jaga flash news

Saturday, 10 December 2016

பழமொழியும் ஆன்மீகமும்.....

பழமொழியும் ஆன்மீகமும்.....
1.தாழ்ப்பாளை சும்மா போட்டு லொட்டு லொட்டுனு ஆட்டக்கூடாது. அப்படிச் செய்தா... வீட்டுல சண்டை வரும்.'
அதாவது, தாழ்ப்பாளை அடிக்கடி ஆட்டினால், கதவுடன் இணைக்கப்பட்டிருக்கும் தாழ்ப்பாள், லொட லொடக்க (ஸ்க்ரூ, சக்கை கழன்று) ஆரம்பித்துவிடும். திருடர்கள் வீட்டுக்குள் சுலபமாக வருவதற்கு நாமே வழி ஏற்படுத்தியது போலாகிவிடும்.
2. 'வீட்டுக்குள்ள நகம் வெட்டினா... வீடு விளங்காது.'
வெட்டித் துண்டாகும் நகம் எங்காவது தெறித்து விழும். சமயங்களில் உணவுப் பொருளில்கூட கலக்க வாய்ப்புண்டு. காலில்கூட அது ஏறி... வில்லங்கத்துக்கு வழிவகுத்துவிடும்.
3. 'நகத்தைக் கடித்தால் தரித்திரம்.'
நக இடுக்குளில் உள்ள அழுக்கு, வாய் வழியாக உடலுக்குள் சென்று, பல்வேறுவிதமான நோய்களுக்கு வழி ஏற்படுத்திவிடும்.
4. 'உச்சி வேளையில கிணத்தை எட்டிப் பார்க்கக் கூடாது.'
கிணற்றுக்குள் பல்வேறு விஷவாயுக்கள் உற்பத்தியாகும். உச்சிவெயில் நேரத்தில் நேரடியாக சூரிய வெளிச்சம் கிணற்றுக்குள் விழுவதால் அந்த வாயுக்கள் வெப்பத்தால் லேசாகி மேலே பரவும். எட்டிப் பார்ப்பவர்களை அது தாக்கினால் ஆபத்து.
5. 'இருட்டிய பிறகு குப்பையை வெளியே கொட்டினால் லட்சுமி வெளியே போய்விடுவாள்.'
வீட்டுக்குள் பகல் முழுக்க நடமாடும் நாம், ஏதாவது சின்னஞ்சிறு நகை போன்ற பொருட்களை தவறவிட்டிருந்தால், அது குப்பையில் சேர்ந்திருக்கும். இரவு நேரத்தில் அள்ளி தெருவில் கொட்டிவிட்டால், பிறகு தேடிக் கண்டுபிடிப்பது சிரமத்திலும் சிரமம்.
6. வீட்டில் புறா வளர்க்கக் கூடாது. வளர்த்தால் குடும்பம் அழிந்துவிடும்.'
புறாக்கழிவுகளின் வாசனை பாம்பை ஈர்க்க வல்லது. அதனால் அதைத் தேடி விஷப்பாம்புகள் வரும்.
7. 'இரவு நேரங்களில் கீரை சாப்பிட்டால்... எமனுக்கு அழைப்பு வைப்பதுபோல!'
கீரை எளிதில் ஜீரணமாகாது. அதிலும் இரவில் சாப்பிட்டுப் படுத்தால், தேவையற்ற உடல் தொந்தரவுக்கு வழி வகுத்துவிடும். எனவே, பகல் வேளைகளில் மட்டுமே அதைச் சாப்பிட வேண்டும்.
8. 'புளிய மரத்துக்கு கீழே படுத்தால் பேய் அடிக்கும்.'
புளிய மரம் இரவில் அதிக கார்பன் டை ஆக்ஸைடு வாயுவை வெளியிடும். அதனால் மூச்சுத்திணறல் கூட ஏற்படலாம். இதைத்தான் அமுக்குவான் பிசாசு என்றுகூட சொல்வார்கள்.
9. முருங்கை மரம் வாசலில் வைத்தால் வீட்டுக்கு ஆகாது.'
மரங்களிலேயே மிகவும் மென்மையான மரம் என்பதால், குழந்தைகள் ஏறினால்கூட பட்டென்று கிளைகள் முறிந்து, விபத்துக்கு வழி வகுத்துவிடும். தவிர, அதில் வரும் கம்பளிப்பூச்சி உள்ளிட்டவை எளிதாக வீடு தேடி வந்து தாக்குதல் நடத்தும்
10. தலைவிரி கோலமாக பெண்கள் இருக்கக் கூடாது...'
சமைக்கும்போதும்... பரிமாறும்போதும் உணவில் தலைமுடி விழுந்து, அருவருப்பு ஊட்டுவதைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காக!
11. . 'வடக்கே தலை வைத்துப் படுக்கக் கூடாது.'
பூமியின் காந்த சக்தியானது வடதுருவத்தை நோக்கி நிற்கிறது. வடதிசையில் தலை வைத்து படுக்கும்போது அதன் ஈர்ப்பு சக்தியானது நம் தலையையும் மூளையையும் தாக்குகிறது. அதனால் ஆரோக்கியம் குறையும் என்ற நம்பிக்கையின் வெளிப்பாடு.
12. . 'வாழை இலை போடாமல் விசேஷம் நிரக்காது.'இந்த இலையில் 'பினாலிக்ஸ்' எனும் இயற்கை சத்து உள்ளது. இதில் தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி கிடைக்கும் என்பது ஆராய்ச்சி முடிவு. இதை அனுபவத்தில் கண்டுணர்ந்து காலகாலமாகக் கடைபிடிக்கிறார்கள்.

அதிர்ஷ்டம் தரும் அபிஜித் நட்சத்திர/அபிஜித் கால ரகசியங்கள்

அதிர்ஷ்டம் தரும் அபிஜித் நட்சத்திர/அபிஜித் கால ரகசியங்கள்:
கலியுகத்தில் மனிதர்களுக்காக நல்ல காலங்களைக் கண்டு அறிந்து நற்பலன்களைக் கண்டிட மொத்தம் 28 நட்சத்திரங்கள் இருந்தன என்பது யாருக்கும் தெரியாத ரகசியமாகும்.
ஜோதிடத்தின் ஆரம்ப காலத்தில் 28 நட்சத்திரங்கள் வழக்கத்தில் இருந்திருக்கிறது. வம்சோத்திரி தேசா கணிதத்திற்கு பிறகு அது 27 நட்சத்திரங்களாக சுருக்கப்பட்டு விட்டது.
கடவுள் வழிபாட்டுக்கும், சுபநிகழ்ச்சிகளுக்கும் தினமும் காலை வேளையில் திதி- வாரம்- நட்சத்திரம்-யோகம், கரணம் ஆகிய ஐந்து அங்கங்களைக் கணக்கிட்டு பஞ்சாங்கக் குறிப்புகளுடன் முகூர்த்த நேரங்கள் சொல்லப்பட்டன.
அபிஜித் முகூர்த்தம் :
நண்பகல் உச்சி நேரம் 11.45 A.M to- 12.15 P.M மணி வரையுள்ள நேரம் அபிஜித் முகூர்த்தம் எனப்படும். அபிஜித் முகூர்த்தம் வெற்றியைத் தரும் முகூர்த்தம் ஆகும்.
எல்லா நாட்களிலும் சூரிய உதய காலம் 5.45 A.M to- 6.15 A.M (கோதூளி முகூர்த்தம்), உச்சி காலம் 11.45 A.M to- 12.15 P.M (அபிஜித் முகூர்த்தம்), அஸ்தமான காலம் 5.45 P.M to- 6.15 P.M (கோதூளி முகூர்த்தம்), ஆகிய மூன்று முகூர்த்தங்களும் தோஷமற்ற முகூர்த்த காலங்கள் ஆகும்.
இந்த மூன்று வேளைக்கும் நாள், திதி, நட்சத்திரம், யோகம், கரணம் ஆகிய பஞ்சாங்க தோசம் கிடையாது. சூரிய உதய அஸ்தமன நேர பேதத்தை கணக்கில் கொள்ளவும்.
நல்ல பஞ்சாங்க நாளும் மேற்கண்ட கோதூளி முகூர்த்தம் அல்லது அபிஜித் முகூர்த்தமும் வந்தால் அதிக பலன் தரும்.
பிரம்ம முகூர்த்தம் எப்படி நிர்மலமான நேரம் எனப்பட்டதோ அதே போல் அபிஜித் காலமும் வெற்றிக்கான பூஜைகள் செய்திடும் காலம் ஆகும்.
ஜித்-என்றால் ஜெயித்தல், அபிஜித் என்றால் மிகச் சிறப்போடு வெற்றி பெறுதல் எனப்படும்.
அதாவது வழிபட்டால் வெற்றி கிட்டும் காலம். காலையில் சூரிய உதய காலத்திலிருந்து ஆறுமணி நேரம் கழித்து வருகின்ற உச்சி வேளைதான் இந்த அபிஜித் காலம்.
உத்திராட நட்சத்திரமும் (இதன் கடைசி இரண்டு பாதமிருக்கும் நேரம்),
திருவோணமும் (இதன் முதல் இரண்டு பாதமிருக்கும் நேரம்)
இணையும் காலம் அபிஜித் நட்சத்திரக் காலமாகும்.
அபிஜித் நட்சத்திரம் மகர ராசியில் அதாவது உச்சிராசியில் உத்திராடம் நட்சத்திரத்தின் கடைசி நான்கில் ஒருபங்கும் திருஒணம் நட்சத்திரத்தின் முதல் பதினைந்தில் ஒரு பங்கும் அபிஜித் நட்சத்திரம் ஆகும்.
வெற்றி அடைய விரும்பும் அனைவரும் இந்த அபிஜித் முகூர்த்த காலத்தைப் பயன்படுத்தலாம்.
தொழிற்கூடத்தை நிறுவி வியாபார ஏற்ற இறக்கத்தாலும் தேதிகளின் தொந்தரவாலும் இழந்தவைகளைப் பெற்றிட இந்தநேரமானது உன்னதமான காலம் என்று சொல்லலாம்.
நட்சத்திரக் கூட்டத்தின் முன்பாக முதல் நட்சத்திரமாக நின்றபோது இதற்கு சக்தி அதிகமாக இருக்கவில்லை.
இது தனியே பிரிந்து வெற்றிக்கான நேரம் என்று அறிவிக்கப்பட்ட பிறகு ஜோதிடர்களும் ஆன்மீக அருளாளர்களும் இந்த காலத்தைத் தவறாமல் பயன்படுத்தி தங்கள் சக்திகளைப் பெருக்கிக் கொள்ளவே வழக்கக் சொல்லில் உச்சி வேளை என்று வந்து விட்டது.
சிவனின் நட்சத்திரம்-திருவாதிரை, மகாவிஷ்ணுவின் நட்சத்திரம்- திருவோணம். பிரம்மாவின் நட்சத்திரம்-அபிஜித்.
அபிஜித் நட்சத்திரத்தின் அதிதேவதையாக ஸ்ரீ பிரம்மாவும்,
பிரத்யதி தேவதையாக ஸ்ரீ நரசிம்ம மூர்த்திப் பெருமாளும் துலங்குகின்றனர்.
உத்திராடம் நட்சத்திர மூன்று நான்காம் பாதங்கள், திருவோணம் நட்சத்திரம்
1, 2-ம் பாதகங்கள் வருகின்ற ஒரு கால கட்டத்திலேதான் நான்முகனாகிய பிரம்மதேவன் பூமியையும் ஈரேழு பதினான்கு லோகங்களையும் வெற்றி பெற்று அடைந்ததாகப் புராணங்கள் சொல்கின்றன.
பரமேஸ்வரன் இந்த அபிஜித் நேரத்தில்தான் முப்புரங்களையும் வென்று எதிகளைத் தோற்கடித்து ஓடச் செய்தார். இறைவனுக்கே சோதனைகள் வந்தபோது இக்காலத்தைப் பயன்படுத்தினார்.
மனிதர்களாகிய நாமும் நம்முடைய தேவைகளை இறைவனிடம் கோரிக்கையாக வைத்து எந்த கடவுளை வழிபடப் போகிறோமோ அதன் முக்கிய மூலத்தை அறிந்து கொண்டு இக்காலத்தில் வழிபட அவர்களும் நண்பர்களாகி விடுவர்.
அபிஜித் உருவம் என்ன? -
27 நட்சத்திரங்களுக்கும் உருவம் உள்ளதைப் போல இதற்கும் ஓர் வடிவம் இருக்கிறது. நான்கு தெருக்கள் சந்திக்கின்ற நாற்சந்தியே இதன் வடிவமாக உள்ளது.
இதன் பொருள் ரிக், யஜீர், சாம, அதர்வண வேதங்களாகிய வாழ்வியல் தர்மத்தின் வழியே நாம் சென்று கொண்டிருந்தால் பார்போற்றும் நட்சத்திரங்களைப் போன்று வாழலாம் என்பதே இதன் ரகசியச் சொல் குறியீடு ஆகும்.
