jaga flash news

Sunday, 19 July 2020

திரௌபதி

இந்து மத புராணமான மகாபாரதத்தின் படி, பாஞ்சால அரசாட்சியின் மன்னனான துருபதனுக்கும் அக்னிக்கும் பிறந்தவள் தான் திரௌபதி. பின்னர் ஐந்து பாண்டவர்களுக்கும் மனைவியானாள். அவள் வாழ்ந்த காலத்தில் மிகவும் அழகிய பெண்ணாக அவள் கருதப்பட்டாள். மகாபாரதம் சொல்லும் பயனுள்ள வாழ்க்கைப் பாடங்கள்!!! திரௌபதிக்கு ஐந்து மகன்கள் இருந்தார்கள் என்ற விஷயம் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஒவ்வொரு பாண்டவர் என்ற வீதத்தில் ஐந்து மகன்களை கொண்டிருந்தாள். யுதிஷ்டிராவுக்கு பிறந்தவன் பிரதிவிந்த்யா, பீமனுக்கு பிறந்தவன் சுடசோமா, அர்ஜுனனுக்கு பிறந்தவன் ஸ்ருடகர்மா, நகுலனுக்கு பிறந்தவன் சடானிகா, மற்றும் சகாதேவனுக்கு பிறந்தவன் ஸ்ருடசேனா. இறப்பில்லாத புராண கதாநாயகன்: மகாபாரதத்தை சேர்ந்த அஸ்வத்தாமா பஞ்ச கன்னிகைகளில் ஒருவராக கருதப்படுபவர் திரௌபதி. மேலும் கிராம கடவுளான திரௌபதி அம்மனாகவும் வணங்கப்படுகிறார். மகாபாரத ரகசியம்: அர்ஜுனன் ஏன் தருமனை கொல்ல நினைத்தார்? திரௌபதியின் பிறப்பு துரோணாச்சாரியாரின் சார்பில் பாண்டவரான இளவசரன் அர்ஜுனன், பாஞ்சால நாட்டு மன்னனான துருபதனை வீழ்த்தி, அவருடைய அரசாட்சியில் பாதியை எடுத்துக் கொண்ட போது பிறந்தவள் தான் திரௌபதி. பழிவாங்கும் மனநிலை துரோணாச்சாரியாரைப் பழி தீர்க்க, தனக்கு ஆசி கிடைக்க வேண்டி, துருபத மன்னன் அக்னி யாகம் ஒன்றினை நடத்தினான். இந்த யாகத்தில் பிறந்தவள் தான் அழகிய, கருமை நிறத்திலான இளம் பெண்ணான திரௌபதி. இந்த தியாக அக்னியில் இருந்து தன் அண்ணனான த்ரிஷ்டத்யும்னா வந்த பிறகு திரௌபதி தோன்றினாள். குரு வம்சத்தை அழிக்க பிறந்தவள் தீயில் இருந்து அவள் தோன்றியவுடன் வானத்தில் இருந்து வந்த ஒரு குரல், 'குரு வம்சத்திற்கு இவளால் தான் அழிவு ஏற்படும்' என கூறியது. திரௌபதியின் விவரிப்பு மகாபாரதத்தில் திரௌபதியை வியக்கத்தக்க வகையில் உள்ள அழகனான பெண்ணாக விவரிக்கப்பட்டுள்ளது. அவள் வாழ்ந்த காலத்தில் இருந்த அழகான பெண்களில் ஒருவராக இவள் திகழ்ந்தவள். 'தாமரை இதழ்கள் போன்ற கண்கள், இளமையும் அறிவும் அடங்கிய தவறே இல்லாத குணாதிசயங்கள், மற்றும் மிகவும் அழகிய பெண்ணாக விளங்கினாள் திரௌபதி. மெல்லிய இடையை கொண்ட திரௌபதியின் ஒவ்வொரு அம்சத்திலும் எந்த ஒரு குறையையும் கூற முடியாது. அவளுடைய மேனியில் இருந்து வரும் நறுமணம், இரண்டு மைல்களுக்கு அப்பால் இருந்து வரும் நீல நிற தாமரையின் மனம் போல் அடிக்குமாம். அவளை காண்பவர்கள் மூச்சிரைத்து போவார்கள்.' திரௌபதியின் சுயம்வரம் துருபத மன்னன் தன் மகளை அர்ஜுனனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என