jaga flash news

Tuesday, 23 May 2017

மனதை ஆளத்தெரியாதவன் மனிதனா?

மனதை ஆளத்தெரியாதவன் மனிதனா?
மனித மனமானது கோடான கோடி கைகளை உடையது. கண் எதை பார்க்கிறதோ,
எதை நினைக்கிறதோ அதை ஓர் கையில் பிடித்துக்கொண்டு காலம் முழுவதும் உன்னுடன் தொடர்கிறது. இப்படியாக பலகோடி கைகள். இவை என்றுமே மாறாத நினைவாக இருக்கிறது.
மனமானது ஆசை எனும் குதிரையில் சவாரி செய்கிறது. அந்த குதிரையோ கடிவாளம் கட்டாத குதிரையாக இருக்கிறது.
இந்த மனமானது எதை பார்க்கிறதோ,
எதை நேசிக்கிறதோ அதுவாக மாறுகிறது. காலப்போக்கில் பிரம்மாண்டமாக உருவெடுக்கிறது.
அது நன்மையாக இருப்பினும் சரி, தீமையாக இருப்பினும் சரி.
இதற்கு நன்மை தீமை தெரியாது.
அதற்கு கடிவாளம் இடாவிட்டால் மனுவாகிய நீ ஈசன் ஆக முடியாது. உனது மனதை நன்மையின் பாதையில் செலுத்தினால் பிழைப்பாய்.
நண்மை என்பதற்கு உதாரனம் இறைவன் மட்டுமே. நீ ஒருவருக்கு செய்யும் உபகாரமோ தான தர்மமோ நன்மை இல்லை.
உன்னை படைத்த இறைவனை நினைப்பதுவே நன்மை. அதுவே புன்னியம், அதுவே முக்தியை தரும்.
ஆசை எனும் மோகத்தில் அனைவரும் அலைகின்றனர் அல்லும் பகலும்.
உன் மோகமானது எதை பற்றுகிறதோ அதுவாக நீ ஆகிறாய்.
அழியும் பொருளாபரணங்கள் மீது அழியாத பற்றை வைத்தால் அழிந்தே போவாய்.
நாட்டையே அடக்கியாளும் மன்னனாக இருந்தாலும் ஆசையை வெல்ல முடியாது...
ஆனால் இந்த ஆசையை நன்மையின் பாதையில் செலுத்தி, சிந்தையில் சிவனை வைத்திட்டால் ஜீவனே சிவமாகும்.
மனமது செம்மையானால்
மந்திரம் ஜெபிக்கவேண்டாம் என்றும்
மனம் சித்தம்
புத்தியுடன்
ஆங்காரமும் அடக்கி
மெளனத்தில் மோனம்
கொண்டேன் சிவனே ஐயா என்றும்
மனதற்ற நிலையை பரிசுத்தம் துரியாதீத நிலை என்றும்
சத்திய வேதத்தில்
மனம் திரும்புங்கள்
பரலோக ராஜ்ஜியம் சமீபமாக இருக்கிறது என்றும்
மனமே முருகனின் மயில்வாகனம் அதாவது கயிலாயம் வைகுண்டம் பிரம்மலோகம் போன்ற அதிமகோன்னத நிலைகளுக்கு சென்று வரும் வாகனம் என்றும்
கோயிலாவதேதடா
குளங்களாவதேதடா
கோயிலும் மனத்துளே
குளங்களும் மனத்துளே எனறும்
திருக்குறளில்
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன் ஆகுல நீர பிற என்றும்
கீதையில்
உன் மனத்திடை எம்மையே வை
எம்மையே குருவாகக் கொள். இதுசெய்யின் எம்மையே வந்தடைவாய் இது மெய்யே என்றும்
முன்வந்த அருளாளர்கள் மனுக்குலம் உய்ய மெய்வழியினை காட்டி தந்துள்ளனர்.

6 comments:

  1. இந்த தலைப்புக்கு ஒரு சிறிய கதை.

    ஒரு சிற்பி, ஒரு பெரிய கல்லை எடுத்து
    அதில் உருவத்தை செதுக்க ஆரம்பித்த சமயம், தலைக்கு மேலே சூரிய வெப்பம் அவரைத் தாக்கவே, *சே ! இது என்ன வாழ்க்கை. எப்போது பார்த்தாலும், இந்த வெயிலில் நின்று, உளியை கையில் வைத்து செதுக்கி கொண்டே இருக்கிறேனே! எனக்கு வேறு நல்ல வேலையும், அதிக சம்பளமும் கிடைத்தால் நன்றாக இருக்குமே என அலுத்துக் கொண்டானாம் அந்த சிற்பி.
    அப்போது அந்த வழியாக அந்த நாட்டு ராஜா குதிரையில் வருவதைக் கண்டு, ஆ இந்த ராஜாவை போல் தானிருந்தால் எத்தனை நலமாக இருக்கும் என்று எண்ணிய மாத்திரத்தில், உடனே அவர் ராஜாவாக மாறி, குதிரையில் பயணித்துக் கொண்டிருந்த போது, இந்த சூரியன் தான் இந்த ராஜாவை விட மிகப் பெரியது என்று நினைத்த மாத்திரத்தில், உடனே சூரியனாக மாறினார். அப்படினாக பிரகாசித்துக் கொண்டிருந்த போது, ஒரு மேகம் தோன்றி, பூமியின் மேல் மழையைப் பொழிந்தது. தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும்போது, ஒரு பெரிய கல்லைத் தவிர, வேறு எல்லாவற்றையும், மழை நீர் அடித்துக் கொண்டு சென்றது.
    உடனே அந்த சிற்பி, ஆ! அந்த கல் தான் மிகவும் உறுதியானது, என்னவந்தாலும் அசையவில்லையே என்று நினைத்த மாத்திரத்தில், உடனே ஒரு பெரிய கல்லாக மாறினார்.
    அப்போது ஒரு சிற்பி, ஒரு உளியையும்
    சுத்தியலையும் கொண்டுவந்து அந்த கல்லை செதுக்க ஆரம்பித்த போதுதான்
    அந்த சிற்பிக்குதன்னுடைய நிலைமையும், தான் எவ்வளவு வல்லமை உள்ளவர் என்பதும் தெரிய வந்தது.

    நம்மில் அநேகர் இப்படிதான். நமக்கு இருக்கிற வசதிகளையும்,இறைவன் நமக்கு கொடுத்திருக்கிற ஆசீர்வாதங்களையும் கண்டு திருப்தி அடைவதில்லை. நம் மனதை ஆளத் தெரியாமல், அப்படி இருந்தால் நன்றாக இருக்குமே என்று அங்கலாய்க்கிறவர்களாக தான் இருக்கிறோம். காரணம், நம்மிடம் இறைபக்தி குறைவு. நாம் எந்த நிலைமையில் இருந்தாலும், சிவனே, உம்மையே நான் நம்பியிருக்கிறேன்,என்று மன உறுதியோடு இருந்தால்.எந்த நிலைமையில் இருந்தாலும், நாம் மனரம்மியமாக இருக்க கற்றுக் கொள்ளும் போது, சிவபெருமான், அதில் மகிழ்ந்து, நம்மை இன்னும் அதிகமாக ஆசீர்வதிப்பார்.

    ReplyDelete
  2. மனதை ஆளத் தெரியாதவன் மனிதனா என்று சுலபமாக கேட்டுவிட்டீர்கள்.

    ReplyDelete
  3. நம் அலைபாயும் மனதை, ஒருகட்டுக்குள் கொண்டுவந்து, ஒருநிலைப்படுத்தி, சிந்தனை என்னும், கடிவாளத்தை இறுக்கிப்பிடித்து, இறை சிந்தனையை ஒருமுகமாக்கி, பின் கிடைப்பது தான், மனம் என்னும் ஆன்மா. அந்த ஆன்மாவை, இறைவனுக்குள் அமர்த்தினால் தான், நம் மனதை நாம் இறைவன் மூலம் ஆளமுடியும். அய்யா அவர்கள் மனதை ஆளத்தெரியாதவன் ஒரு மனிதனா, என்று மிக இலேசாகக் கேட்டுவிட்டீர்களே.

    ReplyDelete
  4. நம் மனதை எப்போது ஆளமுடியாமல் போகிறது என்பதற்கு ஒரு பழமொழி உண்டு. அதாவது,

    Men often make up in wrath they want in reason. இதற்காக தான் நாம் இறைவனை நாடுகிறோம். இறைவனின் சிந்தனையில் இருந்து கொண்டே யிருந்தால், நம் உள்ளத்தில் இருக்கும் மிருக குணங்கள் சிறிது, சிறிதாக மாறி, நம் மனதை ஆளத் தெரிந்த மனிதனாகிறான் என்பதே.

    ReplyDelete
  5. கதையில் *அப்படி சூரியனாக* பிரகாசித்துக்..என்று படியுங்கள்.

    ReplyDelete
  6. அய்யா! வெ.சாமி அவர்களே, இன்று நான் யூடியூப் மூலம் (மனதை ஆளத் தெரியாதவன் மனிதனா? என்ற தலைப்புக்கு பொறுத்தமில்லாமல்) மனதை இஷ்டத்துக்கு அலைய விட்டு விட்டேன். Sss. எனக்கும் மனதை ஆளத்தெரிய வில்லை. அத்தனை பதிவிற்கும் பதில் அளித்துவிட்டேன்.

    ReplyDelete