jaga flash news

Tuesday, 23 May 2017

கோபப்படுங்கள் தப்பில்லை.

கோபப்படுங்கள் தப்பில்லை.
-----------------------------------------
ஆன்மீகத்தில் பலர் சொல்வது "கோபப்படாதே. கோபமே படாதே. கோபத்தை கட்டுப்படுத்து............." போன்ற, எதோ கோபம் என்பது ஆன்மீகத்திற்கு மிகவும் விரோதம் என்ற வகையில் பேசுவர். ஆனால் அது எப்படி சாத்தியமாகும்?
கோபம் என்பது இயற்கையான ஒரு உணர்ச்சி. அது கட்டாயம் அனைவருக்கும் வரும். 
நாம் கல்லாக, மண்ணாக, மரம் மட்டையாக இருந்தால் மட்டுமே கோபம் வராமல் இருக்கமுடியும். இல்லையெனில் செத்த சவமானால் கோவம் வராமல் இருக்கலாம்.
இங்கு நமக்கு இயற்கையான கோப உணர்ச்சிக்கும், நம் மனதின் கோபத்திற்கும் வித்தியாசம் தெரியாததே பெரும் குழப்பமாக உள்ளது.
உங்கள் மகனோ மகளோ ஒரு தவறு செய்துவிட்டார்கள். அவர்களை கண்டிக்க கட்டாயம் நீங்கள் கோபப்பட்டுத்தான் ஆகா வேண்டும். ஒருவேளை நீங்கள் அவர்களை கண்டிக்க தவறிவிட்டால் அவர்கள் வாழ்க்கையே வீணாகிவிடும். ஆகவே தேவைப்படும்போது கோபத்தையும் ஒரு கருவியாக பயன்படுத்தல்வேண்டும். கணப்பொழுது கோப உணர்ச்சி கோபம் ஆகாது. . ஏனெனில் அது அங்கு எதோ ஒரு செயலாகி விடுகிறது. அது உங்கள் உடலை அந்த கணம் இயக்க வைக்கும் ஒரு உந்துதல் சக்தி
ஆனால் யாரோ ஒருவர் பத்து வருடத்திற்கு முன்னம் உங்களுக்கு செய்த தீமையை இன்னமும் மனதில் வெறியாக வைத்துக்கொண்டு அவரை பார்க்கும் பொழுதெல்லாம் அதை மனதில் நிறுத்தி அவரை எப்படியேனும் பழிதீர்க்க வேண்டுமென்னும் எண்ணமே கோபம். இதைதான் ஆன்மீகம் கைவிடவேண்டுமென கூறுகிறது.
அந்த கணத்திற்கு எதோ ஒரு செயல் நடக்க கோபப்பட்டு அடுத்த கணமே அந்த கோபம் மறந்து சகஜமாக இருப்பது கோபமே ஆகாது.
ஆனால், நடந்த நிகழ்வையோ, நபரையோ மனதில் பதியவைத்து அந்த நிகழ்வு நடந்த பின்னும் மனதில் அந்த வெறியையும் கோபத்தையும் மனதில் சுமந்தவாறே திரிவதே ஆன்மீகத்தில் கூறப்படும் தவிர்க்கப்படவேண்டிய கோபம்.
உளவில் ஆய்வாலர்கும், "கோபத்தை மனதில் கட்டுப்படுத்தி வைப்பதும், அந்த கோப உணர்ச்சியை எப்பொழுதும் மனதிலேயே சுமந்து திர்வது உடலுக்கும், மனதிற்கும் மிக மிக கேடாகும்" என்று கூறுகின்றனர்.
அதற்கென லூசுத்தனமாக அனைத்திற்கும் கோபப்படவும் கூடாது. கோபம் என்பது நமக்கு இயற்கையால் அளிக்கப்பட்ட ஒரு கருவியாகும். அதை எப்பொழுதும் கையாள்வது மிகவும் தவறானது. கோபத்தை தக்க தருணத்தில், ஒரு செயலுக்காக கையாண்டு பிறகு அதை ஓய்விற்கு அனுப்பிவிட வேண்டும்.
உடலின் இயக்கம் கட்டாயம் நம் கையில் இல்லை. அது எல்லாம் வல்ல பிரபஞ்ச சக்தியில் கரத்தில் உள்ளது. ஆக, உடல் கோபப்படவேண்டுமா இல்லாய என்பதை தீர்மானிப்பதும் பிரபஞ்சமே.
உடலைக்கொண்டு ஒரு செயலை செய்யவேண்டுமானால் பிரபஞ்சமே ஒரு உந்துதல் சக்தியாக கோபத்தை செலுத்தி செயலை செய்யும்.
ஆனால் அந்த கோபத்தை எப்பொழுதும் நம் மனதில் சுமந்தவாறே திரிவது மிக மிக தவறாகும்.
கோபம் வரும் கணத்தில் அதை வெளிப்படுத்தி அடுத்த கணமே அதை மறக்கவும் வேண்டும்!!!

2 comments:

  1. நம் இயலாமையின் வெளிப்பாடே கோபம். இரண்டாவது, நாம் இறைவனை முழு மனதோடு ஏற்று, அவர் அருகே செல்ல செல்ல, நம்மை அறியாமலே, கோபத்தின் வெளிப்பாடு காணாமல் போய்விடும். இதிலிருந்து என்ன தெரிகிறது? கோபம் ஒரு உணர்ச்சியை வெளிப்படுத்துவதாக இருந்தாலும் அது ஒரு சைத்தான். நாம்
    இறைவனை உண்மையாக நேசித்து, அவரிடம் மேலும், மேலும் நெருங்கும் போது, கோபம் என்ற சைத்தான் நம்மை அணுகாது. *நம்முடைய அனைத்து செயல்களிலுமே மாற்றங்கள் காணப்படும். அசைவச் சாப்பாடு வெறுக்கும், அதிகக் காரம் பிடிக்காது.
    இந்த மாற்றங்கள் ஆன்மீகத்தில் இருப்பவர்களுக்கு இருந்தால், அவர்கள் உண்மையிலேயே, இறைவனிடம் தன்னை அர்ப்பணி்த்து விட்டார்கள் என்று அர்த்தம். அவர்களிடம், உண்மையிலேயே கோபமூட்டும் செயல் பிறர் செய்தாலும், அவர்கள் கோபத்தை வெளிப்படுத்துவதற்கு பதில், அவர்கள் முகத்தில் அமைதியும், சாந்தமும் நிலவும்.

    ஆன்மீகத்தில் இருப்பவர்கள், கோபப்படக் கூடாது என்ற வார்த்தை சரியல்ல வெ.சாமி அவர்களே!

    *ஆன்மீகத்தில், இறைவனை முழுமையாக உண்மையாக, ஏற்றுக் கொள்பவர்கள் கோபப்படமாட்டார்கள் என்பது தான் உண்மை.*

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete