jaga flash news

Monday 12 June 2017

அதிர்ஷ்டம் வர, தீமைகள் விலக இந்த மரத்தை வைத்திடுங்கள்

மரம் வளர்ப்பதால் ஏராளமான நன்மைகளை பெறலாம். அதிலும் எந்தெந்த மரங்களால் என்னென்ன பலன்கள் உண்டு என்பது தெரியுமா?
சீதாப்பழ மரம்- திருஷ்டி விலகும்
சீதா மரம் நன்றாக காய்க்கக் கூடியது. இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் பத்து முதல் 20 பவுண்டு எடை அளவுக்கு பழங்களை தரக்கூடியது.
காய்கள் மரத்தில் பழுக்காது என்பதால் பழத்தின் ஓடுகள் மெதுவாக விரிசல் விடும் போது, அவற்றை பறித்து வைக்கலாம்.
சிறிதளவு அழுத்தம் கொடுக்கும் போது, பழத்தின் உருவம் சிதையும் நிலை ஏற்பட்டால், அப்பழம் சுவை நிலையை எட்டி விட்டது என்று அறியலாம்.
சீதாப் பழங்கள் அதிக கலோரிகள் கொண்டதாகவும் இரும்புச்சத்து மிக்கதாகவும் இருக்கும்.
அரச மரம்- ஆரோக்கியம் தரும்
அரசமரத்தின் வேர் பகுதியில் பிரம்மனும், நடுவில் திருமாலும், உச்சியில் ஈசனும் அருள்புரிவதாக புராணங்கள் தெரிவிக்கின்றது. அதனாலேயே அரசமரம் ராஜ விருட்சம் என்று அழைக்கப்படுகிறது.
அரசமரத்தின் பட்டை, வேர், விதை இவற்றை பாலில் கொதிக்க வைத்து, ஆறிய பின் அதில் தேன் கலந்து தொடர்ந்து 48 நாட்கள் அருந்தி வந்தால், தாது விருத்தியடையும். பெண்களுக்கு கருப்பை, மாதவிடாய்க் கோளாறுகள் நீங்கும்.
சந்தன மரம்- வம்சம் விருத்தியடையும்
சந்தனம் என்பது மருத்துவப் பயன்பாடுடைய ஒரு மரமாகும். சந்தனக் கட்டையைச் சந்தனக் கல்லில் தேய்த்து வரும் சாந்தை கோடை வெப்பத்தைத் தணிக்க மார்பில் பூசிக் கொள்வது வழக்கமாக உள்ளது.
மரத்தின் வைரம் பாய்ந்த கட்டைப் பகுதி எண்ணெய் சத்து நிரம்பியது. இதிலிருந்து எடுக்கப்படும் அகர் எனும் எண்ணெய் மருத்துவப் பண்புகள் கொண்டவையும், சருமத்திற்கு குளிர்ச்சியளிக்கக் கூடியவையாக உள்ளது.
மகிழம்பூ மரம்- கல்வி, ஞானம் பெருகும்
மகிழம்பூ மரத்தின் மணமிக்க மலர்களில் இருந்து, வாசனைப் பொருட்கள் எடுக்கப்படுகின்றது. மகிழம் பூவில் இருந்து எண்ணெய் எடுத்து அதில் சந்தனமர எண்ணெய் கலந்து வாசனை திரவியங்கள் தயாரிக்கலாம்.
மகிழமரத்திற்கு அதிக ஈரப்பதம் தேவையில்லை. ஆனால் தண்ணீர் தேங்கக் கூடாது. இதன் உயரம் 20 முதல் 50 அடி உயரம் வளரக் கூடியது. அடர்த்தியான இலைகளையுடைய, நறுமணமான பூக்களை உடைய பசுமை மரம்.
கொன்றை மரம்- தீய சக்திகள் விலகும்
கொன்றை பெரும்பாலும் அலங்காரத் தாவரமாகவே வளர்க்கப்படுகிறது. வெப்ப வலயம் மற்றும் குறை வெப்பமண்டலப் பகுதிகளில் நன்கு வளரக் கூடியது. நன்றாக நீர் வடியக் கூடிய நிலத்தில், நல்ல சூரிய ஒளியில் சிறப்பாக வளரும்.
வறட்சியையும், உப்புத் தன்மையையும் தாங்கக் கூடியது. இந்த கொன்றை பூவை வதக்கி துவையலாக்கி உணவுடன் சேர்த்து சாப்பிடால் மலச்சிக்கல் நீங்கும்.
வில்வ மரம்- அதிர்ஷ்டங்கள் கூடி வரும்
வில்வ மரமானது தமிழில் கூவிளம், இளகம் எனப் பல பெயர்களில் உள்ளது. இது தமிழ் சித்த மருத்துவத்தில் பல்வேறு பயன்களைக் கொண்டது. மூக்கடைப்பு, செரியாமை, காசம் முதலான நோய்களுக்கு இதன் இலை, பழம் போன்றவை மருந்தாகப் பயன்படுகிறது.
இந்து மதத்தில் வில்வ மரம் மிகப் புனிதமானது. சிவ வழிபாட்டில் வில்வ பத்திர பூசை முக்கியமானது. முக்கூறுகளைக் கொண்ட வில்வ இலை திரிசூலத்தின் குறியீடாகக் கொள்ளப்படுகிறது.
நேபாளத்தில் கன்னிப் பெண்களின் கருவளத்தைக் காக்க வேண்டி, வில்வம் பழத்திற்கு திருமணம் செய்து வைக்கும் சடங்கு பிரபலமானது.
புன்னை மரம்- திருமணம் கைகூடும்
புன்னை மிகவும் அழகிய தோற்றம் கொண்ட மரங்களுள் ஒன்றாகும். இதன் இலைகள் சற்றுப் பெரியதாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.
இம்மரம் வரண்ட மணற் பாங்கான கடற்கரையோரங்களில் வளரக்கூடியது. தமிழ்நாட்டிலும் கடற்கரையோரப் பகுதிகளில் காணலாம். இதன் தோற்றம் காரணமாக, நகரப் பகுதிகளில் அழகுக்காக சாலையோரங்களில் நட்டு வளர்க்கப்படுகின்றது.
கடம்ப மரம்- தீமைகள் விலகும்
கடம்ப மரம் முருகனுக்கும், திருமாலுக்கும் உரியது என சங்கப் பாடல்கள் தெரிவிக்கின்றது. கொத்தாக உருண்டு பூக்கும் இதன் மலரின் நிறம் வெள்ளை.
நன்னன் எனும் அரசனின் காவல்மரம் கடம்பு மரமாகும். நீரோட்டமுள்ள கரைகளில் செழித்து வளரும் இதன் இலைகளை மாலையாகக் கட்டி முருகனுக்கு அணிவிப்பார்கள்.
இம்மரத்தின் இலைகளை கம்பளிப் பூச்சி, பட்டாம்பூச்சி, மற்றும் வரியன் பூச்சிகளும் உணவாக உட்கொள்ளுகின்றது.

2 comments: