jaga flash news

Tuesday, 23 May 2017

நம் வீட்டில் செல்ல பிராணிகள் வளர்க்கலாமா ?கூடாதா?

நம் வீட்டில் செல்ல பிராணிகள் வளர்க்கலாமா ?கூடாதா?
கடந்த பதிவில் நாய்களை பற்றி சில தகவல்களையும் இவைகளை சார்ந்த கோள்களை பற்றியும் சில தகவல்களை பார்த்தோம் ,இனி .....
பிறப்பின் வகைகளில் மனித பிறப்பு என்பது மனதை உடையவன் என்பதினால் மனிதன் என்று பெயர் உண்டானது என்றும் மனம் என்பது ஒலி ஆற்றலை கொண்டதும் காந்த ஆற்றலை கொண்டதும் என்று நூல்கள் சொல்கிறது ,
மற்ற உயிர்களிடமிருந்து மாறுபட்ட மனிதன் ஒரு மிருகத்தை வளர்க்கும் பொழுது மனம் ஒலி அலைகளாக அதனிடம் செல்கிறது ,
ஒலிகளை மட்டும் உணரும் மிருகம் அந்த ஒலியின் தன்மைக்கு ஏற்ப செயல்படும்.
அதாவது மனம் இல்லாத மிருகம் மனிதனின் ஒலிகளின் தன்மைக்கு ஏற்ப செயல்படும் ,
மேலோட்டமாக கவனிக்கும் பொழுது நாம் அதனிடம் பேசும் ஒலிகளை அவைகள் கவனித்து செயல்படும் எனலாம் ( அவைகளுக்கு நாம் அழைப்பதை அவைகள் கவனிப்பது முதல் சில கட்டளைகளை பிறப்பிப்பது போன்றவை ) ...
செவ்வாயின் ஆதிக்கம் ஆட்சி நட்பு பெற்ற தன்மையில் உள்ளவர்களே நாய்களை வளர்க்கும் தன்மை உடையவர்களாக இருப்பார்கள் ,
இவர்கள் குலதேவதைகளை கவனிக்கும் பொழுது ஆண் தேவதைகளை வழிபாடு செய்பவர்களும் சமையல் ,கட்டிட தொழில் சார்ந்த தொழில் ,ராணுவம் ,காவல் ,மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களில் இவர்கள் இருப்பது புரியும் .
என்னுடன் பள்ளியில் படித்த ஒரு நண்பர் நாய்களை எங்காவது தெருவில் காண்டால் அந்த பாதையே விட்டு வேறு பாதையில் செல்வார் ,
ஒரு முறை அவரும் நானும் ஒரு தெருவில் சென்று கொண்டு இருந்த பொழுது படுத்து இருந்த ஒரு நாயை கண்டு அவர் என்னுடன் வர மறுத்து
ஒரு ஆட்டோ பிடித்து அதில் ஏறி நாயை கடந்து சென்றார் ,
எனக்கு ஒருபுறம் சிரிப்பு மறுபுறம் ஏன் இந்த பயம் என்று அறிந்து கொள்ள ஆவல் ,
அவரிடம் கேட்ட பொழுது மிகவும் அருவருப்பாக உள்ள உயிரினம் மேலும் கடித்து விடுமோ என்று குழப்பமும் பயமும் என்று கூறினார் .
சோதிட கலையை கவனித்து படிக்கும் பொழுது தான் " புதன் கோள்களினால் தான் நாயை கண்டதும் ஒரு வித நடுக்கம் உடலில் ஏற்படும்" என்று அறிந்து கொள்ள முடிந்தது.
மிதுனம் லக்கினமாக அல்லது புதன் நீச்சம் /பகை பெறுவது போன்ற தன்மைகள் இவர்களின் பயத்தை அதிகரிக்கிறது என்று புரிந்து கொள்ள முடிகிறது .
