோக்கியம் பெறும். தொடர்ந்து, வல்லாரை இலைத்தூள் 100 கிராம், வசம்பு 25 கிராம் சேர்த்து இடித்துத் தூள் செய்து தேனில் குழைத்து, குழந்தைக்குக் கொடுத்து வந்தால் ஒரு வருடத்தில் குழந்தையின் உடல் மற்றும் மனநிலையில் திருப்திகரமான முன்னேற்றம் தெரியும்.


பாலாரிஷ்டம்...


பாலாரிஷ்டம் என்ற சொல்லிற்கு சிறுவயதில் இறப்பது அல்லது சிறு வயதில் உடல்ரீதியாகத் கெடுவது என்ற பொருள். இந்த தோஷத்திற்கு சிறந்த பரிகாரம் உள்ளது.
பிறந்த ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து 6,8,12-ம் இடங்களில் குரு கிரகம் நின்றாலும் அல்லது சூரியன், சந்திரன் நின்றாலும் 8-ம் இடமான ஆயுள் தானத்தில் ஆயுள் காரகன் சனி நின்றாலும் அது பாலாரிஷ்ட தோஷமாகும். இந்த குழந்தைகளுக்கு நோய் நொடிகளே பிறந்த காலத்திலிருந்து 1 அல்லது 2 ஆண்டுகள் வரை தரக்கூடிய வாய்ப்புகள் உண்டு. பாலாரிஷ்டம் என்ற சொல்லிற்கு சிறுவயதில் இறப்பது அல்லது சிறு வயதில் உடல்ரீதியாகத் கெடுவது என்ற பொருள். பிறந்த குழந்தை உயிருடன் இருக்குமா? எத்தனை காலம் இருக்கும்? இந்தக் குழந்தை பிறப்பினால் தாய்க்கும் ஏதாவது கஷ்டங்கள் இருக்குமா என்பதை பாலாரிஷ்ட தோஷம் சுட்டிக் காட்டும்.
ஒரு குழந்தை ஜனனமானவுடனேயே நேரத்தைக் குறித்து என்ன நட்சத்திரத்தில் பிறந்துள்ளது என்று பார்ப்பது வழக்கமாக இருந்து வருகிறது. குழந்தையின் ஜாதகத்தில் பாலாரிஷ்டம் இருந்தால் அதனை ஜோதிடம் தெளிவாகக் கூறி, அதற்குரிய பரிகாரத்தையும், முன் வைக்க வேண்டும். அடிக்கடி கரு தங்காமல், கருச்சிதைவு ஏற்படுபவர்களும், குழந்தை பிறந்த சில நாளிலேயே இறந்து, மீண்டும் பிறக்கும் குழந்தை நீண்டகாலம் வாழ `மிருத்யுஞ் ஹோமம்'' செய்யலாம். பிரதோஷ வேளையில் சிவ வழிபாடு, லட்சுமி நரசிம்மர் வழிபாடு செய்யலாம். சக்கரத்தாழ்வாரை வழிபடுவதும் நல்லது. விஷ்ணு சகஸ்வரநாமம், லலிதா நாமம் பாராயணம் செய்யலாம். பாலாரிஷ்ட தோஷத்தைப் போக்கும் அன்னையாக இருப்பவள் ஸ்ரீ பால சௌந்தரி என்றும் அம்பிகை. இவள் திருச்சியில் இருந்து 12 கி.மீ. தொலைவில் திருவாசி என்றும் திருத்தலத்தில் வீற்றிருந்து  அருள்பாலிக்கிறாள். இந்த அம்பிகைக்கு அபிஷேகம் செய்யும் தீர்த்தம் மற்றும் பாலை குழந்தைகளுக்கு மூன்று ஞாயிற்றுக்கிழமைகள் கொடுத்துவர பாலாரிஷ்ட  தோஷம் நிவர்த்தியாகும்.
ராமேஸ்வரத்தில் காலையில் நடைபெறும் ஸ்படிகலிங்க பூஜையில் கலந்து கொண்டு கடலில் தீர்த்தமாடி விட்டு. பின்னர் கோயிலில் இருக்கும் தீர்த்தங்களிலும்  நீராடிவிட்டு சுவாமியையும், அம்மனையும் தரிசியுங்கள், தோஷம் விலகும். பாலாரிஷ்ட தோஷம் நீங்க குழந்தையை முருகன் கோவிலில் சுவாமிக்கு தத்துக்  கொடுத்து வழிபடலாம். குழந்தையின் ஜென்ம நட்சத்திரம் சொல்லி. அர்ச்சனை செய்து சந்நிதியை மூன்றுமுறை வலம் வரவேண்டும். கொடி மரத்தின் முன்போ  அல்லது சந்நிதியின் முன்போ, குழந்தையைக் கிடத்தி, முருகப்பெருமானிடம் ஒப்படைப்பதாக எண்ணி வழிபட வேண்டும்.
பின் அர்ச்சகரை அழைத்து குழந்தையை எடுத்துத் தரச் சொல்லிப் பெற வேண்டும். தட்சனையாக, ஒருபடி தவிட்டை கொடுப்பது, முன்பு வழக்கமாக இருந்தது.  இப்போது உங்களால் எது முடியுமோ அதனை தட்சனையாகக் கொடுக்கலாம். இந்தப் பரிகாரத்தைச் செய்வதின் மூலம், பாலாரிஷ்ட தோஷம் நீங்கி விடுவதோடு  மட்டுமில்லாமல், முருகப் பெருமாள் குழந்தையைக் காத்து அருள்புரிவாள் என்பது ஐதீகம். நமது குறை தீர்த்து, ஆயுள் பலமுள்ள குழந்தைகள் பிறக்க, தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்திற்குச் சென்று முறைப்படி  வழிபடுவது நல்லது. குழந்தை பிறந்து, பிறந்து இறக்கும் தோஷம் உள்ளவர்கள். இத்திருத்தலத்தில் உள்ள சிவன், அம்மன், முருகனுக்கு பாலாபிஷேகம் செய்து,  புது வஸ்திரம் சாற்றி வழிபாடு செய்தால் தோஷம் நீங்கிப் பிறக்கும் குழந்தைகள் இறக்காது என்று இதனால் பலனடைந்தவர்கள் சிலாகித்துக் கூறுகின்றனர். பால கிருஷ்ண விக்ரகம் செய்து தானமாகக் கொடுப்பதன் மூலமும், பாலாரிஷ்ட தோஷம் நீங்கும், தானத்தில் சிறந்தது அன்னதானம் என்பதற்கேற்ப, பசித்த  ஏழைகளுக்கு, பசியாற உணவிடுவது சிறப்பு. ஆண்டவன் கொடுப்பதை யாராலும் தடுக்க முடியாது, ஆண்டவன் தடுப்பதை யாரும் கொடுத்து விட முடியாது  என்பதற்கேற்ப அறிவுள்ள, ஆயுள் பலமுள்ள குழந்தை பிறக்க ஆண்டவனை வழிபடுங்கள், மகிழ்வுடன் வாழுங்கள்.

Wednesday, 13 December 2023

அமிர்தவல்லி இலை...




உடலுள்ள கழிவுகளை அகற்றி, எதிர்ப்பு செய்தியை அதிகரிக்க செய்வதில், அமிர்தவல்லியின் பங்கு அபாரம்.. இந்த இலைகளின் ஒருசில நன்மைகளை பார்ப்போம்.!!

உடலிலுள்ள கழிவுகளையும், நச்சுக்களையும் வெளியேற்றி, மொத்த உறுப்புகளின் சீரான செயல்பாட்டை நிர்வகிக்க, பல புரதங்கள் மற்றும் கொழுப்புகளின் உற்பத்தியை கட்டுப்படுத்தும் பணியை செய்வதே கல்லீரல் தான்.. ரத்தத்தை சுத்தப்படுத்துவதும் இந்த கல்லீரல்தான்.. புரதத்தை உருவாக்குவதும் இந்த கல்லீரல்தான்..

Do you know the excellent benefits of Giloy and Amirthavalli Leaves are the Best Medicine for Liver, Heart
ஆனால், கல்லீரலை பொறுத்தவரை, எந்த பிரச்சனையாக இருந்தாலும், 70 சதவீதம் பாதிக்கப்பட்ட பிறகே வெளியே தெரியவரும்.. அதனால்தான், பேராபத்து என்கிறார்கள்.

ஆல்கஹால்: இதற்கெல்லாம் ஒரே வழி, கல்லீரலை பத்திரமாகவும், பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்து கொள்வதுதான். இதற்கு நாம் உண்ணும் உணவில் சற்று கூடுதலான கவனத்தை செலுத்தினாலே போதும். முக்கியமாக, ஆல்கஹால், சிவப்பு இறைச்சி, அதிக உப்பு, சர்க்கரை இவைகளை தவிர்த்தாலே, கல்லீரல் காப்பாற்றப்பட்டுவிடும்.

அதேபோல, சில மூலிகைகளும் கல்லீரலின் நன்மைக்கு உதவக்கூடியது.. இதில் முக்கியமானது அமிர்தவல்லி இலைகளாகும். கல்லீரல் நோய்களை மட்டுமல்லாமல், சிறுநீரக நோய்த்தொற்றுகளையும் குணமாக்கக்கூடியது இந்த அமிர்தவல்லி இலைகள்.

அமிர்தவல்லி: பெரும்பாலும், நம்முடைய உடலில் எதிர்ப்பு சக்தியை வள்ரத்து கொள்ள உதவவே, இந்த இலைகள் பெரிதும் பயன்படுகின்றன.. இந்த அமிர்தவல்லி இலைகளிலும், காம்பிலும் ஏகப்பட்ட ஆன்டிஆக்சிடன்ட்கள் நிறைந்துள்ளன.

இதை சீந்தில் இலை என்பார்கள்.. இதய வடிவில் உள்ள கொடியிலையாகும்.. உடலிலுள்ள கழிவுகளையும், பாக்டீரியாக்களையும் வெளியேற்ற இந்த இலைகள் உதவுகின்றன. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ள அமிர்தவல்லி, உடலில் இருக்கும் ஃப்ரீ-ரேடிக்கல்களை எதிர்த்து போராடுகிறது..

இதனால், குடல் மட்டுமல்லாமல், ரத்தத்தையும் சுத்திகரிப்பு செய்கிறது. இதய நோயாளிகளுக்கு சிகிச்சை தருவதற்காக இந்த அமிர்தவல்லியை பயன்படுத்துகிறார்கள்.. டெங்கு, பன்றி காய்ச்சல், மலேரியா போன்ற தாக்கத்தையும் குறைக்கிறது. இதனால் மலச்சிக்கல் தீர்கின்றன.. நினைவாற்றலை அதிகரிக்க செய்கிறது.. மனம் அமைதி பெறுகிறது.

காம்பு இலை: அமிர்தவல்லி, இலைகள் மட்டும் காம்புகள் இரண்டுமே காய்ச்சல் போன்ற நோய்களுக்கு மருந்தாக உபயோகமாகின்றன.. இவைகளை ஜூஸ் தயாரித்து குடிக்கலாம்.. அதேபோல, டீ போல தயாரித்து குடிக்கலாம்.. அமிர்தவல்லி காம்பு மற்றும் இலைகளை பறித்து வந்து, தண்ணீரில் கழுவி எடுத்து கொள்ள வேண்டும்.


Do you know the excellent benefits of Giloy and Amirthavalli Leaves are the Best Medicine for Liver, Heart
ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி, 2 துண்டு இஞ்சி, 3 துளசி இலைகள், 3 நசுக்கிய மிளகு, சுத்தம் செய்யப்பட்ட அமிர்தவல்லி காம்பு மற்றும் குச்சிகளை சேர்த்து கொதிக்க விட வேண்டும். இதை வடிகட்டி குடித்தாலே பல பிரச்சனைகள் தீர்கின்றன. எதிர்ப்பு சக்திகள் உடலில் கூடுவதுடன், கல்லீரல், சிறுநீரக தொற்றுகளை கட்டுப்படுத்துகிறது.

கல்லீரல்: ஆனால், அளவுக்கு மிஞ்சினால் இந்த இலைகளும் கல்லீரலுக்கு நஞ்சாகிவிடும். அதேபோல, நேரடியாக இந்த இலைகளின் சாறு சாப்பிடகூடாதாம். இந்த இலைகளின் சாற்றினை, தண்ணீரில் கலந்தே குடிக்க வேண்டும். அதுவும் 6 வாரங்களுக்கு மேல் குடிக்கக்கூடாது.. அத்துடன், எந்த அளவு சாறு எடுத்து கொள்கிறோம் என்பதும் முக்யிம் என்பதால், டாக்டர்களின் முறையான வழிகாட்டுதல் இல்லாமல், இந்த இலைகளை மருந்தாக உட்கொள்ளக்கூடாது.


60+ வயதிலும் எலும்பு செம ஸ்ட்ராங்கா இருக்கணுமா?


60+ வயதிலும் எலும்பு செம ஸ்ட்ராங்கா இருக்கணுமா? ஜஸ்ட் இத ஃபாலோ பண்ணா போதுமாம்! என்னான்னு பாருங்க!


1/9
கட்டிளங் காளை போல் நம் இளம் வயதில் எதையும் சாதித்துவிடலாம், மலையையே அலேக்கா தூக்கிவிடலாம் என்றெல்லாம் மனம் துள்ளிவிளையாடும், உடல் அதற்கு ஏற்றவாறு செயல்படும். ஆனால் வயது கூடக் கூட மனம் எப்போதும் போல் இளமையாகத்தான் இருக்கும் உடல் தடுமாற தொடங்கிவிடும். 40+ வயதில் எலும்பின் வலு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து சிறு வேலையை கூட செய்யமுடியாமல் உடல் உத்துழைக்க சிரமப்படும். இதற்கு காரணம் எலும்புகளில் சரியான கால்சியம் சத்து இல்லாதது தான்.

2/9
தவறான உணவு முறையால் சரியான கால்சியம் சத்துக்கள் கிடைக்காமல் எலும்புகள் மிகவும் தளர்ந்து விடும், குனிந்து நிமிர்வதே பெரிய வேலையாக மாறிவிடும். அந்தவகையில் இந்த நிலை மாறவேண்டுமானால் 60+ வயதிலும் இளம் காளையை போல் செம ஆக்ட்டிவாக வேண்டுமென்றால் இதை கண்டிப்பாக ஃபாலோ செய்யுங்கள். எந்தெந்த உணவை சாப்பிட்டால் எலும்புகளுக்கு அதிக கால்சியம் வெடிக்கும்என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

3/9
சக்கரவள்ளி கிழங்கு: ஒரே ஒரு சக்கரவள்ளி கிழங்கில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி, பொட்டாசியம், மெக்னீசியம், நார்சத்து, ஆன்டி ஆக்சிடன்ட், இரும்பு சத்து, கால்சியம் உள்ளிட்ட பலவித சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை அனைத்தும் எலும்புகளை பராமரித்து சீராக செயல்பட உதவுகிறது.

4/9
ப்ரோக்கோலி: உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள் முதலில் எடுத்துக்கொள்ளும் உணவு ப்ரோக்கோலி. கால்சியம் சத்து அதிகம் உள்ளடக்கிய ப்ரோக்கோலி பல் மற்றும் எலும்புகளை பாதுகாக்கிறது. மேலும் எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அனைத்துக்கும் தீர்வாகவும் ப்ரோக்கோலி இருக்கின்றது.


5/9
சியா விதை: வலுவான எலும்புகளை உருவாக்க சியா விதை மிகவும் உதவும், அதுமட்டுமல்லாமல் உடல் எடையை குறைக்கவும் இந்த சியா விதை உதவும். இதில் சுமார் 18 சதவீகிதம் கால்சியம் சத்துக்கள் நிறைந்துள்ளது, இது எலும்புகளை பாதுகாத்து வலுவுடன் வைத்துக்கொள்ளும்.

6/9
எள் விதை: இளச்சவனுக்கு எள்ளு என்று சொல்வது போல் உடல் எடையை அதிகரிக்கவும், எலும்புகளை வலுப்படுத்தவும் இந்த எள் விதை உதவுகிறது. அதிகளவு கால்சியம் சத்துக்கள் உள்ளடக்கிய எள் விதை தினசரி உட்கொண்டால் எலும்புகளின் வளர்ச்சிக்கும், வலுவுக்கும் உதவும்.
 

Tuesday, 12 December 2023

உணவுக்கு முன் இனிப்பு சாப்பிட வேண்டும் ஏன்?


ஆயுர்வேதத்தில் உணவு தொடர்பான பல விதிகள் கூறப்பட்டுள்ளன. இந்த விதிகளின்படி உங்கள் உணவு மற்றும் பானத்தை நீங்கள் சாப்பிட்டு வந்தால், உடல் ஆரோக்கியமாக இருக்கும். பெரும்பாலும் மக்கள் சாப்பிட்ட பிறகு இனிப்புகளை சாப்பிட விரும்புகிறார்கள். நீங்கள் விருந்துக்கு எங்காவது சென்றால், அங்கு சூப் மற்றும் சாலட்டுடன் தொடங்கும் மற்றும் இறுதியில் பொதுவாக இனிப்பு வழங்கப்படும். ஆனால் உணவுக்குப் பிறகு இனிப்பு சாப்பிடுவது உண்மையில் சரியானதா? சொல்லப்போனால், இன்றைய காலகட்டத்தில் ஆரோக்கியமாக இருக்கவும், உடல் எடையைக் குறைக்கவும் பெரும்பாலானோர் இனிப்புகளைத் தவிர்க்கிறார்கள். ஆனால் இனிப்பை விட்டுவிடவே முடியாது.



நீங்கள் இனிப்புகளை சாப்பிட விரும்புகிறீர்கள் என்றால், உணவுக்கு முன் அல்லது பின் எப்போது இனிப்புகளை சாப்பிடுவது நல்லது? இந்தக் கேள்விக்கான பதிலை ஆயுர்வேதத்திலிருந்து தெரிந்து கொள்வோம். 


ஆயுர்வேதம் என்ன சொல்கிறது?

ஆயுர்வேதத்தின் படி, இனிப்புகளை உணவுக்கு முன் சாப்பிட வேண்டும். இவ்வாறு சாப்பிடும் போது எவ்வளவு விழிப்புணர்வுடன் இருக்கிறோம், சாப்பிடும் நேரம் என்ன என்பது பலவற்றை தீர்மானிக்கிறது. இதிலிருந்து நமக்கு வலிமை அல்லது நச்சுத்தன்மை (விஷம்) நம் உடலில் அதிகரிக்கிறது. உணவுக்கு முன் இனிப்புகளை ஏன் சாப்பிட வேண்டும் என்பதற்கு ஆயுர்வேதத்தில் பல காரணங்கள் கூறப்பட்டுள்ளன.

உணவுக்கு முன் இனிப்பு சாப்பிட வேண்டும் ஏன்?

