jaga flash news

Thursday, 2 September 2021

குழந்தை வளர்க்க ...

குழந்தை பிறந்த 3 வது மாதம் குழந்தைக்கு சூரியனை காண்பிக்க வேண்டும் ..நான்காவது மாதம் சந்திரனையும் ,பசுவையும் காண்பிக்க வேண்டும்...6வது மாதம் குழந்தைக்கு அன்னம் ஊட்ட வேண்டும்..அது குருவாயூராக இருந்தால் சிறப்பு.

குழந்தை படிக்க துவங்கும்போது கணபதி மந்திரங்கள்,அபிராமி அந்தாதி போன்ற சின்ன சின்ன ஸ்லோகங்களையும் சொல்லி கொடுத்து வளர்க்க வேண்டும்..குழந்தையின் முன்பு தாய் எப்போதும் குளித்து, சுத்தமாகவும்,நல்ல சிரிப்புடனும்,கலகலப்பாக பழக வேண்டும் தந்தை சுறுசுறுப்புடன் காலை கடமைகளை குழந்தைக்கு பழக்க வேண்டும்..!!

புத்தி கூர்மை, அறிவாற்றல் பெருக

புத்தி கூர்மை, அறிவாற்றல் பெருக கண்ணனை வழிபடுவோம்

கண்ணன் பிறந்த உத்திர பிரதேச மாநிலத்தில் தொழில் வளத்தில் இந்தியாவில் மூன்றாம் இடம் .கண்ணன் ஜீவ சமாதி ஆன குஜராத் மாநிலம் ஐந்தாம் இடத்தில் ஜி.டி.பியில் இருக்கிறது 

தமிழ்நாட்டில் எப்படி அறத்துடன் ஒழுக்கமுடன் நேர்மையுடன் வாழ வேண்டும் என்பதில் தான் நம் முன்னோர்கள் படிப்பினை கொடுத்தார்கள் அந்த உணர்வுதான் நம்மிடம் இருக்கிறது 

ஆனால் குஜராத்திகள் தொழிலில் மிகப்பெரும் தந்திரசாலிகள் ...பிசினஸ் செய்வதில் அசகாய சூரர்கள்..வடநாட்டினர் தமிழகத்தில் பெரும் மொத்த விறபனை குடோன்களை அமைத்து வியாபாரத்தை குவிக்கின்றனர் பங்கு சந்தையில் குஜராத்திகள் லாபம் கொழிக்க காரணம் நினைவாற்றல் மற்றும் தந்திரம் நிரைந்த புதனின் பலம் அவர்களுக்கு அதிகம் .அதற்கு காரணம் கண்ணன் சக்தி அவர்களுக்கு பரிபூரனமாக கிடைத்தது 

கடுமையான உழைப்பு மட்டுமே தொழிலில் வெற்றியை கொடுத்து விடாது அறிவாற்றலும் சாமர்த்தியமும் இணைய வேண்டும் ‘

அறிவாற்றலும் சாமர்த்தியமும் பெருக கண்ணனை தொழுவோம்...

நம் ஊரில் மன்னார்குடி ராஜகோபால் வழிபாடு சிறப்பு தரும் .

கழுதையானாலும் காலை பிடி

கம்சன் தன் தங்கை தேவகிக்கு பிறக்கும் எட்டாவது குழந்தையால் தன் உயிருக்கு ஆபத்து என தெரிந்தவுடன் கணவன் ,மனைவி இருவரையும் சிறையில் அடைத்தான்...

இவர்களுக்கு  குழந்தை பிறக்கும் சமயம், ஒரு கழுதையை சிறை வாசலில் கட்டி வைத்தான்.சிறைக்காவலர்களை அவன் நம்பவில்லை.கழுதைக்கு நுகரும் சக்தி மிக அதிகம்..குழந்தை பிறந்ததும் கத்த துவங்கி விடும்.கம்சன் வந்து கொன்று விடுவான்.இப்படி ஏழு குழந்தைகள் இறந்தன..

எட்டாவது குழந்தையாக கிருஷ்ணர் பிறக்கிறார் ..உடனே தேவகி கணவன் வசுதேவன்...தயவு செய்து கத்தி விடாதே என கழுதை காலில் விழுந்து கெஞ்சினான்....கழுதையும் கத்தவில்லை...கிருஷ்ணர் அவதாரம் நிகழ்ந்தது.

எனவேதான் காரியம் ஆகனும்னா கழுதையானாலும் காலை பிடி என்ற பழமொழி வந்தது..!!

