jaga flash news

Sunday, 7 June 2020

தொப்பை குறைய அன்னாசி சாப்பிடுங்க

தொப்பை குறைய அன்னாசி சாப்பிடுங்க

பச்சைக்காய்கறிகள் மற்றும் பழங்களை உண்பதால் உடலின் சக்தி அதிகரிக்கிறது. நோய் எதிர்ப்பு தன்மை அதிகரிப்பதால் உடல் ஆரோக்கியம் பெறுகிறது. பழங்களிலேயே அன்னாசிப்பழம் ஊட்டச்சத்து அதிகம் நிறைந்த பழமாகும். இனிமையும், மணமும் நிறைந்த இந்த பழத்தில் நீர்ச்சத்து 85 சதவிகிதம் உள்ளது.

சர்க்கரைப் பொருட்கள் 13 சதவிகிதமும் புரதச்சத்து 0.60 தாது உப்புகள் 0.05 நார்ச்சத்து 0.30 சதவிகித அளவிலும் உள்ளன. சுண்ணாம்புச் சத்து. மணிச்சத்து. இரும்புச் சத்து போன்ற சத்துக்களும் அடங்கியுள்ளன. மேலும் வைட்டமின் ஏ, பி, சி போன்றவைகளும் அடங்கியுள்ளன.. மருத்துவகுணம் அன்னாசிபழத்திற்கு மஞ்சள் காமாலை, சீதபேதி, இவற்றைக் குணப்படுத்தும் தன்மை உள்ளது.

இது சிறுநீரகக் கற்களை கரைக்கும். உடல்வலி, இடுப்புவலி ஆகியவற்றை குறைக்கும். பித்தத்தை நீக்கும். உடலுக்கு அழகைத்தரும். உள் உறுப்புகளை பலப்படுத்தும். குழந்தைகளுக்கு மருந்து அன்னாசி இலைச்சாறு வயிற்றுப்புழுக்கொல்லியாக செயல்படுகிறது. அன்னாசி இலைச்சாறு ஒரு ஸ்பூனுடன் தேன் கலந்து அருந்த, பேதியாகி வயிற்றுப்பூச்சிகள் வெளியேறிவிடும்.

இலையைப்பிழிந்து சாறு எடுத்து ஒரு ஸ்பூன் சாறுடன், சிறிதளவு சர்க்கரை கலந்து சாப்பிட, விக்கல், இழுப்பு நோய் தீரும். அன்னாசிப்பழச்சாறுடன் தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால் உள் உறுப்புகள் பலப்படும். கண் ஒளி பெறும். குழந்தைகளுக்கு அடிக்கடி இப்பழச்சாறு கொடுத்து வர பசி ஏற்படும். எலும்பு வளர்ச்சி, உடல் வளர்ச்சி ஏற்படும்.

இதயக்கோளாறு நீங்கும் அன்னாசிப்பழத் துண்டுகளை தேனில் கலந்து சாப்பிட்டு வர உடல்பலம் கூடும். உடல் பளபளப்பாகும். அன்னாசிப்பழம் அடிக்கடி சாப்பிட்டு வர, சிறுநீரகக்கற்கள் கரையும். இதயக் கோளாறு, பலவீனம் குணமாகும். பழ ச்சாறை ஒரு நாள் நான்கு வேளை ஒரு அவுன்ஸ் வீதம் சாப்பிட்டு வந்தால் இடுப்பு வலி மாறும். பழச்சாறை தொண்டையில் படும்படி சிறிது நேரம் வைத்திருந்து விழுங்கி வர தொண்டைவலி, தொண்டைப்புண் தீரும். ஜீரணசக்தி அதிகரிக்கும் அன்னாசிப்பழச்சாறு மஞ்சள் காமாலைக்கு சிறந்ததாகும்.

வயிறு நிறைய உணவு உண்ட பின் ஒரு துண்டு அன்னாசிப்பழத்தை உண்ண எளிதில் ஜீரணம் ஆகும். பழச்சாறில் குடல் செயலை ஊக்குவிக்கும் அமிலம் உள்ளதால் எளிதில் ஜீரண சக்தி அதிகரிக்கும். ஒரு நாளைக்கு தேவையான மாங்கனீஸ் உப்பைப் பெற ஒரு கப் பழத் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் போதும். பொட்டாசியம்,கால்சியம் போல உடல் நலத்திற்குத் தேவையான உப்பு கிடைக்கிறது.

இந்த பழத்தில் உள்ள குளுகோஸ் வளர்சிதை மாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. பித்தக் கோளாறுகளை அன்னாசி பழம் விரைந்து குணமாக்குகிறது.அன்னாசியில் கொழுப்புச்சத்து குறைவு, நார்ச்சத்து அதிகம்,அன்னாசியில் புரதம் தாராளமாக இருப்பதால் ஜீரணக் கோளாறு உடலில் வீக்கம் போன்றவை ஏற்படாது. தொப்பை கரையும் இளம்பெண்கள் உட்பட அனைவரின் தொப்பையும் கரைக்கும் சக்தி அன்னாசிக்கு உண்டு.

ஓர் அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளறி ஒருடம்பர் தண்ணிர் ஊற்றிக் கொதிக்கவிடவும் இரவில் அதை அப்படியே வைத்திருந்து மறு நாள் காலையில் அதைப் பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிடவேண்டும். பத்து நாட்கள் இதேபோல் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தொப்பை கரைய ஆரம்பிக்கும் அன்னாசிக்காய்க்கு கர்ப்பப்பையை சுருக்கும் தன்மை உண்டு. எனவே கர்ப்பிணிகள் இப் பழத்தைத் தவிர்க்க வேண்டும்.

No comments:

Post a Comment