jaga flash news

Friday, 21 August 2020

கிச்சன் வாஸ்து : இந்த திசையில் மட்டும் சமையலறை இருக்கவே கூடாது ஏன் தெரியுமா

மதுரை: ஒரு வீட்டின் வாஸ்து தன்மைக்கு முக்கிய காரணமாக இருப்பது சமையலறையாகும். சமையலறை சிறப்பாக அமைந்துவிட்டால் இறைவன் அருளால் குடும்பத்தின் பொருளாதர வரவில் பங்கம் உண்டாகாது. ஒரு வீட்டுக்கு எந்த இடத்தில் சமையலறை இருந்தால் என்ன பலன் என்பதை விரிவாக பார்ப்போம்.


வடகிழக்கு இது ஈசான்ய மூலை சமையல் அறை. ஈசான்யத்தின் புகழை பல சமயம் குறிப்பிட்டு இருக்கிறேன். இது மகாலஷ்மிக்கு உரிய இடமாகவும், ஈசனின் சிரசில் இருக்கும் கங்கையின் ஸ்தானம் ஆகும். இது தண்ணீருக்கு மட்டும் ஏற்ற இடம். இங்கே அக்னி வைக்க கூடாது. சமையலறை இருப்பது தோஷத்தை கொடுக்கும்.

இந்த வடகிழக்கில் சமையலறை சிறப்பாகாது. ஆண்பிள்ளையின் கல்வியறிவு அல்லது அவனது வளர்ச்சிகள் கெடும். சிலர் இந்த பகுதி சமையல் அறைதான் தங்களுக்கு யோகமே செய்தது என்பார்கள். ஆனால் அது தவறு. அக்னியில் தண்ணீர் எப்படி கொதிக்குமோ அதுபோல இங்கே சமையலறை அமைத்துவிட்டால் அந்த குடும்பத்தின் பொருளாதார நிலையில் பாதிப்பு ஏற்படும்.


வடகிழக்கு கூடாது
கிழக்கு பகுதியில் சமையலறை வரக்கூடாது வாழ்க்கையில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படும். தென்கிழக்குதான் சமையலறைக்கு சரியான இடம். தென்கிழக்கு அடுப்பு வைத்து சமைக்க வேண்டும். சமையலறையில் பாத்திரம் கழுவும் குழாய் வடகிழக்கில் அமைப்பது நல்லது. வடகிழக்கு மூலை மட்டுமே தண்ணீர் குழாய் அமைக்க நல்ல இடம் இல்லாவிட்டால் பெண்களுக்கு ஆரோக்கிய குறைபாடு ஏற்படும். வடகிழக்கில் சமையலறை வைத்தால் குடும்பத்தின் பொருளாதார நிலை பாதிக்கும்.


உடல் நிலை பாதிக்கும்
தென்மேற்கும் வடகிழக்கும் சமையலறை வைக்கவே கூடாது. உடல் நல பாதிப்பு வரும். துஷ்ட சக்திகளால் பாதிப்பு வரும் கடன் பிரச்சினை திருமண தடை, திருமண வாழ்க்கையில் பிரச்சினை ஏற்படும். அதே போல மேற்கு சமையலறையும் வரவு செலவு சரியாக போகும். நண்பர்கள் கூட விரோதிகளாவார்கள். நல்ல வாய்ப்புகள் கூட தட்டிப்போகும்.



முன்னேற்றம் வரும்
தென்கிழக்கு பகுதிக்கு எதிர் மூலை வடமேற்கு இந்த பகுதியில் சமையல் அறை வைக்கலாம் ஆனால் அவ்வப்போது லேசாக உடல் நல பாதிப்பு ஏற்படும். தொழில் முன்னேற்றம் வரும் வாஸ்துபடி கட்டிடம் அமைந்தால் தோஷம் வர வாய்ப்பு இல்லை.


பொருளாதார பாதிப்பு
குபேர பகுதியான வடக்குப் பகுதியில் சமையலறை கட்டுவது கூடாது. பொருளாதார பாதிப்பு ஏற்படும் சுபிட்சம் ஏற்படாது. தொழிலில் தடைகள் ஏற்படும். வீண் சச்சரவுகள் ஏற்படும். உறவினர்களிடம் பிரச்சினை ஏற்படும்.



அனுபவிக்க நல்ல இடம்

அக்னி மூலை சமையலறைக்கு ஏற்ற இடம் நஷ்டம் ஏற்படாது பெண்களுக்கு பாதிப்பு வராது. அதே போல வடமேற்கு பிரச்சினையில்லை.

சொந்த வீடு வாங்கிச்செல்லும் யோகம் தரும் வடமேற்கு சமையலறை. தென்மேற்கு பகுதியில் சமையலறை வைக்க முடியாத பட்சத்தில் வடமேற்கு பகுதியில் வைக்கலாம்.


சமையலறை பரிகாரங்கள்
தோஷமான வாஸ்து குறையுள்ள சமையலறைக்கு எளிய பரிகாரம் என்ன என்று இப்போது பார்ப்போம். வீட்டுக்குள் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு பகுதிக்கு சமையலறையை மாற்ற இயலாத பட்சத்தில், இருக்கிற சமையலறைக்குள் சின்ன சின்ன மாற்றங்களை செய்யலாம். குறிப்பாக அடுப்பு மேடை கிழக்கு நோக்கி தென்கிழக்கு மூலையில் இருக்க வேண்டும். அடுத்து முக்கியமாக பாத்திரங்களை கழுவ உபயோகிக்கும் தண்ணீர் குழாய், சமையலறையின் வடகிழக்கு மூலையில்தான் பொருத்த வேண்டும்.


கிழக்கு நோக்கி சமையல்
சமையலறைக்கு மேடை அமைக்கும் போது, கிழக்கு தெற்கு மேற்கில் மேடை அமைக்கலாம். ஆனால் சமைப்பது கிழக்கு நோக்கியதாக இருந்தால் நல்லது. வடக்கு நோக்கி சமைக்கும்படியாக மேடை அமைத்திருந்தால் வடக்கு மையத்திலோ அல்லது வடகிழக்கு மூலையாகவோ இல்லாமல், வாயுமூலை எனப்படும் வடமேற்கு பகுதியாக அடுப்பை நகர்த்தி வடக்கு நோக்கி சமைக்கலாம். மேற்கு நோக்கி சமைக்கும் படியாக மேடை அமைந்திருந்தால் தென்மேற்கு மூலை, மேற்கு மையத்தை தவிர்த்து மேற்குவாயு எனப்படும் வடமேற்கு மூலைக்கு அடுப்பை கொண்டு செல்லலாம்.


அன்னபூரணி அருள்
தென்மேற்கு சமையலறை அதிக கெடுதல் செய்ய கூடியதாகும். வேறு இடத்துக்கு மாற்ற வசதி இருந்தால் மாற்றி விடுவதே நல்லது. தென்மேற்கு சமையலறைக்குள்ளே வடமேற்கு அல்லது அக்னி மூலையான தென்கிழக்குப் பகுதிக்கு அடுப்பை நகர்த்தி உபயோகிப்பது நல்லது. தவறான சமையல் அறை அமைப்பில் குடியிருப்பவர்கள் ஏழைகளுக்கு அன்னதானம் கொடுக்கலாம். குடும்பத்தில் வறுமை ஏற்படாது. இரவு நேரத்தில் உணவு கொஞ்சமாவது வைக்க வேண்டும்.



No comments:

Post a Comment