கர்நாடகாவில் அமிர்தாபுரத்து அமிர்தேஷ்வரான கோவிலில் வெளிச்சுவரில் வசுதேவர் கழுதை காலில் விழும் சிற்பம் உள்ளது.

வணக்கம் தெரிவித்தால்

இரு கையையும் கூப்பி ஒருவருக்கு வணக்கம் தெரிவித்தால் அவரும் அதே போல கும்பிடுவார்...இந்த பழக்கம் நாம் பெருமூளை,சிறுமூளை இரண்டையும் ஒன்றிணைக்கிறது..மனம் ஒரே இடத்தில் குவிய செய்கிறது...நாம் வணங்கும்போதுதான் வணங்கப்படுகிறோம்..!!

Wednesday, 1 September 2021

சமையலில் செய்யக்கூடாதவை.

சமையலில் செய்யக்கூடாதவை. * ரசம் அதிகமாக கொதிக்ககூடாது. * காபிக்கு பால் நன்றாக காயக்கூடாது. * மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது. * கீரைகளை மூடிப்போட்டு சமைக்கக்கூடாது. * காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்கக்கூடாது. * சூடாக இருக்கும் போது, எலுமிச்சம்பழம் பிழியக்கூடாது. * தக்காளியையும், வெங்காயத்தையும் ஒன்றாக வதக்கக்கூடாது. * பிரிட்ஜில் வாழைப்பழமும், உருளைக்கிழங்கும் வைக்கக் கூடாது. * பெருங்காயம் தாளிக்கும் போது, எண்ணெய் நன்றாக காயக்கூடாது. * தேங்காய்ப்பால் சேர்த்தவுடன், குழம்பு அதிகமாக கொதிக்கக்கூடாது. * குலோப்ஜாமூன் பொரித்தெடுக்க நெய்யோ, எண்ணெயோ நன்றாக காயக்கூடாது. * குழம்போ, பொரியலோ, அடுப்பில் இருக்கும் போது கொத்தமல்லி இலையை போடக்கூடாது. #காய்கறிகளை நறுக்குவதற்கு முன், தண்ணீரில் நன்கு கழுவிய பிறகு நறுக்கவும். நறுக்குவதற்கு முன் ஊற வைப்பதோ, காய்களை நறுக்கிய பிறகு தண்ணீரில் கழுவுவதோ கூடாது. காய்கறிகளிலும் பழங்களிலும் தோலை ஒட்டித்தான் தாதுஉப்புக்களும், உயிர்ச்சத்துக்களும் நிறைந்திருக்கினறன. எனவே, முடிந்தவரை தோலுடன் சமைக்க வேண்டும். கீரை வாங்கும்போது மஞ்சள் நிறமுள்ள இலைகள் அதிகமிருந்தால் வாங்குவதைத் தவிர்க்கவும். ஓட்டைகள் மற்றும் பூச்சிகளின் முட்டைகள் உள்ள கீரைகளையும் வாங்கக்கூடாது. பழங்கள், காய்கறிகள், சிறுதானியங்களில் நார்ச்சத்துக்கள் அதிகமாக இருக்கும். எனவே, இவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும். பாலைத் திரித்து பனீராக்குவதற்கு எலுமிச்சைச் சாறு ஊற்றுவோம். அதற்கு பதில் தயிர் ஊற்றி, பாலைத் திரித்தால் பனீர் புளிக்காமல் சுவையாக ‌இருக்கும். பூரிக்கு மாவு பிசையும்போது கால் டீஸ்பூன் ரவையைச் சேர்த்துக் கொண்டால், பூரி புஸுபுஸுவென உப்பலாக இருக்கும். எலுமிச்சை சாதம் செய்யும்போது தாளித்ததும் சாற்றை ஊற்றிக் கொதிக்கவிட்டால் சாதம் கசந்து போகும். அதற்கு பதில் ஒரு கிண்ணத்தில் எலுமிச்சைச் சாறு, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கலந்துகொள்ளவும். அதில் தாளித்ததை ஊற்றிக் கலக்கிய பிறகு, சாதத்தில் சேர்த்துக் கிளறினால், சாதம் கூடுதல் சுவையுடன் இருக்கும். டிப்ஸ்... டிப்ஸ்... கீரையை வேகவிடும்போது சிறிதளவு வெண்ணெய் அல்லது எண்ணெய் சேர்த்து வேகவைத்தால் பச்சை நிறம் மாறாது; ருசியாகவும் இருக்கும். தயிர் வடை போன்றே தயிர் இட்லியும் செய்யலாம்! தேங்காய்த் துருவல், பச்சை மிளகாய், முந்திரிப்பருப்பு, கொத்தமல்லித்தழை ஆகியவற்றை அரைத்து தேவையான தயிரும், உப்பும் சேர்த்து வைக்கவும். இட்லிகளை சதுரமான துண்டுகளாக்கி, இந்தக் கலவையில் சில நிமிடங்கள் ஊறவைத்துப் பரிமாறினால்... மணம், சுவை நிறைந்ததாக இருக்கும். விருப்பப்பட்டால், கேரட் துருவல், காராபூந்தி இவற்றையும் மேலே தூவலாம். வாழைப்பூவை சமையலுக்கு பயன்படுத்தும்போது மோர் கலந்த தண்ணீரில் பொடியாக நறுக்கிப் போட்டு, பின் அதை ஜல்லி கரண்டியால் அரித்தெடுத்து இட்லி பானையில், இட்லி வேகவைப்பது போல் வேகவைத்தெடுத்தால், பூ கறுக்காமல் இருக்கும். தக்காளி சூப் நீர்த்துப் போய்விட்டால் மாவு கரைத்து விடுவதற்கு பதில், வெந்த உருளைக்கிழங்கு ஒன்றை மசித்து சேர்த்தால் ருசியும் கூடும்; சத்தும் அதிகம் கிடைக்கும். தொண்டை கட்டிக்கொண்டால்... கற்பூரவல்லி சாற்றுடன் பனங்கற்கண்டு சேர்த்து பருகினால் சரியாகிவிடும். அதிக அளவு பாலாடை தேவைப்படுகிறவர்கள் கொதித்து ஆறிய பாலை மூடாமல் ஃப்ரிட்ஜில் வைத்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே அதிக அளவு பாலாடை தோன்றிவிடும். கறிவேப்பிலை, கொத்தமல்லியை ஃப்ரிட்ஜில் வைக்கும்போது மஸ்லின் துணியில் சுற்றி வைத்தால், நிறம் மாறாமல் பச்சைப்பசேலென இருக்கும். துவரம்பருப்புடன் இரண்டு மஞ்சள்பூசணித் துண்டுகள் (அ) சர்க்கரை வள்ளிக் கிழங்கு துண்டுகளை சேர்த்து வேகவைத்து, மசித்து, சாம்பாரில் சேர்த்தால்... சாம்பாரும் ருசிக்கும்; துவரம்பருப்பின் அளவையும் குறைத்துக்கொள்ளலாம். கேரட் அல்வா கிளறும்போது பால் ஊற்றுவதற்குப் பதிலாக பால்கோவா போட்டுக் கிளறி, ஏதாவது ஒரு எசென்ஸ் சில துளிகள் சேருங்கள்... பிரமாதமான சுவையில் இருக்கும். வடை தட்டும்போது உள்ளே ஒரு பனீர் துண்டை வைத்து மாவால் மூடி எண்ணெயில் போட்டுப் பொரித்து எடுத்தால், வடை வித்தியாசமான ருசியுடன் இருக்கும். பாகற்காய் குழம்பு செய்யும்போது, நாலைந்து துண்டு மாங்காய் சேர்த்து வைத்துப் பாருங்கள்... பாகற்காயின் கசப்பு தெரியாது; ருசியும் கூடும். சிறிதளவு இஞ்சியோடு மிளகு, தேங்காய்த் துருவல், பேரீச்சம்பழம், உப்பு சேர்த்து அரைத்து, தயிரில் கலந்தால், சூப்பர் சுவையில் பச்சடி தயார். குலாப் ஜாமூன் ஜீரா மிகுந்துவிட்டால், அதில் மைதாவை சிறிது சிறிதாக சேர்த்துப் பிசைந்து சப்பாத்தி போல் திரட்டி, சதுர துண்டுகளாக வெட்டி. எண்ணெயில் பொரித்தால்... சுவையான பிஸ்கட் ரெடி! இதை மிக்ஸரிலும் சேர்க்கலாம். ஜவ்வரிசி, ரவை இரண்டையும் சம அளவு எடுத்து வறுத்து, பால் சேர்த்து வேகவிட்டு, வெல்லப்பாகு சேர்த்து, நெய்விட்டுக் கிளறினால், வித்தியாசமான சுவையுடன் சர்க்கரைப் பொங்கல் ரெடி! வற்றல் குழம்பு செய்யும்போது, கடைசியில் வெங்காய வடகத்தை வறுத்துப் பொடித்துப் போட்டு கிண்டிவிட்டால், குழம்பு கனஜோரா இருக்கும்! முருங்கை இலைக் காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதை இடிக்கவும். இஞ்சி, மிளகு, சீரகம், பூண்டு ஆகியவற்றை இடித்து அதனுடன் சேர்க்கவும். இதில் தண்ணீர், சிறிது உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு, பாதியாக்கி வடிகட்டி, சூப் போல குடித்து வந்தால்... உடல் வலி குணமாகும். மல்லியை (தனியா) சிறிதளவு நெய் விட்டு வறுத்துப் பொடி செய்து... சாம்பார் செய்து முடித்தவுடன் இந்தப் பொடியை போட்டு மூடிவைத்தால், சாம்பார் நல்ல மணத்துடன் இருக்கும். எந்தவிதமான சூப் செய்தாலும், சோள மாவு இல்லாவிட்டால், ஒரு டீஸ்பூன் அவலை வறுத்து, பொடித்து, சலித்து, அதில் சேர்த்துக் கொதிக்கவிட்டால்... சூப் கெட்டியாக, ருசியாக இருக்கும். பீட்ரூட்டையும், ரோஜா இதழையும் அரைத்து அடிக்கடி உதடுகளில் தடவிவந்தால்... நாளடைவில் உதடுகள் நல்ல நிறமாகும். ஈ, கொசு வராமல் தடுக்க சில வழிகள்... புதினா இலையை கசக்கி அறையின் ஒரு மூலையில் வைக்கலாம்; காய்ந்த கறிவேப்பிலையைக் கொளுத்தலாம்; ஒரு ஸ்பூன் காபி பொடியை வாணலியில் போட்டு சூடுபடுத்தலாம். குப்பைமேனி இலையோடு மஞ்சள், கல் உப்பு சேர்த்து அரைத்து தோலில் அரிப்பு, அலர்ஜி, சிரங்கு உள்ள இடங்களில் தடவி வந்தால்... விரைவில் குணமாகும். கற்பூரம், பச்சை கற்பூரம், நாப்தலின் உருண்டை, மிளகு, உப்பு இவற்றை பொடித்து சிறு துணியில் கட்டி அலமாரி, பீரோவில் வைத்துவிட்டால், பூச்சி வராது; நறுமணமாக இருக்கும். சப்பாத்தி தேய்க்கும்போது, தொட்டுக்கொள்ள கார்ன்ஃப்ளார் (சோள மாவு) பயன்படுத்தினால் நன்றாக வரும்; மாவும் கொஞ்ச மாகத்தான் செலவழியும். இட்லிமாவு அரைத்தபின் ஒரு வெற்றிலையைக் கிள்ளிப்போட்டு வைத்தால், மாவு பொங்கி வழியாது.

Sunday, 29 August 2021

Excellent information about Bhagwan Shri Krishna

Excellent information about Bhagwan Shri Krishna

1) Krishna was born *5252 years  ago* 
2) Date of *Birth* : *18 th July,3228 B.C*
3) Month : *Shravan*
4) Day :  *Ashtami*
5) Nakshatra : *Rohini*
6) Day : *Wednesday*
7) Time : *00:00 A.M.*
 Shri Krishna *lived 125 years, 08 months & 07 days.*
9) Date of *Death* : *18th February 3102BC.*
10) When Krishna was *89 years old* ; the mega war *(Kurukshetra war)* took place. 
11) He died *36 years after the Kurukshetra* war.
12) Kurukshetra War was *started on Mrigashira Shukla Ekadashi, BC 3139. i.e "8th December 3139BC" and ended on "25th December, 3139BC".*  
12) There was a *Solar eclipse between "3p.m to 5p.m on 21st December, 3139BC" ; cause of Jayadrath's death.*
13) Bhishma died on *2nd February,(First Ekadasi of the Uttarayana), in 3138 B.C.*

14) Krishna  is worshipped as:
(a)Krishna *Kanhaiyya* : *Mathura*
(b) *Jagannath*:- In *Odisha*
(c) *Vithoba*:- In *Maharashtra*
(d) *Srinath*:  In *Rajasthan*
(e) *Dwarakadheesh*: In *Gujarat*
(f) *Ranchhod*: In *Gujarat*
(g) *Krishna* : *Udupi in Karnataka*
h) *Guruvayurappan in Kerala*

15) *Bilological Father*: *Vasudeva*
16) *Biological Mother*: *Devaki*
17) *Adopted Father*:- *Nanda*
18) *Adopted Mother*: *Yashoda*
19 *Elder Brother*: *Balaram*
20) *Sister*: *Subhadra*
21) *Birth Place*: *Mathura*
22) *Wives*: *Rukmini, Satyabhama, Jambavati, Kalindi, Mitravinda, Nagnajiti, Bhadra, Lakshmana*
23) Krishna is reported to have *Killed only 4 people* in his life time. 
(i) *Chanoora* ; the Wrestler
(ii) *Kansa* ; his maternal uncle
(iii) & (iv) *Shishupaala and Dantavakra* ; his cousins. 
24) Life was not fair to him at all. His *mother* was from *Ugra clan*, and *Father* from *Yadava clan,* inter-racial marriage. 
25) He was *born dark skinned.* He was not named at all throughout his life. The whole village of Gokul started calling him the black one ; *Kanha*. He was ridiculed and teased for being black, short and adopted too. His childhood was wrought with life threatening situations.
26) *'Drought' and "threat of wild wolves" made them shift from 'Gokul' to 'Vrindavan' at the age 9.*
27) He stayed in Vrindavan *till 10 years and 8 months*. He killed his own uncle at the age of  10 years and 8 months at Mathura.He then released  his biological mother and father. 
28) He *never returned to Vrindavan ever again.*
29) He had to *migrate to Dwaraka from Mathura due to threat of a Sindhu King ;  Kala Yaavana.*
30) He *defeated 'Jarasandha' with the help of 'Vainatheya' Tribes on Gomantaka hill (now Goa).*
31) He *rebuilt Dwaraka*. 
32) He then *left to Sandipani's Ashram in Ujjain* to start his schooling at age 16~18. 
33) He had to *fight the pirates from Afrika and rescue his teachers son ;  Punardatta*;  who *was kidnapped near Prabhasa* ; a sea port in Gujarat. 
34) After his education, he came to know about his cousins fate of Vanvas. He came to their rescue in ''Wax house'' and later his cousins got married to *Draupadi.* His role was immense in this saga. 
35) Then, he helped his cousins  establish Indraprastha and their Kingdom.

36) He *saved Draupadi from embarrassment.*

37) He *stood by his cousins during their exile.*
38) He stood by them and *made them win the Kurushetra war.*

39) He *saw his cherished city, Dwaraka washed away.* 
40) He was *killed by a hunter (Jara by name)* in nearby forest. 
41) He never did any miracles. His life was not a successful one. There was not a single moment when he was at peace throughout his life. At every turn, he had challenges and even more bigger challenges. 
42) He *faced everything and everyone with a sense of responsibility and yet remained unattached.*

43)  He is the *only person, who knew the past and future ; yet he lived at that present moment always.*

44) He and his life is truly *an example for every human being.*🌷🙏🏻

*Jai  Shri Krishna*🙏

குழந்தை கடமைகளை

குழந்தை பிறந்த 3 வது மாதம் குழந்தைக்கு சூரியனை காண்பிக்க வேண்டும் ..நான்காவது மாதம் சந்திரனையும் ,பசுவையும் காண்பிக்க வேண்டும்...6வது மாதம் குழந்தைக்கு அன்னம் ஊட்ட வேண்டும்..அது குருவாயூராக இருந்தால் சிறப்பு.

குழந்தை படிக்க துவங்கும்போது கணபதி மந்திரங்கள்,அபிராமி அந்தாதி போன்ற சின்ன சின்ன ஸ்லோகங்களையும் சொல்லி கொடுத்து வளர்க்க வேண்டும்..குழந்தையின் முன்பு தாய் எப்போதும் குளித்து, சுத்தமாகவும்,நல்ல சிரிப்புடனும்,கலகலப்பாக பழக வேண்டும் தந்தை சுறுசுறுப்புடன் காலை கடமைகளை குழந்தைக்கு பழக்க வேண்டும்..!!

Saturday, 28 August 2021

திருநீற்றுப் பச்சிலையின் மருத்துவ பயன்கள்

பூக்களுக்கு மணம் உண்டு என்பது அனைவருக்கும் தெரிந்த ஓன்றுதான். ஆனால், சில செடிகளில் இலைகளும் மணம் வீசுவதுண்டு. அப்படியொரு சிறப்புப் பெற்றது திருநீற்றுப் பச்சிலை. இந்தச் செடிகள் மலைப்பிரதேசங்களில் அதிகம் வளர்வதுண்டு. தமிழ் நாட்டில் சில கோயில்களில் வளர்த்து வருகின்றனர். இதன் பயன்களைப் பற்றி பார்ப்போம்!

* நறுமணம் வீசும் இந்தச் செடியின் இலைகளை அரைத்துப் பூசினால் கட்டிகள் கரையும். வெறுமனே இலையை முகர்ந்து பார்த்தால் தலைவலி, இதயநடுக்கம்,தூக்கமின்மை சரியாவதுடன், மூக்கில் வரும் வியாதிகள் சரியாகும்.
* இலைச்சாறுடன் சம அளவு தேன் கலந்து சாப்பிட்டால் மார்புவலி, இருமல், வயிற்று வாயு பிரச்னைகள் சரியாகும்.
* திருநீற்றுப்பச்சிலையின் இலையை மென்று சாப்பிட்டால் வாய்வேக்காடு சரியாகும். தேள் கடிப்பதால் வலி ஏற்படும்போது அதன் கடிவாயில் திருநீற்றுப்பச்சிலையை கசக்கி பூசினால் வலி குறையும்.
* காது வலி, காதில் சீழ் வடிதல் போன்ற பிரச்னைகளுக்கு இலைச்சாறு சில சொட்டுகள் விட்டால் நிவாரணம் கிடைக்கும்.
* முகப்பருவை விரட்ட திருநீற்றுப்பச்சிலை சாறுடன் வசம்பு சேர்த்து அரைத்துப் பூசினால் பலன் கிடைக்கும்.
* கர்ப்பிணிப் பெண்கள் பச்சிலைச்சாறு சாப்பிட்டால் பிரசவத்தின்போதுஏற்படக்கூடிய கடுமையான வலிகள் குறையும்.
அதேபோல் இதன் விதையை பிரசவத்துக்குப்பிறகு சாப்பிட்டு வந்தால் பிரசவத்தால் ஏற்பட்ட வலி குறையும்.
* பச்சிலை விதையை கசாயம் செய்து குடித்து வந்தால்சுறுசுறுப்பு கிடைப்பதோடு மூத்திரக்கோளாறுகள் சரியாகும்.
* திருநீற்றுப்பச்சிலை விதையை சப்ஜா விதை என்பார்கள். இதில் செய்த சர்பத்தை குடித்து வந்தால் சீதபேதி, வெள்ளை, வெட்டைச்சூடு, இருமல் சரியாகும்.
* 5 கிராம் விதையை 100 மில்லி தண்ணியில் 3 மணி நேரம் ஊற வைத்து குடித்துவந்தால்வயிற்றுக் கடுப்பு, ரத்தக்கழிச்சல்,நீர் எரிச்சல், வெட்டை போன்றவை சரியாகும்

Thursday, 26 August 2021

அப்படி இந்த 'நாலு' க்கு என்னதாங்க ஸ்பெஷல்?????

அப்படி இந்த 'நாலு' க்கு  என்னதாங்க ஸ்பெஷல்?????

1. 'நாலு' பேரு 'நாலு' விதமா பேசுவாங்க.

2. 'நாலு' பேருக்கு நல்லது நடக்கும்னா எதுவும் தப்பில்ல. 

3. 'நாலு' காசு சம்பாதிக்கவாது படிக்கணும்ல??

4. 'நாலு' ஊரு சுற்றினாதான் உலகம் புரியும் 

5. அவரு 'நாலு'ம் தெரிஞ்சவரு,  'நாலு'ம் புரிஞ்சவரு. 

6. 'நாலு' வார்த்த நறுக்குன்னு நல்லா கேக்கணும்.

ஏன் இந்த 'நாலு' மட்டும் இவ்ளோ ஸ்பெஷல்...

சங்க இலக்கியத்தில் பதினெண்கீழ்கணக்கு நூல்களில்,பெயருடன் நான்கு சேர்ந்து வரும். சில நாலு,நாற்பது மற்றும் எட்டுத்தொகையில் நானூறு,பிரபந்தத்தில் நாலாயிரம்  என  நான்கு வரும்.
நாலடியார், நான்மணிக்கடிகை,இன்னா நாற்பது,இனியவை நாற்பது
அக நானூறு,புற நானூறு,நாலாயிர திவ்ய பிரபந்தம் ...

"பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நாலும் கலந்து உனக்கு நான் தருவேன்"
ஔவையின் நால்வழி நீதி நூலில் கடவுள் வாழ்த்து பாடல்.

நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி...இதில் நாலு என்பது.. நாலடியார்..

"காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தமை நன்நெறிக்கு உய்ப்பது
"வேதம் நான்கினும்" மெய்ப்பொருளாவது
நாதன் நாமம் நமச்சிவாயவே"

நான்மறை...என்பது வேதங்கள் நான்கு.

சைவ நெறியைப் பரப்பிய நாயன்மார்களில் முதன்மையானவர்கள் நான்கு பேர்.
அப்பர்,சம்பந்தர்,சுந்தரர்,மாணிக்க வாசகர்.இவர்களை நால்வர் என அழைக்கிறோம்.

வேதங்களை நான்காகப் பகுத்த வேத வியாசர் ,அவற்றை  நாலு ரிஷிக்களிடம்  பரப்பும் பொறுப்பை ஒப்படைத்தார்.அவர்கள்
ருக் – பைலர், யஜூர் — ஜைமினி, சாம — வைசம்பாயன, — அதர்வண — சுமந்து.

தசரதனுக்கு நான்கு பிள்ளைகள்.

நான்கு புருஷார்த்தங்கள்..அவை
தர்ம, அர்த்த, காம, மோட்சம்.

மனிதன் பிறப்பு முதல் இறப்பு வரை
கடக்க வேண்டிய நிலைகளும் நான்கு.
பிரம்மசர்யம் , கிருஹஸ்தாச்ரமம்  வானப்ரஸ்தம், சந்யாசம் 

பிரம்மாவின் மானஸ புத்திரர்கள் நான்கு பேர்.சநகர், சநாதனர், சநந்தனர், சனத் குமாரர்.

நான்கு வர்ணங்கள்..பிராமண, ஷத்ரிய, வைஸ்ய, சூத்ர

பிரம்மாவுக்கு நான்கு தலைகள்.சதுர்முகன் என்ற பெயர் பிரம்மாவுக்கு.

ஆதிசங்கரர் பாரத நாட்டின் நான்கு மூலைகளிலும் நான்கு மடங்கள் நிறுவி,நான்கு சீடர்களை நியமித்தார்.

அக்னிக்கு கம்பீரா,யமலா,மஹதி,பஞ்சமி என நான்கு வடிவங்கள்.

திசைகள் நான்கு

ஹரித்வார், அலஹாபாத் (பிரயாகை, த்ரிவேணி சங்கமம்), நாசிக், உஜ்ஜையினி என நான்கு இடங்களில் கும்ப மேளா நடைபெறும்.

ரத, கஜ, துரக, பதாதி (தேர், யானை, குதிரை, காலாட் படைகள்..என நால் வகைப் படைகள்.

அஹம் பிரம்மாஸ்மி, தத்வம் அஸி, பிரக்ஞானம் பிரம்ம, அயமாத்ம ப்ரம்ம..உபநிஷத்தில் கூறப்படும் நாலு மஹா வாக்யங்கள்.

வெல்ல முடியாத நாலு..
நித்ரா..ஸ்வப்ன..ஸ்த்ரீ..காம
அக்னி..இந்தன..கரா..பாண

கனவு காண்பது தூக்கத்தை நிறைவு செய்யாது
பெண்களுக்கு ஆசை நிறைவு செய்யாது
தீயை விறகு நிறைவு செய்யாது
குடிகாரனை குடி நிறைவு செய்யாது

ந ஸ்வப்னேன ஜயேத் நித்ராம் ந காமேன ஜயேத்ஸ்திரியஹ
ந இந்தனேன ஜயேதக்னீம் ந பானேன கராம் ஜயேத்..விதுர நீதி

இதையே ஹிதோபதேசம்
அக்னியை விறகு அணைக்காது
சமுத்திரத்தை ஆறுகள் நிறைக்காது
யமனை எல்லா உயிர்களும் சேர்ந்தாலும் வெல்ல முடியாது


யுகங்களும்..கிரதம், திரேதம், துவாபரம், கலி என நான்கு

அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு..பெண்டிரின் நால்வகை குணங்கள்

சிவராத்ரியில் நாலு கால பூஜை நடக்கும்

நான்கு வேதங்களும் கற்றவர்களை சதுர்வேதி என்பார்கள்.

நான்கு என்ற எண் சிறப்புக்கள் கொண்டிருந்தாலும்.. , 

"நாலு பேரை போல வாழ்வில் நல்லா இருக்கனும்.."

" செத்தாலும், 
நல்லதுக்கும்,
கெட்டதுக்கும் நான்கு பேர் வேண்டும்" 

என்ற கருத்தாக்கத்தையும் கொண்டுள்ளது.

நாலு பத்தி எழுதினத ஒரு நாலு பேராவது படிச்சா சரி...படிப்பீங்களா?😂

Wednesday, 25 August 2021

*தமிழ் எண்கள்*

  
*தமிழ் எண்கள்*
1 - க, 2 - உ, 3 - ங, 4 - ச, 5 - ரு, 6 - சு, 7 - எ, 8 - அ, 9 - கூ, 10 - கo,
11 - கக, 12 - கஉ, 13 - கங, 14 - கச, 15 - கரு, 16 - கசு, 17 - கஎ, 18 - கஅ, 19 - ககூ, 20 - உo
21 - உக, 22 - உஉ, 23 - உங, 24 - உச, 25 - உரு, 26 - உசு, 27 - உஎ, 28 - உஅ, 29 - உகூ, 30 - ஙo
31 - ஙக, 32 - ஙஉ, 33 - ஙங, 34 - ஙச, 35 - ஙரு, 36 - ஙசு, 37 - ஙஎ, 38 - ஙஅ, 39 - ஙகூ, 40 - சo,
41 - சக, 42 - சஉ, 43 - சங, 44 - சச, 45 - சரு, 46 - சசு, 47 - சஎ, 48 - சஅ, 49 - சகூ, 50 - ருo
51 - ருக, 52 - ருஉ, 53 - ருங, 54 - ருச, 55 - ருரு, 56 - ருஎ, 57 - ருஎ, 58 - ருஎ, 59 - ருகூ, 60 - சுo
61 - சுக, 62 - சுஉ, 63 - சுங, 64 - சுச, 65 - சுரு, 66 - சுசு, 67 - சுஎ, 68 - சுஅ, 69 - சுகூ, 70 - எo
71 - எக, 72 - எஉ, 73 - எங, 74 - ஏசு, 75 - எரு, 76 - எசு, 77 - எஎ, 78 - எஅ, 79 - எகூ, 80 - அo
81 - அக, 82 - அஉ, 83 - அங, 84 - அச, 85 - அரு, 86 - அசு, 87 - அஎ, 88 - அஅ, 89 - அகூ, 90 - கூo
91 - கூக, 92 - கூஉ, 93- கூங, 94 - கூச, 95 - கூரு, 96 - கூசு, 97 - கூஎ, 98 - கூஅ, 99 - கூகூ, 100 - கoo
101 - கoக, 102- கoஉ, 103 - கoங, 104 - கoச, 105 - கoரு, 106 - கoசு, 107 - கoஎ, 108 - கoஅ, 109 - கoகூ, 110 - ககo
111 - ககக, 112- ககஉ, 113 - ககங, 114 - ககச, 115 - ககரு, 116 - ககசு, 117 - ககஎ, 118 - ககஅ, 119 - கககூ, 120 - கஉo
121 - கஉக, 122- கஉஉ, 123 - கஉங, 124 - கஉச, 125 - கஉரு, 126 -கஉசு, 127 - கஉஎ, 128 - கஉஅ, 129 - கஉகூ, 130 - கஙo
131 - கஙக, 132- கஙஉ, 133 - கஙங, 134 - கஙச, 135 - கஙரு, 136 - கஙசு, 137 - கஙஎ, 138 - கஙஅ, 139 - கஙகூ, 140 - கசo
141 - கசக, 142- கசஉ, 143 - கசங, 144 - கசச, 145 - கசரு, 146 - கசசு, 147 - கசஎ, 148 - கசஅ, 149 - கசகூ, 150 - கருo
151 - கருக, 152- கருஉ, 153 - கருச, 154 - கருச, 155 - கருரு, 156 - கருஎ, 157 - கருஎ, 158 - கருஅ, 159 - கருகூ, 160 - கசுo
161 - கசுக, 162- கசுஉ, 163 - கசுங, 164 - கசுச, 165 - கசுரு, 166 - கசுசு, 167 - கசுஎ, 168 - கசுஅ, 169 - கசுகூ, 170 - கஎo
171 - கஎக, 172- கஎஉ, 173 - கஎங, 174 - கஏசு, 175 - கஎரு, 176 - கஎசு, 177 - கஎஎ, 178 - கஎஅ, 179 - கஎகூ, 180 - கஅo
181 - கஅக, 182- கஅஉ, 183 - கஅங, 184 - கஅச, 185 - கஅரு, 186 - கஅசு, 187 - கஅஎ, 188 - கஅஅ, 189 - கஅகூ, 190 - ககூo
191 - ககூக, 192- ககூஉ, 193 - ககூங, 194 - ககூச, 195 - ககூரு, 196 - ககூசு, 197 - ககூஎ, 198 - ககூஅ, 199 - ககூகூ, 200 - உoo