jaga flash news
Monday, 27 April 2020
உங்கள் வீட்டில் மருதாணி செடி இருக்கா? கண்டிப்பா நீங்க இந்த தவறை செய்யவே கூடாது.
நம்முடைய வீட்டில் மருதாணி செடியை வைப்பது மகாலட்சுமியின் அம்சத்தை குறிக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. இந்த மருதாணி செடிக்கு வேறு என்ன மருத்துவ குணநலன்கள் உள்ளது? இந்த செடியில் இருக்கும் இலை, பூ, காய், குச்சி, இவைகள் அனைத்தையும் எந்த வகையில் பயன்படுத்தினால் என்ன நன்மைகளை அடையலாம்? என்பதை பற்றியும், வீட்டில் மருதாணி செடி வைத்திருப்பவர்கள் செய்யக்கூடாத முக்கியமான ஒரு தவறு என்ன என்பதைப் பற்றியும் இந்த பதிவின் மூலம் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.முதலில் எந்த ஒரு வீட்டில் மருதாணி செடி இருந்தாலும், அந்த வீட்டில் கட்டாயமாக துஷ்ட சக்தி நெருங்கவே நெருங்காது. காரணம் இந்த மருதாணி செடிக்கு இருக்கும் வாசம் தான். இந்த வாசத்திற்கு துஷ்ட சக்தி மட்டுமல்ல, சில வகையான பூச்சி பொட்டுகளும் உங்கள் வீட்டின் அருகில் நெருங்காது என்பது குறிப்பிடத்தக்கது. உங்கள் வீட்டில் எந்த ஒரு பில்லி, சூனியம் போன்ற கெட்ட சக்திகளும் நெருங்காமல் இருக்க வேண்டுமென்றாலும் அல்லது உங்கள் வீட்டில் இருக்கும் கெட்ட சக்தியை விரட்ட வேண்டும் என்றாலும், இந்த மருதாணி விதைகளை செடியிலிருந்து எடுத்து, நன்றாக வெயிலில் காயவைத்து ஒரு டப்பாவில் சேகரித்து வைத்துக் கொள்ளவும்.அதன் பின்பு வெள்ளிக்கிழமைதோறும் சாம்பிராணி தூபம் போடும் போது, அந்த நெருப்பில் சாம்பிராணி பொடியுடன் சேர்த்து இந்த மருதாணி விதைகளையும் நான்கு சேர்த்து தூபம் போட்டால், அந்த வாசத்திற்கு உங்கள் வீட்டில் இருக்கும் கண்ணுக்குத் தெரியாத எந்த கெட்ட சக்தியாக இருந்தாலும் அது நீங்கி விடும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. தினம்தோறும் வீட்டில் சாம்பிராணி தூபம் போடுபவர்களாக இருந்தாலும்கூட, தினமுமே இந்த மருதாணி காய்களை பயன்படுத்துவதில் எந்த தவறும் இல்லை. ஏனென்றால் தாந்திரீக வித்தைகளில் இந்த மருதாணி விதைகளை அதிக அளவில் பயன்படுத்துகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.அடுத்ததாக மருதாணிச் செடியில் இருக்கும் மருதாணி பூவிற்கு, மன அழுத்தத்தை குறைக்கக் கூடிய சக்தி இருக்கிறது என்பது நம்மில் பல பேருக்கு தெரியாது. இரவு நேரத்தில் சரியான தூக்கம் இல்லாதவர்கள், இந்த மருதாணி செடியில் இருக்கும் பூக்களை பறித்து முடிந்தால் தலையணையாக செய்து தலைக்கு அடியில் வைத்து உறங்கலாம். முடியாதவர்கள் சிறிது பூவை ஒரு வெள்ளைத் துணியில் மூட்டையாக கட்டி, தலையணைக்கு அடியில் வைத்து உறங்குங்கள். இந்த மருதாணி பூவில் இருந்து வரக்கூடிய நறுமணம், உங்களது கண்களை தூக்கம் தழுவுவதற்கு மிகவும் உதவியாக இருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.