வீட்டில் நாய்கள் வளருவது ஒரு பாக்கியும் என்று சொல்வது ஒரு விதம்
அதுபோல நாய்கள் வளராமல் போவது என்பதும் ஒரு வித பாக்கியமே ...
காரணம் நாய்கள் வளர்ப்பில் சில கவணம்கள் நாம் பின்பற்ற வேண்டும்
 அவைகள் ...
நாய்களுக்கு உணவிட்டு அது உண்ணும் பொழுது பார்ப்பது தோஷத்தை உண்டாகும் ..
நாம் உண்டு விட்டு கைகளை கழுவாமல் அவைகளுக்கு உணவு அளிப்பது தோஷத்தை உண்டாக்கும் ....
அவைகளுக்கு முதலில் உணவு அளிக்காமல் நாம் முதலில் உணவு எடுத்து கொண்டு அவைகளுக்கு பிறகு கொடுப்பது தோஷத்தை உண்டாக்கும் ....
வீட்டில் இருக்கும் நாய்கள் ஊளையிட்டு அழுதால் வீட்டில் அசுப நிகழ்வுகள் நடக்கும் ..இவைகள் நாய்களினால் நம் குடும்பத்திற்கு ஏற்படும் தோசங்கள்...
இவைகள் ஒரு புறம்... மேன்மை என்பது ....
செவ்வாய் கோள்களின் பரிபூரண ஆசிகள் கிடைக்கும்
மனையில் உள்ள குறைகள் நீங்கும்
சகோதர பிரச்சனைகள் அல்லது பங்காளி தொல்லைகள் எழாமல் இவைகளின் உணர்வுகள் நம் குடும்பத்தை காக்கும்
மிக மிக ரகசியமான சத்தியம்கள் என்பது "ஒரு நாய்க்கு ஒரு பொழுது உணவு அளிப்பது என்பதும் ஒரு வில்வமரத்திற்கு ஒரு குவளை நீர் ஊற்றுவது என்பதும் ஒரே பலன் அது மகாதேவனின் அம்சமான ருத்ரமூர்த்திகளுக்கு உணவு படைத்தது வணங்குவது என்ற நிலையில் உள்ள பலனை தரும் .....
இதை போல பசுக்களை வளர்ப்பது என்பது சுக்ரனின் அமைப்புகளை மேன்மையாக பெற்றவர்கள் எனலாம் ,சுக்ரனின் ஆசிகளை பெற்ற இவர்கள் பெண்களை பற்றியும் பெண்மையின் மகத்துவம் பற்றியும் நாக தேவதைகளின் ஆசிகளை பெற்றவர்கள் எனலாம் ,
காளைகளை வளர்ப்பது என்பது
சூரியனின் ஆசிகளை பெற்றவர்கள் இவர்கள் பரம்பரையாக ஆண்வரிசுகளை பெற்றவர்களும் ஆண்மைமையின் பெருமைகளை பற்றி பேசுபவர்களும் கர்வமானவர்களும் எனலாம் ,
எருமைகள் என்பது சனி தேவரின் நேரடியான உயிரினம் எனலாம் ,
இவைகளை வளர்ப்பது என்பதும் தர்மராஜனுக்கு உணவு அளிப்பதும் ஒன்று தான் எனலாம் ,
மகரம் ,கடகத்தில் உள்ள சனி சுக்கிரனுடன் சேர்ந்த சனி போன்ற நிலைகளை உடைய நபர்கள் எருமைகளை விரும்பும் மனநிலையை உடையவர்கள் எனலாம் ,
நாம் வீட்டில் வளர்க்கும் உயிர்களில் மிகவும் ஆபத்தானது என்பதும் சுக்ரனின் அசுப ஆசிகளை பெற்றதும் என்ற உயிரானது பூனைகள்,
இவைகள் ஒரு வீட்டில் வளர்கிறது என்றால் அது சுக்ரனின் அசுப சக்திகளை பெற்ற நபர்களை கொண்ட குடும்பம் என்று தான் சொல்லவேண்டும் ,
