jaga flash news

Monday, 18 January 2021

திருமண அழைப்பிதழிலேயே பெரிய தகவல் உள்ளது.

நாம அடிக்கடி பார்க்கிற திருமண அழைப்பிதழிலேயே பெரிய தகவல் உள்ளது.

மணமகன் / மணமகள் பெயருக்கு முன் திருவளர் செல்வன் / திருவளர் செல்வி என இருந்தால் அந்த திருமணம் அக்குடும்பத்தின் மூத்த மகன் / மகளின் திருமணம்.

திருநிறைசெல்வன் / திருநிறை செல்வி என இருந்தால் அந்த திருமணம் அக்குடும்பத்தின் இளைய மகன் / மகளின் திருமணம்.

திருவளர்செல்வன் / செல்வி எனக் குறிப்பிடும்போது நடக்கவுள்ள திருமணம் எங்களது இல்லத்தின் மூத்த மகன் / மகளின் திருமணம்.

எங்களுக்கு இளைய மகன் / மகள் உள்ளதால் எங்கள் இளைய மகனுக்கு திருமண வயது நிரம்பும் போது உங்கள் வீட்டுக்கு பெண் / பையனுக்கு திருமண வயது நிரம்பியிருந்தால் மாப்பிள்ளை / பெண் கேட்டு எதிர்காலத்தில் நாங்கள் ‌‌வரலாம் என்பதை சூசகமாக குறிப்பது.

இதே திருநிறைசெல்வன் / திருநிறைசெல்வி என்று குறிப்பிட்டிருந்தால் எங்கள் வீட்டில் திருமணங்கள் நிறைவுற்றன.
இதுவே எங்கள் வீட்டின் இறுதித் திருமணம்.
இனி எங்கள் வீட்டில் திருமண நிகழ்வுகள் இல்லை என்று உணர்த்துவது.

No comments:

Post a Comment