jaga flash news

Saturday, 27 June 2026

விதி வலியது!

விதி வலியது!

    வலிமையானது விதி என்பதற்கு நிறைய சான்றுகள் உண்டு. அபிமன்யுவின் மகனான பரீஷித் பாண்டவர்களுக்குப்பின் அரியணையில் ஏறியவன். நல்லவன். மனிதநேயம் மிக்கவன். காட்டில் வேட்டையாடும் போது ஓர் மானைத் துரத்திச் சென்றான். அங்கே முனி ஒருவர் தவமிருந்தார். அவரைப் பார்த்து தான் துரத்திய மான் இப்பக்கம் வந்ததா என் வினவினான். அவர் மௌனமாக இருக்கவே எரிச்சலடைந்தவன் அருகில் இறந்து கிடந்த பாம்பை தூக்கி அவர்மேல் வீசிவிட்டு சென்றான். அது அவன் கர்மபலன்.
    அந்த ரிஷியின் மகன் தன் தந்தையை அவமதித்தவன் பாம்பரசனால் தீண்டப்பட்டு 7இரவுக்குள் இறப்பான் எனச் சாபம் தந்தான். இதையறிந்த பரீஷித் ஒற்றைத் தூணின்மேல் மாளிகை எழுப்பி 7நாட்கள் தங்க முடிவு செய்தான். மூலிகை வைத்தியர்கள், காவலர்கள் சூழ 6நாள் கழிந்தது. மன்னன் பசியாற பழங்கள் வந்தன. அவைகளை மந்திரிகளுக்கும் கூட இருந்தோருக்கும் பகிர்ந்து அளித்து ஒரு பழத்தை எடுத்து உண்ண ஆரம்பித்தான். புழு வடிவில் உள்ளே இருந்த பாம்பரசன் தீண்ட பரீஷித் இறந்தான். எப்படி பாதுகாப்பாக இருந்தாலும் விதி எந்த வடிவத்திலும் தொடரும் என்பதே இதன் பொருள்

No comments:

Post a Comment