இனிப்புகள் செரிக்க அதிக நேரம் எடுக்கும். உணவுக்கு முன் இனிப்புகளை சாப்பிடும்போது, அது செரிமான சுரப்புகளின் ஓட்டத்தைத் தூண்டுகிறது. மறுபுறம், நீங்கள் சாப்பிட்ட பிறகு இனிப்புகளை சாப்பிட்டால், உங்கள் செரிமானம் குறைகிறது.
உணவின் தொடக்கத்தில் இனிப்பு சாப்பிடுவதன் மூலம், அது உங்கள் சுவை மொட்டுகளை செயல்படுத்துகிறது. இதனால் நீங்கள் உணவை நன்றாக ருசித்து சாப்பிட முடியும்.
நாம் எதையும் சாப்பிட்டால், ஜீரண நெருப்பு அதை ஜீரணிக்க வயிற்றில் வேலை செய்கிறது. உணவுக்குப் பிறகு இனிப்புகளை சாப்பிடுவதால் இந்த செரிமான நெருப்பை அணைக்க முடியும். இதனால், உணவு சரியாக ஜீரணமாகாமல், அமிலத்தன்மை, அஜீரணம் போன்ற பிரச்னைகள் ஏற்படும்.
உணவு உண்ட பிறகு இனிப்பான உணவும் வயிற்றில் வாயுவை உண்டாக்கி வயிற்றில் வீக்கம் உண்டாக்கும்.



Thursday, 7 December 2023

லோகோ ....



கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பகுதியில் உள்ள பிரபல உணவகத்தில் அவர் பிரைடு ரைஸை பார்சல் வாங்கினார்.


இதன் விலை ரூ 200, பார்சல் செய்து கொடுக்க ரூ 10 கூடுதலாக ஓட்டல் நிர்வாகத்தினர் வசூல் செய்துள்ளனர். ஆனால் பார்சலின் மீது அந்த உணவகத்தின் பெயர் மற்றும் லோகோ இடம்பெற்றிருந்தது.

உணவு பார்சலுக்காக தனியாக கட்டணம் வசூல் செய்த நிலையில் அதில் ஹோட்டல் லோகோவை பதித்து தன்னை விளம்பர ஏஜென்ட் போல் பயன்படுத்திக் கொண்டதை அந்த ஹோட்டல் நிர்வாகத்திடம் தட்டி கேட்டார் அவர். ஆனால் அவர்களோ இது எங்கள் கம்பெனியின் பாலிசி என கூறி சரியாக பதிலளிக்கவில்லை என தெரிகிறது.

இந்த நிலையில் அவர் பார்சல் சார்ஜ் குறித்து விளக்கம் கேட்டு xxx ஹோட்டலுக்கு நோட்டீஸ் அனுப்பினார். ஆனால் ஹோட்டல் நிர்வாகத்தினர் எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இதனால் ஹோட்டல் நிர்வாகத்தின் மீது மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.


இந்த வழக்கில் நேற்றைய தினம் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் பார்சலுக்கு தனியாக கட்டணம் வசூலிக்கும் போது, அதில் ஹோட்டலின் லோகோ இடம் பெற்றிருக்க கூடாது என நீதிபதி கூறியிருந்தார். இதையடுத்து இழப்பீடாக 10 ஆயிரம் ரூபாயும் வழக்கு செலவுக்கு ரூ 5 ஆயிரமும் வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

வெறும் ரூ 10 ஆசைப்பட்ட உணவகம் தற்போது நுகர்வோருக்கு ரூ 15 ஆயிரம் இழப்பீடாக வழங்க போகிறது. பெரும்பாலான உணவகங்கள் தங்கள் நிறுவனத்தின் பெயரை பார்சல் மற்றும் பைகளில் பதிவிடுவதையே வாடிக்கையாக கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


Wednesday, 6 December 2023

பிரியாணி இலை...


நம்மில் பெரும்பாலானோருக்கு பிரியாணி என்பது மிகவும் பிடித்தமான உணவு, அப்படிப்பட்ட உணவில் சேர்க்கப்படும் பிரியாணி இலையில் மறைந்து இருக்கும் 8 ஆரோக்கிய நன்மைகள் குறித்து இந்த கட்டுரையில் பார்ப்போம்.

8 நன்மைகள்
சுவாச ஆரோக்கியம்
பிரியாணி இலைகள் கொதிக்க வைக்கப்படும் போது அதிலிருந்து ஆவியாகும் இரசாயனங்கள் சுவாச ஆரோக்கியத்திற்கு பெரிதும் நன்மை பயக்கக் கூடியது. இதன் மூலம் சளி, இருமல் மற்றும் நெரிசல் அறிகுறிகள் அடங்கும்.



செரிமான ஆரோக்கியம்
பிரியாணி இலைகளில் அஜீரண கோளாறுகளை குறைத்து செரிமானத்திற்கு உதவும் மற்றும் வயிறு உப்புதல், வாயு பிரச்சினைகள் ஆகியவற்றை குணப்படுத்த உதவும்.


மன அழுத்தத்தை குறைக்கும்
பிரியாணி இலைகள் கவலை மற்றும் மன அழுத்தத்தை குறைக்க உதவும்.



வீக்கத்தை குறைக்கும்
பிரியாணி இலைகளில் காணப்படும் அழற்சி எதிர்ப்பு காரணிகள் உடலில் உள்ள வீக்கத்தை குறைக்கும்.

இதய ஆரோக்கியம்
பிரியாணி இலைகள் கொலஸ்ட்ரால் அளவை குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது, அத்துடன் இரத்த அழுத்தத்தையும் சீராக்குகிறது.

சர்க்கரை அளவு
சில ஆராய்ச்சிகள் அடிப்படையில், இவை இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.



செல்களை பாதுகாக்கும்
இலைகளில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் செல்களின் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை குறைத்து, ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து செல்களை பாதுகாக்கும்.
விளைவுகள்
பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள்
சில பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகள் பிரியாணி இலைகளில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றன.


தூக்கத்தில் உங்கள் வாயில் எச்சில் ஊறுகிறதா.. இதுதான் காரணம்!


Know The Reason Of Drooling During Sleep And What This Is A Symptom
Drooling: 
தூக்கத்தில் உங்கள் வாயில் எச்சில் ஊறுகிறதா.. இதுதான் காரணம்!



Drooling: பலர் தூக்கத்தில் ஜொள்ளு விடுகிறார்கள். இது ஏன் நடக்கிறது, இதற்கான காரணம் என்ன? என்பதை இங்கு பார்க்கலாம்.
குழந்தைகளுக்கு எச்சில் ஊறுவது சகஜம். 4 வருடங்கள் வரை வாயில் இருந்து உமிழ்நீர் வரலாம். ஆனால் வயதானவர்களில் கூட சிலருக்கு தூங்கும்போது எச்சில் வடியும். இந்த உமிழ்நீரினால் தலையணைகள் மற்றும் உடைகள் கூட ஈரமாக இருக்கும். இது என்ன அறிகுறி? என்பதை இங்கு பார்க்கலாம்.
(1 / 10)
குழந்தைகளுக்கு எச்சில் ஊறுவது சகஜம். 4 வருடங்கள் வரை வாயில் இருந்து உமிழ்நீர் வரலாம். ஆனால் வயதானவர்களில் கூட சிலருக்கு தூங்கும்போது எச்சில் வடியும். இந்த உமிழ்நீரினால் தலையணைகள் மற்றும் உடைகள் கூட ஈரமாக இருக்கும். இது என்ன அறிகுறி? என்பதை இங்கு பார்க்கலாம்.

முதலில் தெரிந்து கொள்ளுங்கள், பெரியவர்களுக்கு இந்த பழக்கம் எப்பொழுதும் இருந்தால், அது ஒரு வகையான நோய்தான். இந்த பிரச்சனை குழந்தைகளுக்கு ஏற்படலாம். ஏனெனில் நரம்புகள் மற்றும் தசைகள் இன்னும் முழுமையாக உருவாகவில்லை. பெரியவர்களுக்கு அது இல்லை. எனவே வெட்கப்படாமல் இந்த விஷயத்தை பார்த்துக் கொள்வது அவசியம்.
(2 / 10)
முதலில் தெரிந்து கொள்ளுங்கள், பெரியவர்களுக்கு இந்த பழக்கம் எப்பொழுதும் இருந்தால், அது ஒரு வகையான நோய்தான். இந்த பிரச்சனை குழந்தைகளுக்கு ஏற்படலாம். ஏனெனில் நரம்புகள் மற்றும் தசைகள் இன்னும் முழுமையாக உருவாகவில்லை. பெரியவர்களுக்கு அது இல்லை. எனவே வெட்கப்படாமல் இந்த விஷயத்தை பார்த்துக் கொள்வது அவசியம்.

ஆனால் இது ஏன் ஒரு பிரச்சனை? இதற்கு என்ன காரணம் எப்போது மருத்துவரை அணுக வேண்டும் என்று தெரிந்துகொள்ளுங்கள், 
(3 / 10)
ஆனால் இது ஏன் ஒரு பிரச்சனை? இதற்கு என்ன காரணம் எப்போது மருத்துவரை அணுக வேண்டும் என்று தெரிந்துகொள்ளுங்கள், 

பலர் நகங்களை பற்களால் கடித்து, வாயில் விரல்களை வைத்து, நேரடியாக எதையாவது கடிக்கிறார்கள். இதன் காரணமாக, வாயின் வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் குறைந்து, பாக்டீரியாக்கள் எளிதில் வாயில் உருவாகின்றன. இது வாயிலிருந்து உமிழ்நீரை பாய்ச்சலாம்.
(4 / 10)
பலர் நகங்களை பற்களால் கடித்து, வாயில் விரல்களை வைத்து, நேரடியாக எதையாவது கடிக்கிறார்கள். இதன் காரணமாக, வாயின் வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் குறைந்து, பாக்டீரியாக்கள் எளிதில் வாயில் உருவாகின்றன. இது வாயிலிருந்து உமிழ்நீரை பாய்ச்சலாம்.

உணவின் சிறிய துகள்கள் பற்களில் சிக்கிக்கொள்ளும் போது இந்த பிரச்சனை ஏற்படுகிறது. பற்களின் ஆரோக்கியம் சரியில்லை என்றால், உமிழ்நீர் பிரச்சனைகள் ஏற்படும். வாய் புண்கள் அதிக உமிழ்நீரை ஏற்படுத்தும். தூங்கும் போது இந்த சளி உமிழ்நீராக வெளியேறும். இந்த பிரச்சனையில் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மருந்துகளை உட்கொள்வது நல்லது.
(5 / 10)
உணவின் சிறிய துகள்கள் பற்களில் சிக்கிக்கொள்ளும் போது இந்த பிரச்சனை ஏற்படுகிறது. பற்களின் ஆரோக்கியம் சரியில்லை என்றால், உமிழ்நீர் பிரச்சனைகள் ஏற்படும். வாய் புண்கள் அதிக உமிழ்நீரை ஏற்படுத்தும். தூங்கும் போது இந்த சளி உமிழ்நீராக வெளியேறும். இந்த பிரச்சனையில் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மருந்துகளை உட்கொள்வது நல்லது.

உடலின் அதிகப்படியான உடல் உழைப்பு, மூளையின் அதிகப்படியான பயன்பாடு அல்லது சில மருந்துகளின் நுகர்வு நரம்பு மண்டலத்தில் இடையூறு ஏற்படுத்துகிறது. இது தூக்கத்தின் போது மூளை சில தவறான சமிக்ஞைகளை அனுப்புகிறது. இது வாயில் உமிழ்நீரை அதிகரிக்கச் செய்யும். இதற்கு தினமும் சரியான நேரத்தில் சாப்பிடுவதும், அளவோடு சாப்பிடுவதும், வைட்டமின் சி நிறைந்த சத்தான உணவுகளை உட்கொள்வதும், போதுமான ஓய்வு பெறுவதும் அவசியம் என்கின்றனர் நிபுணர்கள்.
(6 / 10)
உடலின் அதிகப்படியான உடல் உழைப்பு, மூளையின் அதிகப்படியான பயன்பாடு அல்லது சில மருந்துகளின் நுகர்வு நரம்பு மண்டலத்தில் இடையூறு ஏற்படுத்துகிறது. இது தூக்கத்தின் போது மூளை சில தவறான சமிக்ஞைகளை அனுப்புகிறது. இது வாயில் உமிழ்நீரை அதிகரிக்கச் செய்யும். இதற்கு தினமும் சரியான நேரத்தில் சாப்பிடுவதும், அளவோடு சாப்பிடுவதும், வைட்டமின் சி நிறைந்த சத்தான உணவுகளை உட்கொள்வதும், போதுமான ஓய்வு பெறுவதும் அவசியம் என்கின்றனர் நிபுணர்கள்.

மருத்துவர்களின் கூற்றுப்படி, வயிற்றின் சமநிலையின்மை வயதானவர்களுக்கு உமிழ்நீர் பிரச்சனையுடன் தொடர்புடையது. வயிற்றின் ஆரோக்கியம் சரியில்லை என்றால் இந்த நிலை ஏற்படும். அப்படி ஒரு பிரச்சனை இருந்தால் உங்களுக்கு நன்றாக தூக்கம் வராது. இது உடலில் உள்ள மற்ற நோய்களுடன் சேர்ந்து உமிழ்நீர் பிரச்சனையையும் ஏற்படுத்தும்.
(7 / 10)
மருத்துவர்களின் கூற்றுப்படி, வயிற்றின் சமநிலையின்மை வயதானவர்களுக்கு உமிழ்நீர் பிரச்சனையுடன் தொடர்புடையது. வயிற்றின் ஆரோக்கியம் சரியில்லை என்றால் இந்த நிலை ஏற்படும். அப்படி ஒரு பிரச்சனை இருந்தால் உங்களுக்கு நன்றாக தூக்கம் வராது. இது உடலில் உள்ள மற்ற நோய்களுடன் சேர்ந்து உமிழ்நீர் பிரச்சனையையும் ஏற்படுத்தும்.

ஜலதோஷத்திற்குப் பிறகு தூங்கும் போது உமிழ்நீர் வெளியேறும். இந்த நேரத்தில் வாயின் மூலை சற்று வளைந்தோ அல்லது சாய்வாகவோ இருந்தால், அது முக நரம்பு மண்டலத்தில் பிரச்சனை இருப்பதற்கான அறிகுறியாகும். இந்த வழக்கில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம் மற்றும் மருத்துவரை அணுகவும்.
(8 / 10)
ஜலதோஷத்திற்குப் பிறகு தூங்கும் போது உமிழ்நீர் வெளியேறும். இந்த நேரத்தில் வாயின் மூலை சற்று வளைந்தோ அல்லது சாய்வாகவோ இருந்தால், அது முக நரம்பு மண்டலத்தில் பிரச்சனை இருப்பதற்கான அறிகுறியாகும். இந்த வழக்கில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம் மற்றும் மருத்துவரை அணுகவும்.

மேலும் மருத்துவர்களின் கூற்றுப்படி, தவறான நிலையில் தூங்குவது உமிழ்நீரை ஏற்படுத்தும். பலர் மேசையின் மீது கை வைத்து அதன் மீது தலை வைத்து தூங்குவார்கள். இந்த நிலையில், உமிழ்நீர் எளிதில் ஏற்படலாம். மீண்டும், தலையணையில் தலை வைக்கும் நிலை சரியில்லை என்றால், இந்த நேரத்தில் எச்சில் வெளியேறும். எனவே உமிழ்நீரை நிறுத்த தூங்கும் நிலையை சரி செய்ய வேண்டும்.
(9 / 10)
மேலும் மருத்துவர்களின் கூற்றுப்படி, தவறான நிலையில் தூங்குவது உமிழ்நீரை ஏற்படுத்தும். பலர் மேசையின் மீது கை வைத்து அதன் மீது தலை வைத்து தூங்குவார்கள். இந்த நிலையில், உமிழ்நீர் எளிதில் ஏற்படலாம். மீண்டும், தலையணையில் தலை வைக்கும் நிலை சரியில்லை என்றால், இந்த நேரத்தில் எச்சில் வெளியேறும். எனவே உமிழ்நீரை நிறுத்த தூங்கும் நிலையை சரி செய்ய வேண்டும்.

காரணத்தைப் பொருட்படுத்தாமல், வயது வந்தவருக்கு இந்த பிரச்சனை ஏற்பட்டால், அவர்கள் உடனடியாக ஒரு மருத்துவரை தொடர்பு கொள்ள வேண்டும். இல்லையெனில் அது உயிரிழக்க நேரிடும். அதில் கவனமாக இருப்பது முக்கியம்.
(10 / 10)
காரணத்தைப் பொருட்படுத்தாமல், வயது வந்தவருக்கு இந்த பிரச்சனை ஏற்பட்டால், அவர்கள் உடனடியாக ஒரு மருத்துவரை தொடர்பு கொள்ள வேண்டும். இல்லையெனில் அது உயிரிழக்க நேரிடும். அதில் கவனமாக இருப்பது முக்கியம்.

.

Tuesday, 5 December 2023

வானத்தில் விமானம் பறக்கும்போது இந்த கோடுகள் ஏன் வருகிறது தெரியுமா?



வானத்தில் விமானம் பறக்கும்போது இந்த கோடுகள் ஏன் வருகிறது தெரியுமா? - கண்டிப்பா இது புகை இல்லை!
வானத்தில் விமானம் பறக்கும்போது இந்த கோடுகள் ஏன் வருகிறது தெரியுமா? - கண்டிப்பா இது புகை இல்லை!
வானில் பறக்கும்போது ஜெட் விமானங்கள் வெள்ளை நிற புகையை
விமானங்கள் என்றாலே அனைத்து வயது மக்கள
விமானங்கள் என்றாலே அனைத்து வயது மக்களுக்கும் பிடிக்கும். விமானத்தில் செல்லவேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கும். குழந்தைகளுக்கு பூமியில் இருந்து வானில் பறக்கும் விமானத்தை பார்க்கும்போது பெரியளவில் மகிழ்ச்சி ஏற்படும்.

  
 நம்மை ஜெட் விமானம் கடந்து சென்றது என்பதை எளிதாக வெள்ளை புகை போன்ற கோடுகளை வெளிபடுத்தும். இந்த வெள்ளை நிற புகைக்கோடுகளை நாம் இவ்வளவு நாள் விமானத்தில் இருந்து வெளிவரும் புகை என்று நினைத்துகொண்டு இருக்கிறோம். ஆனால் அது உண்மை இல்லை.


 விமானத்தில் இருந்து புகை வெளியாவது கிடையாது. ஜெட் போன்ற அதிவேக இன்ஜின் கொண்ட விமானங்களில் இருந்து நீராவி வெளியேற்றப்படுகிறது.

விமானத்தில் இருந்து புகை வெளியாவது கிடையாது. ஜெட் போன்ற அதிவேக இன்ஜின் கொண்ட விமானங்களில் இருந்து நீராவி வெளியேற்றப்படுகிறது.
 அப்படி நடுவானில் வெளியாகும் நீராவிகள் குளிர்ந்த காற்றுடன் கலந்து பனிதுளிகளாக உருவாகிறது. இந்த பனிதுளிகளை தான் நாம் இவ்வளவு நாள் புகை என்று நினைத்துகொண்டு இருக்கிறோம்.

அப்படி நடுவானில் வெளியாகும் நீராவிகள் குளிர்ந்த காற்றுடன் கலந்து பனிதுளிகளாக உருவாகிறது. இந்த பனிதுளிகளை தான் நாம் இவ்வளவு நாள் புகை என்று நினைத்துகொண்டு இருக்கிறோம்.

 பூமியில் இருந்து பல்லாயிரம் அடி உயரத்தில் குளிர்ந்த சூழல் நிலவும். அதி வேகமாக செல்லும் ஜெட் விமானங்கள் சூடான நீராவியை வெளியேற்றும்போது, காற்றில் உள்ள குளிர்ச்சியால் உறைந்து போகிறது. இந்த உறைபனி சிறிது நேரம் அப்படியே காற்றல் நின்றுவிடுகிறது.



பூமியில் இருந்து பல்லாயிரம் அடி உயரத்தில் குளிர்ந்த சூழல் நிலவும். அதி வேகமாக செல்லும் ஜெட் விமானங்கள் சூடான நீராவியை வெளியேற்றும்போது, காற்றில் உள்ள குளிர்ச்சியால் உறைந்து போகிறது. இந்த உறைபனி சிறிது நேரம் அப்படியே காற்றல் நின்றுவிடுகிறது.


 இதுவே, கீழிலிருந்து பார்க்க விமானத்தில் இருந்து வெளியாகும் புகைப்போல் காட்சியளிக்ககிறது. குளிர்ச்சியான சூழல் இல்லாதபோது இதுபோன்ற வெள்ளை பனிதுளிக்கள் ஏற்படாது என்பது குறிப்பிடத்தக்கது.



ஒருவர் எத்தனை வங்கிக் கணக்குகளைத் திறக்கலாம்?



ஒருவர் எத்தனை வங்கிக் கணக்குகளைத் திறக்கலாம்? வரம்பு மீறினால்... ரிசர்வ் வங்கி விதி என்ன?
RBI Update: ஒருவர் தனது பெயரில் எத்தனை வங்கிக் கணக்குகளைத் திறக்கலாம் என்பது உங்களுக்கு தெரியுமா? இதற்கான விதி ஏதாவது உள்ளதா?

ஒருவர் எத்தனை வங்கிக் கணக்குகளைத் திறக்கலாம்? வரம்பு மீறினால்... ரிசர்வ் வங்கி விதி என்ன?
உங்கள் தேவைக்கேற்ப வங்கிக் கணக்கைத் திறக்க முடியுமா? 
யார் எத்தனை கணக்குகளை திறக்க முடியும்?
பல வங்கிக் கணக்குகள் இருப்பதன் தீமைகள் என்ன?

RBI Update: நமது நாட்டில் வங்கிக் கணக்கு என்பது இன்றைய காலகட்டத்தில் கிட்டத்தட்ட அனைவரிடமும் இருக்கும் ஒரு விஷயமாக உள்ளது. டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்து வரும் இன்றைய சூழலில் இது அத்தியாவசியமான ஒன்றாக பார்க்கப்படுகின்றது.  
மத்திய, மாநில அரசுகளின் பல திட்டங்களின் பலன்களைப் பெற, வங்கிக் கணக்கு இருப்பது அவசியம். வங்கிக் கணக்கு இல்லாமல் பெரிய பரிவர்த்தனைகளைச் செய்வதில் மக்கள் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். குழந்தைகளுக்கான வங்கிக் கணக்குகளையும் தொடங்கலாம். ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்களும் உள்ளனர். இந்த வங்கிக் கணக்குகள் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் திறக்கப்படுகின்றன. சிலர் பல வங்கிக் கணக்குகளை திறந்து விடுகிறார்கள், ஆனால் அவர்களால் இவற்றை பராமரிக்க முடிவதில்லை. ஒருவர் தனது பெயரில் எத்தனை வங்கிக் கணக்குகளைத் திறக்கலாம் என்பது உங்களுக்கு தெரியுமா? இதற்கான விதி ஏதாவது உள்ளதா? இதைப் பற்றி இந்த பதிவில் காணலாம். 

வங்கிக்கணக்குகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி சமீபத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில் ஒருவர் தனது பெயரில் எத்தனை வங்கி கணக்குகளை வைத்திருக்கலாம் என்பது பற்றி கூறப்பட்டுள்ளது.

உங்கள் தேவைக்கேற்ப வங்கிக் கணக்கைத் திறக்க முடியுமா? 

மக்கள் தங்கள் தேவைக்கேற்ப வங்கிக் கணக்கைத் தொடங்க விதிகளின் படி வசதி உள்ளது. நடப்புக் கணக்கு, சம்பளக் கணக்கு, கூட்டுக் கணக்கு அல்லது சேமிப்புக் கணக்கு ஆகியவை இதில் அடங்கும். முதன்மை வங்கிக் கணக்கைப் பற்றி பேசுகையில், சேமிப்புக் கணக்குகள் முதன்மை கணக்குகளாக கருதப்படுகின்றன. இந்த வகையான கணக்குகளை பெரும்பாலான மக்கள் திறக்கிறார்கள். ஏனெனில் இதில் டெபாசிட் செய்யப்பட்ட தொகைக்கு வட்டியும் கிடைக்கும். அதிக பரிவர்த்தனைகள் செய்பவர்கள் நடப்புக் கணக்கின் (Current Account) விருப்பத்தைத் தேர்வு செய்கிறார்கள். பெரும்பாலும் வணிகர்கள் இந்த கணக்கை திறக்கிறார்கள். சம்பள கணக்கு (Salary Account) என்பது சம்பளம் வாங்கும் வர்க்கத்தினருக்கானது. இதில் மினிமம் பேலன்ஸ் பராமரிக்க தேவையில்லை. இது ஜீரோ பேலன்ஸ் கணக்கு (Zero Balance Accunt). கணக்கு வைத்திருப்பவர் தனது மனைவி அல்லது உங்கள் குழந்தை அல்லது பெற்றோர் போன்ற உறவினருடன் சேர்ந்து  கூட்டுக் கணக்கைத் தொடங்கலாம்.

யார் எத்தனை கணக்குகளை திறக்க முடியும்?

இந்தியாவில் ஒரு நபர் தொடங்கக்கூடிய வங்கிக் கணக்குகளுக்கு (Bank Account) நிலையான ஒரு எண்ணிக்கை எதுவும் இல்லை. இதற்கு நிலையான வரம்பு எதுவும் இல்லை. ஒரு நபர் தனது விருப்பம் மற்றும் தேவைகளுக்கு ஏற்ப எத்தனை வங்கிக் கணக்குகளை வேண்டுமானாலும் திறக்கலாம். ரிசர்வ் வங்கி (Reserve Bank Of India) இதற்கு எந்த வரம்பையும் நிர்ணயிக்கவில்லை. ஒருவர் எவ்வளவு வங்கிக் கணக்குகளைத் திறக்கிறாரே, அவ்வளவு அதிகமாக அவற்றைக் கவனிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யும் விருப்பத்தின்படி அனைத்து கணக்குகளையும் நிர்வகிக்க வேண்டும். ஒருவர் விரும்பினால், வெவ்வேறு வங்கிகளிலும் சேமிப்பு அல்லது பிற கணக்குகளைத் திறக்கலாம். ஆனால் இதற்கு அந்த நபர் அந்தந்த வங்கிகளுக்கான அனைத்து விதிகளையும் பின்பற்ற வேண்டும்.

பல வங்கிக் கணக்குகள் இருப்பதன் தீமைகள்

உண்மையில், வங்கிகளால் நிர்ணயிக்கப்பட்ட தொகை, அதாவது குறைந்தபட்ச இருப்புத் தொகை வங்கிக் கணக்கில் இருக்க வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச தொகையை வங்கிக் கணக்கில் வைக்கவில்லை என்றால், அதற்கு அபராதமும் விதிக்கப்படலாம். இதனுடன், வங்கிகளால் வாடிக்கையாளர்கள் மீது பல்வேறு கட்டணங்களும் விதிக்கப்படுகின்றன. மொபைலில் எஸ்எம்எஸ் வசதி, ஏடிஎம் கட்டணம் போன்றவை இதில் அடங்கும். வங்கிக் கணக்கு பயன்படுத்தப்படாவிட்டால், இந்தக் கட்டணங்கள் உங்கள் கணக்கிலிருந்து கழிக்கப்படும். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் கண்டிப்பாக பயன்படுத்தும், உங்களுக்கு மிகவும் தேவையான அளவு வங்கிக் கணக்குகளை மட்டும் வைத்திருப்பது நல்லது என பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். 


ஔவையார்...