சுக்ரனின் அசுப ஆசிகள் என்பதை கவனமாக புரிந்து கொள்ள வேண்டும் ...
அதாவது சுக்ரனின் ஆசிகளை மறைமுகமாக பெறுவது .
சுக்ரனின் ஆசிகள் நேரடியாக பெறுவது என்பது ஆதிசக்தியின் அம்சத்தில் உள்ள சக்தி தேவியரின் ஆசிகளை பெறுவது ,
மறைமுகமாக என்பது அம்பாளை வழிபடும் சிறுதேவதைகளின்
மூலம் அல்லது அசுர பெண்சக்திகளிடம் மூலம் நாம் வழிபாடு
செய்து பெறுவது ,
சில குடும்பத்தில் பெண்கள் மதிப்புமிக்க வழியில் வருமானமும் அதில் இன்பமும் பெறுவது சுப ஆசிகள் ,
சிலகுடும்பத்தில் பெண்கள் வட்டிக்கு பொருள் ,தங்கம் என்று பிறபெண்களை
வதைத்து பணம் சேர்த்து வைப்பது போன்றது அசுப சுக்ரனின் ஆசிகள் எனலாம்.... இருவருக்கும் பொருள் சேரும் ஆனால் சேரும் விதம் தான் அசுபம் /சுபம்
பூனைகள் எல்லோர் வீட்டிலும் வளராது என்னுடைய நண்பர் ஒருவர் வீட்டில் பூனைகளை வளர்த்தார் ,
அவர் உணவு உண்ணும் பொழுது அவரின் தொடைகளை தொட்டு ஆழைத்து
உணவுகளை கேட்டு உண்ணும் ,
அவரிடம் நாம் பலமுறை நீ உணவு உண்ணும் பொழுது அவைகளுக்கு கொடுக்காதே ,
அவைகள் மிகவும் சக்தி வாய்ந்தவை உன்னுடைய வருமானத்தை அவைகள் கெடுத்துவிடும் என்பேன் ,
நண்பர் பூனையின் மேல் உள்ள அன்பால் நான் சொல்வதை ஏற்று கொள்ளவில்லை
காலம் செல்ல செல்ல கடனால் வீட்டின் முன்பக்கத்தை விரையமாக்கி ஒரு சிறு பகுதியில் தற்பொழுது வசித்து வருகிறார் .
பூனைகளை பற்றி சில குறிப்புகளும் பலரின் அனுபவம்களும் சொல்வது
பூனைகள் தெய்வத்தின் எல்லைக்கும் தீயதை செய்யும் அசுரர் சக்திகளின்
எல்லைக்கும் ஒரே காலத்தில் சென்று வரும் அற்புத ஆற்றல்களை பெற்றவை என்றும் இவைகள் நம் வீட்டில் படுத்து அவைகளின் முடிகள் நம்வீட்டில் உதிர்த்தால் நம் குலத்திற்கு நம்மை இல்லை என்றும்
அசுப ஆசிகளை கொண்ட இவைகள் எதிர் பாராவிதத்தில் நமக்கு பலசெல்வம்களை அள்ளித்தரும் தன்மைகளை உடையவை என்றும் பல தகவல்கள் பார்த்தும் படித்ததும் உண்டு ....
இவைகளை போல பறவைகளில் கிளியும் புறாவும் மிக மிக ...........

2 comments:

  1. என்ன வெ.சாமி அவர்களே! நாய், பன்றி, கழுதை, குதிரை, பூனைன்னு. ஒரு மிருகமும் வேண்டாம். வீட்டை சுத்தமாக வைத்து, தினமும், காலை, மாலை விளக்கேற்றி, கொஞ்சம் ஆச்சாரத்துடன் இருந்தாலே, *லெட்சுமி கடாட்சம் வீட்டில் தாண்டவமாடும். உண்மைதானுங்களே ?

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete