jaga flash news

Tuesday, 23 May 2017

விதி

விதி என்பது நமக்கு நாமே உருவாக்கிக்கொண்டது. பல சந்தர்பங்களில், பல நிகழ்வுகள் ஏன் நடந்து? எதற்கு நடந்தது? என்று குழம்பி நிற்கும் வேலையில், அந்த நிகழ்விற்கு ஏதாவது ஒரு காரணம் சொல்லவேண்டும் என்பதற்காக நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வது தான் விதி என்பது. 
உதாரணமாக, ஒருவன் மிகவும் பணக்காரனாக இருப்பான். ஏனோ தெரியாது திடீரென அனைத்தையும் இழந்து பிச்சை எடுக்கும் நிலைமைக்கு வந்துவிடுவான். அவன் "ஏன் நான் இந்த கேவலமான நிலைக்கு வந்தேன்?" என்று அந்த கீழ்நிலைமையை ஏற்றுக்கொள்ள முடியாமல் துன்பப்படும் நேரத்தில், அவனுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக, "இது உன் பூர்வகர்மா. உன் விதி இதை நீ அனுபவித்துத்தான் ஆகவேண்டும்." என்று கூருன்போது அவன் மனம் அந்த நிலையை ஏற்றுக்கொண்டு இனிவரும் வாழ்கையை வாழ தயாராகலாம் என்னும் உக்திக்காக உருவாக்கப்படதே "விதி" என்னும் கோட்பாடு. சரி விதி உண்மையாக இருக்கட்டும். நம் பிறவி விதியின்படி அமைவதாக வைத்துக்கொண்டால், இந்த பிறவி சென்ற பிறவியின் விதி. அப்படி எடுத்த அனந்த பிறவிகளும் அதன் முன்பிறவியின் விதி. இப்படி போக அனைவருக்கும் முதல் பிறவி என்ற ஒன்று இருக்கவேண்டும். அப்பொழுது அந்த முதல் பிறவி எந்த விதியக்கொண்டு நிர்ணயிக்கப்பட்டது????
மலர்கள் எந்த காரணமும் இன்றி எதேர்ச்சையாக மலர்கின்றன.
மரங்கள் எந்த காரணமும் இன்றி எதேர்ச்சையாக வளர்கின்றன.
கடல் எந்த காரணமும் இன்றி எதேர்ச்சையாக அலைகளை எழுப்புகின்றது.
கனிகள் எந்த காரணமும் இன்றி எதேர்ச்சையாக பழுக்கின்றன.
சூரியன் எந்த காரணமும் இன்றி எதேர்ச்சையாக ஜொலிக்கின்றது.
பிரபஞ்ஜம் எந்த காரணமும் இன்றி எதேர்ச்சையாக இயங்குகின்றது..........................
அதே போலத்தான் மனிதனின் வாழ்வில் நிகழும் அனைத்து செயல்களும் எந்த காரணமும் இன்றி எதேர்ச்சையாக நடக்கின்றது. எதேர்ச்சையாக பிறந்து, எதேர்ச்சையாக வளர்ந்து, எதேர்ச்சையாக இறக்கப்போகின்றோம்!!!
அவ்வாறு எதேர்ச்சையாக நடப்பதை நம் மனம் ஏற்க மறுக்கும்போது விதி, பிராரப்தம், கர்மா, இறைவன் செயல், ஊழ்வினை........... போன்றவை உருவாகின்றது.
இறைவன் சாக்ஷிமாத்திரன் ஆவான். அவன் எந்த செயலையும் செய்வதில்லை. அவன் எந்த நிகழ்விற்கும் பொருப்பாகமாட்டான். ஆனால் அவன் இன்றி இங்கு ஒரு செயலும் நிகழாது. அவனே நிகழ்த்துபவன், நிகழ்வு, அனுபவிப்பவன். அனைத்தும் அவனே. அந்த பிரபஞ்ச சக்தியை தவிர்த்து இங்கு வேறு எதுவுமே இல்லை. நீங்களும் நானும் கூட அந்த பிரபஞ்ஜசக்தியின் அங்கங்களே. நம் இருப்பு என்பது நம் கற்பனையே.!!!
இதை ஏற்க முடியாமல் உங்கள் மனம் இதை மறுக்கலாம். ஆனால் இதுவே எதார்த்த சத்தியமாகும்!!!

1 comment:

  1. நான் துன்பச் சிறையில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறேன் என்றான் அவன். என்ன காரணம் என்று கேட்டார் ஒரு பெரியவர். மற்றவர்கள் எனக்குத் துன்பம் கொடுக்கிறார்கள் என்றார்.

    உனக்குத் துன்பம் கொடுப்பது, உன்னுடைய *மனம்* தான். அப்படியா சொல்கிறீர்கள்? ஆமாம் அப்படியானால் துன்பத்திலிருந்து விடுபட என்ன வழி?
    *மனதைப் புரிந்து கொள்!.அது போதும்
    எப்படிப் புரிந்து கொள்வது என்றான் அவன். இந்தக் கதையைக் கேள் என்று அவர் சொன்னார்.....

    ஆசையாக ஒரு பூனையை வளர்த்தார் ஒருவர். அந்தப் பூனை ஒருநாள், *எலியை* பிடித்துக் கவ்விக் கொண்டு வந்தது. அவருக்கு அது *மகிழ்ச்சியாய்*
    இருந்தது.

    மறுநாள் அந்தப் பூனை, அவர் ஆசையாக வளர்த்த ஒரு *கிளியை* கவ்விக் கொண்டு வந்தது. அவருக்கு அது *அதிர்ச்சியாக* இருந்தது.

    இன்னொரு நாள் அந்தப் பூனை எங்கேயோ சென்று காட்டிலேயிருந்து ஒரு *குருவி*யைப் பிடித்துக் கவ்விக் கொண்டு வந்தது. இப்போது அவர்
    *மகிழவும் இல்லை, வருந்தவும் இல்லை.*

    எதையாவது பிடிப்பது பூனையின் சுபாவம் என்பதைப் புரிந்து கொள்ள அவருக்குக் கொஞ்சகாலம் ஆயிற்று.

    தனக்குப் பிடிக்காத எலியைப் பிடிக்கிறபோது இன்பம். தனக்குப் பிடித்தமான கிளியைப் பிடிக்கிறபோது துன்பம், தனக்குச் சம்பந்தமே இல்லாத குருவியைப் பிடிக்கிறபோது இன்பமும் இல்லை, துன்பமும் இல்லை. அவர் கதையை முடித்தார். இவன் சிந்திக்கத் தொடங்கினான்.
    *துன்பச் சிறையின் கதவுகள் திறக்கப் படுகிற ஓசை* அவன் செவிகளில் விழுந்தது.

    மனதைப் புரிந்து கொள்கிறவர்களே மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்.

    ஆகவே, நமக்கு ஒரு துன்பம் என்றவுடனே, விதி மேல் பழி சுமத்தாமல், விதியை மதியால் வெல்வதற்கு, இறைவனை நாடுங்கள். மனநிறைவோடு, வாழ்வீர்கள்.

    ReplyDelete