jaga flash news

Thursday, 30 September 2021

கோபம் எதனால் வருகிறத

கோபம் எதனால் வருகிறது என்று ஒரு ஆராய்ச்சி நடத்தப்பட்டது.● அதில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பதில் தந்திருந்தார்கள். ●ஒருவர் கூறினார், நான் பணிபுரியும் அலுவலகத்தில் நான் கூறுவதை யாரும் கேட்பதில்லை. நான் ஒன்று சொன்னால், அவர்கள் ஒன்று செய்கிறார்கள். இதனால் கோபம் உடனே வந்துடுது என்றார். ●மற்றொருவர், யாராவது என்னை தவறா சொல்லிட்டாங்கன்னா பட்டுன்னு கோபம் வந்துடும் என்றார். ●அடுத்தவர், நான் செய்யாததை செய்த மாதிரி சொல்லிட்டாங்கன்னா அவ்வளவுதான் அவங்க என்கிறார். ●இன்னொருவர், சொன்னதை திரும்ப திரும்ப சொன்னா, நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாதுன்னு சொல்றார். ●வேறொருவரோ, நினைச்சது கிடைக்கலைன்னா சும்மா விடமாட்டேனுட்டார். இப்படி ஒவ்வொருவரும் தங்களுக்கு எதனால் கோபம் வருகிறது என்று கருத்து தெரிவித்தனர். இப்படி அடுத்தவர்கள் ஏதாவது செய்தால் இவர்களுக்கு கோபம் ஏற்படுமாம். அது சரி... நீங்களே ஏதாவது தவறு செய்தால் உங்கள் மீது கோபப்படுவீர்களா? என்றதற்கு, அது எப்படீங்க நம்ம மேலேயே நம்ம கோபப்படுவோமா என்றனர். கோபம்னா என்ன? கோபம் என்பது அடுத்தவர்கள் செய்யும் சிறு சிறு தவறுகளுக்கு நமக்கு நாமே கொடுத்துக்கொள்ளும் தண்டனைக்கு பெயர் தாங்க கோபம். அதுமட்டுமல்லாமல் நாம் நம் கோபத்தை குறைக்க அடுத்தவர்களிடம் இதே கோபத்துடன் செயல்பட்டால் நட்பு நசுங்கி விடும். உறவு அறுந்து போகும். உரிமை ஊஞ்சலாடும். நமக்கு நாமே கொடுத்துக்கொள்ளும் தண்டனை என்ன? சவுக்கு எடுத்து சுளீர்...சுளீர்ன்னு நம்மளையே அடித்துக்கொண்டால் மட்டும் அதுக்கு பெயர் தண்டனை இல்லீங்க. கோபம் ஏற்படுவதால் பதட்டம்( டென்ஷன்) உண்டாகிறது. இதனால் நமது உடல், மனம் இரண்டும் பாதிக்கப்படுகிறது. இந்த பாதிப்பால் நரம்புத்தளர்ச்சி, ரத்த அழுத்தம், மன உளைச்சல், நடுக்கம் போன்ற உபாதைகள் உண்டாகிறது. இதை தடுக்க டாக்டரிடம் சென்று மாத்திரை மருந்து சாப்பிடுவோம். இதே நிலை நீடித்தால் ஒரு மன நோயாளி போல் ஆகி விடுவோம். இது பொய்யல்ல. சத்தியமான உண்மை இது. அன்பின் வேறொரு விதமான வெளிப்பாடுதான் கோபம். முதல்ல அடுத்தவங்களுக்கு கோபம் வர்ற மாதிரி நீங்க நடக்காதீங்க. அடுத்தவங்கள குறை சொல்லாதீங்க. எதையும் அடுத்தவர்களிடம் எதிர்பார்க்காதீங்க. அவங்க உங்க மேல கோபப்பட்டா முதல்ல சாரின்னு மன்னிப்பு கேளுங்க... ஈகோ பார்க்காதீங்க. நீங்க கோபப்படுற மாதிரி அடுத்தவங்க நடந்து கொள்கிறார்கள் என்று வைத்து கொள்வோமே. முதல்ல பிளீஸ் என்னை கொஞ்சம் யோசிக்க விடுங்கன்னு அமைதியாயிடுங்க. யார்மேல தவறுன்னு சிந்தியுங்க... கொஞ்ச நேரத்தில் எல்லாம் சரியாயிடும். அப்படி இல்லைன்னா அந்த இடத்தை விட்டு நகருங்க... தனியா உக்காந்து யோசிங்க. அடிக்கடி யாரிடம் கோபப்படுகிறீர்களோ அவர்களிடம் மனம் விட்டு சந்தோஷமாக சிரித்து பேசுங்கள். அடுத்தவர்களே தவறு செய்திருந்தால் கூட நீங்க நல்லது பண்ணுங்க. அடுத்தவங்க என்ன செஞ்சுட்டாங்கன்னு கோபப்படுறோம். என்ன நடந்துருச்சு பெருசா. என்னத்த இழந்துட்டோம். மரணம் ஒன்று தான் மாபெரும் இழப்பு. அதை தவிர வேறொன்றுமே இழப்பு கிடையாது. எல்லாத்தையும் சமாளிச்சுடலாம்ங்ற முடிவுக்கு வாங்க. வீட்டு பெரியவர்கள் திட்டும் போது கவனித்திருப்பீர்கள் என்னத்த பெரிசா சாதித்து கிழிச்சன்னு. நாட்காட்டியில் உள்ள தேதி பேப்பரைக் கிழிச்சால் மட்டும் போதாது. ஒவ்வொரு நாளும் தூங்கச் செல்லும் முன் இன்றைக்கு என்ன சாதிச்சோம்னு யோசிச்சிட்டு தூங்குங்க. அடுத்தவர்களுக்கு நல்லது பண்ணாட்டியும் கோபம்ங்ற கொடிய நோயைப் பரப்பாமல் இருந்தாலே, நீங்க அவங்களுக்கு நல்லது செஞ்ச மாதிரிதான். நமக்கோ ஆறு அறிவை ஆண்டவன் கொடுத்துள்ளான். இதில் ஆறாவது அறிவை அப்பப்ப யோசிக்கிறதுக்கு யூஸ் பண்ணுங்க... கோபம் வரவே வராது. நாமெல்லாம் சாதிக்கப்பிறந்தவர்கள். கோபப்படாமல் இருப்பதே ஒரு மாபெரும் சாதனை தான். வாழ்வது இந்த பூமியில் ஒரு முறை தான். அதை கோபப்படாமல் சிறந்த முறையில் வாழ்ந்து சாதிப்போம்.. கோபம் வராதிருக்க யோசிப்போம்...

Wednesday, 29 September 2021

கெட்ட கொழுப்பை கரைத்து எடையை குறைக்கச் செய்யும் கருஞ்சீரக டீ!

நீரிழிவு, ரத்த அழுத்தம், இதய நோய்கள் என பல உடல் நலப் பிரச்சினைகளுக்கு பெரும்பாலும் காரணமாக இருப்பது இந்த உடல் பருமன் பிரச்சினை தான். உடலில் கொழுப்பு எதுவும் சேராமல் பார்த்துக் கொள்வது உடல் பருமனை மட்டுமல்லாது அதனால் ஏற்படும் பிற விளைவுகளில் இருந்தும் தவிர்க்க உதவும். அதற்கு கருஞ்சீரகம் அதிக அளவில உதவுகிறது. கருஞ்சீரகத்தில் தினமும் சிறிதளவு உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் நம் உடலில் தோன்றும் ஏராளமான பிரச்சினைகளைத் தீர்க்க முடியும். ரத்த சர்க்கரை அளவைக் குறைப்பது, தலைமுடி உதிர்தலைத் தடுப்பது, சருமப் பிரச்சினை, உடல் எடையைக் குறைப்பது, சிறுநீரகப் பிரச்சினை, இதய நோய்கள் வராமல் தடுப்பது, உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவது என பல பிரச்சினைகளுக்கும் கருஞ்சீரகம் தீர்வாக அமையும். அதனால் கருஞ்சீரகத்தைப் பொடியாகவோ அல்லது சூப்பில் கலந்தோ குடிக்கலாம். உடலில் அகட்ட கொழுப்புகளைத் தேங்க விடாமல் உடல் எடையையும் தொப்பையையும் குறைக்க உதவும். ​கருஞ்சீரக டீ தேவையான பொருள்கள் கருஞ்சீரகம் - 2 ஸ்பூன் புதினா - 1 கைப்பிடியளவு இஞ்சி - 1 துண்டு தேன்- 2 ஸ்பூன் செய்முறை முதலில் ஒரு பாத்திரத்தில் அரை லிட்டர் தண்ணீர் ஊற்றிக் கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் நன்கு கொதித்ததும் அதில் கருஞ்சீரகத்தைப் போட்டு நன்கு கொதிக்க வையுங்கள். கருஞ்சீரகம் நன்கு கொதித்து அதன் சாறு தண்ணீரில் இறங்க ஆரம்பித்ததும் அதில் இஞ்சியைத் தட்டி சேர்க்க வேண்டும். இஞ்சியும் கருஞ்சீரகமும் சேர்த்து கொதித்து வரும்போது கழுவி சுத்தம் செய்து வைத்திருந்த புதினாவை அதில் சேர்த்து விடுங்கள். புதினா சேர்த்ததும் கொதிக்க வைக்கத் தேவையில்லை.

Tuesday, 28 September 2021

திருப்பதி சென்று வந்தால் நிச்சயம் திருப்பம் கிடைக்குமா கிடைக்காதா? விஞ்ஞான பூர்வமான ஆதாரத்துடனான பதிவு!

🤲 திருப்பதி சென்று வந்தால் நிச்சயம் திருப்பம் கிடைக்குமா கிடைக்காதா? விஞ்ஞான பூர்வமான ஆதாரத்துடனான பதிவு!

🤲 யாரெல்லாம் திருப்பதி சென்றால் அதிக பலன்கள் பெற முடியும் எந்த ராசி காரர்களுக்கு நன்மை செய்யும் என்பதை இந்தப்பதிவில் தெளிவாக பார்க்கலாம் வாருங்கள்...

🤲 இந்தியாவில் சந்திரன் தாக்கம் அதிக அளவில் உள்ள இடம் திருப்பதி ஆகும்.

🤲 சந்திரன் சக்தி மிகுந்த கோயில் என்பதால் மனம் நிம்மதி உண்டாகிறது.

🤲 திருமலை தரிசனம் மனதுக்கு இனிமையான அனுபவமாகும் ..

🤲 ஸ்ரீராமானுஜர் யந்திரசக்ரங்கள் பதித்துள்ளதால் அவற்றின் சக்தி கடல் அளவு என்பர் .

🤲 கந்த புராணத்தில் இந்த ஸ்தலம் பற்றி சொல்லும்போது பாபநாசம் தீர்த்தம் பாவங்களை போக்கும், செய்வினை தோஷம், வறுமை போக்கும் மற்றும் சந்ததி விருத்தி உண்டாகும்.

🤲 பிரபஞ்ச சக்தி ஆற்றல் இங்கு சூட்சமமாக இயங்குவதால் நமது மூளை பல மடங்கு வேகத்துடன் செயல்படுகிறது ,இதனால் தன்னம்பிக்கை பலமடங்கு அதிகரிக்கிறது.

🤲 வாஸ்துப்படி வட கிழக்கில் அருவி அமைந்து பள்ளமாக உள்ளது தெற்கே உயரமான மலைகள் உள்ளன.

🤲 வடக்கு தாழ்ந்து தெற்கு உயர்ந்தால் அந்த இடம் மிகவும் பிரபலம் அடையும் மக்கள் கூட்டம் அலைமோதும்..

🤲 செல்வம் மலை போல குவியும்.

🤲 உலகிலேயே சந்திரனை முதலில் பார்ப்பவர்கள் ஜப்பானியர்கள்தான் சந்திரன் கதிர்கள் அதிகளவில் ஈர்த்து கொள்வதால்தான் அவர்கள் அறிவாற்றல், நுண்ணறிவு, பொருளாதார வளர்ச்யுடன் உள்ளார்கள்.

🤲 அதுபோல இந்தியாவில் சந்திரன் தாக்கம் அதிக அளவில் உள்ள இடம் திருப்பதி ஆகும்.

🤲 சந்திரன் சக்தி மிகுந்த கோயில் என்பதால் மனம் நிம்மதி உண்டாகிறது.

🤲 மூலிகைகள் அதிகம் இருப்பதால் ஆரோக்கியம் உண்டாகிறது. மகான்கள் நிறைந்த பூமி என்பதால் அருளாசியும் நிறைந்து காணப்படுகிறது.

🤲 வாஸ்துப்படி மிக பலமாக இருப்பதால் இத்திருக்கோயில் மிக அதிக சக்தியுடன் உள்ளது.

🤲 இந்தியாவின் அதிக செல்வம் உள்ள கோயில் இதுதான்.

🤲 கலி காலத்திலும் பெருமாள் பக்தர்களுக்கு உதவி செய்வதை பலர் பக்தியுடன் சொல்கின்றனர்.

🤲 குல தெய்வம் இல்லாதவர்கள் திருப்பதி பெருமாளை தங்கள் குல தெய்வமாக வணங்குகிறார்கள்.

🤲 நடந்து நாம் மலை ஏறினால் அக்குபஞ்சர் சிகிச்சையாக உடல் ஆரோக்யத்திற்கு உதவுகிறது.

🤲 நிமிர்ந்து மலை ஏறுவதால் நமது உடலில் மூலாதார சக்கரங்கள் நன்கு சுழலும்.

🤲 சந்திர தசை மற்றும் சந்திர புக்தியால் நடப்பவர்கள்,

🤲 தோல் நோய் உள்ளவர்கள், மன அழுத்தம் மற்றும் மன நிலை பாதிக்கபட்டவர்களுக்கு இத்திருக்கோயில் சிறந்த பரிகாரத் தலமாகும்.

🤲 திங்கள் கிழமை அங்கு சென்று தங்குவது மிகவும் சிறப்பு.

🤲 திருப்பதி மலை மீது எவ்வளவு நேரம் இருக்கிறார்களோ அவ்வளவு நன்மையை தரும்.

🤲 அட போங்கய்யா திருப்பதி போனாலே அனைவரையும் போட்டு பூட்டி வைப்பார்கள் நான் வரவே மாட்டேன் என சொல்லும் அன்பர்கள் தான் அதிகம் காரணம் என்ன தெரியுமா உங்களுக்கு..

🤲 அதே போல அங்கு சென்றவுடன் ஜெயிலில் போடுவது போல அனைவரையும் ஒரு அறையில் போட்டு பூட்டி வைப்பதின் நோக்கம் திருப்பதிக்கு வரும் பக்தர்கள் பதினோரு மணி நேரம் மலை மேல் இருக்க வேண்டும் என்பது ஐதீகம்

🤲 அதை யாரிடமும் சொல்லி புரிய வைக்க முடியாது ஆகையால் தான் அனைவரையும் போட்டு ஒரு அறையில் பூட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

🤲 அந்த அறையில் மவுனமாக இருந்து உங்கள் வேண்டுதலை செய்யலாம் ஆனால் அங்கு யாரும் அதை செய்வதே கிடையாது .

🤲 மாறாக அங்கு கூச்சலும் குழப்பமாக தான் இருக்கும்...இனிமேல் நீங்கள் திருப்பதி சென்று வந்தால் அங்கு நீங்களாவது அமைதியாக இருங்கள்.

🤲 அதிகம் திருமலை திருப்பதி வெங்கடேச பெருமாளை பிடித்து கொள்ளும் லக்னக்காரர்கள் தெரியுமா.?

🤲 மேஷம் , ரிஷபம் , மிதுனம் ,கடகம் , கன்னி , துலாம் .விருச்சிகம் , மகரம், மீனம் லக்னம் உடையவர்கள் அனைவரும் அதிகமாக பிடித்து கொள்ள வேண்டும்.

🤲 வருடம் ஒரு முறை மட்டும் செல்லும் லக்னம் காரர்கள் .சிம்மம் , தனுசு , கும்பம்.

🤲 ஓம் நமோ வேங்கடேசாயா நமஹ சகல ஐஸ்வர்யங்களும் கிட்ட பலன் தரும் ஏழுமலையான் ஸ்லோகம் " 

ஸ்ரீய: காந்தாய கல்யாண நிதயே நிதயேர்த்தினாம்
ஸ்ரீவேங்கட நிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம்”

ஸ்ரீ வேங்கடாசலாதீஸம் ஸ்ரீயாத்யாஸித,
வக்ஷஸம் ஸ்ரிதசேதன மந்தாரம் ஸ்ரீநிவாஸமஹம் பஜே ... !!!

🤲 பொதுப் பொருள்: 

🤲 திருவேங்கடமலையில் வாசம் செய்யும் ஸ்ரீநிவாஸப் பெருமாளே, நமஸ்காரம். அனைத்து மங்கலங்களையும் அளிப்பவரே, வேண்டும் வரங்களையெல்லாம் வழங்குபவரே, மதிப்பிட முடியாத பெரும் புதையல் போன்றவரே நமஸ்காரம். மகாலட்சுமி வசிக்கும் அழகு மார்புடையவரே, துதிப்போர் அனைவருக்கும் கற்பக விருட்சம்போல நன்மைகளை பொழிபவரே, ஸ்ரீநிவாஸா, நமஸ்காரம்.

🤲 ஸ்ரீவேங்கட ஸ்ரீநிவாஸா உங்கள் திருவடிகளே சரணம் " சரணம் " சரணம்...

👉 அனைவருக்கும் பகிருங்கள்..

Friday, 24 September 2021

கொஞ்சம் சாஸ்திரம் தெரிந்து கொள்வோமா !!

கொஞ்சம் சாஸ்திரம் தெரிந்து கொள்வோமா !! 1. கிழக்கு நோக்கிச் சாப்பிட ஆயுள்வளரும். தெற்கு நோக்கிச் சாப்பிட புகழ் உண்டாகும். மேற்கு நோக்கிச் சாப்பிட செல்வம் வளரும். வடக்கு நோக்கிச் சாப்பிடக் கூடாது 2. பித்ருக்களின் திதியன்று வீட்டில் அன்னதானம் செய்ய முடியாவிட்டால் உணவு விடுதியில் (ஹோட்டல்) பத்துடோக்கன் வாங்கி ஏழைகளிடம் கொடுத்து உண்ணச் செய்யலாம். அவர்களிடம் பணமாகக் கொடுக்கக் கூடாது. 3. அன்னத்தால் பிராணனையும் பிராணனால் பலத்தையும் பலத்தால் தவத்தையும் தவத்தால் சிரத்தையையும் சிரத்தையால் புத்தியையும் மனத்தால் சாந்தியால் சித்தத்தையும் சித்தத்தால் நினைவால் ஸ்திதப் பிரக்ஞையால் விஞ்ஞானத்தையும் விஞ்ஞானத்தால் ஆத்மாவையும் பெறுவதால் அன்னத்தைக் கொடுப்பது இவை எல்லாவற்றையும் கொடுத்தாகிறது. என தைத்தரீயோபநிஷத் கூறுகிறது. எனவே முடிந்த போது முடிந்த அளவிற்கு அன்னதானம் செய்யுங்கள். 4. அளவிற்கு அதிகமாக உண்டால் நோய்வரும். ஆயுள் குறையும். எனவே வயிறு புடைக்க மூச்சு முட்ட உண்ணக் கூடாது. 5. பசிக்கும் போது மட்டுமே தான் சாப்பிட வேண்டும். 6. மிளகு சேர்ப்பதால் உணவில் உள்ள விஷம் நீங்குகிறது. உடலில் உள்ள விஷமும் முறிகிறது. 7. உணவில் சீரகம் (சீர் அகம்) சேர்ப்பதால் உடம்பை சீராக வைப்பது மட்டும் அல்லாமல் குளிர்ச்சியை தருகிறது. 8. வெந்தயம் உஷ்ணத்தைக் குறைக்கிறது. வெந்தயத்தை இரவே தண்ணீரில் ஊற வைத்து காலை எழுந்தவுடன் தண்ணீருடன் பருகி வந்தால் உடம்பில் உள்ள உஷ்ணத்தை குறைக்கிறது. 9. கடுகு உடலில் உள்ள உஷ்ணத்தை ஒரே அளவாக வைக்கிறது. 10. இஞ்சியை உணவில் சேர்ப்பதால் பித்தம் தலை சுற்றல் வாந்தி போன்ற கோளாறுகள் வருவதில்லை. 11. உணவு உண்பதற்கு முன்பு கை கால் வாய் போன்றவற்றை நீரால் கழுவ வேண்டும். 12. காலில் ஈரம் உலர்வதற்கு முன்பே உணவு உண்ணத் தொடங்க வேண்டும். 13. உணவு உண்ணும் போது பேசக் கூடாது. படிக்கக் கூடாது. இடதுகையை கீழே ஊன்றக் கூடாது 14. வீட்டில் கதவை திறந்து வைத்துக் கொண்டு வாசலுக்கு எதிரே அமர்ந்து உண்ணக் கூடாது. 15. காலணி அணிந்துக் கொண்டு உண்ணக் கூடாது. 16. சூர்ய உதயத்திலும் மறையும் பொழுதும் உண்ணக் கூடாது. 17. உணவு உண்ணும் போது உண்பதில் கவனமாக இருக்க வேண்டும். 18. நிலவின் ஒளியில் உண்ணக் கூடாது. பௌர்ணமியில் நிலாச் சாப்பாடு தனியாகச் சாப்பிடக் கூடாது. பலருடன் சேர்ந்து சாப்பிடலாம். 19. இருட்டிலோ நிழற்படும் இடங்களிலோ உண்ணக் கூடாது. 20. சாப்பிடும் பொழுது நடுவில் எழுந்து சென்று மீண்டும் வந்து சாப்பிடக் கூடாது. நின்று கொண்டு சாப்பிடக் கூடாது. 21. அதிக கோபத்துடன் உணவு உண்ணக் கூடாது. 22. சாப்பிடும் போது தட்டினைக் கையில் எடுத்துக் கொண்டு உண்ணக் கூடாது. தட்டை மடியில் வைத்துக் கொண்டும் படுத்துக் கொண்டும் உண்ணக் கூடாது. 23. இலையைத் துடைத்து வலித்துச் சாப்பிடுவதும் விரலில் ஒட்டி உள்ளதை சப்பிச் சாப்பிடுவதும் தரித்திரத்தை வளர்க்கும்;. 24. வெங்கலம் அலுமினியம் மற்றும் செம்பு பாத்திரங்களில் சமையல் செய்யக் கூடாது. 25. புரச இலையில் சாப்பிட்டால் புத்தி வளரும். 26. வெள்ளித் தட்டில் மற்றும் வாழை இலையில் சாப்பிட்டால் நல்ல அழகு அறிவு மன ஒருமைப்பாடு குடும்ப ஒற்றுமை கிடைக்கும். 27. நாம் சாப்பிட்ட தட்டுக்களை வைத்து சாப்பாட்டையோ அல்லது மற்ற உணவுப் பதார்த்தங்களையோ மூடி வைக்கக் கூடாது. 28. இரவில் இஞ்சி, கீரை, பாகற்காய், கஞ்சி, தயிர், நெல்லிக்காய் ; ஆகியவற்றை சேர்க்கக் கூடாது. 29. உண்ணும் தட்டில் அல்லது இலையில் முதலில் காய்கறிகளோ அப்பளமோ பரிமாறாமல் சாதத்தை பரிமாறக் கூடாது. 30. அதே போல் முதலில் கீரையோ வத்தலோ இலையில் வைக்கக் கூடாது. அசுப காரியத்தில் மட்டுமே பயன்படுத்துவர். வாழ்வில் நாம் செய்யக் கூடாதவை: 1. நம்மை விடப் பெரியவர்கள் முன் கால் மேல் கால் போட்டு அமரக் கூடாது. 2. செவ்வாய், வெள்ளி ஆகிய இரு நாட்களிலும் தலைமுடி வெட்டுதல் நகம் வெட்டுதல் சவரம் செய்து கொள்ளுதல் கூடாது. 3. தலைமுடிக்கு மந்திரங்களை எளிதில் கிரகிக்கும் தன்மை உண்டு. தலைமுடியைக் கொண்டு பில்லி சூனிய ஏவல் வைக்கவும் செய்வர். எனவே தலைமுடியையும் நகத்தையும் எக்காரணம் கொண்டும் பிறர் பார்க்கும் படி வெளியில் எறியலாகாது. 4. நான்காம் பிறைச் சந்திரனைப் பார்க்கக் கூடாது. 5. செப்புப் பாத்திரத்தில் பாலை வைக்கக் கூடாது. பால் திரிந்து விடும். அதிக உப்பு அதிக காரம் அதிக இனிப்பு அதிக புளிப்பு சேர்க்கக் கூடாது. காளானைக் கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிடக் கூடாது. 6. பட்டு வேட்டி மற்றும் புடவைகளை அணிந்துக் கொண்டு வைதீக காரியங்களைச் செய்யக் கூடாது. 7. கர்ப்பிணி பெண்கள் மாலை வேளையில் சாப்பிடக் கூடாது. 8. மருந்து மாத்திரை ஆகியவற்றை முகர்ந்து பார்க்கக் கூடாது. 9. பெருமூச்சு விடுவது மிகப் பெரும் தவறு அதனால் துன்பங்கள் தான் அதிகரிக்கும் பெருமூச்சு விடுபவரின் மூச்சுக் காற்று அருகில் உள்ளவர் மேல் படக் கூடாது. பட்டால் அவருக்கும் கெடுதல் ஏற்படும். 10. இலவசமாக யாரிடமும் எள் பெறக் கூடாது. 11. நமக்கு ஒருவர் இட்ட உணவைப் பழிக்கக் கூடாது. 12. வீட்டில் எலுமிச்சை மூடியில் விளக்கேற்றக் கூடாது. 13. விளக்கில் அல்லது நெருப்பில் தீப்பற்றிய துணியை மீண்டும் உடுத்திக் கொள்ளக் கூடாது. 14. விளக்கு வைத்த பிறகு தலை வாருதல் முகம் கழுவுதல் பேன் எடுத்தல் போன்றவற்றைச் செய்யக் கூடாது. 15. வெள்ளிக்கிழமை அரிசி புடைப்பது அரிசி வறுப்பது கூடாது. மிளகாய் வறுப்பது மிளகாய் பொடி அரைப்பது கூடாது. இதெல்லாம் ஒரு 80 வருடங்களுக்கு முன்பு மிகச் சரியாக கடைபிடித்து வந்தார்கள். அதனால் தான் அவர்களின் ஆயுள் 120 வயது வரை திட காத்திரமாக இருந்தது.‌ ஆனால் இப்போது பல வகையான நோய்கள் சிறுவயதிலேயே தொற்றிக் கொள்கிறது. முடிந்த வரை வெளி உணவுகளை தவிர்த்து விடுங்கள். இப்போது தான் யூடியூப் இருக்கிறதே நீங்களே அழகாக சமைக்கலாமே !! ஆரோக்கியம் உங்கள் கையில் இருக்கிறது...

Monday, 20 September 2021

தொண்டை கரகரப்பா? இதிலிருந்து விடுபட இதோ சூப்பரான எளிய வைத்தியம்

தேவையான பொருள் வால் மிளகு - 50 கிராம் சுக்கு - 50 கிராம் திப்பிலி - 50 கிராம் ஏலரிசி - 50 கிராம் தேன் - தேவையான அளவு செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும். பிறகு வால் மிளகு,சுக்கு,திப்பிலி மற்றும் ஏலரிசி ஆகிய நான்கு பொருட்களையும் நன்கு பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளவும். வறுத்த பொருட்களை இடித்து பொடியாக்கி ஒரு பாத்திரத்தில் சேகரித்துக்கொள்ளவும். மேலும் தேனுடன் இடித்த பொடி ஒரு தேக்கரண்டி எடுத்துக்கொண்டு நன்கு கலக்கவும். இதனை தொடர்ந்து குடித்து வந்தால் தொண்டை கரகரப்பு முற்றிலுமாக குணமாகும்.

2 டீஸ்பூன் சீரகம், ஒரு டீஸ்பூன் ஓமம்! இந்த கலவையை தினமும் குடிச்சு பாருங்க... அற்புத மாற்றங்கள் உடலில் நடக்குமாம்!

தேவையான பொருட்கள்: தண்ணீர் - ஒரு கிளாஸ் சீரகம் - 2 தேக்கரண்டி ஓமம் விதைகள் - 1 தேக்கரண்டி செய்முறை சீரக விதைகள் மற்றும் ஓமம் விதைகளை ஒரு கிளாஸ் தண்ணீரில் கலந்து ஒரே இரவில் ஊறவைக்கவும். காலையில் தண்ணீரை வடிகட்டி, அதனை குடிக்கவும். மற்றொரு முறை தண்ணீரை பாதியாகக் குறைக்கும் வரை கொதிக்க வைத்து பின்னர் தேநீர் போல உட்கொள்ளவும். இதில் சுவை அதிகரிக்க சிறிது துருவிய இஞ்சி மற்றும் எலுமிச்சை சேர்த்து பருகலாம் . நன்மைகளை என்ன? ஓமம் தண்ணீர் உங்கள் வயிறு மற்றும் கருப்பையை சுத்தம் செய்ய உதவுகிறது. இது உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது மற்றும் வயிறு தொடர்பான பல பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்க உதவுகிறது. உடல் எடையை குறைக்க முயற்சிக்கும்போது கூட நல்லது. சீரக விதைகளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன, இது செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது மற்றும் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கிறது. உடலில் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைத்து நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கிறது. சீரக தண்ணீர் உடலில் உள்ள நச்சு கூறுகளை அகற்ற உதவுகிறது.

வாழைப்பழ தேநீர்

இரவில் தூங்கச் செல்லும்முன் இயற்கையாக தூக்க மாத்திரை போட்டுக் கொள்ளும் அதிகரித்து விட்டது. அப்படி இருப்பவர்கள் தூங்கும்முன் வாழைப்பழ டீ குடித்துவிட்டு தூங்குவது நல்லது . ஏனெனில் வாழைப்பழத்தில் ட்ரிப்டோபன் என்னும் அமினோ அமிலம் உள்ளது. இந்த அமிலம் நமது மூளையில் செரோடோனின் என்ற வேதிப்பொருளை உற்பத்தி செய்கிறது. செரோடோனின் நமது தூக்கத்திற்கு நன்மை பயக்கக்கூடியது. எனவே தற்போது இந்த வாழைப்பழ டீயை எப்படி தயாரிக்கலாம் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம் தேவையானவை வாழைப்பழம் - 1 இலவங்கப்பட்டை தூள் - 1 தேக்கரண்டி ​தயாரிக்கும் முறை வாழைப்பழத்தின் முனைகளை நன்கு வெட்டிக் கொள்ளவும், ஆனால் அதன் தோல்களை அகற்ற தேவையில்லை, ஏனெனில் வாழைப்பழ தோல்களும் பல நன்மைகளை கொண்டவையாகும். பின்னர் வாழைப்பழத்தை தோலுடன் பெரிய பெரிய துண்டுகளாக வெட்டவும். அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் ஒரு கப் அளவிற்கும் சற்று கூடுதலாக நீரை சேர்த்துக் கொள்ளவும். பிறகு அந்த நீரில் தயாராக வைத்துள்ள இலவங்கப்பட்டை தூள் அல்லது இலவங்கப்பட்டையை சேர்க்கவும். பின்னர் இரண்டையும் கொதிக்க வைக்கவும், பிறகு அதில் வெட்டி வைத்துள்ள வாழைப்பழத்தை சேர்த்து வெப்பத்தை குறைத்து 10 நிமிடங்களுக்கு இளம்சூட்டில் நீரை கொதிக்க வைக்கவும். 10 நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவும். பிறகு சிறிது ஆற விட்டு பிறகு வடிக்கட்டியை பயன்படுத்தி அதில் உள்ள நீரை மட்டும்தனியாக பிரித்தெடுக்கவும். இப்போது நமக்கு தேவையான வாழைப்பழம் தேநீர் தயார். இதை படுக்கைக்கு செல்வதற்கு 20 நிமிடங்கள் முன்பாக அருந்தவும். நன்மை சரியான தூக்கம் இல்லாமல் அவதிப்படுபவர்கள் சிறந்த தூக்கத்தை பெற தினமும் இந்த தேநீரை செய்து அருந்தலாம். இதன் மூலம் நீங்கள் நல்ல தூக்கத்தை பெற முடியும். எனவே இனி தூங்க செல்வதற்கு முன்பாக வாழைப்பழ தேநீரை எடுத்துக் கொள்ள மறக்க வேண்டாம்.

Saturday, 18 September 2021

மாளயபட்சம்

மாளயபட்சத்தின் பதினாறு தினங்களிலும் நித்தியத் தர்ப்பணம். தினமும் அன்னதானம் அவசியம். மாளயபட்சத்தில் ஆற்றும் நித்திய அன்னதானத்திற்கும் அன்ன சிரார்த்தம், அன்னத் தர்ப்பணம் என்றே பெயர் உண்டு. இந்த மாளய பட்சத்தில் விநாயகருக்கான சதுராவிருத்தி தர்ப்பணம் எனும் விசேஷமான பூஜையை நிகழ்த்துதல் விசேஷமானது. தாய் அமாவாசை புரட்டாசியின் மாளய அமாவாசை : சூரிய, சந்திர கிரஹ மூர்த்திகள் ஒரே இடத்தில் (ஒரே ராசியில்) கூடும் நாள் அமாவாசை. இவ்விரு கிரஹங்களும் வானில் தொண்ணூறு டிகிரி கோணத்தில் எதிரெதிரே வரும் (எதிர் ராசியில் வரும்) தினம் பௌர்ணமி. மேலும் பௌர்ணமி, அமாவாசையில் சந்திர கிரஹத்தின் உவா ஏற்றம், இறக்கம் என்பதாக - பூமியின் ஆகர்ஷணம், சந்திர கிரஹத்தின் ஆஹர்ஷணத்தில் சில விளைவுகள் உண்டாகி இவை கடலிலும், மனித உடலிலும் பிரதிபலிக்கும். இதை நன்முறையில் சீர்படுத்திடவே இந்நாட்களில் விசேஷமானப் புனிதத் தீர்த்த நீராடல், ஆலய தரிசனம், விளக்கேற்றுதல், பௌர்ணமி விரதம், பௌர்ணமி கிரிவலம், பௌர்ணமி பூஜை. அமாவாசை விரதம், பிதுர்ப் பூஜை. அன்னதான தர்மங்கள் போன்றவற்றைக் கடைபிடிக்கிறோம். இதற்காகவே பௌர்ணமி, அமாவாசையில் புனித நீராடுகிறோம். இக்காரணப்படியாகக் கடலில் தினமும் நீராடலாகாது, குறித்த நாட்களில் மட்டுமே கடலில் நீராட வேண்டும். என்ற ஆன்மக் கட்டுப்பாடும் உள்ளது. கடல் நீரில் ஆசமனம் செய்வது கிடையாது எனும் நியதியும் உண்டு. உண்மையில் ஒவ்வொரு பௌர்ணமியும், ஒவ்வொரு அமாவாசையும் முறையே சந்திர கிரஹணம், சூரிய கிரஹணமும்தான். ரவிச்சந்திர அமாவாசை : பூ லோகத்தில் முதன் முதலாக ஏற்பட்ட அமாவாசை - பாத்ரபத மாதம் எனப்படும் புரட்டாசி தமிழ் மாதத்தில் வரும் மாளய பட்ச அமாவாசைத் திதி தினமாகும். எனவே இதுவே தாய் அமாவாசை, தலைஅமாவாசை. எவ்வாறு சூரிய, சந்திர மூர்த்திகள் கிருஷ்ண பரமாத்மாவின் முன் ஒன்று சேர்ந்து தோன்றிட - சூரிய, சந்திர கிரஹ சங்கமமே அமாவாசை ஆவதால் முதல் ஸ்ரீகிருஷ்ணரின் சங்கல்பப்படியாக அன்று மாலையில் சூரிய சந்திரர்கள் சேர்ந்து (உ)வந்தமையால் அமாவாசைக்கு முதல் நாளில் அமாவாசைத் திதி திகழுமாயின் இது போதாயன அமாவாசை எனும் சாங்க்யமாகக் கடைபிடிக்கப் பெறுகிறது. இதே போல்தான் பூலோகத்தின் முதல் அமாவாசையாகப் புரட்டாசி மாதத்தில் சூரிய, சந்திர சங்கமத்தில் உற்பவித்ததே விசேஷமான ரவிச்சந்திர அமாவாசை எனும் மாளயபட்ச அமாவாசை (ரவி சூரியன்). ஆகவே புரட்டாசி மாதத்தைய அமாவாசை தினமானது அமாவாசைகளுக்கு எல்லாம் தாய் அமாவாசை, தலைஅமாவாசை, மூத்த அமாவாசையாகப் போற்றப்படுகின்றது. மஹாளய அமாவாசை, மஹாலய அமாவாசை, மாளய அமாவாசை, பெரிய அமாவாசை எனப் பல பெயர்களில் பிரசித்தி பெற்றுள்ள புரட்டாசி மாதத்தின் அமாவாசையே வருடத்தின் பன்னிரு அமாவாசைத் திதிகளுக்குமான தலைமைத் திதிப் பீடமாகும். பிரதமை முதல் அமாவாசை / பௌர்ணமி வரை ஒவ்வொரு திதிக்குமான காலதேவதையும் உண்டு. இது பற்றி லலிதா சஹஸ்ரநாமத் துதியிலும் வரும். இதற்கான விளக்கத்தை நவம்பர் 2020 இதழில் அளித்துள்ளோம். சாகாவரந் தரும் அமிர்தத்தை அடைவதற்காக ஆதியுகமொன்றில் தேவர்களும், தேவர்களின் சகோதரர்களான அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த போது அதிலிருந்து மஹாலக்ஷ்மீ தேவியும், சந்திர மூர்த்தியும் ஏனையோரும் ஏனையவையும் தோன்றினர். இதனால் சந்திர மூர்த்தியைத் திருமகளின் சகோதரராகப் போற்றுவர். இதை லலிதா சஹஸ்ரநாமம் எனப் போற்றும். அமாவாசைத் திதி பிறத்தல்: பாற்கடலில் சந்திர மூர்த்தி தோன்றியப் பல யுகங்களுக்குப் பிறகு தட்சரின் சாபத்தினால் சந்திரனின் ஈரெட்டுப் பதினாறு கலைகளும் தேயலுற்ற போது அமாவாசை எனும் திதி வைபவம் ஏற்பட்டது. இதற்கு முன் வரையில் வானில் சூரிய, நட்சத்திரப் பிரகாசங்களே பொலிந்தன. நாம் பொதுவாக நினைப்பது போல வானில் இருப்பது ஒரே ஒரு இப்பிரபஞ்சத்தில் கோடானு கோடி நட்சத்திரங்கள் திகழ்வது போல் எண்ணற்ற பூமிகளும், லோகங்களும் உள்ளன. சில பூமிகளில் ஒன்றுக்கு மேற்பட்ட சூரிய, சந்திரர்கள் இன்றும் ஒளி வீசிக் கொண்டுதாம் உள்ளன. . நம் பூமியிலும் எதிர்காலத்தில் இரண்டாவது சூரியன் வரும் என வேங்கடராம சுவாமிகள் தீர்கதரிசனமாக உரைத்துள்ளார். இவை யாவும் மானுடப் பகுத்தறிவுக்கு இன்னமும் எட்டாத ஆன்மீக ரகசியங்கள். இது இப்போதைக்குப் புலப்படாது. விஞ்ஞானத்துக்கு அப்பாற்பட்ட மெய்ஞ்ஞான விஞ்ஞானமிது. தக்க சத்குரு மூலமாகவே அறியற்பாலது. ஆனால் சத்குருவின் மீதும், சத்குருவின் சர்வஞானத்திலும் ஆழ்ந்த நம்பிக்கை ஏற்பட வேண்டுமே. மாதத்திற்கு ஒரு சூரிய மூர்த்தி : நம் பூமியிலும் ஒவ்வொரு மாதத்திற்கு ஒரு சூரிய மூர்த்தியாக வருடத்திற்குப் பன்னிரு சூரிய மூர்த்திகளின் விஜயமும் அருள்பாலிப்பும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. சூரிய ஒளி இல்லையேல் ஜீவ வாழ்க்கை இல்லை. அமாவாசைத் திதி என்பது சூரிய மூர்த்தியின் நேரடியான அனுகிரஹத்தையும், சந்திர மூர்த்தியின் சூக்கும அனுகிரஹத்தையும் பொழிவதாம். தாய் வழி மாத்ருகாரகர் சந்திர மூர்த்தி. இவரே மனகாரகரும் ஆவார். தந்தை வழி பித்ருகாரகர் சூரியர் எலும்பு அங்கத்துக்குமான மூர்த்தியும் ஆவார். ஆகவே அமாவாசையில் பிதுரர் வழிபாடாக தாய், தந்தை இரு தலைமுறை வகை மூதாதையர்கட்கும் தர்ப்பணம், திவசம், படையல், திதி கொடுத்தல், சிரார்த்தம் போன்றவற்றை நிகழ்த்தி வழிபடுகின்றோம். இதில் தாய் அமாவாசையான புரட்டாசி மாதத்தின் மாளய பட்சத்தின் புனிதச் சிறப்பு யாதெனில் ... பிரபஞ்சத்தின் அத்தனைக் கோடிப் பித்ரு மூர்த்திகளும், வசு, ருத்ர, ஆதித்ய, விஸ்வதேவ, பந்து தரணி பித்ருக்களும் பூலோகத்திற்கு நேரடியாக வருகை தரும் வைபவம். பூமிக்கு நேரடியாக வரும் பிதுர்க்கள் : புரட்டாசி மாதத்தின் தேய்பிறைக் காலமாகிய இந்த இருவாரக் காலத்தைய (15 தினங்கள் பிரதமைத் முதல் அமாவாசைத் திதி வரை) மாளயபட்சத்தில் இந்த பூலோகத்தில் எந்த நாட்டில் எந்த மூலையில் எவர் தர்ப்பணம் அளித்தாலும் அதனை அவரவருக்கு உரித்தான மூதாதையரே - அந்தப் பிதுரரே தற்போது எந்த நிலையிலும் இருந்தாலும் நேரடியாக வந்து தர்ப்பணம், திதி கொடுத்தல், படையலை ஏற்பது மாளய பட்சப் பிதுர்ப் பண்டிகைக் காலத்தின் சிறப்பு. கழிவு படாது மலை போல் நெடுங்காலமாகத் தேங்கி இருக்கும் கர்மவினைகள் : மேலும் வருடம் முழுவதும், தினந்தோறும் நித்திய தர்ப்பணமாகப் பிதுர்ப் பூஜையை ஆற்ற வேண்டிய இவ்வுலக மானுடச் சமுதாயத்தார் - காலப்போக்கில் நித்தியத் தர்ப்பணத்தைக் கை விட்டு விட்டமையால் உலகெங்கும் இப்போது பணக்கஷ்டம், நோய்க கடன்கள், மனக்கஷ்டம், விவாகரத்து, குடும்பத்தில் பிளவு, தொற்று நோய் போன்று பல வகைகளிலும் அல்லல்படுகின்றனர். மூதாதையர்க்கு தினமுமே தர்ப்பணம் அளிக்கும் நித்தியத் தர்ப்பணம் என்பதானது உலக மக்கள் சமுதாயத்தின் அவநம்பிக்கை, அசிரத்தையால் தற்போது மாதாந்திர அமாவாசையில் மட்டும் தர்ப்பணம் என்பதாக மிகவும் குறுகி விட்டது. இதனால் மக்கள் சமுதாயத்தில் முற்காலத்தே துலங்கிய பிறர் நலன்களுக்காகச் சேவை ஆற்றித் தம்மை அர்ப்பணிக்கும் தியாக உணர்வு. பெருந்தன்மையான உள்ளமும் சுருங்கி சுயநலம், பேராசை, முறையற்ற காமம் போன்றவை மனித மனத்துள், மானுடச் சமுதாயத்துள் - ஆட்டிடையில் நரி போல் - புகுந்து விட்டன. இதன் காரணமாக நடப்பு உலகச் சமுதாயமானது பலத்த பிதுர் தோஷங்களுக்கு ஆட்பட்டுத் துன்புறுவதோடு நித்தியத் தர்ப்பணத்தின் மூலம் எளிதில் கழியக் கூடிய, கரைய வேண்டிய கோடானு கோடி கர்மவினைகள் உலகெங்கும் 195 நாடுகளிலும் ஒவ்வொரு குடும்பத்திலும் கழிவு படாமலேயே நெடுங்காலமாகத் தேங்கி உள்ளன. இத்தகையப் பெருங்குறைகள், குற்றங்கள், பாவங்கள் அனைத்திற்கும் தீர்வு தருவதாகப் புரட்டாசி மாதத்தின் மாளயபட்சம் வந்தமைந்திருப்பதும் கடவுளின் பெருங்கருணையால் நாம் பெற்ற பாக்யமே. ஆகவே புரட்டாசி மாதத்தின் மாளய பட்சத்தின் பதினைந்து நாட்களிலும் தினமும் தர்ப்பணம் செய்து - இதுகாறும் வாழ்வில் விடுபட்டுப் போன நித்தியத் தர்ப்பணப் பூசனையை ஓரளவேனும் வாழ்வில் புனரமைத்துத் தாய், தந்தையர், இவ்விரு வர்கத்தினருக்கும் திவசம், சிராத்தம், படையல், தர்ப்பணம், திதி கொடுத்தலை ஆற்றி கர்மவினைகள், பாவங்களைக் களைந்து பக்திமிகு நல்வாழ்வில் உய்ந்திடவும். முக்கியமான மாளயபட்சத் திதிகள் மேலும் பிரதமைத் திதி முதல் அமாவாசைத் திதி வரையில் வரும் இரு வாரக் காலத்தின் பதினைந்து திதிகளில் வரும் மிகவும் முக்கியமான திதி தினங்களிலாவது தர்ப்பணம், திவசம், சிராத்தம், படையல்களை அவரவர்க்கு இயன்ற வகையில் அன்னதான தர்மங்களுடன் நிகழ்த்திடவும். 24.9.2021 மஹாபரணி நட்சத்திர - தினம் - நெடுநாள் மருத்துவ மனையில், படுக்கையில், நோயில் கிடந்து உயிர் துறந்தோர்க்கு விசேஷத் தர்ப்பணம் வீட்டில், கோயிலில் நிறைய விளக்குகளை ஏற்றி வழிபடுதல், 16 வகை ஷோடசோபார தீபாரதனை. 29.9.2021 அஷ்டமித் திதி மத்யாஷ்டமி, புதாஷ்டமி, ருத்ராஷ்டமி - சகோதர, சகோதரிகளுக்கு, விசேஷத் தர்ப்பணம். பெற்றோர்கள் தாம் இழந்த வாரிசுகளுக்குத் தர்ப்பணம் அளிக்கவும். 30.9.2021 - மஹாநவமி - பெண் குலத்தார்க்கு, மாதா வர்கத்தினருக்குக் கூடுதல் தர்ப்பணம் 3.10.2021 - யதிமாளயம் - துறவிகள், சந்நியாசிகள், மஹான்கள், யோகியர், ஞானியர், உத்தமப் பெரியோர், தியாகத்துடன் வாழ்ந்தோர்க்கு அர்க்யம், தர்ப்பணம். மஹான்களின் ஜீவ சமாதிகளில் வழிபாடு. 5.10.2021 சஸ்த்ர ஹதமாளயம், கஜச்சாயா, போதாயன அமாவாசை, கிருஷ்ணாங்காரக சதுர்த்தசி - விபத்து, நெருப்பு, ஆயுதம், போர், தற்கொலை மூலமாக இறந்தோர்க்கு விசேஷப் பிதுர்ப் பூஜை 6.10.2021 ஸர்வ மாளய அமாவாசை எல்லோருக்கும் சகல ஜீவன்களுக்கும் காருண்யத் தர்ப்பணம்

Monday, 13 September 2021

உங்களுக்கு குளிக்கும்போது சிறுநீர் கழிக்கும் பழக்கம் இருக்கா..?

உண்மையில் சிறுநீர் என்பது ஆரோக்கியமானது என்கிறனர் ஆய்வாளர்கள். அதாவது நாம் கழிக்கும் சிறுநீரில் எலக்ட்ரோலைட்ஸ், யூரியா போன்ற ஆரோக்கியமான சத்துகள் உள்ளன. இதில் பாக்டீரியாக்களும் குறைவாகவே உள்ளது.
 குளிக்கும் போது சிலருக்கு சிறுநீர் கழிக்கும் பழக்கம் உண்டு. அவ்வாறு செய்வது உண்மையில் நல்ல விஷயம் என்கிறார்கள் மருத்துவர்களும், சுற்றுச் சூழல் ஆர்வலர்களும்.. எப்படி..?
1/ 7
குளிக்கும் போது சிலருக்கு சிறுநீர் கழிக்கும் பழக்கம் உண்டு. அவ்வாறு செய்வது உண்மையில் நல்ல விஷயம் என்கிறார்கள் மருத்துவர்களும், சுற்றுச் சூழல் ஆர்வலர்களும்.. எப்படி..?

 உண்மையில் சிறுநீர் என்பது ஆரோக்கியமானது என்கிறனர் ஆய்வாளர்கள். அதாவது நாம் கழிக்கும் சிறுநீரில் எலக்ட்ரோலைட்ஸ், யூரியா போன்ற ஆரோக்கியமான சத்துகள் உள்ளன. இதில் பாக்டீரியாக்களும் குறைவாகவே உள்ளது. எனவே உடலில் படும்படி சிறுநீர் கழிப்பதால் எந்த தொற்றும் ஏற்படாது.
2/ 7
உண்மையில் சிறுநீர் என்பது ஆரோக்கியமானது என்கிறனர் ஆய்வாளர்கள். அதாவது நாம் கழிக்கும் சிறுநீரில் எலக்ட்ரோலைட்ஸ், யூரியா போன்ற ஆரோக்கியமான சத்துகள் உள்ளன. இதில் பாக்டீரியாக்களும் குறைவாகவே உள்ளது. எனவே உடலில் படும்படி சிறுநீர் கழிப்பதால் எந்த தொற்றும் ஏற்படாது.

 அதேசமயம் சிறுநீர் சருமத்திற்கும் நல்லது. அதாவது சருமப் பாதுகாப்பிற்காக காஸ்மெடிக்ஸ் பொருட்களிலும் யூரியா சேர்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது. எனவே இயற்கையான சிறுநீரில் இது இருப்பது மிகவும் நல்லது. சிலர் சரும அழகுக்கு சிறுநீரை குடிப்பதும் நிகழ்கிறது.
3/ 7
அதேசமயம் சிறுநீர் சருமத்திற்கும் நல்லது. அதாவது சருமப் பாதுகாப்பிற்காக காஸ்மெடிக்ஸ் பொருட்களிலும் யூரியா சேர்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது. எனவே இயற்கையான சிறுநீரில் இது இருப்பது மிகவும் நல்லது. சிலர் சரும அழகுக்கு சிறுநீரை குடிப்பதும் நிகழ்கிறது.

 அத்லெட்டுகளும் தங்கள் பாதங்களில் உள்ள பூஞ்சைகளை அகற்ற யூரின் தெரப்பி என்ற முறையில் சிறுநீரில் பாதங்களை முக்கி சுத்தம் செய்கின்றனர். ஆனால் இதற்கு எந்தவித ஆதாரமும் நிரூபிக்கப்படவில்லை.
4/ 7
அத்லெட்டுகளும் தங்கள் பாதங்களில் உள்ள பூஞ்சைகளை அகற்ற யூரின் தெரப்பி என்ற முறையில் சிறுநீரில் பாதங்களை முக்கி சுத்தம் செய்கின்றனர். ஆனால் இதற்கு எந்தவித ஆதாரமும் நிரூபிக்கப்படவில்லை.

 சுற்றுசூழல்படி பார்க்கும் போது, குளிக்கும்போதே சிறுநீர் கழிப்பதால் தண்ணீர் மிச்சமாகிறது. அதைக் கழுவ ஃபிளஷ் செய்ய கூடுதல் நீரும் தேவைப்படாது. உலக நாடுகளில் தண்ணீர் தட்டுப்பாட்டின் போது இந்த ட்ரிக்ஸை பயன்படுத்துவார்கள்.
5/ 7
சுற்றுசூழல்படி பார்க்கும் போது, குளிக்கும்போதே சிறுநீர் கழிப்பதால் தண்ணீர் மிச்சமாகிறது. அதைக் கழுவ ஃபிளஷ் செய்ய கூடுதல் நீரும் தேவைப்படாது. உலக நாடுகளில் தண்ணீர் தட்டுப்பாட்டின் போது இந்த ட்ரிக்ஸை பயன்படுத்துவார்கள்.

 எனவே குளிக்கும்போது சிறுநீர் மட்டுமல்ல உடல் வெளியிடும் மற்ற திரவங்களான வியர்வை, சளி, மாதவிடாய் இரத்தம் ஏன் மலம் கூட கழிக்கலாம் என்கிறது ஹெல்த் லைன் இதழ்.
6/ 7
எனவே குளிக்கும்போது சிறுநீர் மட்டுமல்ல உடல் வெளியிடும் மற்ற திரவங்களான வியர்வை, சளி, மாதவிடாய் இரத்தம் ஏன் மலம் கூட கழிக்கலாம் என்கிறது ஹெல்த் லைன் இதழ்.

 இதில் முக்கிய விஷயம் அவற்றை செய்யும்போது மற்றவர்களும் அந்த பாத்ரூமை பயன்படுத்துகிறார்கள் எனில் சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியம். எனவே இனி குளித்துக் கொண்டிருக்கும்போது சிறுநீர் வந்தால் தயங்காமல் கழிக்கலாம்.
7/ 7
இதில் முக்கிய விஷயம் அவற்றை செய்யும்போது மற்றவர்களும் அந்த பாத்ரூமை பயன்படுத்துகிறார்கள் எனில் சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியம். எனவே இனி குளித்துக் கொண்டிருக்கும்போது சிறுநீர் வந்தால் தயங்காமல் கழிக்கலாம்.




Saturday, 11 September 2021

வாஸ்து படி பாசிட்டிவ் எனர்ஜி கொடுக்கும் மணி பிளான்ட் செடியை வீட்டில் தவறியும் இந்த திசையில் மட்டும் வைத்து விடவே கூடாது

பலரது வீட்டு வாசலில் மணிபிளான்ட் செடி இருப்பதை பார்த்திருப்போம். பெரும்பாலானோர் அவர்களது வீட்டில் அதிர்ஷ்டம் உண்டாவதற்காக மணி பிளான்ட் செடியை வளர்த்து வருவார்கள். ஆனால் ஒரு சில வீடுகளில் என்னதான் முயற்சித்தாலும் சீக்கிரத்தில் இந்த செடி வளர்ந்து விடாது. இதற்கு காரணம் என்னவென்றால் மணி பிளான்ட் செடி வைப்பதற்கென்று உரிய இடம் இருக்கிறது. அந்த இடத்தில் வைத்து வளர்த்தால் மட்டுமே இந்தச் செடி நன்றாக தழைத்து வளர்ந்து உங்கள் வீட்டிற்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். இவ்வாறு உங்கள் வீட்டிற்கும் அதிர்ஷ்டம் உண்டாக இந்த மணி பிளான்ட் செடியை எந்த திசையில் வைத்து வளர்க்க வேண்டும் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.




மணி பிளான்ட் செடி தென்கிழக்கு ஆசியாவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கொடி வகையாகும். மலேசியா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் இந்த செடி மிகவும் பிரபலம் வாய்ந்தாக உள்ளது.வன பகுதிகளில் வளரும் மணி பிளான்ட் ஐம்பதிலிருந்து அறுபது அடி உயரத்திற்கு வளரும். ஆனால் வீட்டில் சிறிய தொட்டியில் வளர்க்கப்படும் மணிபிளான்ட் 15 முதல் 20 அடி மட்டுமே வளரும். ஒரு சிலர் மணி பிளான்ட் செடியை வீட்டை அலங்கரிப்பதற்காகவும் வளர்க்கின்றனர். இதனை வளர்ப்பதற்கு பெரிதாக செலவுகள் ஒன்றும் ஆகாது. ஆனால் வாஸ்துப்படி இதனை சரியான இடத்தில் வைத்து வளர்ப்பது என்பது மிகவும் அவசியமாகும்.


மணி பிளான்ட் வைக்க வேண்டிய திசை:
வாஸ்து நிபுணர்களின் கூற்று படி இந்தச் செடியை தென்கிழக்கு திசையில் வைத்துதான் வளர்க்கவேண்டும். ஏனென்றால் தென் கிழக்கு திசையில்தான் பாசிட்டிவ் எனர்ஜி அதிகமாக கிடைப்பதாகவும், இந்த திசையில் மணிபிளான்ட் செடி வைத்து வளர்ப்பதன் மூலம் அது நன்றாக வளர்ந்து, அதன் வேகமான வளர்ச்சி போலவே வீட்டில் செல்வ வளமும் பெருகும் என்பது வாஸ்து நிபுணர்களின் கூற்றாக உள்ளது 

தென்கிழக்கு திசை விநாயகருக்கு உரிய திசையாகவும், சுக்கிரன் பிரதிநிதித்துவம் செய்யும் திசையாகவும் கருதப்படுகிறது. எவ்வாறு விக்னம் என்னும் சொல்லிற்கு ஏற்றவாறு விநாயகர் நமது பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக இருக்கிறாரோ, அதுபோல இந்த திசையில் வைக்கப்படும் மணிபிளான்ட் செடியும் நமது வீட்டில் உள்ள பிரச்சனைகள் அனைத்தையும் தீர்க்கும் வல்லமை பெற்றதாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் சுக்ரனுக்கு உரிய திசை என்பதால் செல்வ வளமும் பெருகும் என்பது அனைவரின் நம்பிக்கையாக உள்ளது.



மணி பிளான்ட் வைக்கக்கூடாத திசை:
மணிபிளான்ட் செடியை எக்காரணம் கொண்டும் வடகிழக்கு திசையில் மட்டும் வைத்து விடக்கூடாது. ஏனென்றால் இந்த திசை எதிர்வினையை அதிகரிக்கும் திசை என்பதால நமது வீட்டில் நஷ்டம் தான் அதிகரிக்கும். வீண் விரயங்களும் ஏற்படும்.


மணி பிளான்ட் வளர்க்க வேண்டிய முறை:
வீட்டில் அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும் மணி பிளான்ட் செடியை மண் அல்லது நீரில் வைத்து வளர்த்தாலும் நன்றாக வளரும். அவ்வாறு வீட்டின் உட்புறம் மற்றும் வெளிப்புறம் இவ்வாறு உங்களுக்கு விருப்பமான எந்த இடத்தில் வைத்தும் வளர்க்கலாம். ஆனால் நீங்கள் வைக்கும் திசையை மட்டும் கவனமாக பார்த்து கொள்ள வேண்டும். இந்த செடியில் இருக்கும் இலைகள் ஏதேனும் ஒன்றிரண்டு வாடி இருந்தாலும் அதனை உடனே அகற்றி விட வேண்டும். இல்லையென்றால் அவை முழுச் செடியையும் பாதித்துவிடும். இவ்வாறு இந்தச் செடி பாதிப்படைவதென்பது வீட்டிற்கு நன்மையை கொடுத்திடாது.