jaga flash news

Wednesday, 12 August 2020

பூசணிக்காய்

எண்ணெய் பசையை நீக்கும் பூசணிக்காய்.:

பூசணிக்காயை சிறு துண்டுகளாக்கி அதை கண்களை சுற்றி வைத்தால், கண்களைச் சுற்றி ஏற்படும் கருவளையம் மறையும்.

பூசணிக்காயின் கூழை, முட்டையின் வெள்ளைக்கருவுடன் சேர்த்து கலந்து, அத்துடன் சிறிது பால் மற்றும் தேன் சேர்த்து நன்கு கலந்து கொண்டு, அந்த பேஸ்ட்டை முகம் மற்றும் கழுத்தில் தடவி, 15 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவினால், முகத்தில் உள்ள பருக்கள் நீங்கி, முகம் அழகாகக் காணப்படும்.

பூசணிக்காயை நன்கு மசித்து, அதில் தேன் மற்றும் ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும். எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கு இது நல்ல தீர்வாக அமையும்.

முகம் கருப்பாக காணப்பட்டால், அதனை போக்குவதற்கு, பூசணிக்காய் கூழுடன், சிறிது சர்க்கரை மற்றும் பால் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி, 5 நிமிடத்திற்கு பின்னர் குளிர்ந்த நீரில் கழுவினால், முகத்தில் உள்ள கருமை நிறம் மங்குவதோடு, பருக்கள் நீங்கி, கரும்புள்ளிகளும் மறைந்துவிடும்.

முகப்பருவில் இருந்து விடுபட, பூசணிக்காய் கூழுடன், தயிர், எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி, 15 நிமிடம் கழித்து குளிர்ச்சியான நீரில் கழுவிட வேண்டும். சந்தனப் பொடியை, பூசணிக்காய் கூழுடன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவினாலும் முகப்பருக்கள் முற்றிலும் நீங்கும்.

No comments:

Post a Comment