மருதாணி இலை. இந்த மருதாணி இலைகளை அறைத்து கைகளிலும் கால்களிலும் வைத்துக் கொண்டால் மிகவும் நல்லது. இது எல்லோருக்கும் தெரிந்த ஒரு விஷயம் தான். இருந்தாலும் கால் நகங்களில் வரும் சேற்றுப்புண், பாத வெடிப்பு, கை நகங்களில் சொத்தை இவைகளுக்கு நல்ல மருந்தாக இந்த மருதாணி இலை விழுது இருந்துவருகிறது. வெறும் மருதாணி இலையை மட்டும் அறைக்காமல் அதில் ஒரு கொட்டைப்பாக்கு வைத்து அறைத்தால் இன்னும் அதிகப்படியான பலனை அடையலாம் என்பது குறிப்பிடத்தக்கது.வாய்ப்புண் உள்ளவர்கள், மருதாணி செடியில் இருக்கும் இலைகளை பறித்து நன்றாக கழுவி, தண்ணீரில் போட்டு, கொதிக்கவைத்து அந்த கஷாயத்தை வாய் கொப்பளித்தால் வாய்ப்புண் ஆறும். வாய்ப்புண் ஆறும் வரை வாரத்திற்கு ஒரு முறை இந்த முறையை பின்பற்றி வரலாம்.அடுத்ததாக வீட்டில் ஒருவருக்கு எப்படி பட்ட வாஸ்த்து பிரச்சனை இருந்தாலும், அந்த தோஷத்தை நீக்கக் கூடிய சக்தியும், இந்த மருதாணிக்கு செடிக்கு உள்ளது என்பது வாஸ்து நிபுணர்களால் குறிப்பிடப்பட்டுள்ளது. வாடகை வீட்டில் இருப்பார்கள் சிலருக்கு, அந்த வீட்டின் வாஸ்து ஒத்துவராது. வாடகை வீட்டை மாற்ற முடியாத சூழ்நிலையும் இருக்கும். சிலபேர் சொந்த வீட்டில் இருந்தாலும், பிரச்சனை இருக்கும். இப்படிப்பட்டவர்கள் ஒரு சிறிய தொட்டியில் மருதாணி செடியை வளர்த்து வந்தால் அந்த பிரச்சனையிலிருந்து வரும் விளைவுகள் குறைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.அடுத்ததாக மீதமிருப்பது மருதாணி குச்சு. இந்த மருதாணி குச்சிகளை சிறு சிறு துண்டுகளாக உடைத்து உங்கள் வீட்டு அலமாரியில் வைத்து வந்தால் கண்ணுக்கு தெரியாத பூச்சி தொல்லையில் இருந்து விடுபடலாம். காரணம் இதிலிருந்து வெளிப்படக்கூடிய வாசம்.மருதாணி செடியியை வீட்டில் வைத்திருந்தால், குழந்தைகள் அந்த இலைகளை பறித்து வாயில் போட்டுக் கொள்ளாமல் பார்த்துக்கொள்ளுங்கள். அதில் இருக்கும் துவர்ப்புத் தன்மை வயிறு கோளாறுகளை ஏற்படுத்திவிடும்.இறுதியாக மருதாணி செடியை வீட்டில் வைத்து வளர்ப்பவர்கள், யாருக்கேனும் அந்த மருதாணி இலைகளை பறித்து கொடுப்பதாக இருந்தால், இலவசமாக கொடுக்கக்கூடாது. அதாவது, உங்கள் சொந்தக்காரருக்கு அந்த செடியின் இலைகளை கொடுப்பதாக இருந்தாலும், ஒரு ரூபாயை மட்டுமாவது பெற்றுக்கொண்டு அந்த இலைகளை தாருங்கள். உங்கள் வீட்டு மகாலட்சுமி அல்லவா? இலவசமாக கொடுக்க கூடாது என்பதற்காகத்தான் இது.விளக்கு வைத்தபின் மருதாணி செடியின் இலைகளை யாருக்கும் தானமாக கொடுக்காதீர்கள். காசு வாங்கிவிட்டு கூட விளக்கு வைத்த பின்பு கட்டாயமாக மருதாணி இலையை யாருக்கும் கொடுக்க கூடாது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். பெரும்பாலும் பொழுது சாய்ந்த பிறகு செடியிலிருந்து இலைகளை பறிக்க மாட்டார்கள். இருந்தும், முன்பாகவே பறித்து வைத்திருந்தால் கூட விளக்கு வைத்த பின்பு வீட்டு வாசற்படியை மருதாணி செடி இலை தாண்டக் கூடாது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment