jaga flash news

Tuesday, 23 May 2017

கிடைத்தவைகளை அனுபவிக்கத் தெரியாமல் கிடைக்காதவைகளைத் தேடி அலைதல்

ஓம் நமோ நாராயணாய
அருமையான கதை.
ஒருவர் ஒரு வங்கியில் பணம் எடுத்துக்கொண்டு, பணப்பெட்டியை பின்னால் மாட்டிக்கொண்டு டூவீலரில் வேகமாகச் செல்லுகிறார். வண்டியின் அதிர்வில் அந்தப் பெட்டி லேசாகத் திறந்துகொண்டு, 100 பத்துரூபாய்நோட்டுகள் கொண்ட ஒரு கட்டு கீழே விழுந்துவிடுகிறது. அது தெரியாமல் அந்த நபர் வண்டியை ஓட்டிக்கொண்டு சென்றுவிடுகின்றார்.
(அந்த நபர் இக்கதையில் இனி வரமாட்டார்)
கீழே விழுந்த வேகத்தில் 100 பத்துரூபாய்நோட்டுகள் கொண்ட அந்த கட்டிலிருந்து ஒரே ஒரு பத்துரூபாய்நோட்டு மட்டும் விடுபட்டு காற்றில் பறந்து சிறிது தூரத்தில் கிடக்கிறது.
அந்த ஒற்றை பத்துரூபாய்நோட்
டு இருந்த வழியில் ஒருவன் வருகிறான்.
இந்த நோட்டைக் கண்டு, ',இன்று நரி முகத்தில் விழித்திருக்கிறேன் போல' என நினைத்து, மிகவும் சந்தோஷமடைகிறான். அந்த நோட்டை எடுத்துக்கொண்டு ஹோட்டலுக்குப் போனான். இரண்டு இட்லி - ஒரு காப்பி (அன்றய விலைவாசியில்) சாப்பிட்டான், அருகிலிருந்த பிள்ளையார் கோவில் உண்டியலில் மீதியிருந்த ஒரு ரூபாயைப் போட்டு, பிள்ளையாருக்கு நன்றி சொன்னான். சந்தோஷமாக வீடு திரும்பினான்.
மீதி 99 பத்துரூபாய்நோட்டுகள் கொண்ட கட்டு அது விழுந்த இடத்திலேயே கிடந்தது. அந்த வழியாக ஒருவன் வந்தான். இந்த நோட்டுக்கட்டைப் பார்த்தான். எடுத்தான்.
பரபரவென்று எண்ணினான். 99 நோட்டுகள்.
மீண்டும், மீண்டும் பலமுறை எண்ணினான்.
99 நோட்டுகள்தான்.
வங்கியில் 99 நோட்டுகள் கொண்ட கட்டு கொடுக்கமாட்டார்களே....
அந்த ஒற்றை பத்துரூபாய்நோட்
டு இங்கே பக்கத்தில் எங்கேனும்தான் கிடக்க வேண்டுமென்று தேட ஆரம்பித்தான்...............
அந்த ஒற்றை பத்துரூபாயைத்
தேடினான்.... தேடினான்.... தேடினான்....
இன்னும் தேடிக்கொண்டிருக்கிறான் --------
--என்று சொல்லி கலகலவென்று சிரித்தார் பூஜ்ய குருதேவ் அவர்கள்.
பத்து ரூபாய் கிடைத்தவன் திருப்தியாக சாப்பிட்டுவிட்டு சந்தோஷமாக சென்றான்.
990 ரூபாய் கிடைத்தவன் அதை அனுபவிக்காமல், இன்னம் ஒரு பத்து ரூபாய்க்காக அல்லாடிக்கொண்டிருக்கிறான்.
கருத்து : நம்மில் பலர் இப்படித்தான்
கிடைத்தவைகளை அனுபவிக்கத்
தெரியாமல் கிடைக்காதவைகளைத் தேடி
அலைந்து உடலும் மனமும் சோர்ந்து
அல்லலுறுகிறோம்.

3 comments:

  1. Paucity.

    மனுஷனுக்கு எப்போதுமே பேராசை அதிகம்.

    ReplyDelete
  2. *பேராசைக்கு ஒரு கதை.*

    ஒரு மனிதன், அந்த நாட்டின் அரசரை, ஒரு ஆபத்திலிருந்து காப்பாற்றினான். எனவே அரசர் அவனைப் பெரிதாகக் கெளரவிக்க விரும்பி, தமது நாட்டின் ஒருபகுதியை, அவனுக்குக் கொடுத்து, பொதுமக்கள் முன்னிலையில் மாலை மரியாதை செய்ய திட்டமிட்டார். ஆகவே அவனை அழைத்து, நாளைக்கு நீ *நாட்டில்* எந்தெந்த இடத்தில் காலைவைத்து, அதற்கு அடையாளமாக, அங்கே ஒரு கொடியை நட்டு வைக்கிறாயோ, அவையெல்லாம் உன்னுடையவை. *நாளை மாலையே மக்கள் முன்னிலையில், உனக்கு அதைப் பட்டா போட்டுக் கொடுப்பேன் என்றார். உடனை அவன் மன்னனை வணங்கி விடைபெற்று, அன்று இரவு தூங்காமல், அதிகமான நிலப்பரப்பைச் சொந்தமாக்கிக் கொள்ளும்படி, அதிகாலையிலேயே எழுந்து, ஓடினான்.
    உட்கார்ந்து சாப்பிடுகிற நேரத்தில், இன்னும் இரண்டு காணி சொந்தமாகிடும் என நினைத்து சாப்பிடாமல் ஓட ஆரம்பித்தான். *பல தோப்புகள், வயல்கள் எல்லாம் ஒடித் தனது கொடியை அடையாள
    மாக நட்டு வைத்தான்.*
    இன்னும் வேண்டும், இன்னும் வேண்டும் என்று, எங்குமே நின்று தண்ணீர் கூடக் குடிக்காமல் ஓடிக் கொண்டே இருந்தான். *பல மைல் தூரத்திற்கு அவன் கொடி பறந்தது. உணவின்றி, நீரின்றி ஓடி, ஒரு ஊரையே சொந்தமாக்கி விட்டபின், மாலையில் அரசர் பாராட்டு விழா ஏற்பாடு செய்திருந்தது ஞாபகத்துக்கு வர பதற்ற
    மாய் ஊரை நோக்கி ஓடினான். அந்த சமயத்திலும் கூட, கண்ணில்பட்ட பெரிய தோப்புகளை சுற்றிவந்து, கொடியை நட்டு வைத்துக் கொண்டே ஓடினான்.
    இருள் சூழத் துவங்கியது. ஐயய்யோ நேரமாச்சே என்றபடி, மூச்சைப் பிடித்தபடி, வேகமாய் ஓடி மேடைக்கு வந்துவிட்டான்.
    அரசர் பட்டாவை எடுத்து, அவன் கொடியை நாட்டி இருக்கும் இடமெல்லாம்
    அவனுக்கு சொந்தம் என்று எழுதி, அரசர் அவன் கைகளில் கொடுப்பதை வாங்க கைநீட்டியவன், அப்படியே குப்புற விழுந்தான். திரும்ப எழவேயில்லை.
    காவலாளிகள், அவனைப் புரட்டித் தூக்கும்
    போது தான், அவன் வாயிலும், மூக்கிலும்
    ரத்தம் வந்து இறந்து போயிருப்பது தெரிந்தது.
    இன்னும், இன்னும் என்ற பேராசையால், ஓய்வில்லாமல் ஓடியதில், அவன் இதயம் வெடித்து, உயிரே வறிபோனது.
    *ஆசை அளவோடு இருந்திருந்தால், அரசரின் கையாலேயே பரிசு வாங்கியிருக்கலாம் அல்லவா.

    *பேராசை பெருநஷ்டம்.*

    ReplyDelete
  3. உயிரே பறிபோனது, என்று வாசியுங்கள்.

    ReplyDelete