jaga flash news

Wednesday, 15 April 2020

சிறுபூனை காலி:-

சிறுபூனை காலி:-

சிறுபூனை காலி என்று சொல்லக் கூடிய இந்த கொடி சாதாரணமாக பாதை ஓரங்களிலும், வேலிகளிலும், மரங்களின் மீதும் இயல்பாக கொடியாக படர்ந்திருக்கக் கூடிய ஒன்றாகும். அழகான பூக்கள், காய்கள், இலைகளை கொண்டுள்ள இதன் அனைத்து பாகங்களும் மருத்துவ குணங்களை கொண்டதாக விளங்குகிறது. 

பாஸிபுளோரா பியோட்டிடா என்ற தாவர பெயரை கொண்டுள்ள இந்த கொடி சிறுபூனை காலி என்று அழைக்கப்படுகிறது. இதன் காய்கள் மிக சிறிய அளவில் சுற்றிலும் முட்களைப் போன்று வடிவத்தை பெற்றிருக்கும். உள்ளே இதன் விதைகள் ஆமணக்கு விதைகளின் தோற்றத்தை கொண்டிருக்கும். ஆஸ்துமா, நிமோனியா ஆகியவற்றிற்கு இந்த சிறுபூனை காலி ஒரு சிறந்த மருந்தாக விளங்குகிறது. வயிற்று பூச்சிகளை அகற்றும் குணத்தை கொண்டதாகவும் சிறுபூனை காலி விளங்குகிறது. 

மேலும் மேற்பூச்சு மருந்தாகவும் விளங்கி தோல் நோய்களின் தொல்லைகளில் இருந்தும் விடுவிக்கிறது. ஒவ்வாமை நோயை போக்கக் கூடியது. நமைச்சலை போக்கக் கூடியதாக விளங்குகிறது. சளியை வற்றச் செய்வதாக வேலை செய்கிறது. சளியை கரைத்து வெளியேற்றும் வேலையை சிறுபூனை காலி செய்கிறது. சிறுபூனைகாலியின் காய்களை கொண்டு ஆஸ்துமாவுக்கான மருந்தை தயார் செய்யலாம். சிறுபூனை காலியின் இரண்டு காய்களை எடுத்துக் கொள்ள வேண்டும். 

திரிகடுகு சூரணம், தேன் ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த காய்களை நன்றாக நசுக்கிக் கொள்ள வேண்டும். இதனுடன் அரை ஸ்பூன் அளவுக்கு திரிகடுகு சூரணத்தை சேர்க்க வேண்டும். இதோடு தண்ணீரை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் போதிய அளவு தேன் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதை தொடர்ச்சியாக பருகுவதன் மூலம் ஆஸ்துமாவை கட்டுப்படுத்துவதாக இது விளங்குகிறது. 

அதே போல் ரத்தத்தில் உள்ள பித்தத்தின் அளவை குறைக்கக் கூடிய மருந்து ஒன்றை சிறுபூனை காலியை கொண்டு தயார் செய்யலாம். இதற்கு தேவையான பொருட்கள் சிறு பூனை காலி விதைகள் 2 அல்லது 3 எடுத்துக் கொள்ள வேண்டும். சீரகம், மஞ்சள் பொடி, பனங்கற்கண்டு. சிறுபூனை காலியின் விதைகளை நசுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். மஞ்சள் பொடி ஒரு ஸ்பூன், அரை ஸ்பூன் சீரகம், அரை ஸ்பூன் பனங்கற்கண்டு ஆகியவற்றை சேர்த்து, இதனுடன் தேவையான அளவு நீர் விட்டு கொதிக்க விட வேண்டும். 

இதை தினந்தோறும் பருகி வந்தால் பித்தத்தால் ஏற்படும் அளவுக்கு அதிகமான என்சைம்களின் தன்மை குறைந்து பித்தம் சமநிலை அடையும். பித்தத்தால் ஏற்படும் மனதின் கோளாறுகளை இது சரி செய்யக் கூடியதாக உள்ளது. நிலையற்ற மனதின் பரபரப்பை குறைத்து சமநிலைக்கு கொண்டு வர இது உதவுகிறது. ஹிஸ்டீரியா என்று சொல்லக் கூடிய மனப்பிரச்னைகளையும் தீர்க்கக் கூடியதாக இந்த சிறுபூனை காலி ஒரு அற்புதமான மருந்தாக வேலை செய்கிறது.

No comments:

Post a Comment