ஔவையார் - அரியது, பெரியது, இனியது, கொடியது
அரியது:
அரியது கேட்கின் வரிவடி வேலோய்
அரிதரிது மானிடர் ஆதல் அரிது
மானிடர் ஆயினும் கூன்குருடு செவிடு
பேடு நீங்கிப் பிறத்தல் அரிது
பேடு நீங்கிப் பிறந்த காலையும்
ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது
ஞானமும் கல்வியும் நயந்த காலையும்
தானமும் தவமும் தான்செயல் அரிது
தானமும் தவமும் தான்செய்வ ராயின்
வானவர் நாடு வழிதிறந் திடுமே.
பெரியது:
பெரியது கேட்கின் எரிதவழ் வேலோய்
பெரிது பெரிது புவனம் பெரிது
புவனமோ நான்முகன் படைப்பு
நான்முகன் கரியமால் உதிரத்தில் உதித்தோன்
கரிய மாலோ அலைகடல் துயின்றோன்
அலைகடல் குறுமுனி கலசத்தில் அடக்கம்
கலசமோ புவியிற் சிறுமண்
புவியோ அரவினுக்கு ஒருதலைப் பாரம்
அரவோ உமையவள் ஒருசிறு மோதிரம்
உமையோ இறைவர் பாகத் தொடுக்கம்
இறைவரோ தொண்டர் உள்ளத் தொடுக்கம்
தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே.
இனியது:
இனியது கேட்கின் தனிநெடு வேலோய்
இனிது இனிது ஏகாந்தம் இனிது
அதனினும் இனிது ஆதியைத் தொழுதல்
அதனினும் இனிது அறிவினர்ச் சேர்தல்
அதனினும் இனிது அறிவுள் ளாரைக்
கனவிலும் நனவிலும் காண்பது தானே
கொடியது:
கொடியது கேட்கின் நெடியவெல் வேலோய்!
கொடிது கொடிது வறுமை கொடிது
அதனினும் கொடிது இளமையில் வறுமை
அதனினும் கொடிது ஆற்றொணாத் தொழுநோய்
அதனினும் கொடிது அன்பிலாப் பெண்டிர்
அதனினும் கொடிது
இன்புற அவர்கையில் உண்பது தானே
கோடி வெண்பா:
மதியாதார் முற்றம் மதித்தொருகாற் சென்று
மிதியாமை கோடி பெறும்.
உண்ணீருண் ணீரென் உபசரியார் தன்மனையில்
உண்ணாமை கோடி பெறும்.
கோடி கொடுத்தும் குடிப்பிறந்தார் தம்மோடு
கூடுதல் கோடி பெறும்.
கோடான கோடி கொடுப்பினும் தன்னுடைநாக்
கோடாமை கோடி பெறும்.


கிராம்பு ஜஸ்ட் 2 பீஸ் போதும்.. நோயெல்லாம் பறந்துரும்



தம்மாதூண்டு துண்டு.. இரவில் ஜஸ்ட் 2 பீஸ் போதும்.. நோயெல்லாம் பறந்துரும், ஆயுசு கூடிரும்.. கமகம வாசம்

வெறும் வயிற்றில் கிராம்பு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் ஏராளம்.. இதை பற்றி நாம் ஏற்கனவே பார்த்தோம்.. ஆனால், இரவு நேரம், கிராம்பு சாப்பிடுவதால் வரும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?

கார்போஹைட்ரேட், புரோட்டின், கொழுப்பு, நார்ச்சத்து, இரும்பு, பொட்டாசியம், பாஸ்பரஸ், மக்னீசியம், சோடியம், தாமிரம், துத்தநாகம், செலினியம், மாங்கனீசு, தயாமின், வைட்டமின் B, A, E, K, கொழுப்பு அமிலங்கள் என பல சத்துக்கள் இந்த கிராம்பில் உள்ளன.

Do you know Amazing benefits of Cloves and Amazing Uses of taking clove in night before bed
சர்க்கரை நோயாளிகள்: சர்க்கரை நோயாளிகளுக்கு கிராம்பு மிகவும் அத்தியாவசியமான பொருளாகும்.. தினமும் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.. இதனால், ரத்தத்திலிருந்து அதிகப்படியான சர்க்கரையை நீக்கி, சமநிலையை தக்கவைக்கிறது. எனினும், கிராம்பு எடுப்பதற்கு முன்பு கட்டாயம் மருத்துவரிடம் ஆலோசனை செய்ய வேண்டும்.

ஆண்டிஆக்சிடெனட் நிரம்பி உள்ள இந்த கிராம்பு, எந்தவிதமான புற்று நோய்களையும் நெருங்க செய்யாது.. நுரையீரலின் நண்பன் இந்த கிராம்பு என்று சொல்லலாம்.. அந்த அளவுக்கு சுவாச பிரச்சனையை தீர்க்கிறது..

ஆஸ்துமா: ஆஸ்துமா பிரச்சனைக்கே, சிகிச்சையளிக்க இந்த கிராம்பு உதவுகிறதாம். ஜீரண கோளாறை நீக்கும் சக்தி அபரிமிதமாக உள்ளதால்தான், அசைவ உணவுகளில் கிராம்பை அதிகம் பயன்படுத்தப்படுகிறது...

வெறும் வயிற்றில் 2 கிராம்பு சாப்பிட்டு வந்தால், கல்லீரல் பாதுகாப்புக்கு சிறந்தது... நம்முடைய உடலிருக்கும் கழிவுகள், நச்சுக்களை வளர்ச்சிதை மாற்றம் செய்து அவற்றை வெளியேற்றுவதில் கல்லீரலுக்கு பெரும் பங்கு உள்ளது.. இந்த கிராம்பில் யூஜெனால், கல்லீரல் ஆரோக்கியத்தை காக்க செய்கிறது. எனவே, கல்லீரலின் சிறந்த செயல்பாட்டுக்கு இந்த கிராம்பு உபயோகமாகிறது.

வயிற்றுப்புண்களையும், வாய்ப்புண்களையும் ஆற்றக்கூடியது.. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.. வாய் துர்நாற்றமும் நீங்கும்.. அன்றைய நாள் முழுவதும் புத்துணர்ச்சி கிடைக்கும்.. அஜீரணம் நீங்கும்.. ஜலதோஷம், சளிக்கு நிவாரணம் கிடைக்கும்.

கிராம்பு: ஆனால், இரவில் தூங்க செல்லும்முன்பு 2 கிராம்பு சாப்பிட்டு வந்தால், கூடுதல் நன்மைகள் கிடைக்கும்.. தூங்க செல்லும்போது, 2 கிராம்பு சாப்பிட்டு சுடுநீர் குடித்தால், மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படாது.. இதனால், முகப்பருக்களும் வராமல் தடுக்கப்படும்.. பல் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளையும் இந்த கிராம்பு தீர்ந்துவிடும். பற்களில் வலி, ஈறுகளில் வீக்கம், போன்றவைகளை கிராம்பு தீர்க்கக்கூடியது.. பல் வலி மட்டுமல்ல, காது வலி என்றாலும்கூட, கிராம்பு போதும்.


தொண்டை வலியும் குணமாகிவிடும். வைரஸ் தொற்று முதல் சைனஸ் பிரச்சனைவரை நிவாரணம் தரக்கூடியதுதான் இந்த கிராம்பு. வெறுமனே சாப்பிட முடியவில்லை என்றால் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து தேன் கலந்து குடிக்கலாம்.

Do you know Amazing benefits of Cloves and Amazing Uses of taking clove in night before bed
பெரும்பலன்: அல்லது கிராம்பை அப்படியே வாயில் போட்டு, லேசாக சுவைத்து ஈரமாக்கி மெல்ல மெல்ல அதன் சாறை விழுங்கி, வெதுவெதுப்பான நீர் குடித்துவிட்டு தூங்கலாம். டம்ளர் வெதுவெதுப்பான நீரை குடித்து விட்டு தூங்க வேண்டும்.

இதனால், அசிடிட்டி, டயேரியா, மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகள் தீர்ந்து செரிமானமும் சிறப்பாக நடக்கும்.. குடல் ஆரோக்கியமும் மேம்படும்.. இரவில் கிராம்பு சாப்பிட்டுவிட்டு தூங்கினால், கை, கால் நரம்புகள் இழுப்பது போன்ற பிரச்சனைகளும் சீராகும்.

நிம்மதியான தூக்கம்: அதுமட்டுமல்ல, தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள் தினமும் இரவில் படுக்கும் முன்பு, கிராம்பை வாயில் போட்டு சாப்பிட்டால், அது மன அழுத்தத்தை குறைத்து நன்றாக தூக்கம் வர உதவுகிறது.. கிராம்பு சாப்பிடுவதால் வளர்சிதை மாற்ற விகிதமும் அதிகரிக்கிறது. எடையையும் எளிதாக குறைத்துவிடலாம்.


Monday, 4 December 2023

குளிர்காலத்துல மாரடைப்பு வர அதிக வாய்பிருக்காம்... அவை வராமல் தடுக்க 'நீங்க' என்ன செய்யணும் தெரியுமா?

