jaga flash news

Sunday, 19 April 2020

திப்பு சுல்தான் - நாமக்கல் ஆஞ்சநேயரை தரிசனம்

ஒரு முறை திப்பு சுல்தான் நாமக்கல் ஆஞ்சநேயரை தரிசனம் செய்ய வந்தார் அனுமன் திறந்த வெளியில் நிற்பதை பார்த்துவிட்டு ,மேற்கூரை அமைக்க உத்தரவிட்டார்...அன்று இரவு திப்பு சுல்தான் கனவில் தோன்றிய அனுமன்,என் உபாஷண மூர்த்தியாம் லட்சுமி நரசிம்மரே மேற்கூரை இன்றி இருக்கிறார்..எனக்கு எதற்கு மேற்கூரை..? நான் இப்படி இருக்கத்தான் விரும்புகிறேன் என்றாராம்.அனுமன் ஜெயந்தி அன்று அபிசேகம்,அன்னதானம் செய்து திப்பு சுல்தான் வெற்றி மேல் வெற்றி பெற்றாராம்..அதன் பின் டைகர் சுல்தான் என பட்டப்பெயர் பெற்றார்.

அரசியலில் செல்வாக்கு பெற,அரசு சார்ந்த விசயங்களில் வெற்றி பெற,செய்வினை கண் திருஷ்டி பதிப்புகள் அகல,விபத்துகள் ஏற்படாமல் காக்க, வழிபட வேண்டிய தெய்வம் நாமக்கல் ஆஞ்சநேயர்..வல்வில் ஓரி எனும் த்மிழ் மன்னனுக்கு புற்று நோய் வந்தபோது நாமக்கல் அனுமனை வழிபட்டுதான் நிவாரணம் அடைந்தாராம்.

No comments:

Post a Comment