இதைத் தான் மனிதன் நான்கையும் தெரிந்து நடந்து கொள்ள வேண்டும் என்றார்கள்.
இதன் உருவ அமைப்பில் முதல் பகுதி - ஜ, புகழைக் குறிக்கிறது. இரண்டாம் பகுதி- ஜி வெற்றியைக் குறிக்கிறது. மூன்றாம் பகுதி -ஜீ. இறையருளைக் குறிப்பது. 4-ம் பகுதி-ஐ-ஐஸ்வர்யத்தைச் சொல்கிறது.
நட்சத்திரக் கூட்டங்களிலிருந்து பிரித்து எடுக்கப்பட்டாலும் ஒவ்வொரு கிழமைகளிலும் இதற்கு ஒரு சக்தி பிறந்து கொண்டே இருக்கிறது என்று வான சாஸ்திரிகள் கருத்து கூறுகின்றனர்.
உத்திராடம், திருவோண நட்சத்திர நாட்களில் மட்டும் கிழக்கு வானத்தில் அதிகாலையில் ஒரு கேள்விக்குறி போன்ற சிறு நட்சத்திரக் கூட்டம் தெரியும்.
இதன் தலை பாகத்தில் தனியாக அபிஜித் தெரியும் என்றும் இதை காண போதிய பயிற்சி தேவை என்றும் வானியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
சிறப்பான இந்த அபிஜித் நட்சத்திரத்தைக் கண்டு விட்டால், எல்லா செயல்களுமே வெற்றியாக முடியும்.
நமக்குக் குறிப்பிட்ட பணிகளில் தடை இருந்தால் அவை விலக அபிஜித் முகூர்த்த கால பூஜைகள் வெற்றி பெற சமய சஞ்சீவனமாக உள்ளன.
இந்த காலத்தில் சாதாரண மங்கள மந்திரங்களும், அஸ்திர மந்திரங்களும் இரட்டிப்பான பலன்களைத் தருகின்றன என்று பயன்படுத்தியவர்கள் சொல்கிறார்கள்.
அபிஜித் காலத்தில் வெற்றி தரும் வழிபாடுகள்-
இக்கால கட்டத்தில் திருமண நிச்சயதார்த்தங்கள் அதிகம் எழுப்பபட்டு அவை மணமுறிவுகளாக ஆறு மாதங்களில் ஆகி விடுகின்றன.
அதற்கு மறு மாங்கல்ய பூஜை செய்து திருமணப் பதிகம் ஓதி உமை ஒருபாகனை வழிபட்டால் அடுத்து அமையும் திருமணம் நல்லபடியாக நடந்து வாழ்க்கை பிரகாசமாக இருக்கும்.
துணி நீல வண்ணம் முகில் தோன்றியன்ன மணி நீல கண்டனம் உடையாய் மருகல் அகணி நீலவண்டார் குழுவாள் சிவந்தன் அணி நீலஒண்கண் அயர்வாக்கினயே என்று சிவன் முன் கூற வேண்டும்
இழந்த பொருள் மீட்க-
நிலம், வீடு சொந்தங்கள், இழப்பு நண்பர்கள் எதிரிகளால் பொருள் இழப்பு ஏற்பட்டால்
`எம் நமக் கார்த்த வீர்யாய ஹீம்பட்'
என்ற மூல மந்திரத்தை ஒரு வட்டமிட்டு எழுதி தீபம் ஏற்றி
ஓம் கார்த்த வீர்யா போற்றி!
ஓம் இழந்ததை மீட்பாய் போற்றி!
ஓம் பராக்கிரம சாலியே போற்றி!
ஓம் இரக்க குணம் உடையோய் போற்றி!
ஓம் சக்கர வாசனே போற்றி
என்று கூறி வழிபட வேண்டும்
அபிஜித் காலத்தில் பார்லி அரிசி கருங்காலிக் குச்சியால் யாக முறை செய்திட பலன் கிடைக்கும்.
கலியுகத்தில் இதனை தவறாகப் பயன்படுத்துவார்கள் என்று
ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா இதனை நட்சத்திர மண்டலத்தில் இருந்து எடுத்து
தன் மயிற்பீலிக்குள் ஒளித்து வைத்து விட்டார்.இதனால் இந்த நட்சத்திரம் மேன்மேலும் உன்னதம் பெற்றுவிட்டது.
அபிஜித் நட்சத்திரமும் அபிஜித் முகூர்த்த நேரமும் தோன்றிய தலம்
திருமங்கலக்குடி ஸ்ரீ பிராணவரதேஸ்வரர் ஆலயமாகும்.
அபிஜித் நட்சத்திர காலத்தில்
திருமங்கலக்குடி,
ஒன்பத்துவேலி,
சுரைக்காயூர்,
ராப்பட்டீச்சரம் போன்ற காலசக்தித் தலங்களில் வழிபட்டு வந்தால் காலசக்திகள் நன்கு பரிணமிக்கும்.
இது சந்ததி விருத்திக்கு மிகவும் முக்கியமானதாகும்.
ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா தன்னுடைய கிரீடத்தின் மயில் இறகில் அபிஜித் நட்சத்திரத்தைச் சூடிக் கொண்டு முதன் முதலாக பூமியில் காட்சி அளித்த தலமே திருக்கண்ணபுரம்.
நாம் வாழும் கலியுகத்திற்கு ஓரளவேணும் அபிஜித் நட்சத்திர சுபமங்கள காலசக்திகளை அளிக்க வல்லதே திருக்கண்ணபுரம் ஸ்ரீ கிருஷ்ணர் கோயிலாகும்,
விஸ்வகர்ம மூர்த்தி இப்பூவுலகையே ஆண்ட உபரிசரவசு மாமன்னருடன் சேர்ந்து தாமே நேரில் வந்து பார்த்து நிறுவிய ஆலயம்
இவ்வாலய ”உத்பலாவதக” விமானமும் அபிஜித் நட்சத்திரப் பிரகாசத்தைச் சூடி உள்ளது என்பது தேவ சூக்கும ரகசியமாகும்.
அபிஜித் நட்சத்திரம் புறக் கண்களுக்கு தரிசனமாகாதது போல,
இவ்வாலயத்தினுள் எங்கிருந்து பார்த்தாலும் மூலக் கருவறை விமானம் கண்ணுக்குத் தென்படாத அதிசயம் கொண்டவியத்தகு “ஸ்ரீவர்ச்சஸ வாஸ்து சாஸ்திரக் கோயில்”
அனைத்து நட்சத்திரக்காரர்களும் உத்தராயணம், தட்சிணாயணக் காலங்களில் ஒரு முறையேனும் திருக்கண்ணபுரத்தில் வாழ்நாள் முழுதும் வழிபட்டு வரவேண்டும்.
இங்கு பிரதி அமாவாசை தின பகல் உச்சி நேரக் காலத்தில்
அபிஜித் நட்சத்திரத்தைக் கொண்டவரான ஸ்ரீ விபீஷண ஆழ்வாருக்கு
“நடையழகு காட்டி சேவை சாதிக்கும் வைபவம் நிகழ்ந்து வருகின்றது.
அப்போது ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா உத்தமமான அபிஜித் நட்சத்திர சக்திகளைக் கலியுக ஜீவன்களுக்கு வார்த்தளிக்கின்றார்.

குரு”

உடலை வளர்க்க உதவியவர் பெற்றோர். அறிவை வளர்க்க உதவியவர்கள் ஆசிரியர்கள்.
உணவு செரிக்கும் வரையிலும், உடல் மரிக்கும் வரையிலும் உதவும்
ஆனால் ஆசிரியரால் கல்வி கற்றதன் பயன் பிறப்புக்கள் தோறும் தொடர்ந்து துணை செய்யும்.
அறிவு வளர்ச்சிக்கும், தெளிவிற்கும் அடிப்படைத் துணையாக அமைந்திருப்பது ஆசிரியர் புகட்டும் கல்விப் பயிற்சிதான்.
கல்விக்குத் தொடர்பானது அறிவு; அறிவுக்கு தொடர்பானது உடல், உடலுக்குத் தொடர்பானது உயிர். உயிருக்குத் தொடர்பானவர் ஆண்டவன்.
இந்த ஆண்டவனைக் கல்வியறிவினால் உணர்த்துபவர் ஆசிரியர் {குரு} ஆகவேதான் ஆன்றோர்கள் ஆசிரியரைச் சர்வத்துக்கும் காரணனாக விளங்கும் ஆண்டவனுக்குச் சமமாகவே அறிவித்திருக்கிறார்கள்.
“குரு” என்பதற்கு அஞ்ஞானத்தை நாசம் செய்பவர் என்பது பொருள்.
நன்னெறியைத் தாமும் கடைப்பிடித்துத் தம்மை அணுகும் மாணவனையும் நன்னெறியில் நிறுத்துபவரே குரு எனப்படுகிறார்.
வேதாத்யயனம் செய்தவராகவும், அதன் உட்பொருளை அறிந்தவராகவும், துவேஷமில்லாதவராகவும், மந்திரமறிந்தவராகவும், ஆசார்ய பக்தியுடையவராகவும், விஷேசமாகப் புராணங்களைப் படித்தவராகவும் ஒருவித பயனையும் கருதாமல் போதிப்பவராகவும், பணத்திற்காகவோ, புகழுக்காகவோ, பெருக்காகவோ கற்பிக்காமல் சீடனிடம் கருணையினால் மட்டும் உபதேசிப்பவராகவும் இருப்பவரே குரு எனப்படுகிறார்.
குருமார்களில் இரண்டு வகையுண்டு:
1, காரியகுரு. 2, காரணகுரு.
தம் வாழ்வின் காரணமாக சமய தீட்க்ஷை. சரியை, கிரியை, யோகங்களைப் பற்றிய போதனைகள்; கர்ம காண்ட விதிப்படி ஏற்பட்டுள்ள சடங்குகள் ஆகியவற்றைச் செய்பவரே காரிய குரு எனப்படுகிறார்.
ஒரு கைம்மாறும் கருதாமல் கருணையால் நமது அறியாமையைப் போக்கி-ஞானத்தைத் தந்து-பிறவிப் பெரும்பிணியைப் போக்குபவரே காரணகுரு எனப்படுவார்.
“மானிட தேகமே முக்தி அடைவதற்கு அனுகூலமானது இறைவனை ஊக்கத்துடன் உற்று உணர்வதற்கு இந்த உடல் துணை புரிவதால் இதுவும் குருவுக்கு ஈடானது” என்று தமிழ் பாகவதத்திலுள்ள ஒரு பாடலில் சுகப்பிரம்ம ரிஷி பரிட்சித்து மனன்னிடம் கூறுகிறார்.
பக்தியில்லத பூஜையும், அரசனில்லாத நாடும், தானம் செய்யாத கைகளும், விசுவாசமில்லாத நட்பும், வீபூதியில்லாத நெற்றியும் விரும்ப தக்கவையல்ல.
அதேபோல குருநாதனில்லாத மாணவனும் நற்கதி சேர மாட்டான்.
ஜகத்குரு ஆதிசங்கரரே சற்குருவை நாடினாரென்றால் நாம் எம்மாத்திரம்?
ஏட்டில் இருப்பதை நாம் சுலபமாகப் படித்துத் தெரிந்துகொள்ள முடியாதா? ஆசிரியர் துனை எதற்கு? என்று நினைப்பது அறிவீனம்.
ஆற்றைக் கடக்க வேண்டுமென்றால் படகோட்டுபவனைக் கொண்டுதானே கடக்க வேண்டும்? அதுபோல் சத்குருவின் துணையால்தான் பிறவிப் பெருங்கடலைக் கடக்க முடியும்.
துருவாசர் முதலியவர்கள் விதுரனிடம் ஞானோபதேசம் பெற்றார்கள் என்றும், திருத்துறையூரிலிருந்த சகலாகம பண்டிதர் என்னும் அருணந்தி சிவாச்சாரியார் திருவெண்ணைய் நல்லூரிலிருந்த மெய்கண்ட தேவரிட்த்தில் ஞானோபதேசம் பெற்றார் என்றும் அறிகிறோம்.
நல்ல நூலகளை உழைத்துப் படிக்க வேண்டும். உயர்ந்தோர் இனக்கம் வேண்டும். ஆசிரியருக்குப் பணிவிடை செய்ய வேண்டும். இவையெல்லாம் செய்யாமல், ஞானமும் கல்வியும் பெற வேண்டுமென்றால் ஒரு பெண், தன் கணவனைக் கொன்றுவிட்டுப் பிள்ளைவரம் கேட்ட கதை போலாகும்” என்று பதிபசுபாச விளக்கம் கூறுகிறது.
ஒருவன் தனித்துப் படிப்பதால் புத்தி நுட்பம் பெறலாமே தவிர ஞானம் பெற முடியாது.
நல்லாசிரியன் ஒருவரை நாடிப் பெரும் கல்வியே ஞானத்தை எளிதில் பெற்றுத்தரும்.
அத்தகைய ஆசிரியரை அடைந்தவர்கள், தம்முடைய உடலாலும் மனதாலும் பொருளாலும் வாகினாலும் அவருக்குத் தொண்டு செய்ய வேண்டும்.
அதாவது, ஆசிரியன் கட்டளையை மீறாமல் நடப்பது உடலால் செய்யும் தொண்டாகும். ஆசிரியரின் வடிவத்தையே தியானித்திருந்தல் மனதால் செய்யும் தொண்டாகும்.
“தெளிவு குருவிரு சிந்தித்தல் தானே_திருமூலர்.
“உற்றுழி உதவியும் உற்பொருள் கொடுத்தும், பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே._புறநானூறு.
ஆசிரியரின் குணநலங்களைப் புகழ்ந்து சொல்லுதல் வாக்கினால் செய்யும் தொண்டாகும்.
மேலும் ஆசிரியரைக் கண்ட்தும் அன்பு பெருகும் உள்ளத்தோடு கைகுவித்து வணங்க வேண்டும்.
“ஆசானைக் காண்தோறும் அன்பு பெருகும் உள்ளத்தோடு கைகுவித்து வணங்க வேண்டும்.
ஆசானைக் காண்தோறும் அன்புருகக் கைகுவியும்.”_ சிவஞானப்பிரகாச வெண்பா.
“ஆசாரியரை “உம்” என்று அதட்டிக் கூறியவர், பிணம் சுடுகிற சுடுகாட்டில் மரமாக முளைத்து நாய் நரி கழுகுகளுடன் ஒன்றாக இருக்க நேரிடும்” என்ற உண்மையைப் பின்வரும் பாடலால் அறிக:
“குருவை உம்மெனக் கூறுவர்...எரிசுடலையிற்பெருந்த தருவாகியேயிருந்து, திரிகழுகுகள் முதலன சேரவாழுவரே.”_ஆத்ம புராணம்.
இன்னும் “ஆசாரியன் மனம் நோவச் செய்தவர்கள், ஊரில் நாயாகவும், யுகாந்திரகாலம் புழுவாகவும் மண்ணில் கிடக்க நேரிடும்” இந்தக் கருத்துக்கள் அடங்கிய திருமூலரின் திருவாக்கிலிருந்து வெளிவந்த பின்வரும் அமுதப் பாடல்களை என்றும் நெஞ்சில் நிறுத்திக் கொள்ளுதல் வேண்டும்.
“ ஓரெழுத் தொருபொருள் உணரக் கூறிய சீரெழுத் தாளரைச் சிதையச் செப்பினோர் ஊரிடைச் சுணங்கனாய்ப் பிறந்தங்கோர்யுகம் பாரிடைக் கிருமியாய்ப் படிவர் மண்ணிலே.
“ மந்திரம் ஒன்றை உரைசெய்த மாதவர் சிந்தையில் நொந்திட்த் தீமைகள் செதவர், பிந்திச் சுணங்கனாய்ப் பிறந்தொரு நூறுரு வந்து புலையராய் மாய்வர் மண்ணிலே.

"சிவபெருமானிடம் இருந்து வாங்கக்கூடாத ஒன்று."

"சிவபெருமானிடம் இருந்து வாங்கக்கூடாத ஒன்று."
நமக்கு என்ன தேவை என்று நம்மை விட நன்றாக அறிந்தவர் சிவபெருமான். ஆயினும், நாம் உருகி கேட்டால், இல்லை என்று சொல்லாமல் வாரி வழங்குபவரும் சிவபெருமான் தான்.
இதை தான் மாணிக்கவாசகர் திருவாசகத்தில் "வேண்டத்தக்க தறிவோய் நீ வேண்ட முழுதும் தருவோய் நீ" என்று போற்றுகிறார்.
பேதம் போற்றாத பெருங்கருணை கொண்ட சிவபெருமான் தான் முழு முதற் கடவுள் என்று உணர்ந்து வழிபடுவோர் ஈசனிடமிருந்து வாங்க கூடாத ஒன்று "பின்வாங்குதல்".
ஈசனிடமிருந்து எதை வேண்டுமானாலும் கேட்டு வாங்கலாம். ஆனால் ஒருபோதும், எவர் வற்புறுத்தலுக்கும் பயந்து பின்வாங்க கூடாது.
நான் படும் துயரங்கள் மலை அளவு இருப்பினும், இந்த இடர்களை களைந்து எம்மை ஆனந்தமாக வாழ வைக்க, எம்மை படைத்து காக்கும் சிவபெருமான் இருக்கிறார் என்று தன் மனதுக்கு சொல்லிக் கொடுங்கள். ஈசன் அருளால் உங்கள் மனம் பக்குவப்படும்.
பக்குவப்பட்ட மனம் ஒருபோதும் சிவ வழிபாட்டில் இருந்து பின்வாங்குவதில்லை.
ஈசனை விட்டு பின்வாங்காதே. பின்வாங்கி நொந்து சாகாதே. நற்றுணையாவது நமச்சிவாயவே.
வாழ்தலே வழிபாடு. நமச்சிவாய வாழ்க!

ஸ்ரீராம ஜெயம் என்றால்?

    ஸ்ரீராம ஜெயம் என்றால்?
    இலங்கையிலே ராமனுக்கும், ராவணனுக்கும் போர்...
    அசோகவனத்திலே இருந்த சீதாதேவியின் மனத்திலும் போர்...தன் கணவர் வெற்றிவாகை சூடிவிட்டாரா...தகவல் ஏதுமில்லையே என்று! அப்போது, சீதாதேவி முன்னால் வந்து நின்ற அனுமன், "ஸ்ரீராம ஜெயம்' என்று ஆர்ப்பரித்தார்.
    ராமன் ஜெயித்துவிட்டார் என்பதை ஒரே வார்த்தையில் சொல்லி முடித்து விட்டார். அதனால் தான், அவர் சொல்லின் செல்வர் ஆனார்.
    பல சந்தர்ப்பங்களில், அவர் தனது சுபமான வார்த்தைகள் மூலம் சீதாராமருக்கு உயிரூட்டி இருக்கிறார்.
    "ரா' என்றால் "அக்னி பீஜம்'. "பீஜம்' என்றால் "மந்திரம்'. அது அகங்காரத்தை அழிக்கும் தன்மை யுடையது.
    "மா' என்றால் "அமிர்த பீஜம்'. அது மனதில் அன்பை நிறைக்கிறது.
    அகங்காரத்தை நீக்கி, மனதில் அன்பை நிறைப்பதே ராமநாமம்.
    "ராம' என்று சொன்னால் ஒரு செயலில் வெற்றி கிடைத்து விடும். அதனால் தான் "ராம'வுடன் "ஜெயம்' (வெற்றி) சேர்க்கப்பட்டது.
    அனுமனின் வெற்றிக்கு காரணம் என்ன தெரியுமா?
    அவர் 33 கோடி தடவை "ராம' நாமம் சொல்லியிருக்கிறார்.
    அதிலும், பலனை எதிர்பாராமல் அந்த நாமத்தைச் சொன்னதால், இன்றும் நம்மோடு வாழும் சிரஞ்சீவியாக இருக்கிறார்.
    ராமபாணம் எதிரிகளை வீழ்த்தும்.
    "ஸ்ரீராம ஜெயம்' எதிரிகளை நம் அருகிலேயே வரவிடாமல் தடுத்துவிடும்.
    வடஇந்தியாவில் உள்ள பக்தர்கள் 'ஜெய் ஸ்ரீ ராம்' என அனுஸந்திப்பதை மூச்சுக்காற்றாகக்கொண்டுள்ளனர்....
    அந்தி, காலை, நடுப்பகல் ஆகிய மூன்று வேளைகளும் புண்ணிய தீர்த்தமாடுகின்ற பலன் ராம நாம உச்சரிப்பில் கிடைக்கும். சந்தியாவந்தனம், முன்னோரை நோக்கிச் செய்யும் தர்ப்பணம், தவங்கள், செபங்கள் இவற்றால் கிடைக்கும் பயனும், ராம உச்சரிப்பில் கிடைக்கும். உள்ளத்தில் உருப்பெரும் அறிவும் ராம நாமத்தால் நன்கு வளர்ச்சியடையும் .
    ஸ்ரீராம ஜெயம்! ஸ்ரீராம ஜெயம்! ஸ்ரீராம ஜெயம் !!!
    LikeShow More Reactions
    Comment
    Comments
    Jagadeesan Naidu
    Write a comment...

வெள்ளெருக்கு விநாயகர்

வெள்ளெருக்கு விநாயகர்
வெள்ளெருக்கு எருக்கஞ்ச்செடிகள்குடும்பத்தைச்சேர்ந்தது. நீல எருக்கு, ராம
எருக்கு என ஒன்பது வகை எருக்கு இருப்பதாக வைத்தியர்கள் கூறுகின்றனர்.
எருக்கன் செடி 12 வருட காலம் மழை இல்லாவிட்டாலும், அதன் பருவ
காலங்களில் பூத்து, காய்த்து, வளர்ந்து வரும் இது சூரியனுடைய மூலிகை
சூரிய ஒளியிலுள்ள தண்ணீரை இது நுட்பமாக கிரகித்து வளரக்கூடியது .
இந்த விசேஷ அம்சம் உடையதுதான் வெள்ளெருக்கு.இந்த வெள்ளெருக்கு
செடியின் இலைதான் பீஷ்மரின் சாபம் கூட நீங்க வழி கொடுத்தது. தான்
நினைக்கும் போது இறக்கும் பாக்கியம் கிடைத்தும்கூட துரியோதனனின்
பாவசெயலை தடுக்க திராணியின்றி மவுனம் சாதித்த நிலையால் வரம்
சாபமாகிறது.அதிலிருந்து விடுபட தன் தந்தையை அழைத்து தன்னை எரிக்க
சூரியனை கொண்டு பிழிய சொல்கிறார். அது முடியாது வேண்டுமானால்
சூரியனின் ஆற்றலை முழுவதுமாக தன்னுள் ஈர்க்கும் சக்தி படைத்த
எருக்கஞ்ச்செடி இலையை கொண்டு தகிக்கலாம் என்று வழி கூறுகிறார்.
அத்தனை சக்தி படைத்தது எருக்கஞ்ச்செடி.
இதை வீட்டிலும் வளர்க்கலாம். இதன் பூவை வைத்து விநாயகருக்கும்
சிவனுக்கும் அர்ச்சனை செய்யலாம். வெள்ளெருக்கம் பூ சங்கை பஸ்மமாக்க
பயன்படுகிறது. வெள்ளெருக்கம் பட்டையை நூலுக்குப் பதில் விளக்கு
திரியாக போட்டு எரிக்க சகல பூதங்களும் விலகி ஓடும். வெள்ளெருக்கு
வடவேரில் மணிமாலை செய்யலாம். விநாயகர் செய்து வழிபடலாம்.
ஆகர்ஷணம் எட்டு வகைப்படும். இதில் தன ஆகர்ஷணம் என்னும்
பண வரவை கொடுக்கக்கூடியது இந்த வெள்ளெருக்கு விநாயகர்.
இல்லறத்திற்கும், துறவறத்திற்கும் விநாயகர் வழிபாடு சிறந்தது. சைவ
உணவு உண்டு வழிபட்டால் பலன் கூடும். விநாயகர் அகவலே ஒரு யோக
நிலை விளக்கம்தான்.
வெள்ளெருக்கு விநாயகர் வழிபாடு அளப்பரிய பலன்களை
தருகிறது. இதை அவரவர்கள் அனுபவத்தில் உணர முடியும். சொர்ண
கணபதி மந்திரம் சொல்லி,வெள்ளெருக்கு விநாயகரை வழிபட்டால்,தனம்
ஆகர்ஷணம் ஆகும்.வெள்ளெருக்கு விநாயகர் என பல இடங்களில்
விற்பனை செய்கின்றார்கள். வேர்ப்பகுதிக்குப் பதில் தண்டுப் பகுதியில்
விநாயகர் செய்துவிற்கின்றாகள்.

அதனால்அது விரைவில்உளுத்துப்போய்உதிர்ந்துவிடுகின்றது.
வெள்ளெருக்கு விநாயகரை வீட்டில் வைத்தால் இல்லம் முழுவதும்
வெள்ளெருக்கு கதிர் வீச்சின் மூலம் வெள்ளெருக்கு விநாயகர் மகிமை
உணரலாம்.

சூரியஒளி சந்திரஒளி ரகசியம்

சூரியஒளி சந்திரஒளி ரகசியம்*_ 🌹
🍁 _ஒளிகிரகமான சூரிய ஒளி நேரத்தை விட சந்திரஒளி நேரமே சிறந்தது என சித்தர்கள் சில கணக்கை வைத்து வழிபாடு செய்தார்கள்_
🍁 _பகலான சூரிய நேரம் - சிவநேரமாகவும். இரவான சந்திர நேரம் - விஷ்ணுநேரமாகவும் கருத்தில் கொண்டார்கள், விஷ்ணு நேரம் வசியநேரமாக கணக்கில் கொண்டார்கள், இதில் சூரிய உதயத்திற்கு முன்பும். சூரிய மறைவிற்கு பின்பும் உள்ள சில நாழிகைகளை பிரம்ம வேளை எனவும். உற்பத்தி வேளை எனவும் பலன் கூறினார்கள்._
🍁 _நாளடைவில் பிரம்ம முகூர்த்தம் என்றானது , இது சகல காரியத்திற்கும் வெற்றி தரும் நேரமாக உள்ளது , ஆக நாம் அறிய வேண்டியது என்னவெனில் சந்திரவேளையான இரவு பொழுது நமக்கு ஞான சக்தியை பெருக்க வழி செய்கிறது என்பதை அறிய வேண்டும்._
🔥 _ஒரு ரகசியத்தை தெரிந்து கொள்ளுங்கள் சித்த ஞானிகள். தவசிகள் பகல் உச்சிவேளையில் இளைப்பாறுவார்கள், வெளியில் அதிகம் நடக்க மாட்டார்கள் காரணம் அறிவீராக உச்சி சூரியவேளை ருத்ரவேளை எனக் கூறுவார்கள், அந்த வேளையில் நாம் சூரியைனை கண்டால் நீர்சக்தி. வாசிசக்தி. தீய சக்தியோடு வசிய சக்தியையும் எடுத்து விடும் ஆற்றல் ருத்ர சூரியனுக்கு உண்டு._
*அதனால் உச்சிவேளையில் சூரியனை காணமாட்டார்கள்.*
🍁 _ஆனால் சந்திர உச்சி வேளை (இரவு) மாற்றாக செயல்நடக்கும், சந்திரன் உடலுக்கும். மனதிற்கும் சக்தியை கொடுப்பார், அதனால்தான் சித்தர்கள் பகலில் வெளியில் வராமல் குகையிலேயே இருந்தார்கள், (கண்பார்வை பலத்தையும் இரவு விழிப்பதற்காக பயிற்சி செய்து பலப்படுத்தினார்கள்,) இரவில் வந்து பூஜை முடித்து காலை உதயசூரியனை மட்டும் பாதிகண்கள் மூடிய நிலையில் தரிசனம் செய்து குருவணக்கம் செய்திருக்கிறார்கள்_,
👉� _இவ்விடம் ஒன்றை அறிக சந்திர வேளைக்கு சக்தி இருப்பது போல் சூரியனுக்கு சக்தி இல்லையா என தவறாக எண்ணக்கூடாது ஆத்ம சக்தி பெருக்கமும், செயல்பாடும் சூரியனே செய்து கொடுப்பார் என்பதை அறிக_
🍁 _சக்தியை பெருவது இரவிலும். சக்தியை செயல்படுத்துவது பகலிலும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள், நடுநிசி சூரியனுக்கும் உண்டு, சந்திரனுக்கும் உண்டு 12 பர் 1 சூரியனுக்கும். இரவு 12 பர் 1 சந்திரனுக்கும். உச்சிவேளையாகும்_.
🍁 _இதில் சந்திர உச்சி நேரத்தை சித்தர்கள் தங்கள் யாகத்திற்கும் ஞான பயிற்சிக்கும் பயன்படுத்தினார்கள், சந்திர வேளையில் எவ்வளவு பயிற்சி செய்தாலும் நன்மையே தரும்._
🍁 _இன்னொரு ரகசியத்தையும் தெரிந்து கொள்ளுங்கள், புதிதாக மாந்திரீக சித்து பயிற்சி செய்பவர்கள் பௌர்ணமி ஒளியில் முதன் முதலில் தொடங்குவதும் இதற்குத்தான், சித்தர்களும் மலையில் அமர்ந்து தியானிப்பதும். யாகம் நிகழ்த்துவதற்கும் சந்திர ஈர்ப்பே காரணமாகும்_
🍁 _மனித உயிர்களுக்கு மனவேகத்தை உந்துதல் சக்தி . ஈர்ப்பு சக்தி இவைகளை தருவதே சந்திர ஒளி என்பதை அறிந்திருந்ததால் அந்த சந்திரவேளையை தேர்ந்தெடுத்தார்கள், வளர்பிறையை நாமும் முகூர்த்தமாக விரும்புவதும் இதற்குத்தான்._
🍁 _சந்திரவளர்ச்சியை போல் நம் வாழ்வும் வளரும் என நம்பிக்கை மட்டும் அல்ல , மேற்க்கண்ட உண்மையும் கூட, அசுபத்தை தேய்பிறையில் செய்யலாம், பரிகாரத்தையும் தேய்பிறையில் செய்யலாம்.சுபநிகழ்வை வளர்பிறையில் செய்ய சொன்னது சுபம் வளர்வதற்குத்தான், ஆக ஞானசித்தி புத்தி சந்திர வேளையில் தான் பெறலாம், பெறவும் முடியும், எனவே *மந்திர சித்துகளுக்கு இரவு பொழுது சிறந்தது* , அதற்காக சூரியனுக்கு சக்தியில்லை என தப்பு கணக்கு போடக்கூடாது , சந்திரன் சக்தி பெறுவதும். மனிதன் மற்றும் ஏனைய உயிர்கள் சக்தி பெறுவதும் சூரியனிடமிருந்துதான் என்பதே உண்மை_,
🍁 _சந்திரனும் மரமும் மற்றும் மூலிகைகளும் சூரியனிடமிருந்து பெற்ற சக்தியோடு தன் சக்தியையும் இரவில் உமிழ்வார்கள் அதை மனிதன் எளிமையாக பெறமுடியும், மனதை அடக்கி. வாசியை நிலை நிறுத்தினால் எளிமையாக பெறலாம், ஞானிகள் மரத்தடியில் வாழ்ந்த ரகசியமும் இதற்குத்தான்_
🍁 _புத்தருக்கு கூட அரச மரத்தடியில் தான் ஞானம் கிடைத்தது என்று வரலாறு ._
🍁 _சித்தர்கள் சந்திர தரிசனம் சிவனாக நினைத்து செய்ததும் இதற்குத்தான் ஒவ்வொரு பிறையும் ஒவ்வொரு தெய்வமாக பாவித்து வணங்குவதும் இதற்குத்தான், எனவே சந்திரவேளையை நிச்சயம் பயன்படுத்துங்கள்

அரிசி மாவின் மகத்துவம்!

அரிசி மாவின் மகத்துவம்! பண்ணிய ஏழு தலைமுறை பாவங்களை தீர்க்கும் அதிசயம்!!
எந்த தலைமுறையில் செய்த பாவம் என்றாலும் அது விடாமல் நம்மை திரும்ப தாக்கும் என்று எல்லோராலும் நம்பப்படுகிறது. அப்படி தெரிந்து, தெரியாமல் செய்த பாவங்கள் அனைத்தும் தீர்க்கும் அதிசயம் அரிசி மாவில் இருப்பதாக கூறப்படுகிறது. சனிக்கிழமையன்று பச்சரிசியை ஒரு பிடி கையில் அள்ளி, நன்கு பொடி செய்து சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும். பின்னர் விநாயகரை மூன்று சுற்று சுற்றி, பச்சரிசி மாவினை விநாயகரை சுற்றி போடவேண்டும். அந்த அரிசி மாவினை எறும்புகள் தூக்கிச்சென்று, மழைக்காலத்தில் சாப்பிடுவதற்காக சேமித்து வைத்துக்கொள்கின்றன.
எறும்பின் எச்சில் பட்டதும் அரிசியின் கெடும் தன்மை நீங்கிவிடும். அரிசியை சாப்பிட எறும்புகள் இரண்டரை ஆண்டுகள் எடுத்துக்கொள்ளும் என்பதால், அது வரை அந்த அரிசி கெடாமல் இருக்கும். இப்படி எறும்புகள் சாப்பிடுவதை முப்பத்து முக்கோடி தேவர்கள் பார்த்துக்கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை கிரக நிலை மாறும் என்பதால் இப்படி அடிக்கடி எறும்புகளுக்கு உணவு அளிக்க வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் பாவங்கள் அனைத்தும் நீங்கும், சனிபகவானின் தொல்லைகள் கூட நம்மை அண்டாது எனக்கூறப்படுகிறது

Monday, 10 October 2016

பட்டாம்பூச்சி

நாம் ஒவ்வொருவரும் எப்போதும் ஒரு பறவை அல்லது ஒரு பட்டாம்பூச்சி போன்ற ஒரு மன அழுத்தம் இல்லாத வாழ்க்கை உரிமை கனவு. இந்த பட்டாம்பூச்சி ஒரு நல்ல ஃபெங் சுயி சின்னமாக கருதப்படுகிறது ஏன் காரணம். அது நிறங்கள், மகிழ்ச்சி, உயரம், விமானம், மகிழ்ச்சி மற்றும் இயற்கை மற்றும் வானங்கள் நெருக்கமாக இருப்பது நிரூபிக்கிறது.
ஃபெங் சுயி பட்டாம்பூச்சி சின்னமாக மிகவும் பயனுள்ளதாக பயன்படுத்த துயரத்தில் அல்லது சில பிரச்சினைகள் எதிர்கொள்ளும் யார் காதல் பறவைகள் ஜோடிகளுக்கு உள்ளது. ஒரு பட்டாம்பூச்சி போல, உண்மை மற்றும் ஆழ்ந்த அன்பு நீங்கள் வானில் சுதந்திரமாக பறக்கும் போல் நீங்கள் உணரவைக்கும் என்று காரணம்.

பட்டாம்பூச்சி நாம் அனைத்து தெரியும் தன் சொந்த வாழ்வில் மாற்றங்களின் நிறைய வழியாக செல்கிறது. ஒரு கம்பளிப்பூச்சி, பின்னர் கம்பளிப்பூச்சி பூச்சியாக தன்னை உருமாறும் பின்னர் பூச்சியாக ஒரு வயது பட்டாம்பூச்சி போன்ற உருவாகிறது என முதல் முட்டை உருவாகிறது. எனவே ஒரு பட்டாம்பூச்சி மாற்றங்கள் நிறைய மூலம் சென்று நாம் அனைத்து தெரியும் மாற்றம் உறுதியை, முயற்சி, சவால் மற்றும் விடாமுயற்சி நிறைய தேவைப்படுகிறது. பட்டாம்பூச்சி இயல்பு உண்மைக்கு அத்தாட்சி. அந்த வரிசையில் ஒரு அழகான நபர் ஆக அல்லது ஒரு பட்டாம்பூச்சி ஒரு தொழிலாளர் நிறைய துரதிர்ஷ்டம் மற்றும் வாழ்க்கையில் மாற்றங்கள் நிறைய செல்ல வேண்டும் வேண்டும் என கவர்ச்சிகரமான இருக்க பொருட்டு. எனவே நீங்கள் உங்கள் வாழ்க்கையில் எந்த கட்டத்தில் மாற்றம் தேடும் என்றால், நீங்கள் பட்டாம்பூச்சி படங்களை சேர்க்க மற்றும் அதை நீங்கள் தேடும் மாற்றத்தை கொண்டு வர தேவையான ஆற்றல் வழங்கும்.

ஃபெங் சுயி மேலும் திருமணம் செய்து கொள்ள முயன்று வரும் ஆனால் ஒரு பொருத்தமான துணையை பெறுவது இல்லை அந்த தனிநபர்கள் பட்டாம்பூச்சி குறியீடுகளை பயன்படுத்த அறிவுறுத்துகிறது. இது ஒரு அளவிற்கு அவர்கள் உதவலாம்.

இது படைப்பாற்றல் செய்தமை குழந்தைகள் அறையில் ஒரு பட்டாம்பூச்சி சுவரொட்டி ஒரு நல்ல ஃபெங் சுயி உள்ளது. நான் ஆற்றல் இலவச ஓட்டம் மற்றும் இயற்கை வண்ணங்கள் சிறந்த பயன்பாடு சித்தரிக்கிறது.

பட்டாம்பூச்சி படங்கள் மற்றும் ஓவியங்கள் சிறந்த அது உங்கள் படுக்கையறை நேர்மறையான சி சேர்க்க வேண்டும், உங்கள் படுக்கையறை ஏற்ப அதை இன்னும் துடிப்பான மற்றும் வண்ணமயமான இருக்க செய்யும்.

பட்டாம்பூச்சி ஓவியம் அல்லது படுக்கை விரிப்பு அல்லது ஒரு அட்டை மன அழுத்தம் ஒரு நபர் கீழே ஒரு நல்ல பரிசாக விருப்பமாக உள்ளது. அழகான பட்டாம்பூச்சி பல்வேறு சாயல்களை நிச்சயமாக வாழ்கையின் மன நபர் ஓ சில நிறம் மற்றும் அழகு சேர்க்க வேண்டும், மேலும் அவர்களுக்கு என்று பிரச்சினையை வெளியே வர வலுவூட்டுவதாக அமையும்.