குளிர்காலத்துல மாரடைப்பு வர அதிக வாய்பிருக்காம்... அவை வராமல் தடுக்க 'நீங்க' என்ன செய்யணும் தெரியுமா?  குளிர்காலம் சுற்றுப்புறத்தை உறைபனியின் அமைதியான அடுக்கில் மூடுவதுடன், உங்கள் உடலுக்கு பல சாவல்களை வழங்குகிறது. குறிப்பாக இருதய பிரச்சினைகள் உள்ளவர்கள் குளிர்காலத்தில் கவனமாக இருக்க வேண்டும். குளிர்காலம் இரத்த நாளங்களை சுருங்கச் செய்கிறது. இது உங்கள் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் மற்றும் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும். ஆஞ்சினா அல்லது கரோனரி இதய நோயால் ஏற்படும் மார்பு வலி, குளிர் காலத்தில் கரோனரி தமனிகள் சுருங்கும்போது மோசமடையலாம். குளிர்ந்த வெப்பநிலை இதய ஆரோக்கியத்தில் ஏற்படும் தாக்கத்தை பற்றியும், இதயத்தை ஆரோக்கியமாக பாதுகாக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றியும் இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள். வாசோகன்ஸ்டிரிக்ஷன் என்றால் என்ன? வாசோகன்ஸ்டிரிக்ஷன் என்பது இரத்த நாளங்களின் சுவர்களில் உள்ள சிறிய தசைகளால் குறுகுவது (சுருங்குதல்) ஆகும். இரத்த நாளங்கள் சுருங்கும்போது, இரத்த ஓட்டம் குறைகிறது அல்லது தடுக்கப்படுகிறது. இது இதயத்தில் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். இந்த பிரச்சனை மிதமானது முதல் கடுமையான நிலைகளையும் ஏற்படுத்தலாம். இது நோய், மருந்துகள் அல்லது உளவியல் நிலைகளால் ஏற்படலாம். குளிர்காலத்தின் குளிர்ச்சியான காலநிலை இரத்த நாளங்களின் சுருக்கத்தை தூண்டுகிறது. இந்த உடலியல் மூலம் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது. இது உயர் இரத்த அழுத்தம் உள்ள நபர்களுக்கு குறிப்பிடத்தக்க ஆபத்தை ஏற்படுத்துகிறது. ஆதலால், குளிர்கால மாதங்களில் மக்கள் இரத்த அழுத்தத்தை கவனமாக கண்காணிக்க வேண்டும். வாசோகன்ஸ்டிரிக்டிவ் விளைவை எதிர்ப்பதற்கு தேவையான மருந்துகளை சரியாக எடுத்துக்கொள்ள வேண்டும். அமைதியான அச்சுறுத்தல் குளிர்காலம் பார்க்க அல்லது உணர அழகாக இருக்கும். ஆனால், இது பல மறைக்கப்பட்ட பல ஆபத்துக்களைக் கொண்டுள்ளது. உங்கள் இதயத்தை பாதிக்கலாம். குறிப்பாக முன்பே இருதய பிரச்சனை உள்ளவர்கள், மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தங்கள் இதயத்தையும் உடல் ஆரோக்கியத்தையும் பராமரிக்க வேண்டும். குளிர்கால செயலற்ற சுழற்சியை உடைக்கவும் குளிர்காலத்தில் வசதியான போர்வைகள் மற்றும் குறுகிய நாட்களின் கவர்ச்சி ஒரு உட்கார்ந்த வாழ்க்கை முறைக்கு வழிவகுக்கும். இருப்பினும், உடல் செயல்பாடு இதய ஆரோக்கியத்திற்கு முக்கியமானது. உட்புறப் பயிற்சிகளில் ஈடுபடுங்கள். குளிர்கால விளையாட்டுகளில் எச்சரிக்கையுடன் ஈடுபடுங்கள். மேலும், இதயத்திற்கு உடலுக்கு அதிகம் அழுத்தம் கொடுக்கும் பயிற்சிகளை தவிர்க்க வேண்டும் மற்றும் சீரான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள். உடல் இயக்கம் குளிர்கால எடை அதிகரிப்பை எதிர்த்துப் போராடுவதோடு மட்டுமல்லாமல், இதய தசைநார் பின்னடைவை வளர்க்கிறது. நீரேற்றம் குளிர்ந்த காலநிலை தண்ணீர் தாகத்தை நமக்கு அதிகம் ஏற்படுத்தாது. இதனால், பலர் தினசரி அளவுக்கான தண்ணீரை குடிப்பதில்லை. எந்த காலநிலையாக இருந்தாலும், உங்கள் உடலுக்கு நீரேற்றம் அவசியம். ஏனெனில், நீரிழப்பு இதயத்தை பாதிக்கும். போதுமான தண்ணீர் அருந்தவில்லை என்றால், அது இரத்தத்தை திறம்பட பம்ப் செய்யும் திறனை பாதிக்கிறது. நீரேற்றமாக உங்களை வைத்துக்கொள்ளுங்கள். நாள் முழுவதும் தண்ணீரைப் பருகுதல் பற்றி விழிப்புடன் இருங்கள். மூலிகை தேநீர் மற்றும் சூடான சூப்கள் குளிர்ச்சியிலிருந்து ஒரு ஆறுதல் நிவாரணத்தை வழங்கும். அதே வேளையில் திரவ உட்கொள்ளலுக்கு பங்களிக்க முடியும். இதயத்திற்கு ஆரோக்கியமான உணவுகள் குளிர்காலம் பெரும்பாலும் இதயம் நிறைந்த, கலோரி நிறைந்த உணவுகளை விரும்புகிறது. பழங்கள், காய்கறிகள் மற்றும் மெலிந்த புரதங்கள் நிறைந்த இதயத்திற்கு ஆரோக்கியமான உணவை மக்கள் தேர்வு செய்ய வேண்டும். மீன், அக்ரூட் பருப்புகள் மற்றும் ஆளிவிதைகளில் காணப்படும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களைச் சேர்த்து, அவை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன மற்றும் குளிர்காலத்தில் தூண்டப்பட்ட இருதய அழுத்தத்தின் தாக்கத்தைக் குறைக்கின்றன. இதயத்தை ஆரோக்கியமாக பார்த்துக்கொள்ளுங்கள் ஸ்னோஃப்ளேக்ஸ் மற்றும் மிருதுவான குளிர்காலக் காற்றின் சிம்பொனியில், நம் இதயங்களுக்கு ஆரோக்கியத்திற்கான ஒரு திட்டமிடப்பட்ட அணுகுமுறை தேவைப்படுகிறது. கார்டியோவாஸ்குலர் நல்வாழ்வில் குளிர்காலத்தின் விளைவுகளின் நுணுக்கங்களைப் புரிந்துகொள்வதன் மூலமும், செயலூக்கமான நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலமும், பருவத்தின் அழகு நம் இதயத்தின் ஆரோக்கியத்தை சமரசம் செய்யாமல் இருப்பதை உறுதி செய்யலாம். குளிர்காலத்தின் வசீகரத்தில் நாம் மகிழ்ச்சியாக இருக்கும்போது,​​நமது மிக முக்கியமான உறுப்பான இதயத்தின் அரவணைப்பு மற்றும் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிப்போம்

Sunday, 3 December 2023

இரவு நேரத்தில் ஒருபோதும் செய்யாதீர்கள்

நகங்களை வெட்டுவது சாஸ்திரங்களின் படி, சூரியன் அஸ்தமனமான பின் இரவு நேரத்தில், ஆணோ, பெண்ணோ நகங்களை வெட்டக்கூடாது. அப்படி வெட்டினால், அது வீட்டிற்கு தரித்தித்தை கொண்டு வரும். வீட்டின் புண்ணியம் பறிபோகும். முக்கியமாக வீட்டில் பெரிய நிதி இழப்பை சந்திக்க வேண்டியிருக்கும். எனவே இந்த தவறை ஒருபோதும் செய்யாதீர்கள். பெர்ஃப்யூம் வேண்டாம் வாஸ்துப்படி, இரவு நேரத்தில் ஆண்களோ, பெண்களோ பெர்ஃப்யூம் அடிக்கக்கூடாது. அப்படி வாசனை திரவியத்தை அடித்துக் கொள்வது, வீட்டில் எதிர்மறை அற்றலை அதிகரிக்கும். மேலும் இது ஒருவரது மனதில் தீய சக்திகளை அதிகம் ஆதிக்கம் செலுத்தத் தூண்டும். எனவே இதை செய்யாதீர்கள். கடன் கூடாது பணத் தேவை அனைவருக்குமே எப்போதும் இருக்கக்கூடிய ஒன்று. ஆனால் பணத்தைக் கடன் வாங்க நினைத்தால், இரவு நேரத்தில் செய்யாதீர்கள். அதேப் போல் யாருக்கும் இரவு நேரத்தில் கடன் கொடுக்காதீர்கள். ஒருவேளை செய்தால், உங்கள் வீட்டில் தங்கியுள்ள லட்சுமி தேவி, வீட்டில் இருந்து வெளியேறுவார். எனவே இந்த தவறையும் செய்து விடாதீர்கள். துளசி இலையை பறிக்காதீர் சாஸ்திரத்தின் படி, சூரியன் அஸ்தமனமான பின் துளசி இலைகளையோ, அரச மரை இலைகளையோ பறிக்கக்கூடாது. அப்படி பறித்தால், அது லட்சுமி தேவியின் கோபத்திற்கு ஆளாக்கி, வீட்டில் வறுமையைக் கொண்டு வரும். மேலும் வீட்டின் மகிழ்ச்சியும், அமைதியும் குறைந்து, வீட்டில் பிரச்சனைகள் அதிகரிக்கும். பாத்திரங்களை காலியாக வைக்காதீர் இரவு தூங்கும் முன் சமையலறையில் உள்ள உணவுப் பாத்திரங்களை காலியாக வைத்திருக்கக்கூடாது. வாஸ்துப்படி, அப்படி காலி பாத்திரங்களை வைத்திருப்பது அசுபமாக கருதப்படுகிறது. அதுவும் இவ்வாறு வைத்தால், அன்னப்பூரணி தேவி மற்றும் லட்சுமி தேவியின் கோபத்திற்கு ஆளாக்கிவிடும். இதன் விளைவாக வீட்டில் உணவுப் பற்றாக்குறை ஏற்படுவதோடு, பண பிரச்சனையும் அதிகரிக்கும். அதேப் போல் இரவு நேரத்தில் தலை முடியை விரித்துப் போட்டு தூங்குவதும் நல்லதல்ல.

Saturday, 2 December 2023

தொப்பையை குறை தொப்பையை டயட் உஇல்லாமல் குறைக்கலாம்..


