jaga flash news

Monday, 12 June 2017

*செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பணம் கொடுக்கக் கூடாது ஏன்?*

*செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில்
பணம் கொடுக்கக் கூடாது ஏன்?*
உலகில் மனிதராய் பிறந்த அனைவரும் உதவி செய்யவே விரும்புகிறார்கள். இருந்தும் சிலர் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் கடன் கொடுக்க மறுக்கிறார்கள்.
செவ்வாய் வெள்ளி கிழமைகளில் பணம் கொடுக்க கூடாது ஏன்?
🌟 செவ்வாய்கிழமை முருகனுக்கும், வெள்ளிக்கிழமை லட்சுமிக்கும் உகந்த நாட்களாக கருதப்படுகிறது.
🌟 நாம் வணங்கும் இந்த இரண்டு தெய்வங்களும் நமக்கு செல்வ வளத்தை கொடுப்பதுடன், அவைகள் நமது வீட்டில் நிரந்தரமாக இருப்பதற்கும் அருள்புரிகிறார்கள்.
🌟 இதனால் நாம் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பணம் வைத்து இருக்கும் பெட்டியில் இருந்து பணத்தை எடுத்து செலவு செய்வதை தவிர்க்க வேண்டும்.
🌟 இல்லையெனில், நம்மிடம் இருக்கு அனைத்து செல்வ வளங்களும் நம்மை விட்டு சென்று விடும் என்பது ஒரு ஐதீகமாகும்.
🌟 மேலும் அத்தியாவசிய சில முக்கியமான செயல்பாடுகளை தவிர்த்து, இந்த இரண்டு கிழமைகளிலும் பணம் வைத்திருக்கும் பெட்டியை திறக்கவே கூடாதாம்.
*செய்ய வேண்டியவை :*
🌟 செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் 5 முகம் கொண்ட குத்து விளக்கு ஏற்றி திருமகளை வழிபட வேண்டும்.
🌟 அதிகாலை 4.00 மணி முதல் 5.00 மணி வரை உள்ள காலப்பகுதிக்கு 'பிரம்ம முகூர்த்தம்" என்று பெயர். அப்போது விழித்துக் கொண்டு படுக்கையை விட்டு எழுந்திருக்க வேண்டும்.
🌟 செல்வம் நிலைத்து நிற்க, நமது வீடுகளில் வெள்ளை புறாக்கள் வளர்க்கலாம்.
🌟 சங்கு, நெல்லிக்காய், பசுவின் சாணம், கோ ஜலம், தாமரைப்பு க்கள், சுத்தமான ஆடைகள் வீட்டில் இருப்பது சுபம்.
*லட்சுமி நம்மைவிட்டு போகாமல் இருக்க தவிர்க்க வேண்டியவை :*
🌟 ஒருவருக்குப் பணம் கொடுக்க வேண்டும் என்றால் வாசல் படியில் நின்று கொடுக்க கூடாது. கொடுப்பவரும், வாங்குபவரும் வாசல் படிக்கு உள்ளே இருந்து வாங்க வேண்டும் அல்லது கீழே இறங்கி வாங்க வேண்டும்.
🌟 குத்து விளக்கை தானாக அணைய விடக்கூடாது, ஊதியும் அணைக்கக்கூடாது. புஷ்பத்தினால் அணைக்க வேண்டும்.
🌟 வாசற்படி, அம்மி, ஆட்டுக்கல், உரல் இவைகளில் உட்காரக்கூடாது.
🌟 இரவில் வீட்டைப் பெருக்கினால் குப்பையை வெளியே கொட்டக் கூடாது.
🌟 விளக்கு ஏற்றிய பிறகு பால், தயிர், உப்பு, ஊசி இவற்றை பிறருக்கு கொடுக்கக் கூடாது.
🌟 ஈரத் துணி அணிந்து பூஜை செய்யக்கூடாது...

No comments:

Post a Comment