jaga flash news

Tuesday, 22 March 2016

சிவபுராணம்

சிவனுக்கு மல்லிகை பூ அர்ச்சனை செய்யுங்கள்
🌼சிவனை பத்துக்கோடி மலர்களால்
அர்ச்சனை செய்பவர்கள் ராஜயோகம்
பெறுவார்கள்.
🌼ஐந்து கோடி மலர்கள்
அர்ச்சனை செய்தால் முக்தி பெறலாம்.
🌼ஒருகோடி மலர்களால் அர்ச்சனை செய்தால்
ஞானம் பெறலாம்.
🌼 அரைக் கோடி மலர்களால்
அர்ச்சனை செய்து ம்ருத்யுஞ்ஜய
மந்திரத்தை ஐந்து லட்சம் தடவை ஜபித்தால்
சிவன் அருள் கிடைக்கும்.
🌼லட்சம் அருகம்புல் அர்ச்சித்தால் தீர்க்காயுள்
ஏற்படும்.
🌼 லட்சம்
கரு ஊமத்தையை கொண்டு அர்ச்சனை செய்தால்
குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
🌼லட்சம் கரவீர
புஷ்பத்தால் அர்ச்சனை செய்தால் நோய்கள்
நிவர்த்தியாகும்.
🌼லட்சம் மல்லிகை பூக்களால்
அர்ச்சனை செய்தால் அழகிய
மனைவி கிடைப்பாள்.
🌼ஐம்பதினாயிரம் மலர்களால் அர்ச்சித்தால்
வியாதிகள் நிவர்த்தியாகும்.
🌼பன்னீராயிரத்து ஐந்நூறு மலர்களால்
அர்ச்சனை செய்தால் கல்வி, கேள்விகளில்
சிறந்தவனாவான்.
🌼பத்தாயிரம் மலர்களால்
அர்ச்சிக்க சத்ருபயம் நீங்கப் பெறுவார்கள்
🌼என்று சிவபுராணம் கூறுகிறது🌼.

1 comment:

  1. *சிவ புராணம்* என்றாலே நாவில் தேனூறும். ஏனென்றால் மாணிக்கவாசகர், திருவாசகத்தின் வாயிலாக, நம் எம்பெருமானை அழகாக வாழ்த்துகிறார்.

    நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
    இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் − தாள் வாழ்க
    கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க − ஏகன் அனேகன் இறைவன் அடி வாழ்க. என்று பாடினார்.

    பொருள்: *நமச்சிவாய* வாழ்க. நாதன் திருவடி வாழ்க. கண்ணிமைக்கும் நேர
    மும், என் நெஞ்சம் பிரியாதவனுடைய திருவடி வாழ்க. திருவாவடுதுறை ஆண்டருளும் குருவாகிய மாணிக்கத்தின் திருவடி வாழ்க ஒருவனாகியும், பலவுருக்கொண்டும், இருக்கும் இருக்கும் இறைவனின் திருவடி வாழ்க என்று, மாணிக்கவாசகர் எவ்வளவு அழகாக சிவபெருமானை புகழ்ந்திருக்கிறார்.

    சிவம் வாழ்க என்றுகூடத் துவங்காமல், வணக்கத்திற்குரிய *நம* முதலில் கூறி, இறைவனின் *சிவ* என்ற திருநாமத்தைச் சொல்வது, இறைவன்பால் கொண்ட பணிவும், அன்புமே.

    மாணிக்கவாசகர், தம்முடைய திருவாசகத்தின் முதல் ஒலியாக *நமச்சிவாய* என்ற திருஐந்தெழுத்தை சொன்னது மிகவும் இனியது என்று சிவபுராணத்தின் புகழைச் சொல்லிக் கோண்டே போகலாம்...

    ReplyDelete