jaga flash news

Saturday, 18 April 2020

108 எலுமிச்சை பழ மாலை போட்டா ,அதை என்ன செய்யனும் ஆஞ்சநேயருக்கு வடை மாலை சார்த்தினா என்ன செய்யனும் ..?

காளிக்கு 108 எலுமிச்சை பழ மாலை போட்டா ,அதை என்ன செய்யனும் ஆஞ்சநேயருக்கு வடை மாலை சார்த்தினா என்ன செய்யனும் ..? நிறைய பேருக்கு தெரியாது.

108 அல்லது 27 பழ மாலையை  எலுமிச்சையை சாமி சிலைக்கு அணிவித்து விட்டு எடுத்துட்டு வந்துடனும்.தினசரி கொஞ்சம் கொஞ்சமாக அதை நம் உணவில் சேர்க்கனும்.இதனால் வாத,பித்த நோய்கள் குனமாகும் நரம்புகள் வலு அடையும்.ராகு ,செவ்வாய்,சனி திசை நடந்தாலும் நாகதோசம் இருந்தாலும்  பரிகாரமாக ஜோசியர்கள் இதை சொல்வோம்.

வைணவர்களுக்கு பரிகாரமா இதே திசைகளுக்கு அனுமனுக்கு வடைமாலை சார்த்த சொல்கிறோம்.முக்கியமாக சூரிய திசை நடந்தால் இதை செய்யனும்.சூரிய புத்திரன்,வாயு புத்திரன் அனுமன் உங்க வடையை சாப்பிட மாட்டார்.மாறாக அவர் அருளையும் சேர்த்து ஆசி செய்து கொடுக்கிறார்...அதனை சார்த்திவிட்டு பிரசாதமாக அங்கு வருவோர்க்கு கொடுத்துவிட்டு வீட்டுக்கு கொண்டு வந்து சாப்பிடனும்.

உளுந்து எலும்பு நோய்களை சரி செய்யும் அருமையான மருந்து.சவ்சவ் காயும் எலும்பு உறுதி செய்யும்.உளுந்து ,உப்பில்லாமல் ஆட்டி மிளகு,சீரகம் போட்டு வடை செய்து அனுமனுக்கு சார்த்திவிட்டு உண்பதால் எலும்பு சார்ந்த உடல் பிணிகள் நீங்கும்..!!

நரம்பு மண்டலம் வலிமை பெறுவதற்கும் உடல் குளிச்சிக்கும், நோய் எதிர்ப்பு சக்திய அதிகரிக்கவும் உளுந்து நல்ல ஒரு உணவு. அதுமட்டுமில்லாம, பெண்களின் மாதவிடாய் கோளாறுகள் நீங்கவும் பெண்களின் இடுப்பு வலிமை பெறவும் பக்கபலமா இருக்கு இந்த உளுந்து. அதோட, குழந்தை பெற்ற பெண்ணுக்கு பால் சுரப்பை அதிகமாக்குது. தினமும் நாம உளுந்த உணவுல சேத்தா மலச்சிக்கல், வயிறு உப்புசம் மாதிரியான பிரச்சனயெல்லாம் தீரும். அப்புறம்... இரத்தத்துல கொலஸ்ட்ரால் அளவ குறைச்சு இதயத்த பலப்படுத்துது இந்த உளுந்து....எனவே அனுமனுக்கு சார்த்தும் உளுந்து வடை சாதாரணம் அல்ல.ருசிக்காக சாப்பிடுவது மட்டுமல்ல என்றுதான் அதை பக்தர்களுக்கு பிரசாதமாக தருகின்றனர்.

No comments:

Post a Comment