jaga flash news

Sunday, 13 March 2016

மாவிலைத் தோரணம்.

மாவிலைத் தோரணம்.





சுப நிகழ்ச்சிகளுக்கோ,விஷேசங்களுக்கு மாவிலை தோரணம் கட்டுவார்கள்.நாம் அப்போதுதான் மாவிலை கட்ட வேண்டியதில்லை வாரத்திற்கு இரு முறை தாரளமாக மாவிலை தோரணம் நம் நிலைப்படியில் கட்டலாம்.

பொதுவாகவே வீட்டு வாசல் தாண்டினாலே இரைச்சல், புழுதி, கிருமி தொற்று என, பலவகை பிரச்னைகள்.வெளியில் போய்விட்டு வீட்டிற்குள் வரும்போது, நாம் மட்டும் வருவதில்லை
சில, பல கிருமிகளும், நம்முடனேயே அழையா விருந்தாளிகளாய் உள்ளே வர வாய்ப்பு மிக மிக அதிகமாகும்.


நிறைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இருந்தாலும், ஓர் எளிய வழி, வீட்டு வெளி நிலை வாசலில் மாவிலை தோரணம் கட்டுவதுதான் ஏன் தெரியுமா?

“மாவிலை' கரியமில வாயுவை எடுத்துக் கொண்டு, பிராண வாயுவைக் கொடுக்கும். நம் உடம்பின் வியர்வை நாற்றத்தையும், காற்றில் ஆவியாகிப் பரவியிருக்கிற கிருமிகளையும், வாசலிலேயே தடுத்து அழித்து விடும்.

*மாவிலை அழுகாமல் காய்ந்துவிடும் தன்மைகொண்ட அற்புதமான
மூலிகை ஆகும்.

No comments:

Post a Comment