நினைத்தான். வர்ணவட்டாவில் பாண்டவர்கள் மரணிப்பார்கள் என்பதை அறிந்த அவன், திரௌபதிக்கு சுயம்வரத்தை ஏற்பாடு செய்தான். இந்த சுயம்வரத்தில் வெல்ல போகிறவருக்கு பரிசாக, அவளைத் தரப்போவதாக அறிவிக்கப்பட்டது. சிறந்த மாப்பிள்ளை மட்டுமே 'அலங்கரிக்கப்பட்ட இந்த வில் மற்றும் அம்புகளை கொண்டு எவர் ஒருவர் இந்த இயந்திரத்திற்கு மேல் உள்ள குறியில் சரியாக அடிக்கிறார்களோ அவருக்கே என் மகள்' என துருபத மன்னன் கூறினான். அடுத்த வாரிசு நெருக்கடி பாண்டவர்களின் உயிர்பிழைத்தல் தெரிந்தவுடன், அடுத்த வாரிசு நெருக்கடி ஏற்பட்டது. தர்மனின் மரணச்செய்தி வந்தவுடன், துரியோதனனுக்கு இளவரசன் பட்டம் சென்றது. அப்போது பாண்டவர்களை அஸ்தினாபுரத்திற்கு திரித்ராஷ்டிரா அழைத்தார். ராஜாங்கத்தின் ஒரு பகுதியை பிரித்து கொடுப்பதாகவும் கூறினார். இதனை யுதிஷ்டிரனும் ஏற்றுக் கொண்டான். கந்தவபிரஸ்தம் பாண்டவர்களுக்கு கந்தவபிரஸ்தம் என்ற பாலைவனம் ஒதுக்கப்பட்டு, அங்கே அரசாட்சி செய்யுமாறு கூறப்பட்டது என மகாபாரதம் கூறுகிறது. கிருஷ்ணரின் உதவியோடு கந்தவபிரஸ்தத்தை இந்திரபிரஸ்தமாக பாண்டவர்கள் மாற்றினார்கள். பள்ளத்தாக்கின் மேல் அந்நாட்டில் அவர்களின் பிரதான அரண்மனை அமைக்கப்பட்டது. ராஜசூய யாகம் ராஜசூய யாகத்தை யுதிஷ்டிரா நடத்தினான். இதன் மூலம் பல பகுதிகளில் பாண்டவர்கள் ஆதிக்கத்தை அடைந்தார்கள். இந்தியாவின் முதல் பெண்ணியம்? இந்திய புராணத்தின் படி, திரௌபதி தான் முதல் பெண்ணியமாக கருதப்படுகிறார். அவள் பிறப்பின் போது, வானளாவிய குரல் ஒன்று, 'ஈடு இணையில்லா இந்த அழகி பிறந்தது, கௌரவர்களை வேரோடு அழித்து, மத ஆட்சியை நிறுவுவதற்கு' என கூறியது. அவளின் தந்தை இன்னமும் இளமையுடன் இருந்த அந்நேரத்தில் இவள் பிறப்பிற்கான சூழ்நிலைகள் உருவானது. அழகு துயர் நிலையை உருவாக்கும் திரௌபதியின் ஈடு இணையில்லாத அழகும், அறிவும் அவளின் துயர் நிலைக்கு காரணமாக அமைந்தது. வில் போட்டியில் வென்ற அர்ஜுனனால் ஈர்க்கப்பட்ட அவள், அவனை கரம் பிடிக்க தயாரானாள். ஆனால் அவளின் தந்தையோ வியாச முனிவரின் அறிவுரைப்படி, அவளை ஐந்து பாண்டவர்களுக்கு மனைவியாக்கினான். தன் மோசமான விதி அவளை ஐந்து பேருக்கு மனைவியாக்கி தன் தனித்தன்மையை வெட்டி எரிந்தது. ஒரு பெண் ஐந்த ஆண்களை காப்பாற்றுகிறாள் அடிமையான தன் கணவன்களுக்கு விடுதலை வாங்கித் தருவதில் வெற்றிப் பெற்றாள் திரௌபதி. உலகத்தில் இத்தனை அழகுடைய எந்த ஒரு பெண்ணும் சோகங்கள் நிறைந்த கடலில் மூழ்கிக் கொண்டிருந்த தன் கணவன்களை ஒரு படகை போல் இருந்து காப்பாற்றியதில்லை என கர்ணன் அவளை பாராட்டினான்.

No comments:

Post a Comment