டயட் வேண்டாம்-உடற்பயிற்சி வேண்டாம்..’இதை’ செய்தால் ஈசியாக தொப்பையை குறைக்கலாம்!
தொப்பையை குறைக்க டயட்-உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை..சில வாழ்க்கை நடைமுறைகளே அதற்கு வழிவகை செய்து விடும்.   

டயட் வேண்டாம்-உடற்பயிற்சி வேண்டாம்..’இதை’ செய்தால் ஈசியாக தொப்பையை குறை
தொப்பையை டயட் உஇல்லாமல் குறைக்கலாம்..
அதற்கென்று தினசரி நடவடிக்கைகள் இருக்கின்றன..
மேலும் பல டிப்ஸ்கள்..இதோ

நம்மை பாதுகாப்பின்மையாக உணர வைக்கும் தொப்பையில் இருந்து விடுபட நாம் பல முயற்சிகளை மேற்கொள்வாேம். அந்த முயற்சிகளில் ஒன்றாக, டயட் அல்லது உடற்பயிற்சி ஆகியவை இருக்கும். ஆனால், இவை இரண்டும் இல்லாமல் கூட நம்மால் உடல் எடையை குறைக்க முடியும். அது எப்படி தெரியுமா? 

1.சமைத்து சாப்பிட வேண்டும்..

நீங்கள் சாப்பிடும் உணவுகளை நீங்களே சமைத்து சாப்பிடுவது சால சிறந்தது. எதை, எந்த அளவிற்கு, எப்படி சாப்பிட வேண்டும் ஆகிய விஷயங்களை நீங்களே முடிவு செய்யுங்கள். அதற்கு அடிப்படையாக சமைக்க கற்றுக்கொள்வது சிறந்தது. விதவிதமாக சமைத்து சாப்பிடுபவர்களுக்கு அதிக ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை எப்படி ருசியாக சமைத்து சாப்பிட வேண்டும் என்பது தெரியும். அதில் காய்கறி, பழங்கள் போன்ற பலவகையான உணவுகளும் அடங்கும். எனவே, உங்களுக்கு தேவையான உனவை நீங்களே சமைத்து சாப்பிட்டால் எவ்வளவு சாப்பிடுகிறீர்கள் என்பதற்கான அளவையும் அறிந்து கொள்வீர்கள். 
2.புரத சத்துக்கள்:

புரதம் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொண்டால் நீங்கள் நீண்ட நேரத்திற்கு பசி இல்லாமல் இருக்கலாம். இது, உங்கள் உடலுக்கு ஆற்றல் அளிக்கும் சத்துக்களையும் அதிகரிக்கும். இதற்கும், டயட்டில் இருப்பதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்றாலும், டயட்டில் இருக்கும் போது உங்களுக்கு பசி ஏற்படும் அளவிற்கு புரதம் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொண்டால் ஏற்படாது. 

3.உறக்கம் முக்கியம்..

உடல் பருமனுடன் இருப்பவர்கள், பெரும்பாலும் இரவில் அதிகம் தூங்காதவர்களாக இருப்பார்கள். இரவில் தாமதமாக தூங்கி, காலையில் சீக்கிரமாக எழுபவர்களுக்கும் இது பொருந்தும். இரவில் தூக்கமின்றி தவிப்பது கண்ணுக்கு தெரியாமல் நம் உடலில் பல பிரச்சனைகளை கொண்டு வந்து விட்டுவிடும். எனவே, இரவில் உங்கள் உடலுக்கு தேவையான ஓய்வை எடுத்துக்கொள்வது நல்லது. 

4.மென்று சாப்பிட வேண்டும்..

எந்த வேளையில், எந்த உனவை, எந்த அளவில் சாப்பிட்டாலும் அதை நன்கு மென்று சாப்பிட கற்றுக்கொள்ளுங்கள். இப்படி நன்கு மென்று சாப்பிடுவதால் உணவு எளிதில் செரிமானம் ஆகும். இதனால் உடல் எடை கூடாமல் பார்த்துக்கொள்ளலாம். 


5.தினசரி செயல்பாடுகள்..

டயட், உடற்பயிற்சி இல்லாமல் உடல் எடையை குறைக்க விரும்புவோர் தங்களுக்கான வேலைகளை தாங்களே செய்து கொள்ள வேண்டும். உங்களுக்கான உணவை சமைத்து கொள்வதில் ஆரம்பித்து, உங்களுக்கு ஏதாவது தேவை என்றால் நீங்களாக எழுந்து சென்று எடுத்துக்கொள்ளும் வரை, ஒவ்வொரு வேலையையும் நீங்களே செய்து கொள்ள வேண்டும். 

6.படியை உபயோகப்படுத்த வேண்டும்..

அலுவலகம், வீடு என நீங்கள் அடிக்கடி பழங்கும் இடங்களுக்கு செல்லும் போது, லிஃப்ட் அல்லது எலிவேட்டரை விடுத்து படியேறி பழகுவது நல்லது. படி ஏறுவது, நம் இதயத்தை பாதுகாக்கும் நல்ல கார்டியோ உடற்பயிற்சியாகவும் பார்க்கப்படுகிறது. இப்படி, எங்கு சென்றாலும் மின்தூக்கிகளை விடுத்து படிகளை பயன்படுத்துதல் உடலுக்கு வேலை கொடுக்கும் நல்ல பயிற்சியாக அமையும். இதனால் உடல் எடையும் குறையும். 

­

பாதுகாவலர்கள் கருப்புநிற சன்கிளாஸ் ஏன்



கருப்புநிற சன்கிளாஸ் ஏன்: பாதுகாவலர்கள் இப்படி இருக்க வெளிநாட்டு தலைவர்களான உள்பட பலரது மெய்க்காப்பாளர்களும் ஏறக்குறைய இதே பாணியில் தான் உடை அணிவார்கள். குறிப்பாக இந்திய உள்பட வெளிநாட்டு தலைவர்களின் மெய்க்காவலர்கள் அனைவருமே கண்களில் கருப்புநிற சன்கிளாஸ் அணிந்து இருப்பார்கள். நாம் பல இடங்களில்தனை பார்த்து இருக்கலாம். இருப்பினும் ஏன் இந்தியா உள்பட அனைத்து நாட்டு தலைவர்களின் மெய்க்காவலர்களும் கருப்புநிற சன்கிளாசஸ் அணிவதை வாடிக்கையாக வைத்துள்ளனர் என நினைத்து பார்த்தது உண்டா?.

3 முக்கிய காரணங்கள்: ஆம், இது வெறும் ஸ்டைலுக்காக அணிவது கிடையாது. மாறாக அமெரிக்க அதிபர் ஜோபைடன் முதல் பிரதமர் மோடி உள்பட பல நாடுகளின் தலைவர்களின் பாதுகாவலர்கள் கருப்பு நிற சன்கிளாசஸ் அணிவதன் பின்னணி 3 முக்கிய காரணங்கள் உள்ளன. அவை அனைத்தும் பாதுகாப்பு சார்ந்தவையாகவே இருக்கின்றன. அந்த 3 காரணங்கள் என்னென்ன என்பது பற்றி இந்த செய்திகள் பார்க்கலாம்.

முதலாவது காரணம்: இது நாம் அனைவரும் அறிந்ததே. அதாவது மதிய வேளைகளில் சூரியவெளிச்சம் என்பது மிகவும் அதிகமாக இருக்கும். இந்த வேளையில் கண்கள் சோர்வடையலாம். அதோடு கண்எரிச்சல், கண்ணீர் வரலாம். இதனை தடுப்பதில் கருப்புநிற சன்கிளாசஸ் உதவுகிறது. மேலும் பத்திரிகையாளர்கள் போட்டோக்கள் எடுக்கும்போது விழும் பிளாஷ் லைட்டில் இருந்து கண்களை இந்த சன்கிளாசஸ் பாதுகாக்கும். இதனால் தலைவர்களின் மெய்க்காப்பாளர்களான பாதுகாவலர்கள் கருப்புநிற கண்ணாடி அணிகின்றனர்.


2வது காரணம்: கருப்பு நிற சன்கிளாஸை ஒருவர் அணிந்தால் அவரது கண்களை யாராலும் நேரடியாக பார்க்க முடியாது. அதாவது வெளியில் இருந்து பார்ப்போருக்கு கருப்பு கண்ணாடி மட்டுமே தெரியும். இதன்மூலம் பாதுகாவலர்கள் யாரை, எந்த பக்கமாக பார்க்கின்றனர்? என்பதை எதிரிகள் அறியாமல் குழப்பத்திலேயே இருக்க வைக்க முடியும். இது 2வது காரணமாகும்.

3வது காரணம்: அதாவது 3வது காரணம் என்பது நேரடி பார்வையை தவிர்ப்பது. பொதுவாக மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாவலர்களின் கவனத்தை சிதறடிக்கும் முயற்சி நடக்கலாம். பொதுவாக இருவரின் கண்கள் நேரடியாக சில வினாடிகள் பார்த்தாலே கவனச்சிதறல் ஏற்படும். ஆனால் பாதுகாவலர் கருப்பு கண்ணாடி அணிந்தால் அவர் யாரை பார்க்கிறார் என்பதை பிறரால் அறிய முடியாது. இதனால் கவனச்சிதறல் ஏற்பட வாய்ப்பில்லை. இந்த 3 காரணங்கள் தான் பெரியபெரிய தலைவர்களின் பாதுகாப்பில் ஈடுபடும் பாதுகாவலர்கள் கருப்பு நிற சன்கிளாசஸ் அணிய முக்கிய காரணங்களாக சொல்லப்படுகின்றன.