jaga flash news

Tuesday, 18 August 2020

கரிநாள்....

அமாவாசை நிறைஞ்ச நாள்னு இன்னிக்கு நிறைய பேர் பூஜை போடுறாங்க .சொன்னா யார் கேட்கிறா.கரிநாள் சேர்ந்த அமாவாசை இன்று.

மன்னன் நெப்போலியன் மாதத்தில் சில நாட்களில் போர் தொடுக்க மாட்டார்.எந்த நிகழ்ச்சியும் வைத்துக்கொள்ள மாட்டார்.அவர் கடைபிடித்த நாட்கள் பட்டியலும் நம் கரிநாளும் ஒன்றுதான்.

தை மாதம் கார்த்திகை மாசம் மட்டும் நான்கு அல்லது ஐந்து நாள் வரும்.மற்ற மாதங்களில் ஒன்றிரண்டு வரும்.சூரியன் தீட்சாண்யம் அதிகம் இருக்கும் நாள் கரிநாள்.கறி எடுத்து சாப்பிடும் நாள் அல்ல.எந்த புதிய முயற்சியும் சுபகாரியமும் செய்ய கூடாத நாள்.

கரிநாள் என்பது என்ன?
**************************

ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால் கரிநாள் என்பது “சூரியனின் தீட்சண்யம் அதிகமாக இருக்கின்ற நாள்” என்பதே. அதாவது, அன்றைய தேதியில் சூரிய கதிர்வீச்சின் தாக்கம், பொதுவாக அந்த மாதத்தில் இருக்க வேண்டிய சராசரியை விட அதிகமாக இருக்கும். நமது முன்னோர்கள் ஆண்டாண்டு காலமாக ஆராய்ந்து முடிவு செய்து வைத்திருக்கும் நாட்கள் இவை. இந்நாட்கள் வருடத்திற்கு வருடம் மாறுபடாதவை . அதே தேதி .(Constant ). தமிழ் மாத தேதிகளின் அடிப்படையில் இந்நாட்களைத் துல்லியமாகக் கணக்கிட்டு வைத்திருக்கிறார்கள். உதாரணமாக தை மாதம் 1, 2, 3 ஆகிய நாட்கள் கரிநாட்கள். மாறாக, இது ‘அஷ்டமி, நவமி’ போன்றோ அல்லது ‘பரணி, கிருத்திகை’ போன்றோ திதிகள் அல்லது நட்சத்திரங்களின் அடிப்படையில் அமைந்தது அல்ல.

சூரியனின் தீட்சண்யம் அதிகமாக இருக்கும் பொழுது, நமது உடலில் உள்ள அனைத்து சுரப்பிகளும், ஹார்மோன்களும் சராசரிக்கும் சற்று கூடுதலாக அதிக அளவில் தூண்டப்படுகின்றன. ஒவ்வொரு தமிழ் வருடமும் கரிநாட்களின் விவரம் :

சித்திரை-6, 15, (April 19, 28)

வைகாசி- 7, 16, 17, (May 21, 30, 31)

ஆனி- 1, 6, ( June 15, 20)

ஆடி-2, 10, 20, (July 18, 26, August 5)

ஆவணி-2, 9, 28, (August 18, 25, September -13.)

புரட்டாசி- 16, 29, (October-2, 15)

ஐப்பசி-6, 20, (October-23, November-6)

கார்த்திகை-1, 10, 17, (November-17,26, December-3)

மார்கழி-6, 9, 11, (December-21,24,26)

தை-1, 2, 3, 11, 17, (January 2018- 14,15,16,24, 30)

மாசி-15, 16, 17, (February 2018- 27, 28, March 2018-1)

பங்குனி-6, 15, 19. (March 2018- 20, 29, April 2018-2.)

இந்த நாட்களை குறித்து வைத்துக்கொள்ளுங்கள். மாறவே மாறாது.

கரிநாட்களில் சுபநிகழ்ச்சிகளை மேற்கொள்ளாமல் தவிர்ப்பது நல்லது

1 comment:

  1. அய்யா...வெ.சாமி. அவர்களுக்கு ஜான்ஸிகண்ணனின் 25/12/2020−ஆம் வருடத்திய வைகுண்ட ஏகாதசியின் வாழ்த்துக்கள்.குரு பாதம் பணிகிறேன்.என்னை ஆசீர்வதியுங்கள்.

    ReplyDelete