jaga flash news

Tuesday, 16 June 2020

ஒரு_வயதிற்குள் #குழந்தையின் #உடல்_எடை_அதிகரிக்க

#ஒரு_வயதிற்குள் #குழந்தையின் #உடல்_எடை_அதிகரிக்க .....

ஒவ்வொரு குழந்தையும் முதல் ஒரு ஆண்டிற்குள் சரியான எடையை எட்ட வேண்டும் என்பது அவசியம். அதற்கு சத்தான உணவுகளைத் தரவேண்டும். குழந்தையின் எடையை ஆரோக்கியமான முறையில் அதிகரிக்க முயற்சிப்பதே சரியான முயற்சி. எப்படி குழந்தையின் எடையை இயற்கையாகவே ஆரோக்கியமான முறையில் அதிகரிப்பது என இப்பதிவில் பார்க்கலாம்.

1. #தாய்ப்பால்

குழந்தைக்கு தேவையான தாய்ப்பால் கொடுப்பது மிக மிக முக்கியம். நான் ஒல்லியான தாய் எனக்கு பால் சுரக்கவில்லை போன்ற தவறான கருத்துகளை விட்டுவிடுங்கள். தாய்ப்பால் அனைத்து தாய்மார்களுக்கும் சுரக்கும். தாய்ப்பால் சுரக்கும் உணவுகளை உங்களது உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

2. #வாழைப்பழம்

ஒரு வாழைப்பழத்தில் 100 + க்கும் மேற்பட்ட கலோரிகள் உள்ளன. இயற்கையாகவே அதிக எனர்ஜி தரும் பழம் இது.மாவுச்சத்து, பொட்டாசியம், நார்ச்சத்து, விட்டமின் சி, பி6 ஆகியவை நிறைந்துள்ளன. 6 மாதம் தொடங்கிய பின்னரே உங்கள் குழந்தைக்கு நீங்கள் வாழைப்பழம் கொடுக்கலாம். பச்சை வாழைப்பழத்தை தவிர்க்கலாம். குழந்தைகளுக்கு மலம் கட்டும். மற்ற அனைத்து வாழைப்பழங்களும் குழந்தைக்கு நல்லது. 8 மாதத்துக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு வாழைப்பழத்தை நீங்கள் கேக்காகவோ, புட்டிங்காகவோ செய்து தரலாம்.

3. #கேரளா_நேந்திர #பழ_கஞ்சி

கேரளத்தின் பாரம்பர்ய உணவு. குழந்தைகளுக்கான மிகசிறந்த உணவு. இந்த கஞ்சி பவுடரை எப்படி செய்வது மற்றும் இந்த பவுடரை வைத்து கஞ்சி செய்வது எப்படி எனத் தெரிந்து கொள்ளுங்கள்.

4. #பசு_நெய்

அதிக ஊட்டச்சத்துகள் கொண்டது, பசு நெய். உடல் எடையை அதிகரிக்க உதவும். 8 மாதத்துக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு, நெய் சேர்த்த உணவுகளைக் கொடுக்கலாம். கிச்சடி உணவுகளை நெய் சேர்த்துக் கொடுப்பது நல்லது. பொங்கல், உப்புமா போன்றவற்றில் நெய் சேர்த்து குழந்தைக்கு கொடுக்கலாம். பருப்பு சாதம், சப்பாத்தி, பராத்தா போன்றவற்றிலும் நெய் சேர்க்கலாம்.

5.  #உருளைக்கிழங்கு

இதில் மாவுச்சத்து நிறைந்துள்ளது. விட்டமின் சி, பி6, பாஸ்பரஸ், மாங்கனீஸ் ஆகியவை உள்ளன. வேகவைத்துத் தோல் உரித்து, நன்கு மசித்து குழந்தைக்கு கொடுக்க மிக சிறந்த உணவு இது. நொறுக்கு தீனியாக, ஃபிங்கர் ஃபுட்டாக, ப்யூரியாக, கட்லெட் போல உருளைக்கிழங்கை குழந்தைகள் உணவில் அவசியம் சேர்த்துக்கொள்ளுங்கள்.

6. #பருப்புகள்

6 மாதத்துக்கு மேற்பட்ட குழந்தைகள் பருப்புகளை வேகவைத்துத் தரலாம். பாசி பருப்பு, துவரம் பருப்பு, உளுந்து ஆகியவை குழந்தைக்கு நல்லது. பருப்பு வேகவைத்த தண்ணீரை குழந்தையின் முதல் உணவாகவே தரலாம். அவ்வளவு நல்லது. புரதம், கால்சியம், இரும்புச்சத்து, மெக்னிஷியம் ஆகியவை ஊட்டச்சத்துகள் உள்ளன. கொழுப்பு குறைவு. புரதமும் நார்ச்சத்தும் அதிகம். பருப்பு கிச்சடி, பருப்பு தண்ணீர், பருப்பு சூப், பருப்பு சாதம், பருப்பு பாயாசம் எனக் குழந்தைகள் உணவில் பருப்பை சேர்த்துக் கொள்ளுங்கள்.

7. #நட்ஸ்_பவுடர்

நட்ஸ் முழுமையாக கொடுத்தால் குழந்தையின் தொண்டையில் மாட்டிக் கொள்ளும். அதனால் நட்ஸை அரைத்துக் கொடுக்கலாம். அதாவது பொடி செய்து பவுடராக சேமித்து வைத்துக் கொள்ளலாம். ஜூஸ், ஸ்மூத்தி, ப்யூரி, கேக், பான்கேக் போன்றவற்றில் நட்ஸ் பவுடர் சேர்த்து குழந்தைகளுக்கு தரலாம்.


No comments:

Post a Comment