jaga flash news

Saturday, 1 August 2020

பக்ஷம்


க்ருஷ்ண பக்ஷம், சுக்ல பக்ஷம் என்றால் என்ன? அதை எப்படி கணக்கிடுவது?
சுக்ல பக்ஷம் என்றால் வளர்பிறை காலம். கிருஷ்ண பக்ஷம் என்றால் தேய்பிறை காலம். அமாவாசைக்கு அடுத்த நாள் ஆன பிரதமை திதியிலிருந்து பௌர்ணமி நாள் வரை வருகின்ற 15 நாட்களை சுக்ல பக்ஷம் அதாவது வளர்பிறை காலம் என்றும், பௌர்ணமிக்கு அடுத்த நாள் வரும் பிரதமையிலிருந்து அமாவாசை வரை வருகின்ற 15 நாட்களை க்ருஷ்ண பக்ஷம், அதாவது, தேய்பிறை காலம் என்றும் அழைக்கிறோம். அறிவியல் ரீதியாக சொல்ல வேண்டும் என்றால் சூரியனும், சந்திரனும் ஒரே நேர்க்கோட்டில், அதாவது, ஒரே பாகையில் இணையும் காலத்தை அமாவாசை என்றும், சூரியனின் பாகையிலிருந்து விடுபட்டு சந்திரன் கொஞ்சம், கொஞ்சமாக முன்னேறிச் சென்று நேர் எதிர் பாகையில், அதாவது, சூரியன் சஞ்சரிக்கும் பாகையிலிருந்து 180வது பாகைக்கு வரும் காலத்தை பௌர்ணமி என்றும் குறிப்பிடுகிறோம். இந்த இடைப்பட்ட காலத்தினை வளர்பிறை அதாவது சுக்ல பக்ஷம் என்று சொல்கிறோம். அதேபோல சந்திரன் 180வது பாகையில் இருந்து கொஞ்சம், கொஞ்சமாக விடுபட்டு சூரியன் சஞ்சரிக்கும் பாகையை நோக்கி வரும் காலத்தினை தேய்பிறை அதாவது, க்ருஷ்ண பக்ஷம் என்றும் சொல்கிறோம். இந்த காலத்தினை பஞ்சாங்கத்தின் துணையோடு அறிந்துகொள்ள முடியும்.

No comments:

Post a Comment