jaga flash news

Tuesday, 23 June 2020

ஜெயத்ரதன் வதை....

மகாபாரத யுத்த காலத்தில்.,துரியோதனின் nagging பேச்சைத் தாங்க முடியாமல் சேனாதிபதி சக்கர வியூகத்தை அமைத்தார்.,பாண்டவர்களில் சக்கர வியூகத்தை உடைத்து துரியோதனனின் சேனைகளை நாசம் செய்துவிட்டு மீண்டும் வெளியே வருவது அர்ஜுனனால் மட்டும்தான் முடியும்., ஆகையால் பல்வேறு மஹாரதர்கள் அர்ஜுனனை சண்டைக்கு அழைத்து  அவனை வெகுதூரம் ( சக்கர வியூகத்தை விட்டு )  அழைத்துச்  சென்று விட்டனர்.,கௌரவர்கள் சேனை .,பாண்டவர் சேனைகளை துவம்சம் செய்து கொண்டு இருந்தது.,தர்மர் கவலைக் குள்ளாகி தமது சேனாதிபதி.,மற்ற மகாரதர்களுடன் கவலையுடன் ஆலோசனை செய்தார்.,

அப்போது அர்ஜுனன் மகன் அபிமன்யு வந்து சக்கர வியூகத்தைத் தன்னால் உடைக்க முடியுமென்றும் .,ஆனால் அதற்குள் சென்று.,வென்றபின் வெளியே வரத் தெரியாது என்றும் சொன்னான்.,

வேறு வழியின்றி அபிமன்யுவை சக்கர வியூகத்தை உடைத்து உள்ளே  செல்ல  அனுப்புவது என்று முடிவாயிற்று.,

இங்கே ஒரு Flash Back.,:-

ஒரு சமயம் அர்ஜுனன் மனைவி சுபத்திரையும் ஸ்ரீ கிருஷ்ணனும் பேசிக் கொண்டிருந்தனர்.,அப்போது சுபத்திரை கர்ப்பமாக இருந்தாள்., அப்போது பேச்சுவாக்கில் சுபத்திரைக்கு சக்கர வியூகம் என்பது என்ன .,அது எப்படி இருக்கும்.,அதை எப்படி உடைத்துக் கொண்டு உள்ளே போவது என்பது பற்றிக் கிருஷ்ணன் விளக்கிக் கொண்டிருந்தார்.,பேசிக் கொண்டே இருக்கும்போது சுபத்திரை சற்றுக் கண்ணயர்ந்து விட்டாள்.,தாயின் வயிற்றில் இருந்த குழந்தை  அபிமன்யு “ஊம்” கொட்டியது.,முக்காலும் உணர்ந்த இறைவன் ஸ்ரீ கிருஷ்ணன் தன் பேச்சை அத்துடன் முடித்துக் கொண்டுவிட்டான்.,அப்போது இறைவன் சக்கர வியூகத்தை உடைத்துக் கொண்டு உள்ளே போவதை மட்டும் சொல்லி இருந்தார் .,வெளியே வரும் Trick ஐ விளக்கவில்லை.,

கதைக்கு வருவோம்.,:-.,

அபிமன்யு சக்கர வியூகத்தை உடைத்துக் கொண்டு உள்ளே போய் யுத்தம் செய்தான்.,அங்கே கௌரவ சேனையின் மகாரதர்கள் ஒன்று சேர்ந்து அபிமன்யுவின் உயிரை மாய்த்து விட்டார்கள்.,

மாலையில் யுத்தம் முடிந்து திரும்பிய அர்ஜுனன் தனது பிரியமான வீரமகன் அபிமன்யு இறந்ததையும் அவன் எவ்வறு கொல்லப்பட்டான் என்பதையும் கேட்டு மிகுந்த துயரம் அடைந்தான்.,அப்போது அவன் ஒரு கோர சபதம் செய்தான்.,

“என் மகன் அபிமன்யு இறக்க முக்கியக் காரணமாக இருந்த ஜெயத்ரதன் ( இவன் துரியோதனின் சகோதரியை மணம்  புரிந்தவன்.,) அந்த ஜயத்ரதனை நாளை மாலை சூரிய அஸ்தமனத்துக்குள் நான் கொல்வேன்.,அப்படி நடக்காவிட்டால் நான் அக்னியில் புகுந்து உயிர்த்தியாகம் செய்து கொள்வேன்.,’ என்று சபதம் செய்தான்.,

இந்த செய்தி எதிர் பார்ட்டிக்குப் போச்சு.,அடுத்தநாள் அவர்கள் ஜயத்ரதனை அர்ஜுனன் கண்ணில் காட்டவே இல்லை.,அவனை யுத்தத்திற்கே கொண்டு வராமல் மறைத்து வைத்து விட்டனர்.,மாலையில் சூரியனும் மறையும் நேரமும்  வந்துவிட்டது.,

ஸ்ரீ கிருஷ்ணன் பார்த்தான்.,வழக்கம்போல அவன் ஒரு Trick செய்தான்.,தன் சக்ராயுதத்தை மேலே ஆகாயத்தில் செலுத்தி அதன் மூலம் சூரியனை முழுவதுமாக மறைத்து விட்டான்.,

அர்ஜுனன் மன வருத்தத்துடன் தன தோல்வியை ஒப்புக் கொண்டு யுத்த பூமியிலேயே அக்னி குண்டத்தை ஏற்படுத்தி., அதில் விழுவதற்கு தயாராக நின்றான்.,

அப்போது துரியோதனனுக்கும்.,அவன் சகோதரர்கள்.,மற்றும்  ஜெயத்ரதன் ஆகியோருக்கு மிகுந்த சந்தோஷம் உண்டாயிற்று .,ஏனெனில் அர்ஜுனன் இறந்தால் பாதி யுத்தம் அவர்கள் பக்கம் ஜெயித்த மாதிரிதான்., இதோடு விட்டார்களா அந்த முட்டாள்கள்.,?அர்ஜுனன் இறப்பதைப்  பார்க்க வேண்டும் என்று ஆவலுடன் யுத்த களத்தில் வந்து கூடி விட்டார்கள்.,( ஏனெனில்  தைத்யர்களான இவர்களுக்கு மற்றவர்களின் கஷ்டத்தைப் பார்ப்பதில் சந்தோஷம் ஏற்படும்.,).,

ஜெயத்ரதனும் யுத்த களத்தில் வந்ததைப் பார்த்ததும் .,ஸ்ரீ கிருஷ்ணன் தன் சக்ராயுதத்தைத்  திரும்ப அழைத்துக் கொண்டான்.,சூரியன் ஜகத் ஜோதியாக தக தக வென மின்னத் தொடங்கியது.,இன்னும் சூரிய அஸ்தமனத்துக்கு நாழிகை இருக்கிறது.,கிருஷ்ணன் உடனே அர்ஜுனனைத் தேரில் ஏற வைத்தான்.,வில்லில் அம்பைப் பூட்டச் செய்தான்.,

இங்கே இன்னொரு விஷயம்.,ஜெயத்ரதன் தன்னை யாருமே கொல்ல  முடியாது என்னும் இறுமாப்பில் இருந்தான்.,ஏன்.,? அவன் தந்தை தவம் செய்து ஒரு வரம் வாங்கி வைத்திருந்தான்.,” என் மகன் ஜயத்ரதனின் தலையை யார் பூமியில் விழச் செய்கிறார்களோ அந்த மனிதனின் தலை சுக்கு நூறாக வெடித்து இறப்பார்கள் ” என்று வரம் இருந்தது.,

மீண்டும் கதை:-

கிருஷ்ணன் அர்ஜுனனிடம் ஜயத்ரதனின் கழுத்தை வெட்டுமாறு அம்பை எய்து அதனை ஆகாய மார்க்கமாக ஒரு நதிக்கரையில் ஸாயம் சந்தியாவந்தனம்  செய்வதற்காக அர்க்கிய ஜலத்தை இரண்டு கைகளிலும்  வைத்துக்  கண்ணை மூடிக் கொண்டிருந்த அவன் தந்தை ( ஜெயத்ரதன் தந்தை ) யின் கையில் அந்தத்தலையை விழுமாறு செய்வித்தான்.,கண்ணை மூடிக்கொண்டிருந்த தந்தை தன் கையில் திடீரென ஏதோ விழுந்ததைப் பார்த்து அந்தத்தலையை வீசிப் போட்டு விட்டான்.,அதனால் அவன் தலையே சுக்கு நூறாக வெடித்து அவனும் இறந்தான்.,

இந்த இடத்தில் சிலபேர் இன்னொரு விஷயமும் சொல்கிறார்கள்.,ஸ்ரீ கிருஷ்ணன் சக்ராயுதம் விட்டது உண்மை .,அதனால் சூரியன் கொஞ்ச நேரம் மறைந்ததும் உண்மை.,ஆனால் அன்று ( பூர்ண)  சூர்ய கிரகணம்.,அதனால் சூரியன் இன்னும் அதிக நேரம் முழுதுமாக மறைந்து இருந்தது .,

No comments:

Post a Comment