jaga flash news

Saturday, 12 March 2016

யமாஷ்டகம்!💮

யமாஷ்டகம்!💮
🌼 (மிக அற்புத அரிய ஸ்லோகம)🌼
🌼சத்தியவான், சாவித்திரி கதை அனைவருக்கும் தெரிந்ததே. தனது கணவர் சத்தியவானின் உயிரை யமனிடம் இருந்து மீட்பதற்காக சாவித்திரி சில கேள்விகளை அவரிடம் கேட்டார்.
🌼யம தர்மராஜர் சாவித்திரியின் கேள்விகளுக்குப் பதில் அளிக்கையில், பராசக்தியின் மகிமையைப் பற்றிக் கூறினார். அதைக் கேட்டுப் பரவசமான சாவித்திரி, குருவான தர்மராஜரைத் துதித்தாள்.
🌼1. தபஸா தர்மமாராத்ய புஷ்கரே பாஸ்கர: புரா
தர்மம் ஸூர்ய ஸுதம் தர்மராஜம் நமாம்யஹம்
பொருள் : முன்பு ஒரு சமயம் புஷ்கர ÷க்ஷத்திரத்தில் சூரிய பகவான் தவத்தால் தர்மதேவதையை ஆராதித்து, தர்மன் என்ற மகனை அடைந்தார். அந்த தர்மராஜரை நமஸ்கரிக்கிறேன்.
🌼2. ஸமதா ஸர்வபூதேஷு யஸ்ய ஸர்வஸ்ய ஸாக்ஷிண:
அதோ யந்நாம ஸமனம் இதி தம் ப்ரணமாம்யஹம்
பொருள் : எல்லாப் பிராணிகளின் இதயத்திலும் ஸாக்ஷியாக இருந்தபடி, பிராணிகளைச் சமமாக நினைப்பதால் சமனன் என்ற பெயருடைய யமராஜரை நமஸ்கரிக்கிறேன்.
🌼3. யேனாந்தச்ச க்ருதோ விச்வே ஸர்வேஷாம் ஜீவினாம் பரம்
காமானுரூபம் காலேன தம் க்ருதாந்தம் நமாம்யஹம்
பொருள் : உலகிலுள்ள எல்லாப் பிராணிகளுக்கும் அவரவர்களுக்குரிய காலத்தை முடிவு செய்வதால் கிருதாந்தன் என்று பெயர் பெற்ற அவரை நமஸ்கரிக்கிறேன்.
🌼4. பிபர்த்தி தண்டம் தண்டாய பாபிநாம் சுத்தி ஹேத வே
நமாமி தம் தண்டதரம் யச்சாஸ்தா ஸர்வஜீவினாம்
பொருள் : மனிதர்களுக்கு (சாஸ்தாவாக) யஜமானனாக இருந்து கொண்டு பாவம் செய்பவர்களுக்குப் பாவத்திலிருந்து விலகுவதற்காகத் தண்டனையைத் தருவதால் தண்டதரன் என்று பெயர் பெற்ற அவரை நமஸ்கரிக்கிறேன்.
🌼5. விச்வம் ச கலயத்யேவ ய: ஸர்வேஷு ச ஸந்ததம்
அதீவ துர்நிவார்யம் சதம் காலம் ப்ரணமாம்யஹம்
பொருள் : காலரூபியாக இருந்து கொண்டு பிராணிகளின் காலத்தைக் கழிக்கின்றவரும், எவராலும் ஏமாற்ற முடியாதவருமான காலன் என்பவரை நமஸ்கரிக்கிறேன்.
🌼6. தபஸ்வீ ப்ரஹ்மநிஷ்டோ ய: ஸம்யமீ ஸந் ஜிதேந்த்ரிய:
ஜீவானாம் கர்மபலத : தம் யமம் ப்ரணமாம்யஹம்
பொருள் : சிறந்த தபஸ்வி, பிரம்மநிஷ்டர், இந்திரிய, மன அடக்கமுள்ளவர், ஜீவர்களின் வினைக்குத் தகுந்த பயனை அளிப்பவர் ஆகிய குணங்களுள்ள யம ராஜரை நமஸ்கரிக்கிறேன்.
🌼7. ஸ்வாத்மாராமச்ச ஸர்வக்ஞோ மித்ரம் புண்யக்ருதாம் பவேத்
பாபிநாம் க்லேசதோ நித்யம் புண்யமித்ரம் நமாம்யஹம்
பொருள் : ஆத்மாவில் ரமிப்பவரும், எல்லாம் அறிந்தவரும் புண்ணியம் செய்பவர்களுக்கு நண்பரும், பாவிகளுக்குத் துன்பம் அளிப்பவருமான புண்ணியமித்ரன் என்ற பெயருள்ளவரை வணங்குகிறேன்.
🌼8. யஜ்ஜன்ம ப்ரஹ்மணோம்சேன ஜ்வலந்தம் ப்ரம்மதேஜஸா
யோ த்யாயதி பரம் ப்ரஹ்ம தமீசம் ப்ரணமாம்யஹம்
பொருள் : பிரம்மாவின் அம்சமாக அவதரித்தவரும் பிரம்மதேஜஸால் ஒளிர்பவரும், பரப்பிரம்ம ஸ்வரூபத்தை உபதேசிப்பவருமான ஈசன் என்பவரை நமஸ்கரிக்கிறேன்.
🌼9. யமாஷ்டகமிதம் நித்யம் ப்ராதருத்தாய ய: படேத்
யமாத் தஸ்ய பயம் நாஸ்தி ஸர்வ பாபாத் விமுச்ய தே
பொருள் : (சாவித்திரி துதித்த) இந்த யமாஷ்டகத்தைத் தினமும் காலையில் படிப்பவர்கள் யமபயத்தை அடைய மாட்டார்கள். எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுபடுவார்கள்.🌼

1 comment: