jaga flash news

Saturday, 16 January 2021

ஆலமரத்தில் இத்தனை மருத்துவ குணங்களா ?

ஆலமரத்தின் மருத்துவ பயன்கள் என்னென்ன?

ஆலமரத்தின் பயன்கள் பற்றி ஆயுர்வேதம் கூறும் வழிமுறைகளை முதலில் பார்ப்போம்.
அதன் பின்னர் அகத்திய முனி கூறியவற்றையும்  காண்போம்..


ஆயுர்வேதம்:
இதன் வேர், பட்டை, இலைகள் மொட்டு, பழங்கள், பால் அனைத்தும் மருத்துவகுணம் நிறைந்தவை. இதிலுள்ள அனைத்துப் பகுதிகளும் துவர்ப்பு, காரம், இனிப்புச்சுவை உடையவை. குளிர்ச்சியானவை. வலி நிவாரணி, ரத்தத்தை சுத்தம் செய்பவை, மூட்டு வீக்கம் போக்குபவை, கண்பார்வையை வலுப்படுத்துபவை, ரத்தக்கசிவை நிறுத்துபவை, மூட்டு வலி நீக்குபவை, வியர்வையை வெளிப்படுத்துபவை, பேதி வாந்தியை நிறுத்துபவை, நல்லதொரு டானிக்.

ஆலமரத்தின் வேரினால் பல் தேய்ப்பதால் பற்கள் உறுதிப்படும். வாந்தியை நிறுத்திவிடும். பொடி செய்து சாப்பிட்டால் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் உபாதையும், வலுவிழந்துள்ள எலும்பு உபாதையையும் போக்கும்.


பட்டையை பொடி செய்து தூவினால் ரத்தக் கசிவை உடனே நிறுத்தும். உள்ளுக்குச் சாப்பிட்டால் பேதியை நிறுத்தும். சர்க்கரை வியாதி, சுயநினைவின்றி வெளியேறும் சிறுநீர், புண்கள், தோல் உபாதைகள், பிறப்புறுப்புகளில் ஏற்படும் வலியுடன் கூடிய கசிவுகள், தண்ணீர் தாகம் போன்றவை இதன் உட்புற, வெளிப்புற உபயோகத்தால் நீங்கும்.

புண், குஷ்டம், தோல் அலர்ஜி, எரிச்சல், கட்டிகள் போன்றவை இதன் இலைகளால் குணமடைந்து விடும். பித்தத்தின் சீற்றத்தை இதன் குளிர்ச்சியான பழங்கள் நிவர்த்தி செய்கின்றன.

ஆலமரத்தின் பாலை பஞ்சில் முக்கி, தலையில் புழுக்கடியினால் ஏற்படும் சொட்டைப் பகுதிகளில் போட்டு வர, விரைவில் குணமாகும். பாதத்தில் ஏற்படும் பித்த வெடிப்பில் பூச, விரைவில் பித்த வெடிப்பு குணமாகும்.

ஆலமரம் பற்றி அகத்திய முனி:

சொல்லுகின்ற மேகத்தைத்துட்ட அகக்கடுப்பைக்கொல்லுகின்ற நீரழிவைக் கொல்லுங்காண்நல்லாலின் பாலும் விழுதும் பழமும் விதையும் பூவும் மேலும் இலைகளுமென விள்
-அகத்தியர் குணபாடம்
ஆலமரத்தின் எல்லா பாகங்களும் அருமருந்து. நீரழிவு நோய்க்கு ஆலம்பட்டைச்சாறு – ஆலம்பட்டைக் கஷாயம் மருந்து என்கிறார் அகத்திய மாமுனி.
ஆகவே, நாமும் முடிந்த அளவு ஆல மரத்தின் பல்வேறு பாகங்களை உபயோகித்து உடல்நலம் காப்போம்...
...ஓம் நம ஷிவாய...ஹரி ஓம்...

No comments:

Post a Comment