jaga flash news

Sunday, 2 August 2020

ராவணன் கதை...



ராமயணம் கதை எல்லாருக்கும் தெரிந்திருக்கும், இதிகாசங்களில் ஒன்றாக இருக்கக்கூடிய ராமயணத்தில் எக்கச்சக்கமான கதாப்பத்திரங்கள் இருக்கிறது.இந்தக் கதையில் ராமன் கதாநாயகனாக இருந்தாலும் அவரை எதிர்த்து போரிட்டவர், ராமனின் மனைவி சீதாவை கடத்திச் சென்ற ராவணன் குறித்து என்ன கேள்விப்பட்டிருக்கிறீர்கள்?


ராமயணம் கதை என்று சொன்னாலே ராமன் அவரது நான்கு சகோதரர்கள், சீதையை திருமணம் செய்து கொண்டது 14 வருடங்கள் காட்டிற்குச் செல்வது, சீதையை ராவணன் கடத்திச் செல்வது, ஹனுமான் மற்றும் அவரது சகாக்கள் உதவியுடன் சீதையை ராவணனிடமிருந்து மீட்டு வருவது இந்த கதையைத் தான் சொல்வார்கள். இங்கே ராவணன் குறித்து இதுவரை கேள்விப்படாத அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.


கடவுள் :
அரக்கன் என்று அடையாளப்படுத்தப்பட்டதால் அவன் கொடூர அரக்கனாக இருக்க வேண்டும் என்று அர்த்தமில்லை மிகச்சிறந்த அரசராக இருந்திருக்கிறார். இலங்கையை அவரது சகோதரர் குபேரரிடமிருந்து வாங்கியிருந்தாலும் இலங்கையை அமைதியான முறையில் அரசண்டிருக்கிறார்.

அங்கிருந்த மக்கள் ராவணனை கடவுள் ஸ்தானத்தில் வைத்து போற்றியிருக்கிறார்கள்.

Image Courtesy


கோவில்கள் :
இந்தியா மற்றும் இலங்கையில் ராவணனுக்கு என்று ஏகப்பட்ட கோவில்கள் இருக்கின்றன.ஆந்திராவில் உள்ள காக்கிநாடாவில் ராவணன் நிறுவிய மிகப்பெரிய சிவன் கோவில் இருக்கிறது.

சிவனையும், ராவணனையும் மீனவ சமுதாயத்தை சேர்ந்த மக்கள் வணங்க ஆரம்பித்தார்கள். உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் புகழ்ப்பெற்ற ராவணன் கோவில் இருக்கிறது.

Image Courtesy



பிரம்மன் :
ராவணனின் தந்தை புகழ்பற்ற ரிஷி விஷ்ரவஸ். இவரது தந்தை ப்ராஜாபதி புலஸ்தியா ஆகும். இவர் பிரம்மன் தன் ஆற்றலை பயன்படுத்தி பத்து மகன்களை உருவாக்குகிறார். அதாவது பிரம்மனின் மனதில் உருவான குழந்தைகள் இவர்.

ஆக ராவணனுக்கு பிரம்மன் கொள்ளு தாத்தா முறை ஆகிறது.

Image Courtesy


அஸ்வமேத யாகம் :
ராவணன் விஸ்ரவா என்ற ரிஷிக்கும் அசுர குலத் தலைவர் சுமாலியின் மகள் கைகேசிக்கும் பிறந்தவர். ரிஷி வம்சத்தின் ஆற்றலும் அசுர குலத்தின் பலம் சேர்ந்து கொள்ள ராவணனை யாரும் அழிக்க முடியாத அசுரனாக வளர்த்திருக்கிறது.

அதனால் தான் ராவணனை கொல்ல ராமர் அஸ்மேத யாகம் நடத்தினார்.


பத்து தலை :
பார்ப்பவர் எல்லாருக்கும் இருக்கிற சந்தேகம் இது.... ராவணனுக்கு ஏன் பத்து தலை, இது குறித்து பல கதைகளும் சொல்லப்படுகிறது. இரு வேறு கதைகள் இதில் நம்பப்படுகிறது முதலாவதாக ராவணனுக்கு ஒரேயொரு தலை தான் இருக்கிறது, அவரது தாயார் ஒன்பது முத்துக்கள் பதித்த மிகவும் உயர்தரமான நெக்கலசை பரிசாக கொடுத்திருக்கிறார்.


அதை அணிந்த போது ராவணனின் உருவத்தை ஒன்பது உருவங்களாக பிரதிபலித்திருக்கிறது, அதை நினைவுகூரும் விதமாக ஒன்பது தலைகளோடே ராவணன் அடையாளப்படுத்தப்படுகிறான்.


சிவன் பக்தன் :
இது ஒரு புறமிருக்க இன்னொரு பக்கம், சிவன் மீதுள்ள தீவிர பக்தியினால் தனது தலையை துண்டு துண்டாக வெட்டுகிறான், ஆனால் சிவனோ பக்தன் மீதுள்ள பாசத்தினால் ஒவ்வொரு துண்டையும் ஒரு தலையாக உரு கொடுக்கிறார்.

இப்படியாக இருவேறு கதைகள் ராவணனின் பத்து தலைக்கு சொல்லப்படுகிறது.


உபதேசம் :
அப்போதிருந்த பண்டிதர்களில் கற்றுத் தேர்ந்தவனாக ராவணன் இருந்தான், எல்லாருமே அவனை மிகச்சிறந்த அறிவாளி என்று ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் . ராமனும் ராவணனும் போர்புரிந்து சீதையை மீட்ட பிறகு, ராவணன் இறக்கும் தருவாயிலும் தான் கற்றதை பிறருக்கு சொல்லிக் கொடுக்கும் வகையில் ராமனின் சகோதரனுக்கு உபதேசம் செய்தார்.


பாடங்கள் :
லட்சுமணனுக்கு கற்றுக் கொடுத்த பாடங்களில் பெரும்பாலானவை ராவணன் தன் சொந்த வாழ்க்கையில் சந்தித்த அனுபவங்களாகவே இருக்கின்றன. ராவணனின் சொன்னதில் மிக முக்கியமானதாக கருதப்படுவது, எப்போதும் நீ உன்னுடைய தேரோட்டி, சமையற்காரன், வாயிற்காப்பாளான், மற்றும் சகோதர்களிடத்தில் நல்ல உறவுமுறை கொண்டிருக்க வேண்டும்.

ஏனென்றால் இவர்கள் நினைத்தால் உன்னை எளிதாக வீழ்த்தலாம். அதே போல உன் எதிரியின் பலத்தை ஒரு போது குறைந்து மதிப்பிட வேண்டாம். கிரகண மாற்றங்கள், நட்சத்திரங்கள் ஆகியவற்றில் நம்பிக்கை வை, அவை உன் தலையெழுத்தையே மாற்றக்கூடும் என்றார்.

Image Courtesy


வீணை :
ராவணன் மிகப்பெரிய இசை கலைஞர், தனக்கென்றே ராவண வீணா என்ற இசைக்கருவியை உருவாக்கினார். அதில் சிவனை போற்றும் வகையில் சிவ தாண்டவத்தின் சில பாடல்களை இசைத்திருக்கிறார்.


Image Courtesy


சூரியன் :
கடவுள் மீது தீவிர பக்தி கொண்டவர் ராவணன்,தன்னுடைய கடும் தவத்தினால் ஏராளமான ஆற்றல்களை கொண்டிருக்கிறார், தன்னுடைய பெரும் சக்தியினால் சூரியனை மறைய வைக்கவும், அஸ்தமிக்கவும் ராவணனால் முடியும்.

Image Courtesy


எல்லாம் அறிவான் :
மிகப்பெரும் ஆற்றல் கொண்ட ராவணனை பூலோகத்தில் மனித பிறப்பு எடுக்க வைத்திடும் போதே அதன் ஆற்றல் என்னவென்று தெரிந்திடும், தான் எதற்காக பூலோகம் செல்கிறோம், இந்த அவதாரத்தின் நோக்கமென்ன என்பதை ராவணன் அறிந்தேயிருந்தார்.

அதோடு தான் ஒரு விஷ்ணுவின் அவதாரத்தால் வதம் செய்யப்படுவோம், அது தான் தனக்கு முக்தியளிக்கப்போகிறது என்பதையும் ராவணன் முன்பே அறிந்திருந்தார்.

Image Courtesy


கால் விரல் :
சிவனின் அருளைப் பெற்ற ராவணனுக்கு தலைக்கனம் ஏறியது, மிகுந்த ஆணவத்தோடு என்னால் எல்லாம் முடியும், நானே பலசாலி இந்த உலகில் என்னைவிட பலசாலி யாரும் இல்லை என்ற ஆணவத்தோடு கைலாய மலைக்குச் சென்று அங்கே சிவன் மலையையே தாக்க ஆரம்பித்தான். தனக்கு விருப்பமான சிவன் இலங்கைக்கு அருகில் இருக்கட்டும் என்று சொல்லி கைலாய மலையை தூக்க ஆரம்பித்தான்.

ராவணனுக்க் பாடம் கற்பிக்க நினைத்த சிவன் தன் கால் கட்டை விரலைக் கொண்டு அழுத்த அதிக பாரம் தாங்காமல் தான் தூக்க நினைத்த கைலாய மலையை அப்படியே வைத்து விட்டான் ராவணன். இந்த சம்பவத்தின் போது தான் சிவன் ராவணனுக்கு இந்தப் பெயரை சூட்டியிருக்கிறார்.

Image Courtesy


ஆறும் நான்கும் :
ராவணனின் பத்து தலைக்கு காரணம் நான்கு வேதங்களையும் ஆறு சாஸ்திரங்களையும் குறிக்கும் வகையில் ராவணனுக்கு பத்து தலைகள் இருக்கின்றன. இவர் ராசி கிரகங்களை கையாள்வதில் மிகுந்த திறமை படைத்தவராக இருந்திருக்கிறார்.

இவரது மகன் பிறக்கும் போது ஒவ்வொரு கிரகமும் எங்கே எந்த வரிசையில் நிற்க வேண்டும் என்று கூட சொன்னார் எல்லா கிரகங்களும் கேட்க சனிக்கிரகம மட்டும் முரண்டு பிடித்து ராவணன் சொன்ன இடத்தில் நிற்கவில்லை.


எதிரிகள் :
ராவணனும் அவரது தம்பி கும்பகர்ணனும் பெருமாலின் வாயில் காப்பாளானாக இருந்தவர்கள் ஜெயா மற்றும் விஜயா. நாங்கள் அனுமதித்தால் மட்டுமே பெருமாளை நீங்கள் சந்திக்க முடியும் எங்களைத் தாண்டித்தன யாராக இருந்தாலும் செல்ல முடியும் என்ற ஆணவம் இருவருக்கும் ஏற்பட்டது.

தவறை உணர்ந்தவர்கள் விமோஷனம் குறித்து கேட்க, ஏழு ஜென்மம் விஷ்ணுவின் அவதாரமாக் பூமியில் பிறக்க வேண்டும் அல்லது மூன்று ஜென்மங்கள் விஷ்ணுவின் எதிரிகளாக பிறக்க வேண்டும் என்று சொல்லப்பட்டது. விரைந்து விஷ்ணுவை அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் இருவருமே மூன்று ஜென்மங்கள் எதிரிகளாக இருக்கிறோம் என்றார்கள்.

Image Courtesy


மருத்துவ ஆற்றல் :
ராவணன் மிகுந்த மருத்துவ திறமையும் கொண்டவர். ஆயுர்வேத மருத்துவ துறையில் பெரும் திறமை படைத்தவர் . நாடி பரிக்‌ஷா என்ற புத்தகத்தினை எழுதியிருக்கிறார். அதே போல அர்க சாஸ்த்ரா என்ற புத்தகத்தை எழுதியிருக்கிறார். அதில் எந்தெந்த நோய்க்கு எந்த மருந்துகள், எவ்வளவு அளவுகளில் எடுக்கப்பட வேண்டுமென்று விவரமாக எழுதப்பட்டிருக்கிறது.

அதே இவர் எழுதிய அர்க பரிக்‌ஷா என்ற புத்தகத்தில் மருந்துகள் குறித்து எழுதப்பட்டுள்ளது. குமார தந்த்ரேயா என்ற புத்தகத்தில் பெண்கள் குறித்த உடல் உபாதைகளும் அதனை தீர்க்கும் முறையும் சொல்லப்பட்டிருக்கிறது. காயங்களை உடனடியாக போக்க சிந்துராம் மருத்துவ முறையை நடைமுறைபடுத்தினார்.

Image Courtesy


மனைவிக்காக :
ராமனுக்கும் ராவணனுக்கும் இடையிலான போர் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் இருந்தது. ராவணனைத் தவிர எல்லாரும் போரில் இறந்துவிட்டார்கள்.இந்த போரில் வெற்றி பெற மிகவும் சக்தி வாய்ந்த யாகத்தை ஆரம்பித்தான் ராவணன், இதற்கு முழு நேரமும் அதாவது யாகம் ஆரம்பித்த நேரத்திலிருந்து முடியும் வரை அங்கேயே இருக்க வேண்டும்.

இதனையறிந்த ஹனுமானின் வானப்படைகள், யாகம் நடத்த விடாமல் பல்வேறு இடைஞ்சலை செய்தார்கள் எதற்குமே ராவணன் அசைந்து கொடுக்கவில்லை, ஒரு கட்டத்தில் ராவணனின் மனைவி மண்டோதரியை கடத்திச் சென்றார்கள். மண்டோதரி கத்தி கூப்பாடு போட்டும் ராவணன் எழுந்தரிக்கவில்லை. ராமன் மனைவிக்காக எவ்வளவு செய்கிறான், நீங்கள் இப்படி உட்கார்ந்திருக்கிறீர்களே என்று மண்டோதரி கேட்க வேறு வழியின்றி ராவணன் எழுந்து சென்றுவிட்டான். யாகம் பாதியிலேயே முடிந்தது. இதனால் போரில் ராவணன் தோல்தோல்வியுறறன்



ஆடி பதினெட்டான இன்னைக்கு உங்க ராசிக்கு என்ன நடக்கப்போகுதுனு தெரிஞ்சிக்கோங்க...!

கடகத்திற்கு செல்லும் புதனால் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?

No comments:

Post a Comment