jaga flash news

Saturday, 20 June 2020

மஹாபாரதம் மற்றும் ராமாயணம் இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் என்ன...

*மஹாபாரதம் மற்றும் ராமாயணம் இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் என்ன?*

*மண்ணால் போர் எனில் பாரதம்.*

*பெண்ணால் போர் எனில் ராமாயணம்.*

*சகுனி குழப்பினதால் பாரதம்.*

*கூனி குழப்பினதால் ராமாயணம்.*

*அனுமன் கொடிதனில் பறந்ததால் பாரதம்.*

*அனுமன் கடல்தாண்டி பறந்ததால் ராமாயணம்.*

*இறைவன் இப்புவி இறங்கி சாரதியானதால் பாரதம்.*

*இறைவன் இப்புவி இறங்கி சத்திரியனானதால்  ராமாயணம்.*

*பகடையால் பகையெனில் பாரதம்.*

*பாவையால் பகையெனில் ராமாயணம்.*

*பிறர் மனைவியை அவமதித்ததால் பாரதம்.*

*பிறர் மனைவியை அபகரித்ததால் ராமாயணம்.*

*அவதாரம் புனிதனாய் வலம் வந்தது பாரதம்.*

*அவதாரம் மனிதனாய் வலம் வந்தது ராமாயணம்.*

*இறைவன் கீதை தந்ததால் பாரதம்.*

*இறைவன் சீதை பெற்றதால் ராமாயணம்.*

*நாயகியை தொட்டு சேலை இழுத்ததால் பாரதம்.*

*நாயகியை தொடாது சோலையில் வைத்ததால் ராமாயணம்.*

*ஐவருக்கு ஒருத்தியெனில் பாரதம்.*

*ஒருவருக்கு ஒருத்தியெனில் ராமாயணம்.*

*மறைந்திருந்து அம்பெய்து கற்றதால் பாரதம்.*

*மறைந்திருந்து அம்பெய்து கொன்றதால் ராமாயணம்.*

*வில்லால் அடித்த வீரனுக்கு விவாகமெனில் பாரதம்.*

*வில்லை ஒடித்த வீரனுக்கு விவாகமெனில் ராமாயணம்.*

*கற்புநெறிக்காக பெண் கண்ணை கட்டினதால் பாரதம்.*

*கற்புநெறிக்காக பெண் கனலில் இறங்கினதால் ராமாயணம்.*

*கதையில் குருடன் அரசன் எனில் பாரதம்.கதையை எழுதியது திருடன் எனில் ராமாயணம்.*

*அரக்கியினால் மதில் ஆன அரண்மனை எரிந்ததால் பாரதம். அரக்கியின் மதி கோணலால் அரண்மனை எரிந்ததால் ராமாயணம்.*

*அரங்கனின் செய்கையால் அபலைக்கு அபயமெனில் பாரதம்.குரங்கனின் செய்தியால் அபலைக்கு அபயமெனில் ராமாயணம்.*

*மண்ணின் மயக்கத்தினால் பிளவெனில் பாரதம். மானின் மயக்கத்தினால் பிரிவெனில் ராமாயணம்.*

*உறவுக்குள் சண்டையெனில் பாரதம். உறவுக்காக சண்டையெனில் ராமாயணம்.*

*ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண 
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே..
ஹரே ராம ஹரே ராம 
ராம ராம ஹரே ஹரே* ....

No comments:

Post a Comment