Sunday, 25 September 2016

மந்திரம் கால் மதி முக்கால்

மந்திரம் கால் மதி முக்கால் 


ஸ்ரீவித்தையில் நாம் பல மந்த்ரங்களை ஜபிக்கிறோம். இதில் இல்லாத மந்திரங்களே இல்லை. உடல் ரீதியாக வரும் நோய்களை அகற்ற பலவேறு மந்திரங்கள் உள்ளன. மனநோய்களுக்கும் இன்னபிற காரிய சாகயங்களுக்கும் மந்திரங்கள் உள்ளன. அந்த மந்திர உச்சாரணங்களின் வலிமையை பொறுத்து பலப்ராப்தி ஏற்படுவதையும் நாம் கண்கூடாகக் காண்கிறோம். சில இடங்களில் பலப்ராப்தி ஏற்படுவதில்லை என்பதையும் காண்கிறோம். இதற்கு ஒரு காரணம் உள்ளது,. இதை ஏன் என்று விசாரித்தால் மந்திரம் கால் மதிமுக்கால் என்பார்கள். இதற்கு என்ன அர்த்தம் என்றால் அந்த மந்திரங்களை உச்சாரணம் செய்யும் முறையே காரணம். மன ஈடுபாட்டுடன் செய்தால் பலப்ராப்தி சீக்கிரமே ஏற்பட்டுவிடுகிறது. அதாவது மந்திரம் கால்பகுதி உச்சரித்தால் அதில் முக்கால் பகுதி நமது மதியை புத்தியை செலுத்த வேண்டும். அதுதான் மந்திரம் கால் மதிமுக்கால் என்பது. அர்த்தவிசாரம் இல்லாமல் செய்தால் பலப்ராப்தி குறைவாகவே ஏற்படும். இது ஆத்ம ஞான மந்திரங்களுக்கும் பொருந்தும். பஞ்சதசாக்ஷரீயான ஸ்ரீவித்யை ஆத்ம ஞானத்திற்கே உரியது. உலகாயதமான பலன்களும் ஏற்படுகிறதே என்றால் அது அதன் பக்கவிளைவு. மருந்து சாப்பிட்டால் வியாதி குணமாவதோடு பலவிதமான பக்கவிளைவுகள் ஏற்படுவதுபோல் அக்ஞானமாகிற நோய் குணமாவதோடு உலக இன்பங்களும் ஏற்படுகின்றன. இந்த விபரீதமான சில பக்க விளைவுகள் ஏற்படாமல் இருக்கத்தான் இந்த வித்யையை ஜபிக்க சில கட்டுப்பாடுகளும் சாபவிமோசனங்களும் ஜபவிதியும் ஏற்பட்டுள்ளன. இவை ஸாதகனை உலக நினைவிலிருந்து மீட்டு தானே தன்னை அறியும் அந்த மோக்ஷ நிலையாம் பலப்ராப்தியை ஏற்படுத்துகிறது. அதனால் மூன்று கூடங்கள் அடங்கிய இந்த வித்யை முக்கால் பகுதி மதியான மனத்தாலும் புத்தியாலும் ஆராய்ந்து ஜபித்தால் மஹாவாக்யங்கள் இவனுக்கு புரிபடுகின்றன. ஜடமாக ஆயிரம் ஆவர்த்தி பண்ணுவதைவிட மதியை செலுத்தி நூறு ஆவர்த்தி செய்தால் பலன் சீக்கிரம் ஏற்படும் அல்லவா? இப்படி மதி முக்கால் பங்கு செலுத்த என்ன செய்யவேண்டும் என்றால் அதில் ஸாதகனுக்கு ஈடுபாடு ஏற்படவேண்டும். ஒரு பத்தாயிரம் ரூபாய் பணத்தை ஒருவனிடம் எண்ணச் சொல்லிக்கொடுத்தால் அதில் அவன் எவ்வளவு ஈடுபாட்டோடு ஒரு ரூபாய் கூட விடாமல் இருக்கவேண்டுமே என்ற கவலையோடு முழுமனத்துடன் எண்ணுகிறானோ அதைப்போல ஜபம் செய்யும் போது குறைந்தது பத்து ஆவர்த்தியில் ஒரு ஆவர்த்தியாவது அதன் அர்த்தத்தை மனதில் வாங்கி ஈடுபாட்டோடு செய்தால் போதும். அதன் பலனே அலாதி. நமது உடல் கூறுகள் (அனாடமி) பற்றி சாத்திரங்கள் கூறும்போது இந்த உடல் பஞ்சபூதங்களால் ஆனது என்று கூறுகின்றன. அதனால் மந்திரம் ஜபிக்கும் போது தரையில் ஆசனமிட்டு, ஆசமனம் செய்து, கால்களை மடக்கி வைத்துக்கொண்டு, வாயினால் உபாம்சுவாக கூறிக்கொண்டு மனதினால் அர்த்தத்தை விசாரித்துக்கொண்டு ஜபித்தால் அது எப்படியாகும் என்பதை பார்ககலாம்.
1. தரையில் ஆசனம் இட்டால் மண் தொடர்பு. இது பூமி தத்துவம். 
2. கால்களை மடக்கினால் உடல் சூடாகிறது. அது அக்னி தத்துவம். 
3. எதிரே நீர் வைப்பதனால் ஜல தத்துவம். 
4. வாயினால் உபாம்சுவாக கூறுவது காற்று உள்ளே புகுவதனால் வாயு தத்துவம். 5. இதற்கு மேலாக மனம் ஈடுபாடு ஆகாய தத்துவத்தை உணர்த்துகிறது. 
ஜப ஆரம்பத்திலும் முடிவிலும் பஞ்சோபசாரம் செய்வதும் இந்த பஞ்சபூத தத்துவங்கள் எப்படி நம்மை பிண்ணிப்பிணைத்து வைத்திருக்கிறது என்பதையே உணர்த்துகின்றன. இந்த ஐந்து தத்துவங்களால் ஆன இந்த ம்ருத சரீரம் மண்ணோடு மண்ணாக ஒருநாள் ஆகிவிடும். மூச்சுக்காற்று காற்றுடன் கலந்துவிடும். இப்படி ஐந்து பூதங்களிலும் நாம் கரைந்துவிடுவதுதான் இறப்பு என்பது. மனம் ஆகாய தத்துவம். அதனால் மனதில் இந்த ஜன்மாவில் ஏற்பட்ட வாசனைகள் (பதியப்பட்ட எண்ண அலைகள்) ஆகாய மார்க்கமாக சென்று இவன் வேறு ஒரு பிறவி எடுக்க வகை செய்கிறது. இதனால்தான் மனமிருந்தால் மார்க்கமுண்டு என்று கூறுகிறார்களோ? உடல் இறந்தாலும் மனம் இறப்பதில்லை. இந்த மனமும் உடலைப்போன்று இந்த ஜன்மாவிலேயே அழிந்துவிட்டால் அதற்குப்பிறகு வேறு ஒரு பிறவி கிடையாது. அதனால்தான் சினமிறக்கக் கற்றாலும் சித்தியெலாம் பெற்றாலும் மனமிறக்கக் கல்லார்க்கு வாயேன் பராபரமே என்று தாயுமானவர் பாடுகிறார். அதனால் இதை முக்கிய நோக்கமாக வைத்துக்கொண்டு மற்ற பக்க விளைவுகளைப் பற்றி கவலைப்படாமல் மந்திரம் கால் மதிமுக்கால் என்றபடி ஜபித்துவருவோமானால் பிறவி நோய் நீங்கி ஆன்ம இன்பம் கிட்டும் என்பது நிச்சயம்.